ஞாயிறு, டிசம்பர் 06, 2009

ரேனிகுண்டா - விமர்சனம்

கடைசியா நடந்த பதிவர் சந்திப்பின் போது கேபிள் அண்ணா இந்த படம் சூப்பரா வந்திருக்குனு சொன்னார். அதனால எல்லாரும் புதுமுகங்களா இருந்தாலும் கொஞ்சம் எதிர்ப்பார்ப்போட தான் போனேன்.

நடிப்பு:

ஹீரோ அப்டின்னுயெல்லாம் இந்த படத்துல யாரும் இல்ல. சக்தியா வர ஜானி அப்புறம் அவன் ஜெயில்ல சந்திக்கிற நாலு பேரு(டப்பா, பாண்டு, மைக்கேல், மாரி) எல்லாருமே கிட்டதிட்ட ஒரே அளவு தான். இதுல டப்பாவுக்கும் ஜானிக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு. பயன்படுத்திகிட்டு இருக்காங்க. ஜானி ஆரம்பத்துல அம்மா அப்பா கிட்ட இருக்கும் போது ஒரு மாதிரியான நடிப்பையும், காதல் காட்சியில கொஞ்சம் வித்தியாசமாவும், இறுதிகாட்சி-ல எல்லாத்துக்கும் சேர்த்து அனல் பறக்குற ஒரு நடிப்ப வழங்கி இருக்காரு.

ஆனா கைதட்டல அள்ளுறது டப்பா தான். இருக்குறதே 4 அடி அப்டின்னாலும் பேசுற பேச்செல்லாம் உலக தனக்கு கீழ தான் அப்டிங்குற மாதிரி பேசி சலம்புறாரு. ‘ஆல் டீம் ஒர்க்’ அப்டினு ஜெயில்-ல சேட்டு கிட்ட பெருமையா சொல்லும் போதும், ‘விடுறா சின்ன பையன் தானே’ அப்டினு ஜானிய பாத்து சொல்லும் போதும், காதல் வந்தவுடனே கூலிங் கிளாசும், காதுல கம்மலும் மாட்டிகிட்டு காதல் பார்வை பார்க்கும் போதும் கலக்குறாரு.

மத்தவங்கள்-ல பாண்டு ரசிக்க வைக்கிறாரு. அதுவும் ஜானிய அடிக்க ஒரு போலீஸ்காரர் போகும் போது ‘இதுக்கு மேல அவன ஒரு அடி அடிச்சாலும் உன் குடும்பத்தையே அழிச்சிருவேன்’ அப்டி-னு சொல்லும் போது வெடிக்கிறார். பல இடங்கள் மனசுல நிக்கிற மாதிரியான காட்சிகள். மத்த ரெண்டு பேருக்கும் சொல்லிக்குற மாதிரியான காட்சிகள் இல்லைனாலும் மனசுல நிக்கிறாங்க.

ஹீரோயினா வர்ற பொண்ணு ரொம்ப க்யூட்டா அழகா நடிச்சிருக்கு. அதே மாதிரி கண்ணாடி போட்டுட்டு வர்ற பொண்ணும். ஹீரோயினோட அக்கா மாமாவா வர்றவங்களும் நல்லா நடிச்சு இருக்காங்க.

ஒளிப்பதிவு & எடிட்டிங்:

படத்தோட இரு தூண்கள். படத்தின் தடாலடி வேகத்திற்கு ஏற்றவாறு சக்தி படம் பிடித்து கொடுத்தால் அதை அழகாக விறுவிறுப்பு குறையாமல் வெட்டி இருக்கிறார் ஆண்டணி. எந்த ஒரு காட்சியையுமே குறைசொல்ல முடியா வண்ணம் சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்த சிறிய சந்துகளில் சென்று அழகாக படம் பிடிப்பதாகட்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறப்பதாகட்டும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இசை:

எல்லா பாட்டையுமே முதல் வாட்டியா படத்துல தான் கேட்டேன். அதனால எதுவும் இப்போ நினைவுல இல்ல. பின்னனி இசை ஒ.கே. இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சு இருக்கலாம்-னு தோணுச்சு.

இயக்கம்:

பன்னீர்செல்வம். புதுமுக இயக்குநராம். சொன்னால் தான் தெரியுங்குற அளவுக்கு படம் முழுக்க பெர்பெக்‌ஷன். கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் அப்டிங்குற பழமொழிக்கு எடுத்துகாட்டா அடுக்கடுக்கா வந்துட்டு இருக்குற படங்கள்-ல இதுவும் ஒண்ணு-னு நெனச்சா, கூட்டத்துல இருந்து இந்த படத்த தனிச்சு காட்டுறது இந்த படத்தோட மேக்கிங். பிரிச்சு இருக்கார். படம் முழுக்க அவரோட உழைப்பு தெரியுது. புதுமுகங்கள் கிட்ட இருந்து நடிப்ப வாங்கி இருக்குறதுலயே அவரோட திறமை தெரியுது.

பல விஷயங்கள் நல்லா செஞ்ச அவர் ஸ்கிரிப்ட்லயும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் பல படங்கள் சென்ற பாதையிலேயே போகுது. இடங்கள் மட்டும் வேற. கிளைமாக்ஸையும் யூகிக்க முடிஞ்சிடுது. மத்தபடி டிஸ்டிங்க்‌ஷன் -ல தேறுவார்.

ரேனிகுண்டா - பழைய மசாலா, புது ருசி.

Leia Mais…

ஞாயிறு, நவம்பர் 29, 2009

யோகி - விமர்சனம்

பருத்தி வீரனுக்கு பிறகான அமீரின் படம் என்பதால் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் சென்றேன். கிட்டதிட்ட ஒரு முழுமையான படமாக பருத்தி வீரன் அமைந்திருந்தது. அதில் மதுரை கிராமத்து மண்ணின் மைந்தர்களை பதிவு செய்த அவர் இந்த படத்தில் சென்னையிலுள்ள சேரிகளை கதைக்களமாக எடுத்து கொண்டுள்ளார். அதே போன்றதொரு ஒரு மிரட்டலை ஏற்படுத்தியுள்ளாரா??? பார்ப்போம்.

கதை:

கூலிக்கு கொலை செய்பவனாக யோகி. அவனுக்கு கீழ் மூன்று பேர். எதைப் பற்றியும் கவலைப்படாதவனாகவும் பணத்திற்க்காக எதையும் செய்பவனாக இருக்கின்றான். ஒரு நாள் இரவு ஒரு ஹோட்டலில் கொள்ளையடிக்க செல்கின்றனர். அங்கு கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது யோகி ஒரு காரில் ஏறி தப்பிக்கிறான். காரை விட்டு இறங்கும் சமயம் அந்த காரில் ஒரு குழந்தையை காண்கிறான். அதை தன்னுடன் எடுத்து செல்கிறான். தானே வள்ர்கவும் விரும்பி தன்னுடனே வைத்து கொள்கிறான்.

இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் எல்லை மீறி போவதால் அந்த ஏரியாவின் பெரிய தாதாவான திருநா-வை போலீஸ் அணுகுகிறது. மறுபுறம் குழந்தையை காணவில்லை என அதன் அம்மா பரிதவிக்க அவளது கணவனோ அதை எப்ப்டியாவது கொன்றுவிட திட்டமிடுகிறான். அதன் பிறகு, யோகி பிடிப்பட்டானா, குழந்தை தாயுடன் இணைந்ததா என்று கிளைமாக்ஸில் காட்டுகிறார்கள்.

நடிப்பு:

அமீர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். முகத்தை சீரியாஸாக வைத்து கொண்டு அவ்வப்போது அதே டோனிலியே அனைத்து வசனங்களையும் உச்சரிக்கும் ரெளடி வேடம். உடம்பையெல்லாம் முறுக்கேற்றி கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் சிறிது கத்துகிறார். அப்போது அவரையும் மீறி சசிக்குமார் தான் எனக்கு வெளிப்பட்டார். ஊர்ல எல்லாரும் அப்டி தான் போல. அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கேரக்டர் அந்த குழந்தை தான். அழகாக இருந்தது. சில போலீஸ்கள், பல ரெளடிகள் தங்களது பணிகளை செவ்வனே செய்கின்றனர்.

கதாநாயகி மதுமிதாவிற்கு கொஞ்சம் வித்தியாசமான வேடம். வழக்கம் போல நன்றாகவே செய்து இருக்கிறார். அமீரை பார்த்து பயப்படும் போதும் சரி, பின்பு புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்ளும் போதும் நல்ல வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் யோகியின் அப்பாவின் நடிப்பும் அபாரம். அவர் அவர் குடும்பத்தில் இருக்கிம் ஒவ்வொருவரையும் அடிக்கும் போதும் ஏதோ நம்மயே அடித்து வெளுப்பதை போல் உள்ளது. ஒரு வெறுப்பு ஏற்படுகிறது அவர் மேல். அதனால் அவர் பெற்றது வெற்றியே.

இசை:

யுவனின் இசையில் பாடல்களை கேட்டேன். ஆனால் பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. ‘சீர் மேவும் கூவத்திலே’ மட்டும் ஒகே-வான ஒரு நம்பர். பின்னனி இசை நன்றாக இருந்தது. ஆனால் தொடர்ந்து ஒரே இசை தான் பின்புலத்தில் ஒலித்து கொண்டிருந்தது. சண்டை காட்சிகளில் அதிரடியாக இருந்தது.

ஒளிப்பதிவு:

ஆர்.பி.குருதேவ். படத்தின் மிக பெரிய பலம். படத்திற்கான டோனை அற்புதமாக செட் செய்து சந்து, பொந்துகளில் பாய்ந்து ஒடுகிறது. இரவு காட்சிகளில் மிளிர்கிறது. சண்டைக் காட்சிகளில் நன்றாக சுழன்றுள்ளது.

எடிட்டிங்:

ராம் சுதர்ஸன். இந்த படத்தையும் 150 நிமிடங்கள் தியட்டரில் உட்கார்ந்து பார்க்க முடிகிறதென்றால் இவர் தான் காரணம். கொடுத்த பிட்டு பிட்டு காட்சி காட்சிகளை கொண்டு இவரே படத்தை கொண்டு வந்திருப்பார் போல. முதல் பாதியில் கதை நகர மாட்டேன் என்கிற போது, இவரது எடிட்டிங் தான் படத்தை நகர்த்துகிறது.

