ஞாயிறு, ஜூன் 28, 2009

இதொ வந்துட்டேன் - 2

இதுவரை: ராஜா இண்டெர்வியூவிற்கு கிளம்புகிறான் வீட்டிலிருந்து....

10 மணி இண்டெர்வியூவிற்கு 9 மணிக்கே சென்று சேர்ந்தான். தன்னுடைய சான்றிதழ்களை எல்லாம் சரிப்பார்த்து கொண்டான். முதலில் அனைத்து மென்பொருள் கணிணி நிறுவனங்கள் போலவே எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதை அவன் கடந்த பிறகு நேர்முக தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்று முடியும் போது இரவு 9 மணி ஆகிவிட்டது. ஆனால் அந்த நிறுவனத்திலோ முடிவுகள் வரும் வரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டனர். அதனால் அம்மாவிற்கு ஒரு போன் செய்து வர நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டான். இருந்த மீதி நேரத்தில் அபிநயாவிற்கு போன் செய்து பேசி கொண்டிருந்தான். இரவு 9:45 மணிக்கு முடிவுகள் அறிவிக்க தயாரானார்கள்.
அபிநயாவிடம் இருந்து போனில் விடைபெற்றான், முடிவுகளை அவளுக்கு முதலில் தெரிவிப்பேன் என்ற உறுதிமொழியோடு... இம்முறை அவன் தேர்வை நன்றாகவே செய்திருந்தாலும் ’recession' தன் கோர முகத்தை காட்டி, தன் வாழ்க்கையோடு விளையாடிவிடுமோ என்ற பயம் அவன் உள்ளுக்குள் இருந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட அவன் பயந்ததை போலவே ஆனது. ஒரே ஒருவரை மட்டும் தேர்வு செய்துவிட்டு மற்ற அனைவரையும் வெளியில் அனுப்பி விட்டனர். ராஜா ஏமாற்றத்தோடு வெளியில் வந்து அபிநயாவிற்கு மெசெஜை தட்டிவிட்டான். பின்பு தன் அம்மாவிற்கு போன் செய்து சொன்னான். அவன் இந்த வேலையையும் வாங்கவில்லை என்று தெரிந்தவுடன் அவள் பொரிந்து தள்ளிவிட ராஜா மிகவும் கடுப்பாகி போனை கட் செய்துவிட்டான். ஏற்கனவே வேலை கிடைக்காத வருத்ததில் இருந்த அவன், இதனால் மேலும் சோர்வடைந்துப் போனான். அபிநயாவிடம் இருந்து அப்போது அழைப்பு வர, அதை ஏற்க மனம் இல்லாமல் அப்படியேவிட்டு விட்டான். இரண்டாவது முறை போன் செய்தும் எடுக்காததால் மெசெஜ் தாக்குதல் நடந்தது..
‘கவலைப்படாத டா.. அடுத்த இண்டர்வியூல பாத்துக்கலாம்’
‘வீட்டுக்கு போனவுடனே மெசெஜ் பண்ணு’
‘நல்லா சாப்பிடு’
அனைத்தையும் படித்து போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். மீண்டும் ஒரு அழைப்பு வர, டென்ஷனோடு அவன் எடுத்து பார்க்க, அது அவன் நண்பன் கிரி. அவனுக்கு இவன் இண்டர்வியூ போகிறான் என்று முன்பே தெரியும் என்பதால் போன் செய்திருந்தான்.. இவன் இதுவும் போச்சு என்று சொல்ல... ‘மச்சான்.. இதுக்கு இருக்கும் ஒரே தீர்வு தண்ணியடிப்பது’ என்று அவன் சொல்ல, ’மணி 10-க்கு மேல ஆச்சேடா’ என்று ராஜா சொல்ல, ‘உனக்கென்ன பிரச்சனை... வீட்டுக்கு போகனும் அவ்ளோ தான... நான் 12 மணிக்குள்ள கொண்டுப் போய் விட்டுட்றேன்’ என்றான் கிரி. ‘சரி’ என்று ராஜா கிரியின் ரூமிற்கு சென்றான்.
கிரி ரூமிற்கு சென்று சேரும் போது மணி 10:45 ஆகிவிட்டது. இருவரும் சில ரவுண்ட் தண்ணி போட்ட பிறகு ராஜா வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்ல இருவரும் ரூமிற்கு வெளியே வந்தனர். கிரி தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான். வண்டியில் ஏறி அமர்ந்த ராஜா திடீரென்று ஞாபகம் வந்தவனாய் எதிற்கே இருந்த கடைக்கு ‘Boomer' வாங்க ஓடினான். வாங்கிவிட்டு திரும்பிவரும் போது ரோட்டை கவனிக்காமல் வர அப்போது வந்த லாரியில் அடிப்பட்டு கீழே விழுந்தான்.
இதைப் பார்த்த கிரி தனது வண்டியில் இருந்து ஓடி வந்தான்.
- தொடரும்.

