ஞாயிறு, ஜூன் 28, 2009

இதொ வந்துட்டேன் - 2

இதுவரை: ராஜா இண்டெர்வியூவிற்கு கிளம்புகிறான் வீட்டிலிருந்து....

10 மணி இண்டெர்வியூவிற்கு 9 மணிக்கே சென்று சேர்ந்தான். தன்னுடைய சான்றிதழ்களை எல்லாம் சரிப்பார்த்து கொண்டான். முதலில் அனைத்து மென்பொருள் கணிணி நிறுவனங்கள் போலவே எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதை அவன் கடந்த பிறகு நேர்முக தேர்வு நடைபெற்றது. அதில் பங்கேற்று முடியும் போது இரவு 9 மணி ஆகிவிட்டது. ஆனால் அந்த நிறுவனத்திலோ முடிவுகள் வரும் வரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டனர். அதனால் அம்மாவிற்கு ஒரு போன் செய்து வர நேரம் ஆகும் என்று சொல்லிவிட்டான். இருந்த மீதி நேரத்தில் அபிநயாவிற்கு போன் செய்து பேசி கொண்டிருந்தான். இரவு 9:45 மணிக்கு முடிவுகள் அறிவிக்க தயாரானார்கள்.
அபிநயாவிடம் இருந்து போனில் விடைபெற்றான், முடிவுகளை அவளுக்கு முதலில் தெரிவிப்பேன் என்ற உறுதிமொழியோடு... இம்முறை அவன் தேர்வை நன்றாகவே செய்திருந்தாலும் ’recession' தன் கோர முகத்தை காட்டி, தன் வாழ்க்கையோடு விளையாடிவிடுமோ என்ற பயம் அவன் உள்ளுக்குள் இருந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட அவன் பயந்ததை போலவே ஆனது. ஒரே ஒருவரை மட்டும் தேர்வு செய்துவிட்டு மற்ற அனைவரையும் வெளியில் அனுப்பி விட்டனர். ராஜா ஏமாற்றத்தோடு வெளியில் வந்து அபிநயாவிற்கு மெசெஜை தட்டிவிட்டான். பின்பு தன் அம்மாவிற்கு போன் செய்து சொன்னான். அவன் இந்த வேலையையும் வாங்கவில்லை என்று தெரிந்தவுடன் அவள் பொரிந்து தள்ளிவிட ராஜா மிகவும் கடுப்பாகி போனை கட் செய்துவிட்டான். ஏற்கனவே வேலை கிடைக்காத வருத்ததில் இருந்த அவன், இதனால் மேலும் சோர்வடைந்துப் போனான். அபிநயாவிடம் இருந்து அப்போது அழைப்பு வர, அதை ஏற்க மனம் இல்லாமல் அப்படியேவிட்டு விட்டான். இரண்டாவது முறை போன் செய்தும் எடுக்காததால் மெசெஜ் தாக்குதல் நடந்தது..
‘கவலைப்படாத டா.. அடுத்த இண்டர்வியூல பாத்துக்கலாம்’
‘வீட்டுக்கு போனவுடனே மெசெஜ் பண்ணு’
‘நல்லா சாப்பிடு’
அனைத்தையும் படித்து போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். மீண்டும் ஒரு அழைப்பு வர, டென்ஷனோடு அவன் எடுத்து பார்க்க, அது அவன் நண்பன் கிரி. அவனுக்கு இவன் இண்டர்வியூ போகிறான் என்று முன்பே தெரியும் என்பதால் போன் செய்திருந்தான்.. இவன் இதுவும் போச்சு என்று சொல்ல... ‘மச்சான்.. இதுக்கு இருக்கும் ஒரே தீர்வு தண்ணியடிப்பது’ என்று அவன் சொல்ல, ’மணி 10-க்கு மேல ஆச்சேடா’ என்று ராஜா சொல்ல, ‘உனக்கென்ன பிரச்சனை... வீட்டுக்கு போகனும் அவ்ளோ தான... நான் 12 மணிக்குள்ள கொண்டுப் போய் விட்டுட்றேன்’ என்றான் கிரி. ‘சரி’ என்று ராஜா கிரியின் ரூமிற்கு சென்றான்.
கிரி ரூமிற்கு சென்று சேரும் போது மணி 10:45 ஆகிவிட்டது. இருவரும் சில ரவுண்ட் தண்ணி போட்ட பிறகு ராஜா வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்ல இருவரும் ரூமிற்கு வெளியே வந்தனர். கிரி தனது பைக்கை ஸ்டார்ட் செய்தான். வண்டியில் ஏறி அமர்ந்த ராஜா திடீரென்று ஞாபகம் வந்தவனாய் எதிற்கே இருந்த கடைக்கு ‘Boomer' வாங்க ஓடினான். வாங்கிவிட்டு திரும்பிவரும் போது ரோட்டை கவனிக்காமல் வர அப்போது வந்த லாரியில் அடிப்பட்டு கீழே விழுந்தான்.
இதைப் பார்த்த கிரி தனது வண்டியில் இருந்து ஓடி வந்தான்.
- தொடரும்.

5 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

தெளிவா எழுதியிருக்கீங்க, சிறு பகுதியாக இருந்தாலும்.

தண்ணி அடிப்பவன் தானே என்று நினைத்தாலும்

ராஜாவுக்கு என்ன ஆகிவிட்டதோ என்ற எதிர்ப்பார்ப்புடன் ...

kanagu சொன்னது…

/*தெளிவா எழுதியிருக்கீங்க, சிறு பகுதியாக இருந்தாலும்.

தண்ணி அடிப்பவன் தானே என்று நினைத்தாலும்

ராஜாவுக்கு என்ன ஆகிவிட்டதோ என்ற எதிர்ப்பார்ப்புடன் ..*/

ரொம்ப நன்றி அண்ணா :)

gils சொன்னது…

romba kuttia iruku :)) usuala naan romba perusa iruku soli feedback adichi thaan pazhakkam :D but interesting one :)

Sandhya சொன்னது…

gils சொன்ன மாதிரி, கதை ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிருக்கு. அடுத்தது எப்போ?

kanagu சொன்னது…

@கில்ஸ் அண்ணா

/*romba kuttia iruku :)) usuala naan romba perusa iruku soli feedback adichi thaan pazhakkam :D*/

நான் மாத்திட்டேன் :)

/*but interesting one :)*/

நன்றி அண்ணா :)

*********************************

@சந்தியாஜி

/*அடுத்தது எப்போ?*/

சீக்கிரமே :)