கதை.தி.கதை,இயக்கம்:

சுப்ரமணிய சிவா & அமீர். என்ன தான் சிவா இயக்கி இருந்தாலும் எனக்கென்னமோ இது அமீரின் படமாக தான் தெரிந்தது. அமீர் தான் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இப்படி நான் கருதினாலும் கதை என்ற ஒன்று இல்லாமல் இருப்பது போன்று தான் தோன்றியது. படத்தை எவ்வளவோ விறுவிறுப்பாக நகர்த்த வாய்ப்பிருந்தும் படம் எங்கும் செல்லாமல் பாறையை போல அங்கேயே நிற்கிறது. இடைவேளையின் போது கதை எப்பாதையில் செல்கிறது என்று தெரியாமல் படம் பார்க்கும் அனைவரும் விழிக்கின்றனர். இடைவேளைக்கு பிறகாவது நகரும் எனப் பார்த்தால் பின்னாடி நகர்ந்து யோகியின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

வசனங்கள் ஆங்காங்கே பளிச். காட்சிகளும் ஆங்காங்கே பளிச். ஆனால் படம் டல்லடிப்பதால் அவையாவும் அடிபட்டு போகின்றது. கிளைமாக்ஸ் அமீர் தான் யோசித்தாரா என்பது எனக்கு புரியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது. படத்தை எடுப்பதற்கான எடுத்த சிரத்தையை திரைக்கதையிலும் காண்பித்திருந்தால் யோகி தப்பித்திருப்பான்.

யோகி - பொறுமையை சோதிப்பவன்.

டிஸ்கி: இந்த படத்தின் முன்பதிவு படுமோசமாக இருந்தது. என்னடா மக்கள் அமீர் போன்றதோரு கலைஞனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என தோன்றியது. ஆனால் படம் முற்றிலும் என்னை ஏமாற்றிவிட்டது.

Leia Mais…

ஞாயிறு, நவம்பர் 22, 2009

தீபாவளி கொண்டாட்டம்

நம்ம வானவில் கார்த்திக் சிறிது காலத்துக்கு முன் என்னை தீபாவளி சம்பந்தமான டேக்-கில் கோர்த்துவிட்டார். நான் என்னோட சோம்பேறிதனத்துனால கொஞ்சம் லேட்டா பண்றேன்...

கா.கியும், சாமியும் கோவிச்சிக்க வேணாம். நீங்க ரெண்டு பேர் கொடுத்த ‘டேக்’கையும் இந்த மாசத்துக்குள்ள முடிச்சிடறேன்.

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என்னங்க ’Tell me about yourself'-னு இண்டர்வியூ-ல கேக்குற மாறி இருக்கு. இப்படி கேட்டா 5 நிமிஷம் விடாம பேசுவேன். ஆனா எழுத தான் வர மாட்டேங்குது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை-ல இருக்கேன். சந்தோஷமாவும் இருக்கேன். ஏதாவது உருப்படியா பண்ணனும்-னு மட்டும் மைண்ட் சொல்லிட்டே இருக்கு. ஆனா என்ன பண்றது-னு தான் தெரியல. பார்ப்போம்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி அப்டிங்குறதுனால இதுவரைக்கும் எல்லாமே சேப்டி தீபாவளியாவே அமைஞ்சு போச்சு. 2007-ம் ஆண்டு தீபாவளிய மறக்க முடியாதது அப்டி-னு சொல்லலாம். அந்த தீபாவளிக்கு தான் நான் எங்க வீட்ல இல்ல. பெங்களூர்-ல இருந்து நைட் 10 மணிக்கு தான் வந்தேன். ஊரே அடங்கி போய் இருந்துது. அப்பவும் சாப்பாட்ட மட்டும் ஒரு கட்டு கட்டுனேன்.

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

சென்னைலதான்..

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி அன்னிக்கு இரவு வானத்த பாத்துட்டே போய்ட்டு இருப்பேன். ஏன்னா அவ்ளோ கலர் கலரா வான வேடிக்கைகள் வந்துடுச்சி. அத பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். வெடிகள் இப்ப குறஞ்சு இருக்கு. அதுவும் மகிழ்ச்சி தர ஒரு விஷயம் தான்.

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

அம்மா, அப்பா திட்ட போறாங்களே அப்டி-னு சொல்லிட்டு தீபாவளிக்கு முந்துன நாள் போய் ஒரு ஷர்ட் மட்டும் எடுத்துட்டு வந்தேன். ஸ்பென்சர்-ல ஏவியேட்டர் அப்டி-னு ஒரு கடை-ல. அங்க டிசைனும் நல்லா இருக்கு. விலையும் ஒ.கேவா இருக்கு.

உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :)

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

எஸ்.எம்.எஸ் தான் பல பேருக்கு. சிலருக்கு மட்டும் மின்னஞ்சல் மற்றும் செல்பேசியில் கால் செய்தேன்.

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

டி.வி-ய எல்லாம் இப்ப பாக்குறது இல்ல. முன்னயெல்லாம் நிகழ்ச்சி நேரத்த குறிச்சு வச்சி ப்ளான் பண்ணி பாத்துட்டு இருந்தேன். படத்துக்கு போறதோட தீபாவளி கொண்டாட்டம் முடியுது. இந்த வருஷம் ஆதவன் பாத்தேன்.

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

நான் எதுவும் நானாக சென்று செய்தது இல்லை. இந்த வருடமும், 2007-லும் நான் ஆபிஸிலிருந்து வெளியே வரும் போது சில குழந்தைகள் இல்லத்திலிருந்து கேட்டார்கள். நானும் 100 மற்றும் 50 ரூபாய் கொடுத்தேன். கேட்டவர்கள் இளைஞர்கள் தான். நான் ஏன் அப்படி இல்லை என எனக்கு தோன்றியது. ஆனா நெறைய செய்யணும்-னு மட்டும் அடிக்கடி தோணும். பண்ணனும்.

அந்த ரசீதை எங்கோ வைத்துவிட்டேன். அதனால் பெயர் தெரியவில்லை. சென்னையில் இருக்கும் ஒன்று தான். கண்டுபிடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Leia Mais…

செவ்வாய், நவம்பர் 03, 2009

மக்கள் குரல் - நவம்பர் 3, 2009

திரு.கருணாநிதி: “ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு எனது பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

மக்கள்: ஜெயலலிதா எல்லாரும் தன் பெயரையே வைக்கணும்-னு நினைப்பாரு. நீங்க உங்க குடும்பத்துல இருக்குற யாரோட பெயராவது இருந்தா போதும்-னு பெருந்தன்மையா நினப்பீங்க. ரெண்டு பேரையுமே நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம் தலைவரே...

***************************************************************************

திரு.மன்மோகன் சிங்: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் , தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எளிதாக இலக்காகி விடுகிறது.”

மக்கள்: ஒண்ணும் புரியலையே!!!!! இவரே அவங்களுக்கு எடுத்து கொடுக்குறாப்புல இருக்கு...

****************************************************************************

திரு.தங்கபாலு: ”இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் ராஜபக்‌ஷேவிடமோ அல்லது அங்குள்ள எந்த தலைவர்களிடமோ எந்தப் பரிசுப் பொருட்களையும் பெறவில்லை!”

மக்கள்: இது வேறயா??? ஆனா ’இல்ல, இல்ல’ அப்டிங்குற போதெல்லாம் ’இருக்கு, இருக்கு’ அப்டின்னு காதுல விழுகுதே!!!’

*****************************************************************************

திரு.மு.க.ஸ்டாலின்: “வயதான காலத்தில் பெற்றோரிடம் பிள்ளைகள் அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்குப் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்!”

மக்கள்: நீங்க தான் அதுக்கு வாழும் உதாரணமா திகழ்றீங்களே!!!!

******************************************************************************

திரு.கருணாநிதி: “இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கிறது”

மக்கள்: தமிழ் மக்கள் எல்லாரும் செத்த பிறகு எங்க இருந்து சண்ட போடுறது. சண்டை நின்ற புண்ணியம் உங்களை சேருமைய்யா...

******************************************************************************

செல்வி.ஜெயலலிதா: “ஒபாமா எதையும் சாதிப்பதற்கு முன்பே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்டது”

மக்கள்: என்ன அ.தி.மு.க தொண்டர்கள் யாரும், ‘உலக அளவில் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த அம்மாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’ அப்டின்னு தீர்மானமும் நிறைவேற்றல, கோரிக்கையும் வைக்கல.. ஒரே மர்மமா இருக்கே!!!

Leia Mais…

ஞாயிறு, நவம்பர் 01, 2009

ஒரு ரூபாயில் விளையும் பயன்

தி.மு.க அரசு தன்னுடைய சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் தமிழகத்தை வெகு சீக்கிரமே சோதனையில் தான் கொண்டு சென்று விடும் போலிருக்கிறது. ஏற்கனவே நியாய விலை கடையில் கிடைக்கும் அரிசியின் தரத்தின் பெயரில் பல குற்றசாட்டுக்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அதை வாங்கி உண்பது தங்களுடைய வறுமையின் காரணமாகவே என்று நம்பியிருந்த நான், அந்த காரணத்தை குழி தோண்டி புதைக்கும் படி ஆகிவிட்டது.

சென்ற வாரம் எனது அலுவலக நண்பரோடு பேசி கொண்டிருந்த போது அவரது ஜவுளி கடை வைத்திருக்கும் அவரது நண்பரைப் பற்றி சொன்னார். அதாவது அவர் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அதற்கு ஒரு யோசனை சொல்லும் மாறு அவரின் நண்பரிடம் கேட்ட போது, உடனே மறுத்து இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்:

இப்பயெல்லாம் முன்ன மாதிரி இல்ல. வேலைக்கே ஆள் கிடைக்க மாட்டேங்குது. அப்படியே கிடச்சாலும் யாரும் ஒழுங்கா வேலை செய்யுறது இல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சன இல்ல. அதனால யாருக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அப்டிங்குற எண்ணமே இல்லாம போச்சு. ஏதாவது பண்ணனும்-னு நினச்சினா... நீ, அப்புறம் உன்னோட குடும்பத்த சேர்ந்தவங்க பாத்துக்க முடியுற மாறியான தொழில் மட்டும் பண்ணு

அப்டி-னு சொல்லி இருக்கார்.

இதுல நிறைய உண்மை இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். நாம உழைக்கிறதே சாப்பாடுக்காக தான். அது நமக்கு கிட்டதிட்ட இலவசமா கிடைக்கும் போது யார் போய் கஷ்டப்பட்டு உழைக்க போறாங்க.

