ஞாயிறு, ஜூன் 07, 2009

மச்சி நீ கேளன்... எல்லாரும் கேளுங்களேன் :)

அண்ணன் ஜமால் அவர்கள் சென்ற வாரம் ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்தார். ரொம்ப நன்றிண்ணா..... அதனால நீங்க எல்லாரும் என்னோட சுயபுராணத்த இப்போ கேட்க போறீங்க...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என்னோட முழுப் பெயர் கனகராஜ் பாண்டியன். எல்லாரும் சோம்பேறிதனத்துனால என்ன இந்த பேர்ல கூப்பிடுறாங்க.
இந்த பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
ஆனால் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
என்னுடைய பணியிடத்தை புனே-விற்கு கொடுத்திருக்கிறார்கள் என்ற போது... 2007 நவம்பரில்...
ஆனால் போன ஒரு நாளிலேயே சென்னைக்கு மாற்றி அணுப்பிவிட்டார்கள். இப்பொழுது நினைத்து பார்க்கிறேன்... அங்கே சிறிது நாள் இருந்து வேலை செய்து ஊரை சுற்றி பார்த்திருக்கலாம் என்று...
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்... ஆனா என்னோட அம்மாவும், அப்பாவும் தான் நான் அழகாக எழுதுவது இல்லை என இன்னும் குறைப்பட்டு கொள்கிறார்கள் :(.
4. பிடித்த மதிய உணவு என்ன?
எதை கொடுத்தாலும் ஒரு பிடிபிடிப்பேன். இது, அது என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பது இல்லை... சைவம், அசைவம் இரண்டுமெ...
இருந்தாலும் பருப்பு சாதம் மிகவும் பிடிக்கும்... எந்த காய்கறி என்றாலும் கூட்டி சாப்பிட்டு விடுவென்.
வறுத்த மீனையும் சாப்பிட ரொம்ப பிடிக்கும்.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை... கொஞ்ச நாள் ஆகும்.. அது நான் எந்த மாதிரி சூழ்நிலையில் சந்திக்கிறேன் என்பதை பொறுத்தும் அமையும்.
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
பிடிக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஆனால்ல்ல்ல்ல்ல்....
நீச்சல் தெரியாததால் கடலிலும், அருவியில் கல் விழுமோ என்ற பயத்தினாலும் இரண்டு இடங்களிலும் குளிப்பதை தவிர்க்கிறேன்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது: தன்னம்பிக்கை, எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், மனதை அலைபாய விடுவது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
நான் ரொம்ப சின்ன பையங்க... இந்த கேள்விக்கு பதில் சொல்ல இன்னும் காலம் இருக்கு :)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
யாரும் தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இல்லாததால் வருத்தப்ப்டுவதில்லை... ஆனால்
கல்லூரி வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் போது இப்போது அப்படி இல்லையே என வருத்தப்படுகிறேன்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வீட்டில் இருப்பதால், வெள்ளை நிற முண்டா பனியன் மற்றும் வெள்ளை நிற லுங்கி.
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
ஒரு வெட்கம் வருதெ வருதெ - படம் பசங்க.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
அடர் நீலம்... எப்பொழுதும் பிடித்த கலர்.
14. பிடித்த மணம்?
மழை வரும்முன் வரும் மண்வாசனை,
பிரியாணி, சாம்பார் சமைக்கும் போது வரும் வாசனை... அவற்றை பிடித்தால் பசி இன்னும் அதிகம் ஆகிவிடும் :)
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
கார்த்திக்: நகைச்சுவை மிகுந்து எழுதுபவர்.
அழைக்க காரணம்: கொஞ்சம் அல்ல... நன்றாகவே சிரிக்கவும், அவரை பற்றிதெரிந்து கொள்ள தான்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அண்ணாவின் கவிதைகள் பல பிடிக்கும்... மிகவும் பிடித்தது.. ‘விடை கொடுங்கள் விரைந்து வருகிறேன்’.
17. பிடித்த விளையாட்டு?
எல்லா விளையாட்டும் பிடிக்கும்... குறிப்பாக கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து.
எதையும் சூப்பராக விளையாடா விட்டாலும், நல்லா விமர்சனம் பண்ணுவேன் :)
18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம்... இதனால் என் அழகே கெடுகிறது (No கல்... )
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லாமுமே பிடிக்கும். குறிப்பாக மாஸ் ஹீரோ படங்களும், சூப்பர் ஹீரோ படங்களும், நகைச்சுவை படங்களும் பிடிக்கும்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
என் கணிப்பொறியில் புதுப்பெட்டை... திரையரங்கத்தில் ‘யாவரும் நலம்’.
21. பிடித்த பருவ காலம் எது?
அனைத்துமே பிடிக்கும். மழையில் ந்னைய பிடிக்கும், வெயிலில் சுற்ற மற்றும் விளையாட பிடிக்கும். பனி காலமும் அப்படியே...
ஆனால் வாழ்வில் பிடித்தது இளமை காலமும், அதன் பகுதி கல்லூரி காலமும் தான்.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
ஹாரி பாட்டர் - முதல் பாகம்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அதை என் தம்பி பார்த்துக் கொள்வான்.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது: குயிலின் கூவல், கடலின் ஆர்ப்பரிப்பு.
பிடிக்காதது: ஹாரன் சத்தம்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பூனே. முன்பு குறிப்பிட்டேனே.. அதெ தான்.
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதை பற்றி பேச சொன்னாலும் நல்லா மொக்கை போடுவேன்..
அப்புறம் ‘ப்ளாக்’ எழுதுவது... (இது தனி திறமை தானே... இல்லையா???)
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
துரோகம்... மற்றும் ஏமாற்றுவது..
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கண்டதையும் யோசிக்கும் எனது மனது... ஒரு நிலைபடுத்த முயல்கிறேன்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அனைத்தும்... ஒவ்வொரு இடங்களுக்கும் ஒரு சிறப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.
செல்ல விரும்புவது: இமயமலை.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
உதவியே செய்யலைனாலும் பரவாயில்ல... நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும்.
31. கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
பாஸ்... பாஸ்...
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
அற்புதமானது... ஒவ்வொரு நொடியும் ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றாதபடி வாழ வேண்டும்.

