வியாழன், ஏப்ரல் 30, 2009

கருணாநிதியின் ‘தீடீர்’ உண்ணாவிரதம் - ஒரு நேரடி ரிப்போர்ட்

கடந்த திங்கள்கிழமை நடந்த கருணாநிதியின் உண்ணாவிரதம் மக்கள், எதிர்கட்சியினர் மற்றும் அவரின் கட்சியினரிடேயே கூட பேரும் அதிர்ச்சியை(!!!!!) ஏற்படுத்தியது. அவரது இந்த தீடீர் உண்ணாவிரதத்தின் பின்னனியை அறிவதே இந்த பதிவின் நோக்கம்(????????)

 

     உண்மையை அறிய நாம் பல நபர்களிடயே பேட்டி கண்டோம். அவர்களிடம் கேட்க பட்ட கேள்வி: கருணாநிதியின் தீடீர்உண்ணாவிரதத்ற்கு காரணம் என்ன?”

 

    

அடி பொடி 1: அய்யாவிற்கு எப்பொதுமே இலங்கை தமிழர்கள் மீது அளவில்லா பாசம் உண்டு. ஓரு தாய் தன் குழந்தையைப் பார்த்து தனக்கு பிடிக்கும் என்று சொல்லி கொண்டேவா இருப்பார். அதுப்போல  தான் இதுவும். தேவயான நேரத்தில் தேவயானதை செய்து இருக்கிரார். (தெரியத்தனமாக இவரிடம் கேட்டுவிட்டோம். முரசொலியின் ஆசிரியராக இருப்பார் போல.... )

பொதுஜனம் 1: இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை சார். வோட்டு வாங்குரத்துக்காக இவர் இந்த மாறி பண்றார். உண்ணாவிரதம் இருக்க போரவரு எதுக்கு சார் ஏ/சி ய எடுத்துக்குனு போகனும்... சும்மா வீட்ல படுத்துக்குனு இருக்குர மாறி படுத்துகுனு இருக்குரார்.... டேய்லி அவர் குடிக்கிரதே அந்த ஒரு கிளாஸ் ஜூஸ் தான் இருக்கும்... அத ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி குடிச்சிட்டு உண்ணாவிரதம்னு காமெடி பண்றார்.... இத ஒளிபரப்ப ஒரு சேனல் வேர....

என அவர் இழுத்து கொண்டே போக, அவரை கட் செய்வது கடினமாக இருந்த்து.

 

அடி பொடி 2: இவரோட பெரிய தல வலி சார்.... திடுதுப்புனு போய் உண்ணாவிரதம்னு சொல்லிட்டார்... அதனால நாங்களும் இருக்க வேண்டியதா போச்சு... இதுக்கு பந்தல் போடவே கைல இருந்த காசெல்லாம் போச்சு... முந்தன நாள் நைட் சாப்ட்த்துனால ரொம்ப கஷ்டமா போச்சு சார்... அவருக்கு சன் டி.வில நல்ல கவரேஜ் கொடுதாங்க... எனக்கு நம்ம சன் மட்டும் தான் செம கவரேஜ்.... எஸ்கேப் ஆக முடியல...

என்று சொன்னவர் தன் பெயரை வெளியிட வேண்டாம் எனக் கூறினார்.

 

பொதுஜனம் 2: 85 வயசுலயும் பயங்கரமா உழைக்கிறாருங்க... இப்ப கூட இந்த உண்ணாவிரதம் இருந்து இருக்கார்... ஆனா என்ன எல்லாம் போனதுக்கு அப்புறம் மங்களம் பாடிட்டு இருக்கார்... அதான் சிரிப்பா இருக்கு.....

என இரத்தின சுருக்கமாக முடித்தார்.