நம்ம அரசு ஏதோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றோம்-னு பெருசா சொல்லிக்கிறாங்க. ஆனா அதுல இருக்குற பாதகங்களா பாக்காம விட்டுவிட்டு இருக்காங்க. இதோட உடனடி பாதிப்பு இப்போ தெரியலனாலும், இப்படியே போச்சுன்னா, இன்னும் சில ஆண்டுகள்-ல நிச்சயமா தொழில் துறை-ல பாதிப்பு இருக்கும்.

ஏற்கனவே விவசாயம் நம்ம நாட்டுல நசிஞ்சு போயிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த யாருமே இப்போ விவசாயம் பாக்கல. நிலத்த வச்சி இருந்தவங்களும் நிலத்த வித்துட்டு வேற வேலைய பாக்க போயிட்டாங்க. விவசாயம் பாக்குறது அப்டிங்குறதே ஒரு கேவலமான விஷயம் மாறி இப்போ ஆயிடுச்சி. ஆனா இத சரி பண்றதுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எந்த அரசாங்கமும் எடுக்கல. இப்டியே போச்சுனா, அரசுக்கு நியாய விலை கடைல கொடுக்கவே அரிசி இல்லாம போனாலும் போகலாம்.

இலவசங்கள் மக்கள வெறும் சோம்பேறிகளாக தான் ஆக்கும் என்ற எளிய உண்மையை எல்லாம் அறிந்த நமது முதல்வரும், அவரது கட்டியும் எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

Leia Mais…

செவ்வாய், அக்டோபர் 27, 2009

மதியின் மதிநுட்பம் - I

நான் முன்பே சொன்னது போல திரு.மதி அவர்கள் வரைந்த, அதில் நான் ரசித்த கார்ட்டூன்களை பதிவாக போடுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். மதி அவர்களின் ஸ்பெஷாலிடி என்னவெனில், நாம் நினைப்பதை ஒரு நகைச்சுவையாக, நக்கலாக சொல்வது. சரி என்சாய் பண்ணுங்க.

பின்வருவன அவர் 2006-ம் ஆண்டு அப்போது வெளியான படங்களை அடிப்படையாக கொண்டு வரைந்தது.

பின்வருவன அவரது சமீபத்திய கார்ட்டூன்கள்:

மற்றொரு பதிவில் அவரது இன்னும் சில சமீபத்திய மற்றும் கிளாசிக் கார்ட்டூன்களை பகிர்ந்து கொள்கிறேன்.

Leia Mais…

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

எனக்கு விருது கொடுத்து இருக்காங்க

ரம்யா அக்கா எனக்கு விருது கொடுத்து இருக்காங்க. 'SCRUMPTIOUS BLOG AWARD'. ரொம்ப நன்றி அக்கா.

தமிழ் வலையுலகத்தை பொறுத்தவரை நான் ரொம்ப புதியவன்(இங்கலிஷ்-ல மட்டும் பெரிய ஆளா-னு கேக்காதீங்க... அங்க தான் நான் என்னோட வலையுலக பயணத்த தொடங்குனேன். இங்கைய விட கொஞ்சம் அதிகம் பதிவுகளையும் எழுதி இருக்கேன்). எனக்கு இந்த விருது கிடச்சதுல ரொம்ப சந்தோஷம்.

இத நான் அடுத்து வர நண்பர்கள் எல்லோருக்கும் கொடுக்க ஆசைப்படுறேன்.

ஜமால் அண்ணா,
விஜய் அண்ணா,
G3 அக்கா,
கில்ஸ் அண்ணா,
சக்தி அக்கா,
ரமேஷ் அண்ணா,
கா.கி அண்ணா,
பாலா அண்ணா,

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

Leia Mais…

செவ்வாய், அக்டோபர் 20, 2009

ஆதவன் - விமர்சனம்

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். சூர்யா-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி. இருவருமே கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளில் வெற்றியை மட்டுமே சுவைத்து இருப்பதால் எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தியது. ட்ரெயிலரும் பாடல்களும் நன்றாக இருக்க, நாம் எதிர்பார்த்தது நல்ல படத்தை. கொடுத்து இருக்கிறார்களா என்று பார்ப்போம்.
கதை:

கூலிக்கு கொலை செய்பவராக சூர்யா. அவரின் குடும்பத்திற்கே அது தான் தொழில். குழந்தைகளை கொன்று அவர்களது உடல் உறுப்புகளை விற்கும் குழுவின் தலைவன், அந்த வழக்கை விசாரிக்க வரும் அதிகாரியை கொல்ல சொல்லி சூர்யாவின் குழுவிற்கு சொல்கிறார். அந்த அதிகாரியை கொல்வதற்காக அவரின் வீட்டிற்கே சென்று வேலை செய்ய வந்தது போல நடிக்கிறார். அடுத்து அவரது திடுக்கிடும்(!?!?!?!) பின்னனிகள் ப்ளாஷ்பேக்குகளாக விரிய படத்தை வழக்கம் போல சுபமாக முடிக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி பெரிய குடும்பம், வடிவேலு-சூர்யா கூட்டணி நகைச்சுவை என கொஞ்சம் வேகமாக நகருகிறது. அது எப்படி கொஞ்சம் வேகமாக நகரலாம் என்று ஆங்காங்கு வேகத்தடைகளாக பாடல்கள். இரண்டாவது பாதி முழுக்க நாம் பல படங்களில் பார்த்த செண்டிமெண்ட் காட்சிகள். என்ன அழுகைக்கு பதில் சிரிப்பு தான் வருகிறது. லாஜிக் அப்டிங்குறவங்களுக்கெல்லாம் ஒரே பதில் தான்... இது கே.எஸ்.ஆர் படம். அதுக்கு மேலயும் லாஜிக்க நீங்க தேடுனா... சாரி பாஸ் என்பது தான் பதில்.

ரமேஷ் கண்ணா இன்னும் கூட இந்த கதைய தேத்தி இருக்கலாம்..

நடிப்பு:

சூர்யா உண்மையான ஒரு ஹீரோவா இதுல நடிச்சு இருக்கார். அதாவது இந்த பல கட்டடங்கள்-ல இருந்து ஜம்ப் பண்றது. அப்பாவும் காதலியும் மாட்டிக்கும் போது குண்டடிய தான் வாங்கி காப்பாத்துறது மட்டும் இல்லாம வில்லனுக்கு அத அப்டியே திருப்பி கொடுக்குறது... அப்பப்பா... இவர் மட்டும் தான் இத செய்யாம இருந்தார். அவரையும் மாத்திட்டாங்க. அடேங்கப்பா என்றேல்லாம் சொல்ல வைக்கும் அளவுக்கு நடிக்க எதுவும் இல்லை. சும்மா வந்து போறார். அந்த 10 வயசு சூர்யா எல்லாம் பார்க்க ஆச்சர்யத்த விட சிரிப்பு தான் வருது. தேவையற்ற செலவு. நயந்தாரா.. பல படங்கள் கழித்து இந்த படத்தில் சிறிது ரசிக்கும்படி இருக்கிறார். சிறிது நடிக்கவும் செய்து இருக்கிறார்.

நகைச்சுவைக்கு வடிவேலு. பல படங்களுக்கு பிறகு ‘வெடி’வேலுவாக மாறி நம்மை சிரிக்க வைக்கிறார். முதல் பாதி நகருவதே இவரால் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் சரோஜா தேவியும், ஆனந்த் பாபுவும். சரோஜா தேவி அவர்களின் அந்த கொஞ்சி பேசும் நடிப்பை தாங்க முடியல... கொல்றாங்க. ஆனந்த்பாபுவ அவர் தான் நடிச்சு இருக்கார்-னு கன்ஃபார்ம் பண்ண்வே கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. ரொம்ப தான் ஆள் நோடிஞ்சு போய் இருக்கார். ரமேஷ் கண்ணாக்கு ஒரு வேத்து வேடம். மியூசிக் பைத்தியம்-னு சொல்லிட்டு நம்மள பைத்தியம் ஆக்குறாரு. வில்லன்கள் எல்லாம் அவங்க வேலையான வாய் சவடல்கள நல்லாவே கொடுத்து இருக்காங்க.

இசை:

ஹாரிஸ் ஜெயராஜ் தன்னோட வழக்கமான பாணியில இசையமைச்சிருக்கார். ‘ஹசிலி பிசிலி’யும், ‘வாராயோ வாராயோ’ பாடலும் என் பேவரிட். அதுவும் ‘வாராயோ வாராயோ’ பாடல் வர இடமும் சரி, அதன் கான்சப்ட், அதை படமாக்கிய விதம்.. மிக அருமை. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் பின்னனி இசையில் மனிதருக்கு சல்ப்பேடுக்கவில்லை. ஒரே இரைச்சல் தான்.

ஒளிப்பதிவு:

ஆர்.ஏ.கணேஷ். நல்லா பண்ணியிருக்காரு. பாடல் காட்சிகள் பார்ப்பதற்கு குளுமை. ஆக்‌ஷன் காட்டிகளில் வேகமாக பயணிக்கிறார். ஆனால் வீட்டிற்குள் எடுத்த காட்சிகள் சிலவற்றில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.

எடிட்டிங்:

டான் மாக்ஸ். இந்த படம் ஏன் 3 மணி நேரம் ஒடுகிறது என்ற காரணம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. பல காட்சிகளை வெட்டி எறிந்து படம் பார்ப்பவர்களின் துன்பத்தை சிறிது குறைத்து இருக்கலாம். சொர்க்கத்துக்கு போக வேண்டிய நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாரு-னு தான் சொல்லணும்.

இயக்கம்:

கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் இருந்து நான் கலைப்படைப்பெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. மசாலா படம் சிறு புதுமைகளோடு... அவ்வளவே. மசாலா படத்தை மீண்டும் தந்து இருக்கும் இவர் அந்த சிறு புதுமையை மறந்துவிட்டார். இரண்டாவது பாதி முழுக்க பல படங்களின் கதை மற்றும் காட்சிகளின் நெடி.

ஆதவன் - சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார் கணக்கில் மற்றோரு படம்.

Leia Mais…

சனி, அக்டோபர் 17, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!!

நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லாரும் பாதுக்காப்பா, மகிழ்ச்சியா கொண்டாடுங்க :)

Leia Mais…

திங்கள், அக்டோபர் 12, 2009

நோபல் பரிசுக்கு நேர்ந்த கதி

ஏற்கனவே தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட விருது பட்டியலை பார்த்து பொருமி கொண்டிருந்த நான் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு’ என்ற செய்தியைப் படித்தவுடன் வெறுத்தே போய்விட்டேன். இரண்டையும் ஒரு சேர ஒப்பீடு செய்வது மடத்தனம் தான் என்றாலும் இரண்டும் ஏமாற்றம் என்ற அளவில் ஒத்து போகின்றன. ஒபாமா அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கான காரணம்:

சர்வதேச அளவில் ராஜீய உறவுகளை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி, அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டதற்காக அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது

முதலில் அமெரிக்கா தன்னை உலக இரட்சகராக காட்டி கொள்வதை நிறுத்தி கொள்ளலாம். இன்றைய உலகில், அதாவது இரண்டாம் உலகப் போருக்கு பின், இருக்கும் பாதி பிரச்சனையில் ஊதுகுழலாக அமெரிக்காவே செயல்ப்பட்டுள்ளது. வலுத்தவன் உலகாள்வான் என்ற உன்னத கொள்கையை பின்பற்றி தங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பலப் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து இரு நாடுகளுக்கு இடையில் பகைமூட்டி தனது நவீன ஆயுதங்களை விற்று தனது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியது என்பது வரலாறு.

இன்று ஒபாமா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது முந்தைய அமெரிக்க அதிபர்கள் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் தானே தவிர அவராக செய்வதில்லை. அவருக்கு அந்த தார்மீக பொறுப்பும் உள்ளது.

அடுத்து சொல்லப்படும் காரணம், அணுஆயுத குறைப்பு நடவடிக்கை. இப்பொழுது உலகத்திலேயே அதிக அணுஆயுதங்கள் வைத்துள்ள பட்டியலில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இருப்பது அமெரிக்கா தான். அடுத்தவர்களை சொல்லும் முன் அவர் தன் நாட்டின் ஆயுதங்களை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தார்?? ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் தீவிரவாதிவாதிகள் வந்து குண்டுமழை பொழிவார்களா?? மற்ற நாடுகள் தங்களை காத்து கொள்ள தேவை இல்லையா?? எதற்கென்றாலும் அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க வேண்டுமா??

இதில் நோபல் பரிசுக் குழு கூறியுள்ள இன்னொரு விஷயம் ‘உலகத்தில் அமைதி ஏற்படுத்துவதற்காக முயற்சி எடுத்து கொண்டிருக்கிறாராம்'

அப்படியெனில் ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் ஆரம்ப கோட்டில் இருக்கும் போதே அவன் முதலாவதாக வர முயற்ச்சிகிறான் என முதல் பரிசைக் கொடுத்துவிடுவீர்களா???

ஒபாமா பதிவியேற்று 10 மாதம் கூட முழுமையாக முடிவடையவில்லை. அதற்குள் என்ன அவசரத்தில் தந்தார்கள் எனத் தெரியவில்லை.. அவர் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவராக இருந்தால், உலகம் முழுக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பவராக இருந்தால் ஏன் இலங்கையில் படுக்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏன் ஒரு கண்டன அறிக்கை கூட வரவில்லை???

இந்த விருதால் ஏற்பட்டு இருக்கும் ஒரு நன்மை, இனி ஒபாமாவே ஏதாவது போரைப் பற்றி மறந்துப் போய் சிந்தித்தால் கூட இந்த நோபல் பரிசு அவருக்கு தடையாய் இருக்கும்.

தனது கிடைத்த விருதிற்கு ஏற்றவாறு ஒபாமா நடந்து கொள்வார் என நம்புவோமாக!!!!

டிஸ்கி 1: நல்லகாலமாக, நமக்கு வேதியியல், இலக்கியம்ப் பற்றி எல்லாம் அதிகமாக தெரியவில்லை. இல்லையெனில் அதையும் பார்த்து கோபப்பட வேண்டி இருக்குமோ என்னவோ??

டிஸ்கி 2: வேதியியலுக்காக நோபல் பரிசு வென்ற நமது நாட்டு விஞ்ஞானி டாக்டர். வெங்கட்ராமன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

Leia Mais…

சனி, அக்டோபர் 10, 2009

கேலிகூத்தாகும் விருதுகள்

ஏற்கனவே பழசாகிவிட்ட இந்த மேட்டரை பத்தி அதர பழசு ஆகுறதுக்கு முன்னாடி எழுதலாம்-னு முடிவு பண்ணிட்டேன். தலைப்ப பாத்த உடனேயே யூகிச்சி இருப்பீங்க... தமிழக அரசின் சினிமா விருதுகள் 2007 & 2008 பத்தி தாங்க..

2007:

முதல்ல யார் யார் விருது வாங்குனாங்கனு பார்ப்போம்.
சிறந்த நடிகர் - ரஜினிகாந்த்(சிவாஜி)
சிறந்த நடிகை - ஜோதிகா(மொழி)
சிறந்த படம் -
முதலாவது - சிவாஜி
இரண்டாவது - மொழி
மூன்றாவது - பள்ளிகூடம்
சிறந்த இயக்குனர் - தங்கர் பச்சான்
சிறந்த குணச்சித்திர நடிகர் - M.S.பாஸ்கர் (மொழி)
சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா(ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)
சிறந்த குடும்பச்சித்திரம் - தூவானம்.

சிறப்பு பரிசு:

சிறந்த படம்: பெரியார்.
சிறந்த நடிகர் - சத்யராஜ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த நடிகை - பத்மபிரியா(மிருகம்)
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்

இந்த லிஸ்டில் பார்த்தோமேயானால் ஆரம்பமே கோணல், முற்றிலும் கோணல் என்கிற கதை தான்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது.. அதுவும் சிவாஜி படத்தில் நடித்ததற்காக. நான் ரஜினியின் ரசிகன் தான். அவரது நடிப்பை அப்படத்தில் ரசித்தேன் மற்ற அவரது எல்லா படங்களை போலவே. ஆனால் விருது பெற தகுதியான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தவும் இல்லை. அந்த கதாப்பாத்திரத்தில் அவ்வளவு தான் செய்ய முடியும். சரி அப்படியென்றால் யாருக்கு வழங்கி இருக்கலாம்???

கற்றது தமிழ் படத்தில் நடித்த ஜீவா. நிச்சயமாக ஒரு மிக சிறந்த நடிப்பை வழங்கி இருந்தார் ஜீவா. நான் முதல் முறை பார்த்த போது மிரண்டுவிட்டேன்.

சரி... அடுத்து சிறந்த படத்திற்கு வரலாம்.

முதல் இடம்: சிவாஜி. இது எந்த வருடத்திலும் சிறந்த காமெடியாக இருக்கும். ஏனெனில் சிவாஜி அந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக வருவதற்கே முக்க வேண்டியிருக்கும். அவ்வளவு சிறந்த படங்கள் வந்தன(நான் பார்த்தவரையில் தமிழ் சினிமாவின் முக்கிய ஆண்டு என்றே கூறலாம்). சினமா மொழியிலும் சரி, வியாபாரத்திலும் சரி. அந்த படங்களை பார்ப்போம்.

மொழி, கற்றது தமிழ், கல்லூரி, பொல்லாதவன், உன்னாலே உன்னாலே, சென்னை - 600028, கீரிடம்... இதற்கெல்லாம் பிறகு தான் சிவாஜி. ஆனால் அந்த படத்தை முதல் இடத்தில் வைத்து அழகுப் பார்த்திருக்கிறார்கள் விருது கமிட்டியினர். அதற்கான காரணம் என்ன??

அடுத்து சிறந்த இயக்குனர் விருது... தங்கர் பச்சான். என்னைப் பொருத்தவரை அந்த விருதை பெற தகுதியுடையவர்கள்:

ராதா மோகன் - மொழி
வெங்கட் பிரபு - சென்னை - 600028. (புது முயற்சிக்காகவே கொடுக்கலாம்)
வெற்றிமாறன் - பொல்லாதவன்.
கல்லூரி - பாலாஜி சக்திவேல்.
இங்கும் சில அரசியல் வேலைகள் நடந்துள்ளன...

சிறந்த நடிகை - ஜோதிகா.. நல்ல தேர்வு...

சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் - சிறப்பாகவே செய்து இருந்தார். யுவனும் கற்றது தமிழில் சிறப்பாக செய்திருந்தார் என்பது என் எண்ணம்.

இதில் இந்த சிறப்பு பரிசு என்ற ஒரு கொசுறு வேலை எனக்கு சிரிப்பை தான் வரவழைக்கிறது. ஏற்கனவே மூன்று சிறந்த படங்களை தேர்ந்தெடுத்துவிட்டு அந்த மூன்றிலும் வராமல் போன ஒரு படத்திற்கு ஒரு விருது!!!!

நல்ல வேளை விருது கமிட்டியினர் கொஞ்சம் விழிப்போடு தான் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் 2007-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக 125 நாட்கள் ஓட்டப்பட்ட நமது வீர தளபதி ஜே.கே.ரீத்திஷ் அவர்கள் நடித்து வெளியான அதிரடி திரைப்படம் ‘நாயகன்’ படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. இல்லை வீரதளபதி அவர்கள் தலைவரின் மனம் குளிரும் படி நடந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.

2008:

சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம்)

சிறந்த நடிகை - சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த படம் -
முதலாவது - தசாவதாரம்
இரண்டாவது - அபியும் நானும்
மூன்றாவது - சந்தோஷ் சுப்ரமணியம்
சிறந்த இயக்குனர் - ராதா மோகன்(அபியும் நானும்)
சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ் (அபியும் நானும்)
சிறந்த குணசித்திர நடிகை - பூஜா(நான் கடவுள்)
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)
சிறந்த குடும்ப திரைப்படம் - வல்லமை தாராயோ
சிறந்த வசனக்கர்த்தா - மு. கருணாநிதி(உளியின் ஓசை)

சிறப்பு பரிசு:

சிறந்த படம் - மெய்பொருள்
சிறந்த நடிகர் - சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை - திரிஷா ( அபியும் நானும்)
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ.

மீண்டும் ஆரம்ப கோணல் முற்றிலும் கோணல் கதை தான். சிறந்த நடிகர் விருது திரு.கமல்ஹாசனுக்கு. அவர் சிறந்த நடிகர் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இந்த படத்தில் நடிப்பை விட ஒப்பனை தான் அதிகம் இருந்தது. இவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு ஏன் காக்காய் பிடிக்க பார்க்கிறது என தெரியவில்லை(கலைஞர் டி.வி.யில் உ.போ.ஒ படத்திற்காக கமல் பேசு பேசு என தள்ளிக்கொண்டு இருக்கிறார். ரீமேக் படத்திற்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?? ஆனால் இது அவர் விரும்பியதாக இருக்காது என்பது மட்டும் திண்ணம்).