15 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

\பிரியாணி, சாம்பார் சமைக்கும் போது வரும் வாசனை\\

ஹா ஹா ஹா

எனக்கு இப்பவே பசிக்குதே

நட்புடன் ஜமால் சொன்னது…

\\30. எப்படி இருக்கணும்னு ஆசை?
உதவியே செய்யலைனாலும் பரவாயில்ல... நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும்.\\

மிக அருமை.

viji சொன்னது…

நான் ரொம்ப சின்ன பையங்க... இந்த கேள்விக்கு பதில் சொல்ல இன்னும் காலம் இருக்கு :)

-->>>> aamangala??? ippothan LKG padikeringalo??


எதை கொடுத்தாலும் ஒரு பிடிபிடிப்பேன். இது, அது என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பது இல்லை... சைவம், அசைவம் இரண்டுமெ...


-->>> pulu poochi..pooran.. ithu ellatahiyum koodama?? :P

தாரணி பிரியா சொன்னது…

ஒரு நாள்ல உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டாங்களா சூப்பர் கம்பெனி

கண்ணாடி போட்டாதான் ஒரு இன்டலிஜெண்ட் லுக் வரும் கனகு :) ( நானும் கண்ணாடி போட ஆரம்பிச்சுட்டேன் )

//உதவியே செய்யலைனாலும் பரவாயில்ல... நான் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும்.//

இது சூப்பர்

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா

/*ஹா ஹா ஹா

எனக்கு இப்பவே பசிக்குதே*/

சாப்பிடுங்க அண்ணா :)

/*மிக அருமை*/

ரொம்ப நன்றி அண்ணா :)

@viji

/*aamangala??? ippothan LKG padikeringalo?? */

இல்ல.. அத தாண்டிட்டோம் :)

/* pulu poochi..pooran.. ithu ellatahiyum koodama?? :P*/

கண்டிப்பாக... நன்றாக செய்தால் அதையும் சாப்பிட வேண்டியது தான் :) சீனா போனால் அது தானாம் :)

@தா.பி அக்கா

/*ஒரு நாள்ல உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டாங்களா சூப்பர் கம்பெனி*/

ஹி ஹி ஹி...