         இன்னும் சில பேரிடம் விசாரித்தும் சரியாக காரணத்தை பிடிக்க முடியாத்தால், முந்தய நாள் என்ன நடந்த்து என்பதை அறிய அவரது வீட்டு வேலயாள் ஒருவரை பிடித்தொம். அவர் கூறிய ‘திடுக்தகவல்:

“அய்யா நேற்று இரவு சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்த போது டி.வி-யில் ‘தூள்படம் ஓடி கொண்டு இருந்த்து. அவர் மிகவும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தார், பின்பு தூங்கி விட்டார்

ஆம்... ‘தூள்படம்... உங்களுக்கு புரிந்த்தா.... அதில் வரும் காரைப்பாண்டியன் அவர்கள் தீடீரென்று ஒரு காவேரி பிரச்சினைக்காக போராட்டம் நட்த்துவார்... அதை பின்பற்றியே நமது ‘மாண்புமிகுமுதல்வர் அவர்கள் இதை நட்த்தியுள்ளார்.. துப்பு துலங்கிவிட்ட்து..

 

பி.கு: இது போல் இன்னும் பல ரிப்போர்டுகளை நாங்கள் தர உள்ளோம்... தயாராக இருங்கள்... 

Leia Mais…

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

மக்கள் குரல்

ஜெயல்லிதா: நாங்கள் 40 இடங்ளிலும் வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையும்.

மக்கள்: நீங்க இந்திய நாடாளுமன்றத்துக்கு போட்டி போடுறீங்களா.. இல்லை இலங்கை நாடாளுமன்றத்துக்கு போட்டி போடுறீங்களா??

*************************************************************************

அன்புமணி ராமதாஸ்: ஜெயல்லிதா கை காட்டுபவர் தான் பிரதமர்.

மக்கள்: 2 மாசம் முன்னாடி தான், சோனியா கை காட்டுபவர் தான் பிரதமர்னு சொன்னீங்க L

***************************************************************************

ஆர்.எம்.வீரப்பன்: வழக்கம் போல இந்த தேர்தலிலும் எம்.ஜி.ஆர் கழகம், தி.மு.க கூட்டணி வெற்றிக்காக போராடும்.

மக்கள்: இன்னும் நீங்க கட்சி நட்த்துறீங்களா????

*************************************************************************************

தங்கபாலு: காங்கிரஸ் கட்சியும் அன்னை சோனியா காந்தியும் இருக்கும் வரை தி.மு.க-வை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மக்கள்: ஆட்சி முடிய இன்னும் ஒரு மாசம் கூட இல்லீங்கோ...

****************************************************************************

சரத்குமார்: திருமங்கலத்தில் நடைபெற்றது தேர்தலே இல்லை. எனவே, எங்கள் கட்சி அங்கு வாங்கிய ஓட்டுகளின் சதவிகிதத்தை கணக்கில் எடுத்து கொள்ள முடியாது.

மக்கள்: டெபாசிட்டே போன பிறகு எத கணக்குல எடுத்தாலும் பிறயோஜனம் இல்ல தான்.

***************************************************************************

கனிமொழி: பெண்களைப் பெண்களால் தான் புரிந்து கொள்ள முடியும் என்பார்கள். ஆனால், ஜெயலலிதவால் பெண்களுக்கு ஏதாவது நல்ல காரியம் நடந்ததா?

மக்கள்: நீங்க எம்.பியாகி 3 வருஷம் ஆச்சி... ஆனா இலக்கிய கூட்டத்த தவிர நீங்க எங்கயும் போன மாறி தெரியலயே... நீங்க மொதல்ல எதாவது பண்ணுங்க..

 

Leia Mais…

சனி, ஏப்ரல் 11, 2009

மக்கள் குரல்

தங்கபாலு: தமிழகa காங்கிரசில் கோஷ்டி பூசாலே கிடையாது. நான் தலைவராக வந்த பிறகு கோஷ்டி பூசலை கட்டுப்படுத்தி இருக்கிறேன்.

மக்கள்: நீங்க ஒரு செம காமெடீ ஸார். சின்ன கொழந்தாய கேட்த கூட சொல்லும் 'சேர்ந்தே இருப்பது' காங்கிரசும் கோஷ்டி புசலும்நு... நீங்க எதுக்கு இப்படி பேசி நேரத்த வீனக்குறீங்கநு தெரியல :)

லல்லு: அத்வானியின் ஜாதகத்தை நான் லாந்தர் விளக்கு வைத்து நன்றாக உற்று பார்த்துவிட்டேன். அவர் பிரதமராக வாய்ப்பே இல்லை.

