வியாழன், ஏப்ரல் 30, 2009

கருணாநிதியின் ‘தீடீர்’ உண்ணாவிரதம் - ஒரு நேரடி ரிப்போர்ட்

கடந்த திங்கள்கிழமை நடந்த கருணாநிதியின் உண்ணாவிரதம் மக்கள், எதிர்கட்சியினர் மற்றும் அவரின் கட்சியினரிடேயே கூட பேரும் அதிர்ச்சியை(!!!!!) ஏற்படுத்தியது. அவரது இந்த தீடீர் உண்ணாவிரதத்தின் பின்னனியை அறிவதே இந்த பதிவின் நோக்கம்(????????)

 

     உண்மையை அறிய நாம் பல நபர்களிடயே பேட்டி கண்டோம். அவர்களிடம் கேட்க பட்ட கேள்வி: கருணாநிதியின் தீடீர்உண்ணாவிரதத்ற்கு காரணம் என்ன?”

 

    

அடி பொடி 1: அய்யாவிற்கு எப்பொதுமே இலங்கை தமிழர்கள் மீது அளவில்லா பாசம் உண்டு. ஓரு தாய் தன் குழந்தையைப் பார்த்து தனக்கு பிடிக்கும் என்று சொல்லி கொண்டேவா இருப்பார். அதுப்போல  தான் இதுவும். தேவயான நேரத்தில் தேவயானதை செய்து இருக்கிரார். (தெரியத்தனமாக இவரிடம் கேட்டுவிட்டோம். முரசொலியின் ஆசிரியராக இருப்பார் போல.... )

பொதுஜனம் 1: இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை சார். வோட்டு வாங்குரத்துக்காக இவர் இந்த மாறி பண்றார். உண்ணாவிரதம் இருக்க போரவரு எதுக்கு சார் ஏ/சி ய எடுத்துக்குனு போகனும்... சும்மா வீட்ல படுத்துக்குனு இருக்குர மாறி படுத்துகுனு இருக்குரார்.... டேய்லி அவர் குடிக்கிரதே அந்த ஒரு கிளாஸ் ஜூஸ் தான் இருக்கும்... அத ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி குடிச்சிட்டு உண்ணாவிரதம்னு காமெடி பண்றார்.... இத ஒளிபரப்ப ஒரு சேனல் வேர....

என அவர் இழுத்து கொண்டே போக, அவரை கட் செய்வது கடினமாக இருந்த்து.

 

அடி பொடி 2: இவரோட பெரிய தல வலி சார்.... திடுதுப்புனு போய் உண்ணாவிரதம்னு சொல்லிட்டார்... அதனால நாங்களும் இருக்க வேண்டியதா போச்சு... இதுக்கு பந்தல் போடவே கைல இருந்த காசெல்லாம் போச்சு... முந்தன நாள் நைட் சாப்ட்த்துனால ரொம்ப கஷ்டமா போச்சு சார்... அவருக்கு சன் டி.வில நல்ல கவரேஜ் கொடுதாங்க... எனக்கு நம்ம சன் மட்டும் தான் செம கவரேஜ்.... எஸ்கேப் ஆக முடியல...

என்று சொன்னவர் தன் பெயரை வெளியிட வேண்டாம் எனக் கூறினார்.

 

பொதுஜனம் 2: 85 வயசுலயும் பயங்கரமா உழைக்கிறாருங்க... இப்ப கூட இந்த உண்ணாவிரதம் இருந்து இருக்கார்... ஆனா என்ன எல்லாம் போனதுக்கு அப்புறம் மங்களம் பாடிட்டு இருக்கார்... அதான் சிரிப்பா இருக்கு.....

என இரத்தின சுருக்கமாக முடித்தார்.

         இன்னும் சில பேரிடம் விசாரித்தும் சரியாக காரணத்தை பிடிக்க முடியாத்தால், முந்தய நாள் என்ன நடந்த்து என்பதை அறிய அவரது வீட்டு வேலயாள் ஒருவரை பிடித்தொம். அவர் கூறிய ‘திடுக்தகவல்:

“அய்யா நேற்று இரவு சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்த போது டி.வி-யில் ‘தூள்படம் ஓடி கொண்டு இருந்த்து. அவர் மிகவும் ரசித்து பார்த்து கொண்டு இருந்தார், பின்பு தூங்கி விட்டார்

ஆம்... ‘தூள்படம்... உங்களுக்கு புரிந்த்தா.... அதில் வரும் காரைப்பாண்டியன் அவர்கள் தீடீரென்று ஒரு காவேரி பிரச்சினைக்காக போராட்டம் நட்த்துவார்... அதை பின்பற்றியே நமது ‘மாண்புமிகுமுதல்வர் அவர்கள் இதை நட்த்தியுள்ளார்.. துப்பு துலங்கிவிட்ட்து..

 

பி.கு: இது போல் இன்னும் பல ரிப்போர்டுகளை நாங்கள் தர உள்ளோம்... தயாராக இருங்கள்... 

4 பேர் என்ன சொன்னாங்கனா:

Lancelot சொன்னது…

ha ha ha,,,,unmaayaavae ithu super appu...but u know what karunanithi has replied to your post...

"Arasiyalla ithellam saatharanam appa"

kanagu சொன்னது…

/*ha ha ha,,,,unmaayaavae ithu super appu...but u know what karunanithi has replied to your post...

"Arasiyalla ithellam saatharanam appa"*/

kandippa solluvar :)

கவிதா | Kavitha சொன்னது…

நீங்களுமா.. ?!! :))))))))))

பாவம் பா அவரு.. வயசாச்சு. .விட்டுடுங்க..

kanagu சொன்னது…

@கவிதா

வாங்க... வாங்க.. :)

/*பாவம் பா அவரு.. வயசாச்சு. .விட்டுடுங்க..*/

அவர நிறுத்த சொல்லுங்க.. நாங்க நிறுத்தறோம் :)