Leia Mais…

திங்கள், ஜூன் 15, 2009

இதோ வந்துட்டேன் - 1

”டேய்.. எழுந்திரிடா... காலைல மணி 7 ஆகுது.. இன்னும் தூங்கிட்டு இருக்க.. ஏதோ இண்டர்வூக்கு போகணும்னு சொன்ன” என்று ராஜாவின் அம்மா கேட்டு கொண்டே படுக்கை அறையினுள்ளே வந்தார்.

ராஜா ‘ஹீம்ம்ம்ம்’ என்று சொல்லிக் கொண்டே திரும்பி படுத்தான்.
‘இன்னிக்கு இண்டேர்வியூ எதோ இருக்கு சொன்னியேடா... போய் அத அட்டேண்ட் பண்ற வழியப் பாருடா’ என்று அவன் அம்மா சொல்ல சிறிது கண்விழித்து எரிச்சலோடு பார்த்தான். ‘எப்ப பார்த்தாலும் வேல வேல-னு உயிர எடுக்குராங்களே... எவன் என்ன வா வா-னு கூப்பிட்டு இருக்கான்... இதுல இண்டேர்வியூ தான் ரொம்ப முக்கியம்’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டான். அதை அப்படியே வெளியே சொன்னால் ‘சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்த கதையாகி அம்மா திட்ட ஆரம்பித்து விடுவாள் என்று அவனுக்கு தெரியும்.
திரும்பி கண் மூடுவதற்குள் அம்மா பார்த்தும் விட்டதால் வேறு வழியில்லாமல் எழுந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. பல் தேய்க்கும் போது ‘இன்னிக்காவது வேலய வாங்குற வழிய பாருடா’ என்று அவன் அம்மா சொல்லிக் கொண்டே சமையற்கட்டில் வேலைப் பார்த்து கொண்டிருக்கும் போதே சொன்னது கேட்டது. இவன் மீண்டும் ஒரு ‘ஹீம்ம்ம்’ கொட்டினான்.
குளித்து விட்டு வந்து சாப்பிட வந்து உட்காரும் போது, ‘அப்பா எங்கே?’ என்று கேட்டு கொண்டே உட்கார்ந்தான். ‘அப்பா வேலைக்கு போய்ட்டாருடா’ என்று சொல்லி கொண்டே பழைய சோற்றை தட்டில் கொண்டு வந்து வைத்தாள். ‘என்னம்மா இன்னிக்கும் பழைய சோறு தானா??’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கேட்க, ‘ஆமா, நீ கிழிக்கிற கிழிக்கு இதுவே அதிகம்’ என்று அவர் சொல்ல, ‘தேவையில்லாமல் வாயை கொடுத்து விட்டமோ’ என்று எண்ணிக் கொண்டே எதுவும் பேசாமல் சாப்பிட்டான்.
பின்பு ‘success technologies' என்ற நிறுவனத்திற்கு தான் செல்லவிருப்பதாய் சொன்னான். ’சரிடா, எப்பவும் போல சொதப்பாம, நான் எந்த கேள்வி கேட்டாலும் எதாவது சொல்லி சமாளிப்பியே அதே மாறி சொல்லி வேலய வாங்குடா’ என்று அவன் அம்மா சொல்ல, ‘எதயும் எதிர்ப்பார்க்காம வாழணும்’-னு சொல்லி கொண்டே திட்டு வாங்குவதற்குள் வெளியே செல்ல ஆரம்பித்து விட்டான்.
பேருந்து நிலையத்தை நெறுங்கும் போது தான், அவன் அலைபேசியை பார்த்தான். 8 மணிக்குள் அவன் காதலி அபிநயா 8 மெசெஜ்களை அணுப்பி விட்டாள்.
‘good morning sweetz'
'எழுந்துட்டியாடா செல்லம்?’
‘என்ன பண்ற?’
‘சாப்பிட்டுடியா?? நான் சாப்பிட்டுடேன்’
‘இண்டர்வியூக்கு நல்லா prepare பண்ணிட்டியா??’
என்று சரமாரியாக மெசெஜ் அணுப்பி இருந்தாள். அவள் மற்றவர்களை போல அல்ல.. அவன் பதில் சொல்லவில்லை என்று சொன்னால் கூட பேசி கொண்டும், அவனுக்கு மெசெஜ் அணுப்பி கொண்டும் இருப்பாள். அவன் வீட்டில் இருந்தால் அதிகமாக போன் செய்ய மாட்டாள், அவளுடைய வருங்கால அத்தைக்கு பிடிக்காது என்பதால்...
இவ்வள்வு மெசெஜ்களுக்கு அப்புற்ம் போன் செய்யவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று எண்ணி மிஸ்டு கால் கொடுத்தான். என்ன செய்வது?? அவனுக்கு இருக்கும் balance-ல் அது தான் முடியும். பின்பு இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். இண்டர்வியூவில் நன்றாக பதில் சொல்லும்படி கூறினாள். பின்பு சந்தாஷமாக தான் செல்ல வேண்டிய இடத்துக்கான் பேருந்தில் ஏறினான்.
- தொடரும்........