மக்கள்: அவர் ஜாதகத்த விடுங்க.... உங்கள் ஜாதகத்தை பாதீங்கள.. ரயில்வே துறை மந்திரி ஆகா வாஇபிருக்குத..

மன்மோகன் சிங்: சோனியா காந்தி என் ஆட்சி நிர்வாகத்தில் எப்போதும் தலையிட்டதே இல்லை.

மக்கள்: வாங்க ஐயா... நீங்க ஆட்சி செய்றீங்கநு நாங்க சொன்னதே இல்லையே...

விஜயகாந்த்: நான் சட்டவிரோதமாக பேசுவதாக கூறுகிறார்கள்.. நான் மணல் கொள்ளை கும்பலுடனோ, ரௌடிகளுடனோ பேசவில்லை.. மக்களுடன் தன் பேசுகிறேன்..

மக்கள்: எல்லாம் சரி தான்.. அந்த நன்கொடை வாங்குறீங்களே உங்க கல்லூரி ல அத பத்தி பேசவே இல்ல..

பி.கு: இது எல்லாம் நம்ம தாலைவருங்க பேசுணா பேசுக்கள் தான்... அதுக்கு மக்கள் எப்டி ரியாக்ட் பண்ணி இருப்பாங்கனு ஒரு சின்ன கற்பனை அவ்ளோ தான் :)

Leia Mais…

திங்கள், ஏப்ரல் 06, 2009

ஒரு நாயகன் ஊதயமாகிறான்......... :D

இதோ வந்துவிட்டார்.. உங்களது இன்னல்களை போக்க, உங்களை மகிழ்விக்க, கலைச்சேவை ஆற்ற,.....................
இளம் புயல், எழுச்சி நாயகன், காதல் மன்னன், அக்ஷன் கிங், நடிப்பு சுறாவளி, புரட்சி புயல், சிங்கத்தின் சிங்கம், ரத்தத்தின் ரத்தம், உங்களின் உடன்பிறப்பு, ஏழைகளின் தோழன், தளபதி, அரசன், முந்திரி, சாரி, மந்திரி, கட்டுப்படுத்த முடியா காட்டாறு, வெற்றி திருமகன், அனைவருக்கும் தலைமகன், சூரகொட்டை சிங்கக்குட்டி, உங்கள் வீட்டின் செல்ல அப்புக்குட்டி, இந்தியாவின் எதிர்காலம், தமிழகத்தின் பொற்காலம், அஞ்சாநெஞ்சன், விடிவெள்ளி, நட்சத்திரம், நிலா, சூரியன், வானம், இல்லை அதுவல்ல..... இதோ உங்களுக்காக தரிசனம் தருகிறார் உங்கள் நாயகன், மக்கள் நாயகன்..................................................................
............
............
.....................
.....................
.....................
.....................
.......................
...........................
................................
.......................................
.............................................
...................................................
........................................................
.............................................................
..................................................................
.........................................................................
..............................................................................
....................................................................................
.........................................................................................
.............................................................................................
.....................................................................................................
...........................................................................................................
...............................................................................................................
......................................................................................................................

மக்களே பாதீங்கள இந்த கொடுமைய.. எத்த சொல்ல, என்னத்த சொல்ல, நீங்களே சொல்லுங்க...........

பி.கு: நீங்க கேக்கலாம் ஏன்டா புள்ளி வசி லைன் போட்டு இருக்கனு.. என்ன ஆச்சு ந.. நான் மொபைல் ல போட்டோ அஹ எடுத்து இருந்தேன்.. வைரஸ் ச்கான்னிங் நடந்துட்டு இருந்துடு.. அது வரைக்கும் எடுக்கு சும்மா இருப்போமே நு கோடு போட்டேன்.. வேற ஒரு நோக்கமும் இல்லங்க......

Leia Mais…