சரி அப்படியெனில் சிறந்த நடிகர் விருதை பெறுவதற்கு தகுதியானாவர்??

வாரணம் ஆயிரத்தில் சூர்யா அவ்வளாவு அருமையாக செய்து இருந்தாரே... அவருக்கு சிறப்பு பரிசு என்று குழந்தைக்கு பப்பர மிட்டாய் தருவது போல் தந்துள்ளனர்.

சிறந்த நடிகை விருது - சினேகாவிற்கு.. தகுதியானவர் தான்.

சிறந்த திரைப்படம் - மூன்றுமே அந்த விருதிற்கு லாயக்கற்றவை. அஞ்சாதே, சுப்ரமணியபுரம், பிரிவோம் சந்திப்போம், பூ, பொம்மலாட்டம் எல்லாம் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என தெரியவில்லை..

சிறந்த இயக்குநர் - ராதா மோகன் - சரியான தேர்வு இல்லை. சசிகுமாருக்கும்(சுப்ரமணியபுரம்), மிஷ்கினுக்கும்(அஞ்சாதே) சிரிப்பதா அழுவதா என்று தெரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ். விருது கமிட்டியினர் பொம்மலாட்டம் படத்தை பார்த்தார்களா என்று தெரியவில்லை. நானா படேகர் சும்மா கலக்கி இருந்தார். 2008-ல் அவருக்கு பின் தான் யாராக இருந்தாலும்.

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா... அஜந்தா படத்திற்க்காக... படம் வந்ததா என்பதே எனக்கு சந்தேகம் தான். ஹாரிஸ் ஜெயராஜின்(வாரணம் ஆயிரம்) பெயர் விடுப்பட்டதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை.

சிறந்த வசனகர்த்தா: மு.கருணாநிதி. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது படத்திற்கு வசனம் எழுதுவது. எழுதியதற்கு தனக்கு தானே விருது கொடுத்து கொள்வது, பாராட்டி கொள்வது...

நல்ல காலமாக திரு. கருணாநிதி வசனம் எழுதிய ஒரே காரணத்துக்காகவே ‘உளியின் ஒசை’க்கு அத்துணை விருதையும் எடுத்து கொடுத்துவிடவில்லை.

இதில் திரிஷா அப்படி என்ன நடித்துவிட்டார் என அவருக்கு சிறந்த நடிகை சிறப்பு பரிசாம். பூ படத்தில் பார்வதி அவ்வளவு சிறப்பாக நடித்து இருந்தார்.

இப்படி திறமைக்கு மரியாதை தராமல் அடுத்துவர் மனதை குளிரும் படி செய்வதற்கு விருதுகள் தேவையா???

இதைப் பற்றி இன்னும் விவரமாக அறிந்து கொள்ள உண்மைத் தமிழன் அண்ணாவின் இந்த பதிவை படிக்கவும்.

Leia Mais…

வியாழன், அக்டோபர் 08, 2009

சில சில... பகிர்வுகள்: ஆ.வி

என்னங்க ஆ.வின்னா - ஆனந்த விகடன் தான். இந்த பதிவு ஆ.வியின் தீவிர ரசிகனுடையது. ஏனோ அவனது ரசிப்புதன்மைக்கு ஏற்றவாறு தற்போதெல்லாம் ஆ.வி இல்லை. அது ஏன் என்று தான் கீழே சொல்லி இருக்கிறேன். ******************************

சமீப காலமாவே விகடன்-நோட தரம் குறைந்து கொண்டே வருவது போல் உள்ளது. பட விமர்சனங்களும் அவ்வளவு சரி இல்லை. 'கந்தசாமி' படத்துக்கெல்லாம் எப்படி தான் 41 மார்க் கொடுத்தார்கள் என்று இன்னமும் எனக்கு புரியவில்லை. புத்தகம் முழுக்க வெறும் ஜோக்சை வாரி இறைத்தது போல் உள்ளது. 'விகடன்' தான் படிக்கிறேனா இல்லை ஏதாவது காமிக்ஸ் புத்தகம் படிக்கிறேனா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுகிறது. எங்கு நோக்கினும் ஒரே கார்ட்டூன் படங்கள் தான்.

******************************

சில வருடங்கள் முன்பெல்லாம் விகடனில் வரும் அத்தனை விஷயங்களும் நன்றாக இருக்கும். கல்லூரிக்கு போகும் போது அது தான் துணை. ஒரு விஷயம் விடாமல் படித்து விடுவேன் இப்போதெல்லாம் அதில் நான் தொடர்ந்து படிக்கும் ஒரே விஷயம் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் 'சிறிது வெளிச்சம்' மட்டும் தான். அதற்கடுத்து பார்த்தால் ஹாய் மதன். சத்குரு அவர்கள் தொடர்ந்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது போல உள்ளது. ஆனால் எங்க அப்பா இந்த முறை அவர் எழுதுவது நன்றாக இருக்கிறது என்று சொன்னார். ஆனால் எனக்கு தான் அதை படிக்கும் எண்ணமே வரமாட்டேன் என்கிறது. அவர் சொல்ல வேண்டியதை எல்லாம் 'அத்தனைக்கும் ஆசைப்படு' தொடரிலேயே சொல்லி விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது(நான் படித்த சிறந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று).

************************************

அதே போல் நட்சத்திர எழுத்தாளர்களின் கதைகள் என பிரசுரிக்கிறார்கள். நான் இரண்டு கதைகளை படித்தேன். இரண்டும் பளிச்சென இல்லாமல் மங்கி காணப்பட்டன(காசு கொடுக்க வில்லையா என்று தெரியவில்லை. நாம் அந்த பிரச்னைக்கும் போக வேண்டாம்). தரமாக ஏன் இல்லை என்பதே என் கேள்வி. இருக்கும் தமிழ் வார இதழ்களிலேயே அதிக விலையில் விற்பது விகடன் தான். அதே போல் தரமான வார இதழ் என்ற பெயர் பெற்று இருப்பதும் விகடன். இதன் மாற்ற போட்டி பத்திரிக்கைகளான குமுதம், குங்குமம் ஆகியவற்றை நான் படிப்பது இல்லை என்பதை விட படித்தவரையில் எனக்கு பிடிக்கவில்லை. கல்கி நல்ல புத்தகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் படித்தது இல்லை. படிக்க வேண்டும்.

****************************************

விகடனில் இப்போது பேப்பர்களில் காணப்படும் பளபளப்பு பிரசுரிக்கும் விஷயங்களில் இல்லை. தேவையில்லாத பேட்டிகள் மற்றும் 'பிரபலங்களின்' (வேற யாரு நடிக நடிகையர் தான்) இதுவரை சொல்லாதது போன்று உப்பு சப்பற்ற விஷயங்கள் தான் வருகின்றன. என்னவோ நாட்டில் விஷயமே இல்லாதது போல் 'நயந்தாரவிற்கும் பிரபுதேவாவிற்கும்' இருக்கும் உறவை பற்றி பக்கமாக பல இதழ்களில் போடுகிறார்கள். இதனால் படிக்கும் வாசகர்களுக்கு என்ன நன்மை என்று சுத்தமாக புரியவில்லை. அதையும் போட்டால் எனது மரமண்டைக்கு அது ஏன் முக்கியம் என்று எட்டும்.

*****************************************

இதற்கிடையிலும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம் தலையங்கம் இன்னும் சிறப்பாகவே உள்ளது. அதே போல மதனின் கார்டூன்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. விகடனில் இரண்டு ஜோக்ஸ் வாய்விட்டு சிரிக்கும்படியாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியகவும் இருந்தது. இதோ அவை:

முதலாவது:

விகடனில் இப்போது விருது வழங்குவது என்று ஒரு பகுதி(நக்கலுக்கு தான், முக்கால்வாசி மொக்கையாக தான் இருக்கும்). அதில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களுக்கு 'பாராட்டு பழனிச்சாமி' விருது. எதற்கெனில், முன்பெல்லாம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். இப்பொழுதெல்லாம் டி.வி, காஸ் ஸ்டவ் கொடுத்த பிறகு 'ஏழைகளின் சிரிப்பில் கலைஞர்-ஐ காண்கிறேன்' என ஓவராக உணர்ச்சிவசபட்டதற்காக :)

இரண்டாவது:

வாராவாரம் அப்போதுள்ள அரசியல் பற்றும் சினிமா விஷயங்களை வைத்து மற்ற பிரபலங்கள் எப்படி யோசிப்பார்கள் என சித்திர படத்துடன் வெளிவரும்... அதில் ராகுல் காந்தியின் தமிழக விசிட்-ன் போது விஜய்யும் அவர் அப்பா S.A.C யும் ராகுலை சந்திப்பது போல காட்சி.. தங்கபாலுவும் உடன் இருக்கிறார்(இது காமெடிக்காக எழுதப்படுவது)

(ராகுலிடம் பணிவாக)

S.A.C: தமிழகத்தோட வருங்கால முதல்வர் வந்திருக்காருங்க...

(ஓரமாக விஜய் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல நிற்கிறார்)

ராகுல்: வழக்கு எதுவும் இவர் மேல இல்லாததுனால கட்சியில உறுப்பினரா சேத்துக்கலாம்...

(பின்னாலிருந்து)

தங்கபாலு: குருவி, வில்லு படங்கள் எல்லாம் நடிச்சி அக்யுஸ்ட லிஸ்ட்-ல இருக்குராப்ப்ல.....

