திங்கள், ஜூன் 15, 2009

இதோ வந்துட்டேன் - 1

”டேய்.. எழுந்திரிடா... காலைல மணி 7 ஆகுது.. இன்னும் தூங்கிட்டு இருக்க.. ஏதோ இண்டர்வூக்கு போகணும்னு சொன்ன” என்று ராஜாவின் அம்மா கேட்டு கொண்டே படுக்கை அறையினுள்ளே வந்தார்.

ராஜா ‘ஹீம்ம்ம்ம்’ என்று சொல்லிக் கொண்டே திரும்பி படுத்தான்.
‘இன்னிக்கு இண்டேர்வியூ எதோ இருக்கு சொன்னியேடா... போய் அத அட்டேண்ட் பண்ற வழியப் பாருடா’ என்று அவன் அம்மா சொல்ல சிறிது கண்விழித்து எரிச்சலோடு பார்த்தான். ‘எப்ப பார்த்தாலும் வேல வேல-னு உயிர எடுக்குராங்களே... எவன் என்ன வா வா-னு கூப்பிட்டு இருக்கான்... இதுல இண்டேர்வியூ தான் ரொம்ப முக்கியம்’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டான். அதை அப்படியே வெளியே சொன்னால் ‘சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்த கதையாகி அம்மா திட்ட ஆரம்பித்து விடுவாள் என்று அவனுக்கு தெரியும்.
திரும்பி கண் மூடுவதற்குள் அம்மா பார்த்தும் விட்டதால் வேறு வழியில்லாமல் எழுந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. பல் தேய்க்கும் போது ‘இன்னிக்காவது வேலய வாங்குற வழிய பாருடா’ என்று அவன் அம்மா சொல்லிக் கொண்டே சமையற்கட்டில் வேலைப் பார்த்து கொண்டிருக்கும் போதே சொன்னது கேட்டது. இவன் மீண்டும் ஒரு ‘ஹீம்ம்ம்’ கொட்டினான்.
குளித்து விட்டு வந்து சாப்பிட வந்து உட்காரும் போது, ‘அப்பா எங்கே?’ என்று கேட்டு கொண்டே உட்கார்ந்தான். ‘அப்பா வேலைக்கு போய்ட்டாருடா’ என்று சொல்லி கொண்டே பழைய சோற்றை தட்டில் கொண்டு வந்து வைத்தாள். ‘என்னம்மா இன்னிக்கும் பழைய சோறு தானா??’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கேட்க, ‘ஆமா, நீ கிழிக்கிற கிழிக்கு இதுவே அதிகம்’ என்று அவர் சொல்ல, ‘தேவையில்லாமல் வாயை கொடுத்து விட்டமோ’ என்று எண்ணிக் கொண்டே எதுவும் பேசாமல் சாப்பிட்டான்.
பின்பு ‘success technologies' என்ற நிறுவனத்திற்கு தான் செல்லவிருப்பதாய் சொன்னான். ’சரிடா, எப்பவும் போல சொதப்பாம, நான் எந்த கேள்வி கேட்டாலும் எதாவது சொல்லி சமாளிப்பியே அதே மாறி சொல்லி வேலய வாங்குடா’ என்று அவன் அம்மா சொல்ல, ‘எதயும் எதிர்ப்பார்க்காம வாழணும்’-னு சொல்லி கொண்டே திட்டு வாங்குவதற்குள் வெளியே செல்ல ஆரம்பித்து விட்டான்.
பேருந்து நிலையத்தை நெறுங்கும் போது தான், அவன் அலைபேசியை பார்த்தான். 8 மணிக்குள் அவன் காதலி அபிநயா 8 மெசெஜ்களை அணுப்பி விட்டாள்.
‘good morning sweetz'
'எழுந்துட்டியாடா செல்லம்?’
‘என்ன பண்ற?’
‘சாப்பிட்டுடியா?? நான் சாப்பிட்டுடேன்’
‘இண்டர்வியூக்கு நல்லா prepare பண்ணிட்டியா??’
என்று சரமாரியாக மெசெஜ் அணுப்பி இருந்தாள். அவள் மற்றவர்களை போல அல்ல.. அவன் பதில் சொல்லவில்லை என்று சொன்னால் கூட பேசி கொண்டும், அவனுக்கு மெசெஜ் அணுப்பி கொண்டும் இருப்பாள். அவன் வீட்டில் இருந்தால் அதிகமாக போன் செய்ய மாட்டாள், அவளுடைய வருங்கால அத்தைக்கு பிடிக்காது என்பதால்...
இவ்வள்வு மெசெஜ்களுக்கு அப்புற்ம் போன் செய்யவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று எண்ணி மிஸ்டு கால் கொடுத்தான். என்ன செய்வது?? அவனுக்கு இருக்கும் balance-ல் அது தான் முடியும். பின்பு இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். இண்டர்வியூவில் நன்றாக பதில் சொல்லும்படி கூறினாள். பின்பு சந்தாஷமாக தான் செல்ல வேண்டிய இடத்துக்கான் பேருந்தில் ஏறினான்.
- தொடரும்........

5 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

கதையின் துவக்கமா

ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காதான் இருக்கு


(தொடர் கதையெனில் ரொம்ப சிறிய பகுதியா தெரியுதே! ...

சரி சரி - அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க)

kanagu சொன்னது…

/*கதையின் துவக்கமா

ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காதான் இருக்கு*/

ரொம்ப நன்றி அண்ணா :)

/*தொடர் கதையெனில் ரொம்ப சிறிய பகுதியா தெரியுதே! ...*/

ஆமாம்... இன்னும் கொஞ்சம் போட்டு இருக்கணும்... ஆனா கொஞ்சம் எதிர்பார்ப்போடு இருக்கட்டுமேனு நிறுத்திட்டேன் அண்ணா :)

/*சரி சரி - அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க*/

இந்த வாரத்துல முடிச்சிடுரேன் :)

Sandhya சொன்னது…

Kathai nallaayirukkumpol irukku. aduththathu yenna?

Tamizhil ingu yezhutha yenna pannanum?

இராஜலெட்சுமி பக்கிரிசாமி சொன்னது…

next part please

kanagu சொன்னது…

வாங்க சந்தியாஜி :)

/*Kathai nallaayirukkumpol irukku. aduththathu yenna?*/

அது தெரியமா தானே இன்னும் அடுத்த பகுதிய போடல ;)

/*Tamizhil ingu yezhutha yenna pannanum?*/

நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புறேன் :)

******************************

வாங்க இராஜலட்சுமி :)

சீக்கிரம் போட முயற்சி பண்றேன் :)