/*கண்ணாடி போட்டாதான் ஒரு இன்டலிஜெண்ட் லுக் வரும் கனகு :)*/

சொல்லும் போதே ஒரு ஊள் குத்து இருக்கும்னு நினைச்சேன்.. அடைப்பு குறிக்குள்ள இருக்கு.. :)

/*இது சூப்பர்*/

ந்ன்றி அக்கா :)

திகழ்மிளிர் சொன்னது…

/ வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அற்புதமானது... ஒவ்வொரு நொடியும் ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றாதபடி வாழ வேண்டும்./

அருமை

kanagu சொன்னது…

@திகழ்மிளிர்

வாங்க திகழ்மிளிர்

/*/ வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அற்புதமானது... ஒவ்வொரு நொடியும் ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றாதபடி வாழ வேண்டும்./

அருமை*/

ரொம்ப நன்றி அண்ணா

Karthik சொன்னது…

நல்லாருக்குங்க பதில்கள் எல்லாம்! :)

//எல்லாரும் சோம்பேறிதனத்துனால என்ன இந்த பேர்ல கூப்பிடுறாங்க.

ஆஹா, இப்படி கூட சொல்லிக்கலாமா?? :))

kanagu சொன்னது…

@ கார்த்திக்

வாங்க கார்த்திக் :)

/*நல்லாருக்குங்க பதில்கள் எல்லாம்! :)*/

ரொம்ப நன்றிங்க :)

/*//எல்லாரும் சோம்பேறிதனத்துனால என்ன இந்த பேர்ல கூப்பிடுறாங்க.

ஆஹா, இப்படி கூட சொல்லிக்கலாமா?? :)*/

சொல்றதுக்கு என்ன.. என்ன வேணும்னாலும் சொல்லலாம் :)

MayVee சொன்னது…

சொன்ன விவரம் எல்லாம் சரியாய் இருக்கா என்று நான் கிராஸ் செக் பண்ண வேண்டும்

ஆகாய நதி சொன்னது…

//
எதை கொடுத்தாலும் ஒரு பிடிபிடிப்பேன். இது, அது என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பது இல்லை... சைவம், அசைவம் இரண்டுமெ...


இருந்தாலும் பருப்பு சாதம் மிகவும் பிடிக்கும்... எந்த காய்கறி என்றாலும் கூட்டி சாப்பிட்டு விடுவென்.


வறுத்த மீனையும் சாப்பிட ரொம்ப பிடிக்கும்.
-------------------------
பிரியாணி, சாம்பார் சமைக்கும் போது வரும் வாசனை... அவற்றை பிடித்தால் பசி இன்னும் அதிகம் ஆகிவிடும்

//

சரி சரி :))

நல்ல பதில்கள் :)

gils சொன்னது…

romba seriousa..karma srathiaya post potrukeeha polaruku!!

kanagu சொன்னது…

@Mayvee

/* MayVee கூறியது...
சொன்ன விவரம் எல்லாம் சரியாய் இருக்கா என்று நான் கிராஸ் செக் பண்ண வேண்டும்*/

வாங்க மேவி... எப்படி சரி பார்க்க போறீங்க?? :)

@ஆகாய நதி அக்கா

/*சரி சரி :))

நல்ல பதில்கள் :)*/

வாங்க அக்கா.. ரொம்ப நன்றி :)

@gils anna

/*romba seriousa..karma srathiaya post potrukeeha polaruku!!*/

ஏதோ என்னால முடிங்சது :)

sakthi சொன்னது…

அற்புதமானது... ஒவ்வொரு நொடியும் ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் தோன்றாதபடி வாழ வேண்டும்.

அருமையான பதில்

kanagu சொன்னது…

வாங்க சக்தி :)

/*அருமையான பதில்*/

ரொம்ப நன்றிங்க :)