Leia Mais…

ஞாயிறு, அக்டோபர் 04, 2009

திரு திரு துறு துறு - விமர்சனம்

என்னோட அடுத்த பதிவா ’சில சில... பகிர்வுகள்’ தான் போடலாம்-னு இருந்தேன். ஆனா நேத்து திரு திரு முழிச்சிட்டு இருந்தப்போ துறு துறு-னு இந்த படத்துக்கு போய்ட்டு வந்துட்டேன். சரி படத்தை பத்தி சீக்கிரம் போட்டா நல்லா இருக்குமே இன்னிக்கே போட்டுடேன் விமர்சனத்தை.
************************************************************************************
ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பார்த்து யோசிக்காம பொலம்பாம வாய்விட்டு சிரிச்சிட்டு மட்டும் வந்து இருக்கேன். இதுக்கு முன்னாடி பொய் சொல்ல போறோம் படத்த பாத்த போது அந்த மாதிரி நடந்தது. அதிலயும் மெளலி நடிச்சிருந்தார். சரி வாங்க விமர்சனத்துக்கு போவோம்.
கதை:
மொத்தமே பத்து நாள் நடக்குற கதை தான். மெளலியின் விளம்பர கம்பெனியில் வேலை பார்க்கிறார் அஜ்மல். மெளலி அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அஜ்மலை மகன் போலவே நடத்துகிறார். அதே விளம்பர கம்பெனியில் வேலை செய்பவர் நாயகி ரூபா மஞ்சரி. நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கும் கம்பெனியை தூக்கி நிறுத்த ஒரு பெரிய கம்பெனியின் விளம்பர ஆர்டரை பிடிக்க வேண்டும் என்று முயல்கிறார் மெளலி. ஆனால் அஜ்மலின் பொறுப்பில்லாதனத்தால் தானே இந்த விளம்பரத்தின் முழு செலவையும் ஏற்பதாகவும் பிடித்து இருந்தால் மட்டும் காசு கொடுங்கள் போதும் என்று மெளலி அவர்களிடம் சொல்லிவிடுகிறார். இதற்காக வீட்டையும் அடமானம் வைக்கிறார்.
விளம்பரம் குழந்தை சம்பந்தமானது. ஆனால் சரியான சமயத்தில் குழந்தை கிடைக்காததால் அஜ்மல் தேடி அலைகிறார். ஒரு குழந்தையைப் பார்த்து பிடித்து போய் அவளின் அம்மாவை கேட்க அவள் குழந்தையை தர மறுக்கிறாள். இப்படி கேட்டு கொண்டிருக்கும் போதே தீடீரென விபத்து ஏற்பட்டு குழந்தையின் அம்மா மயக்கமாகிறாள். அவளை மருத்துவம்னையில் சேர்த்து விட்டு நிலைமையை சமாளிக்க குழந்தையை எடுத்து கொண்டு போய் காண்பிக்கிறான். கிளைண்ட்க்கு அது பிடித்து போக அடுத்த நாளே ஷீட்டிங் தொடங்கலாம் என்கிறார். சரி என்று குழந்தையை அவளின் அம்மாவிடம் கொடுக்க செல்லும் போது அவள் அங்கிருந்து காணாமல் போகிறாள். அதனால் இப்பொழுது அந்த குழந்தையை விளம்பர படத்தில் நடிக்க வைத்து கொண்டே பெற்றோரை தேடுவது என முடிவு செய்கிறார்கள். குழந்தையை தேட அஜ்மலின் நண்பனான போலீஸ் அதிகாரியும் உதவுகிறார். அஜ்மலுக்கு உதவியாக ரூபாவும் குழந்தைப் பார்த்து கொள்ள அஜ்மலின் வீட்டில் தங்குகிறார். அதன் பின் எப்படி அவர்கள் குழந்தையை சமாளித்து, விளம்பர படம் எடுத்து, பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.
திரைக்கதை:
இம்மாதிரியான படங்களுக்கு கதையை விட திரைக்கதை தான் முக்கியம். அதை உணர்ந்து புது இயக்குநர் நந்தினி அவர்கள் சிறப்பாக செய்து இருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவை தெளிக்கப்பட்டு இருக்கிறது. லாஜிக் மீறல்கள் பல இருந்தாலும் அதயும் தாண்டி நம்மை யோசிக்க வைக்காமல் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் காமெடி என்ற பெயரில் அபத்தங்களும் இருக்கின்றன.
நடிப்பு:
அஜ்மல் ஒரு கேர்-ப்ரீ சிட்டி பையன் கதைக்கு நன்றாகவே பொருந்துகிறார். ஆனால் அவருடைய எக்ஸ்பிரஷன் தான் ஒரே மாதிரி இருக்கின்றன. டைரக்டர் அப்டி சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை. ரூபா மஞ்சரி ப்ரஷ் ஆக பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். முக்கியமாக நடிக்கிறார். நல்ல நடிப்பு.
மௌலி கலக்குகிறார். பெயரை அவர் மாற்றி மாற்றி சொல்லும் போதெல்லாம் ஒரே சிரிப்பு தான். அதே சில இடங்களில் குணசித்திர நடிப்பையும் வழங்கி உள்ளார். நிறைய படங்கள் நடிங்க சார். நாங்க கொஞ்சம் சிரிச்சிகுறோம். இவர்களை தவிர மற்றவர்களுக்கு சிறு வேடங்கள் தான் என்றாலும் அனைவரும் சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்.
இசை:
மணிஷர்மா. செம ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். பாடல் எதுவும் எடுபடவில்லை. கடைசியாக ஒரு மெலடி வருகிறது. சுமார் ரகம். பின்னனி இசை ஒகே.
எடிட்டர்:
எம்.எஸ்.சூர்யா. கத்திரியை கன கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். இரண்டு பாதியுமே சரியா இருக்கு. நேரம் போவதே தெரியவிலை.
இயக்கம்:
நந்தினி அவர்கள். நல்ல ஒரு இயல்பான கதையை எடுத்து அதற்கு விறுவிறுப்பான ஒரு திரைக்கதையை அமைத்து இருக்கிறார். இவரின் திறமை கடைசி 30 நிமிடங்களில் நன்றாக வெளிப்படுகிறது. சாதாரணமாக ஒரு காமெடி படத்தில் வில்லன் கூட்டமே காமெடி பீஸாக இருக்கும்(உ: பம்மல்.கே.சம்பந்தம்). ஆனால் இங்கு இவர் கொஞ்சம் புத்திசாலிதனமாக யோசித்து காட்சிகளை அமைத்து இருக்கிறார். இன்னும் பல நல்ல படங்களை இவர் தருவார் என நம்புவோம்.
திரு திரு... துறு துறு: படத்துக்கு போங்க... சிரிச்சிட்டு வாங்க

Leia Mais…

வெள்ளி, அக்டோபர் 02, 2009

படக்கலவை - I

போன மாசம் சில படங்களை பாத்தேன்... அதைப் பற்றிய பதிவு தான் இது.
காதல் கவிதை:
அந்த கல்யாணத்துக்கு போய்ட்டு வரும் போது பஸ்ஸில் ஒடிய படம். நான் இதுவரைப் பார்த்தது இல்லை. இனி பார்க்கும் எண்ணமும் இல்லை. அதனால் நமது வழ்க்கமான தூக்கத்தை போட ஆரம்பித்தேன். ஆனால் இந்த பாழாய் போன தூக்கம் சிறிது நேரம் கலைந்தது. விழித்து பார்த்தால் படம் கிட்டதிட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஆனால் காமெடி சீனை அங்கேயா கொண்டுப் போய் வைப்பார்கள். நாயகன் பிரஷாந்த்தும், நாயகி இஷா கோபிகரும் பார்க்குறாங்க ஆனா அவங்க தான் இவங்க-னு தெரியாம காதல் பண்றாங்க(வித்தியாசமான கதை!!!!!). இஷா கோபிகருக்கு அவங்க காதலிக்குறது பிரஷாந்த் தான் -னு தெரிஞ்சிடுது. உடனே பல சிக்னல்கள கொடுக்குறாங்க. ஆனா சிகப்பு சிக்னல் போட்ட மாதிரி பிரஷாந்த்தோட காதல் வண்டி ஸ்டார்ட் ஆகவே மாட்டேங்குது. இஷா காட்டுற க்ரீன் சிக்னல் எல்லாத்தையும் ரெட்டுன்னே நினச்சிகிறார். இதனால மனம் ஒடஞ்சி(??????) போற இஷா தற்கொலை பண்ணிகுறது-னு முடிவு பண்ணுறாங்க. இவங்க பேய் ஆயிட கூடாது-னு அவங்க வீட்டுல இருக்குற குட்டி பிசாசுங்க விளையாட்டு மூலமா தடுத்துடறாங்க(அட... தெரியாம தான். நம்புங்கப்பா). அப்புறம் தான் முக்கிய உச்சகட்ட காமெடியே...
இஷா கோபிகர் சின்ன பிசாசுங்களோட கண்ணாம்பூச்சிய அவங்களோட மொட்டை மாடியில விளையாடுறாங்க. இவங்க துணிய கண்ணுல கட்டிக்குறாங்க. பசங்க எல்லாம் கீழ போயிடுறாங்க. உடனே இஷா கிரிமினலா யோசிச்சி மொட்டை மாடியில இருக்குற கம்பி மேல நடக்க ஆரம்பிக்கறாங்க. பிரஷாந்த்துக்கு இப்ப தான் மேட்டரே தெரியுது. உடனே படுவேகமா கிளம்பி வர்றாரு. இஷாவும் விடமா கம்பி மேல வித்த காட்டுறவங்கள விட அபாரமா நடக்குறாங்க. வித்த காட்டுறவங்களாவது கைல கம்ப பாலன்ஸ் பண்ண வச்சி இருப்பாங்க. இவங்க சான்ஸே இல்ல. பிரஷாந்த் மேல வர அதுவரைக்கும் நல்லா நடந்துட்டு இருந்தவங்க கீழ விழுந்துடுறாங்க..(அய்யையோ!!!!). ஆனா ஹீரோபிரஷாந்த் அவங்கள் கீழ விழாம புடிச்சி காப்பாத்தி கவிதைய முடிக்கிறார்... ஸ்ஷபாபாபாபா.... எனக்கு பக்கத்துல பஸ்-ல உக்காந்து இருந்தவர் வாய்விட்டு சிரிச்சிட்டு இருந்தார்... இயக்குனர் வாழ்க!!!!
Race to witch mountain:
இந்த படம் ட்ரீட்-ல ஒசி-ல பாத்த படம். அதுவும் சத்யம்-ல. எனக்கு செம தூக்கம். போன கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன். ஆனா கூட வந்திருந்தவங்க எல்லாம் என்னாடா இவன் மட்டும் நிம்மதியா தூங்குறானே சொல்லிட்டு தூக்கத்த கொஞ்ச நேரத்துல காலி பண்ணிட்டாங்க. சரி அப்டினு முழிச்சி பாக்க ஆரம்பிச்சேன். வழக்கமான ஏலியன் கத. என்ன ஏலியனா ரெண்டு சின்ன பசங்க(வித்தியாசத்த காட்டுறாங்களாம்). எல்லாம் தெரிஞ்ச கத தாங்க... அவங்கள புடிச்சி ஆராய்ச்சி பண்ணனும்-னு ஒரு கூட்டம். அவங்கள காப்பாத்துற நம்ம ROCK. நல்லா தான் பண்ணி இருக்காரு. WWF ட்ரெயினிங்-னா சும்மாவா!!!!! நம்மளோட ஒரு தெய்வீக காதல், முரட்டு அண்ணன், பாசமிகு அம்மா, நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, தனி காமெடி ட்ராக் பார்முலா மாதிரி அங்க இந்த ஏலியன் கதப் போல... ஹீம்ம்ம்ம்ம்....
ஆனா இப்ப இதுல இருந்து வித்தியாசப்பட்டு ஒரு படம் வந்திருக்காம். District 9. கலக்கலா இருக்காம். நான் சத்யம்-ல பாக்குறதுக்காக வெயிட்டிங்க். ஆனா நம்ம ஊர்-ல ரீலிசாகுறதுக்கான அறிகுறியே தெரியல..
Iron man:
இது நான் அடுத்ததாக என்னோட பிசி-ல பாத்த படம். சும்மா சொல்ல கூடாது.. நல்லா எடுத்து இருக்காங்க. Shark industries-ஓட சி.இ.ஒ டோனி ஷார்க் ஒரு மிக சிறந்த மெக்கானிக். அவருக்கு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பக்க பலமா இருக்குறது அவரது அப்பாவின் நண்பர் ஒபாடியா ஷா. அவரோட நிறுவனத்தின் பணி என்னன்னா போருக்கான ஆயுதங்கள தயாரிக்குறது. அவர் ஆப்கானிஸ்தானுக்கு தான்னோட ஜெரிக்கோ ஏவுகணையோட சக்திய பத்தி சொல்ல போறாரு. அங்க அத காமிச்சி முடிச்ச உடனே கிளம்பும் போது தீவிரவாதிங்க அவர தாக்கி கடத்திடுறாங்க. அவங்க அவர அதே மாதிரியே ஒரு ஏவுகணைய தயாரிக்கணும்-னு சொல்றாங்க. ஆனா அவர் அதுக்கு பதிலா இரும்பிலான ஒரு கவச உடைய தயாரிச்சு சண்ட போட்டு தப்பிச்சிடுறாரு. அதுக்கு அப்புறமா அவரோட கம்பெனியோட ஆயுதங்களால நெறய பேர் இறக்க நேரிடுறதுனால தன்னோட கம்பெனி ஆயுதங்கள் தயாரிக்க கூடாது-னு முடிவு பண்றாரு.
தன்னோட கம்பெனி தயாரிச்ச ஆயுதங்கள அழிக்கனும்-னு முடிவு பண்றாரு. அதுக்காக தன்னோட இரும்பு கவச உடைய மெருகேத்தி இன்னும் நவீனப்படுத்தி நேரா அவரே போய் அழிக்கிறாரு. இதுக்கு நடுவுல அவர யார் கடத்த சொன்னாங்க அப்டிங்குற உண்மை தெரிஞ்சி போகுது. அது யாரு... அப்புறம் அவருக்கும் வில்லனுக்கும் நடக்குற பைட்.
நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. அதை விட Special effects சூப்பர். அதுவும் அயர்ம் மேனும் சில விமானங்களும் சண்டை போடுற காட்சிகள் செம செம...
இந்த படத்த டைம் இருந்தா கண்டிப்பா பாருங்க.
இன்னிக்கு காந்தி ஜெயந்தி... எப்டியோ அவர மறந்துட்டாலும் அவரோட பிறந்த நாள மறக்காம விடுமுறை கொடுத்துடறாங்க... ஹீம்ம்ம்ம்ம்... இருந்தாலும் அனைவருக்கும் எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.
இன்னிக்கு தினமணி-ல இது சம்பந்தமா ஒரு கார்டூன் வந்துருந்துது. என்னோட பேவரிட் கார்ட்டூனிஸ்ட் மதி வரஞ்சிருந்தார். சரியா தான் இருந்துது.
டிஸ்கி-1: ஒரே பதிவுல எல்லா படத்தையும் போடணும்-னு தான் நினச்சேன். ஆனா பதிவு இப்பவே ரொம்ப பெரிசா போயிட்டதுனால வேற பதிவுல மத்த படத்த பத்தி பொடுறேன்.
டிஸ்கி-2: திரு.மதி அவர்களோட வேற சில சிறந்த கார்ட்டூன்கள பகிர்ந்துக்கலாம்-னு இருக்கேன்.
அடுத்த பதிவு: சில சில... பகிர்வுகள்