Leia Mais…

ஞாயிறு, ஜூன் 07, 2009

மச்சி நீ கேளன்... எல்லாரும் கேளுங்களேன் :)

அண்ணன் ஜமால் அவர்கள் சென்ற வாரம் ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்தார். ரொம்ப நன்றிண்ணா..... அதனால நீங்க எல்லாரும் என்னோட சுயபுராணத்த இப்போ கேட்க போறீங்க...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என்னோட முழுப் பெயர் கனகராஜ் பாண்டியன். எல்லாரும் சோம்பேறிதனத்துனால என்ன இந்த பேர்ல கூப்பிடுறாங்க.
இந்த பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
ஆனால் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
என்னுடைய பணியிடத்தை புனே-விற்கு கொடுத்திருக்கிறார்கள் என்ற போது... 2007 நவம்பரில்...
ஆனால் போன ஒரு நாளிலேயே சென்னைக்கு மாற்றி அணுப்பிவிட்டார்கள். இப்பொழுது நினைத்து பார்க்கிறேன்... அங்கே சிறிது நாள் இருந்து வேலை செய்து ஊரை சுற்றி பார்த்திருக்கலாம் என்று...
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்... ஆனா என்னோட அம்மாவும், அப்பாவும் தான் நான் அழகாக எழுதுவது இல்லை என இன்னும் குறைப்பட்டு கொள்கிறார்கள் :(.
4. பிடித்த மதிய உணவு என்ன?
எதை கொடுத்தாலும் ஒரு பிடிபிடிப்பேன். இது, அது என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பது இல்லை... சைவம், அசைவம் இரண்டுமெ...
இருந்தாலும் பருப்பு சாதம் மிகவும் பிடிக்கும்... எந்த காய்கறி என்றாலும் கூட்டி சாப்பிட்டு விடுவென்.
வறுத்த மீனையும் சாப்பிட ரொம்ப பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை... கொஞ்ச நாள் ஆகும்.. அது நான் எந்த மாதிரி சூழ்நிலையில் சந்திக்கிறேன் என்பதை பொறுத்தும் அமையும்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பிடிக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஆனால்ல்ல்ல்ல்ல்....
நீச்சல் தெரியாததால் கடலிலும், அருவியில் கல் விழுமோ என்ற பயத்தினாலும் இரண்டு இடங்களிலும் குளிப்பதை தவிர்க்கிறேன்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது: தன்னம்பிக்கை, எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், மனதை அலைபாய விடுவது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நான் ரொம்ப சின்ன பையங்க... இந்த கேள்விக்கு பதில் சொல்ல இன்னும் காலம் இருக்கு :)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
யாரும் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இல்லாததால் வருத்தப்ப்டுவதில்லை... ஆனால்
கல்லூரி வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் போது இப்போது அப்படி இல்லையே என வருத்தப்படுகிறேன்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வீட்டில் இருப்பதால், வெள்ளை நிற முண்டா பனியன் மற்றும் வெள்ளை நிற லுங்கி.
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ஒரு வெட்கம் வருதெ வருதெ - படம் பசங்க.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அடர் நீலம்... எப்பொழுதும் பிடித்த கலர்.
14. பிடித்த மணம்?
மழை வரும்முன் வரும் மண்வாசனை,