Leia Mais…

ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

திரும்பி வந்துட்டேன்

என்னாட இவ்ளோ நாளா பதிவே போடலியே ‘பிஸி’-ய இருந்தனோ அப்டினு நினச்சிங்க-னா நீங்க ரொம்ப நல்லவங்க... ஆனா நான் வெட்டியா தான் இருந்தேன். என்னவோ பதிவு போடுறதுக்கானா மூடே வரல... சரி போன 20 நாள்-ல சொல்லிகிற மாறி சில விஷயங்கள் நடந்துது... அத சொல்றேன்..

ஒரு 20 நாள் முன்னாடி கிருஷ்ணகிரிக்கு என் கல்லூரி நண்பனோட திருமணத்துக்கு நானும் இன்னொரு நண்பனும் போயிருந்தோம். காலை-ல தான் கல்யாணம் அப்டிங்குறதுனால ஆபீஸ்-ல இருந்து ராத்திரி 10 மணிக்கு தான் கோயம்பேடுக்கு கிளம்புனேன். அவன் வீடு குரோம்பேட்டை-ல இருக்கு. அதனால அங்க இருந்து போறதா பிளான் பண்ணோம். அங்க போக ஒரு 10:45 ஆயிடுச்சி. நான் சாப்பிடாததுனால அங்க பரோட்டா கடை எங்கயாவது போலாம்-னு பாத்தா சுத்தி எங்கயும் பெருசா இல்ல... அதனால அஞ்சப்பர்-ல அடியெடுத்து வச்சோம். சில, பல கோழிய உள்ள தள்ளிட்டு வெளிய வர கிட்டதிட்ட ஒரு 11:40-க்கு மேல ஆயிடுச்சு. நான் இதுவரைக்கும் அவ்ளோ லேட்டா கோயம்பேடுக்கு போனதில்ல அப்டிங்குறதுனால பஸ் இருக்குமா-னு ஒரு யோசனையாவே இருந்த்து. எப்டியும் வேலுருக்காவது இருக்கும்; அங்க இருந்து எப்டியும் போயிடுலாம்-னு நினச்சிகிட்டு போனோம்.
12 மணிக்கு கூட நம்ம சென்னை-ல நல்ல பேருந்து வசதி இருக்குங்க... பயணமும் நல்லா தான் இருக்கு. அந்த இரவு நேரத்துல ஜன்னலோரமா உட்கார்ந்துகிட்டு ஜில்லுனு காத்து வாங்கிட்டே கதயடுச்சிகிட்டு போறது. கோயம்பேடுக்கு ஒரு 12:15... 12:30 வாக்குல போய் சேந்தோம். எனக்கு இன்னோரு பயம் என்ன இருந்துதுனா அடுத்த நாள் ‘ஓண்ம்’ பண்டிகை. அதனால கூட்டமா இருக்குமோ-னு நினச்சேன்.நல்ல வேள பெங்களூரூ போற வண்டி இருந்துது, காலியாவும் இருந்துது. அத ஒரு 1 மணிக்கா எடுத்தாங்க. என் ப்ரண்ட் ஜன்னலோரத்துல உக்காந்துக்க நான் அவன் பக்கத்துல செட்டில் ஆயிட்டேன். பஸ்-ச ஒரு 1 மணிக்கு மேல எடுத்தாங்க. எனக்கு டைம்-அ வீணடிக்குறது கொஞ்சம் கூட புடிக்காது. அதனால பஸ் ஸ்டார்ட் பண்ணவுடனே தூங்க ஆரம்பிச்சிட்டேன். என் ப்ரண்டும் அப்டி தான். ஆனா அவனுக்கு விதி காத்து ரூபத்துல சிரிச்சுது. நல்ல ஜில்லு-னு காத்தடிச்சி அவனோட தூக்கத்துக்கு முற்றுபுள்ளி வைக்க பாத்துட்டே இருந்துருக்கு.... ஆனா அவன் விடாமா அத காமா ஆக்கிட்டே வந்துட்டான். அவன் எழுந்த போதேல்லாம் நான் அசராமா அசந்து தூங்கிட்டே இருந்துருக்கேன். பாத்து பாத்து.. ஒரு 6:15-க்கு மேல என்ன எழுப்பி இன்னும் 30-கி.மீ தான் இருக்கு... நீ பாத்துக்கோ... நான் கொஞ்சம் தூங்குறேனு போய் பின்னால படுத்துகிட்டான். பாத்தா ஒரு 20 நிமிஷத்துலயே மண்டபம் வந்துடுச்சி. நல்ல வேளையா ஒருத்தர் அங்கருந்து கொஞ்ச தூரத்துல எறங்குனார். நான் அவன எழுப்பி வேகமா ஒடிபோய் எறங்கிட்டோம்.
கல்யாணம் 9-10:30... மணியோ 6:30 தான் ஆச்சி. 8:30 வரக்குமாவது பொழுத போக்கனுமே.. அதனால காலங்காலமா நாம உபயோகபடுத்துற டெக்னிக்கான டீக்கடை-ய தேர்ந்தெடுத்தோம். போய் ஒரு காபி அப்புறம் சில பிஸ்கட்ட உள்ள தள்ளிட்டு.... மண்டபத்துக்கு எதிர்திசை-ல நடக்க ஆரம்பிச்சோம்.
நான்: “ஏண்டா... கிருஷ்ணகிரி எப்ப வரு-னு ரெண்டு பேருக்குமே தெரியாது... அப்புறம் எப்படி இன்னும் 30 நிமிஷம் ஆகும்-னு சொன்ன??”
அவன்: ஒரு தோராயமா தான் - டா... நமக்கு முன்னாடி இருந்தவனும் அங்க தான் எறங்கனும். அவன் டிக்கெட் வாங்கும் போது பாத்தேன்.
நான்: (??????????) அவன் என்கிட்ட கிருஷ்ணகிரி எப்ப வரும்-னு நீ தூங்க போனதுக்கு அப்புறமா கேட்டாண்டா...
ரெண்டு பேரும்: :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அப்டியே நடந்து நடந்து தமிழ்நாடு ஓட்டலுக்கு போய் சேர்ந்தோம். திரும்ப அவன் ஒரு டீ அடிக்க... நான் ஒரு மாற்றத்துக்காக ஐஸ்கீரிம் சாப்பிட்டேன்... அப்டியே பொழுத போக்கி ஒரு 9 மணிக்கா போய் சேந்தோம். கல்யாணத்த பாத்துட்டு சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிச்சிட்டு கிளம்புனோம். 12 மணிக்கா பஸ்-அ புடிச்சி ஒரு 6 மணிக்கு வந்து சேந்தோம்.
இவ்ளோ சொல்லிட்டு ஊர பத்தி ஒண்ணுமே சொல்லலியே... உண்மையிலியே ரொம்ப நல்லா இருந்துதுங்க. சுத்தமா, ‘ட்ராபிக்’ இல்லாம ஒரு மாறுதலா இருந்துது. அப்புறம் அங்கங்க மலையும் இருக்கு... பாக்க ரம்மியமா இருக்கு. பெங்களூருக்கு பக்கதுல இருக்குறதுனாலயா என்னன்னு தெரியல... காலைல நல்லா குளிர்ச்சியா இருந்துது. நான் காலைல 9 மணிக்கு முன்னாடி சூரியனுக்கு ‘குட்மார்னிங்’ சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. மதிய ஷிப்ட் போறதுனால முடியல. காலைல உலகம் நல்லா தாங்க இருக்கு...
சரி அவ்ளோ தான் அந்த பயணக்கதை... அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம்.
அடுத்த பதிவு: படக்கலவை.