பிரியாணி, சாம்பார் சமைக்கும் போது வரும் வாசனை... அவற்றை பிடித்தால் பசி இன்னும் அதிகம் ஆகிவிடும் :)
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கார்த்திக்: நகைச்சுவை மிகுந்து எழுதுபவர்.
அழைக்க காரணம்: கொஞ்சம் அல்ல... நன்றாகவே சிரிக்கவும், அவரை பற்றிதெரிந்து கொள்ள தான்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அண்ணாவின் கவிதைகள் பல பிடிக்கும்... மிகவும் பிடித்தது.. ‘விடை கொடுங்கள் விரைந்து வருகிறேன்’.
17. பிடித்த விளையாட்டு?
எல்லா விளையாட்டும் பிடிக்கும்... குறிப்பாக கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து.
எதையும் சூப்பராக விளையாடா விட்டாலும், நல்லா விமர்சனம் பண்ணுவேன் :)
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்... இதனால் என் அழகே கெடுகிறது (No கல்... )
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லாமுமே பிடிக்கும். குறிப்பாக மாஸ் ஹீரோ படங்களும், சூப்பர் ஹீரோ படங்களும், நகைச்சுவை படங்களும் பிடிக்கும்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
என் கணிப்பொறியில் புதுப்பெட்டை... திரையரங்கத்தில் ‘யாவரும் நலம்’.
21. பிடித்த பருவ காலம் எது?
அனைத்துமே பிடிக்கும். மழையில் ந்னைய பிடிக்கும், வெயிலில் சுற்ற மற்றும் விளையாட பிடிக்கும். பனி காலமும் அப்படியே...
ஆனால் வாழ்வில் பிடித்தது இளமை காலமும், அதன் பகுதி கல்லூரி காலமும் தான்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஹாரி பாட்டர் - முதல் பாகம்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அதை என் தம்பி பார்த்துக் கொள்வான்.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: குயிலின் கூவல், கடலின் ஆர்ப்பரிப்பு.
பிடிக்காதது: ஹாரன் சத்தம்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பூனே. முன்பு குறிப்பிட்டேனே.. அதெ தான்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதை பற்றி பேச சொன்னாலும் நல்லா மொக்கை போடுவேன்..
அப்புறம் ‘ப்ளாக்’ எழுதுவது... (இது தனி திறமை தானே... இல்லையா???)
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
துரோகம்... மற்றும் ஏமாற்றுவது..
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கண்டதையும் யோசிக்கும் எனது மனது... ஒரு நிலைபடுத்த முயல்கிறேன்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அனைத்தும்... ஒவ்வொரு இடங்களுக்கும் ஒரு சிறப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.
செல்ல விரும்புவது: இமயமலை.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
உதவியே செய்யலைனாலும் பரவாயில்ல... நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும்.
31. கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பாஸ்... பாஸ்...
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அற்புதமானது... ஒவ்வொரு நொடியும் ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றாதபடி வாழ வேண்டும்.

Leia Mais…