Leia Mais…

ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்

மலையாள படமான ’கிளாஸ்மேட்ஸ்’ - இன் ரீமேக் இந்த படம். இந்த படத்தைப் பார்க்க போகும் முன் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான். தமிழில் வார்த்தைகளுக்கு ஏதேனும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா??? என்பது தான் அது. பெயரே இல்லாத மாதிரி ‘நினைத்தாலே இனிக்கும்-னு பழைய பட டைட்டில வச்சி இருக்காங்க... சரி படத்துக்கும் பேருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா-னு பாத்தா ஒண்ணுமே இல்ல-னு தான் சொல்லணும்... ஏன்னா படத்துல வர முக்கிய கதாபாத்திரம் எல்லாமே சோக நினைவுகளோட தான் சுத்திட்டு இருக்கு. சரி அவுக கதைய விடுவோம்.. நமக்கு இனிக்குதா.. இல்லையா-னு பாப்போம்.

கதை என்னான்னா... வழக்காம ஆரம்பிக்குமே.. ஹீரோ தன்னுடைய நண்பர்கள பாக்க 8 வருஷம் கழிச்சு திரும்பி வர்றாரு.. வரும் போதே கல்லூரி காலங்கள நினச்சு பாக்குறாரு. பிருத்விராஜ், ஷக்தி(அதாங்க டைரக்டர் பி.வாசு பையன்), கார்த்திக்(அமெரிக்கா மாப்பிள்ளை), ப்ரியாமணி, ஒரு புதுமுக நடிகை(முக்கிய கதாபாத்திரம்), ’லொள்ளு சபா’ ஜீவா, இன்னும் கொஞ்சம் பேர் எல்லாம் ‘கிளாஸ்மேட்ஸ்’. இதுல பிருத்விராஜ் நண்பர்களுக்கும், கார்த்திக்கும் மோதல். ஷக்தி இந்த ரெண்டு பேருக்குமே பொதுவான நண்பனா இருக்குறாரு. இதுக்கு நடுவுல காலேஜ்-ல மாண்வர் தலைவர் வேணும், எலக்‌ஷன் நடத்தணும்-னு கேட்டு போராடுறாங்க. இதுல பிருத்விராஜ எதிர்த்து அவருடைய ப்ரியாமணி போட்டி போடுறாங்க. இதுல பல மனஸ்தாபங்கள். அப்புறம் எதிர்ப்பாராத ஒரு மரணம் நடக்க, படிப்ப பாதியிலேயே விட்டுட்டு பிருத்விராஜ் போறாரு. என்ன நடக்குது அவர் திரும்ப வரும் போது அப்டிங்குறது தான் கத.
பிருத்விராஜ் நல்லா பண்ணி இருக்காரு தன்னோட முந்தைய படங்கள போலவே. கொஞ்சம் கோவக்காரரா வர்றாரு. அடுத்து ப்ரியாமணிக்கு நடிக்க எல்லாம் பெரிய வாய்ப்பில்ல. சும்மா வந்துட்டு போற ரோல். ஷக்திக்கு பெரிய கேரக்டர் எல்லாம் இல்ல. சும்மா கவிதைய சொல்லி கொல்றாரு. அந்த புதுமுக பொண்ணு அழகாவும் இருக்கு, கொஞ்சம் நல்லாவும் நடிச்சிருக்கு. கார்த்தி, அமெரிக்க மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழன் கதாபாத்திரத்துல இருந்து புரேமோஷன் ஆகி வில்லன் ஆகி இருக்கார் இந்த படத்துல.. நல்லா பண்ணி இருக்கார். இளவரசு, லொள்ளு சபா ஜீவா எல்லாம் நல்லா பண்ணி இருக்காங்க.
படத்துல நிஜ ஹீரோ காமெராமேன் பாலாசுப்ரமணியம் (பிதாமகன் படத்துக்கெல்லாம் பண்ணி இருக்கார்) தான். அற்புதமா பண்ணி இருக்கார். ஒவ்வொரு ப்ரேமுமே ஒரு அழகான போட்டோ மாறி இருக்கு. அதுவும் கடைசியா ஒரு பாட்டு வரும் பாருங்க ‘அழகாய் பூக்குதே’-னு சான்ஸே இல்ல. கலக்கி இருக்காரு. எடிட்டிங் ஒகே தான். படம் மொத்தம் 2 மணி 10 நிமிஷம் தான். இன்னும் கொஞ்சம் கூட ‘கட்’ பண்ணி இருக்கலாம்-னு சொல்ற அளவுக்கு காட்சிகள் இருக்கு.
இசை: விஜய் ஆண்டனி. டைட்டில் கார்ட பாத்ததுனால கண்டுபுடிச்சேன். ஒரே ஒரு பாட்டு தான் கேக்குற மாறி இருக்கு. ’வணாரஸ் பொட்டு வைத்து’-னு ஒரு பாட்டு. மத்தபடி பாட்டு, பின்னனி இசை ரெண்ட பத்தியும் அவர எனக்கு புடிக்கும் அப்டிங்கிறதால ஒண்ணும் சொல்லல.
இயக்கம்: குமரவேலன். இவர் கிட்ட ஒரு கேள்வி. ஒரு காலேஜ் கேம்பஸ் படத்த ஏன் ரீமேக் பண்ணனும்?? புதுசா எடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும். இதுல அவர் மலையாளத்துல இருந்து மாத்துறேன் -னு சொல்லிட்டு கேரள காலேஜ் மாறியும் இல்லாம, தமிழ்நாட்டு காலேஜ் மாறியும் இல்லாம மொக்க ஆயிடுச்சி. அதனாலயே நமக்கு அவங்களோட சந்தோஷமோ துக்கமோ பாதிக்கல. ஏதோ நடக்குது, நாமும் பாக்குறோம் அப்டிங்குற மாறி இருக்கு.
முதல் பாதி கொஞ்சமே கொஞ்சமா காலேஜ்கே உரிய கலகலப்புகள் இருக்கு. இரண்டாவது பாதி மறந்து போய் கூட சிரிக்க முடியாது. ஏன்னா அவ்ளோ சீரியஸ். என்ன தான் காலேஜ் கத-னாலும் இது எனக்கு நடந்துதே, நாங்க இப்டி பண்ணோமே, இப்டி இருந்துருந்தா நல்லா இருந்துருக்குமே நினைக்கிற மாதிரியான காட்சிகள்... சாரி.. ஒண்ணு கூட இல்ல. காதல் இருக்கு.. ஆனா ஒரு அழுத்தம் இல்ல. நட்பு நட்பு-னு சொல்றாங்க.. ஆனா அத புரிய வைக்குற மாறி ’நச்’-னு ஒரு காட்சி இல்ல. ரெண்டாவது பாதியில மட்டும் கொஞ்சம் பயமுறுத்துறாங்க. மொத்ததுல தெளிவா நம்மல பாதிக்குற மாறி இல்லாம, நச நச-னு சொதப்பலா இருக்கு.
நினைத்தாலே இனிக்கும்: நினைக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல... இனிப்பான நினைவுகள் அப்டினு எதுவும் இல்ல.

Leia Mais…

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

நாலு கேள்வி மற்றும் ஒரு நற்செய்தி

கில்ஸ் அண்ணா என்னை இந்த தொடர் பதிவுக்கு கோர்த்துவிட்டு இருக்கார். ரொம்ப நன்றி அண்ணா :))

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு என்பது நாம் எப்படி ஒரு விஷயத்தை காண்கிறோம் என்பதில் இருக்கிறது என்பதே என் கருத்து.
தாய்க்கு தன் குழந்தை எப்போதும் அழகு.
இளைஞர்களுக்கு அப்போது வரும் ஹீரோயின்கள் மேக்கப்போடு இருந்தால் அழகு.
மேல் குறிப்பிட்ட இரண்டில் இருந்து எந்த அழகு நிரந்தமானது என்பது தெரியும்.
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் என்பதின் பொருள் அன்பு என்று நம்புகிறேன். அப்படி நம்புவதனால் காதல் மிக மிக அவசியமே :))
3. கடவுள் உண்டா?
ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்குவதாக நம்புகிறேன். அந்த சக்திக்கு பெயர் ‘கடவுள்’ எனில், அதை நான் நம்புகிறேன். கடவுள் உண்டு.
4. பணம் அவசியமா?
கண்டிப்பாக. எவ்வளவு என்பது அவரவர் மற்றும் நாட்டின் அப்போதைய பொருளாதர நிலையை பொருத்தது.
சரி.. நான் இந்த தொடர் பதிவ முடிச்சிட்டேன். எல்லாரும் பண்ணிட்டதுனா-ல யாரையும் கோத்துவிடல...
***********************************
அப்புறம் ஒரு முக்கிய மகிழ்ச்சியான செய்தி... நமது ரமேஷ் அண்ணாவின் மேன்ஷனில் உள்ள நீரின் தரம் உயர்ந்துவிட்டது. அவர்களுடைய போராட்டத்திற்கு வெற்றி. எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் :))
இந்த சந்தோஷ செய்தியோடு இப்போ கிளம்புறேன். அடுத்த பதிவுல சந்திக்கிறேன் :)

Leia Mais…