ஞாயிறு, ஜூலை 19, 2009

தள்ளாடும் நாடு

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
’ என்பது மாறி
‘எங்கும் மது, எதிலும் மது
’ என்ற அருமையான ஒரு நிலைக்கு நமது தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது. குடிமக்கள் அனைவரும் ‘குடி’மக்கள் ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. என்று தமிழக அரசு மக்களுக்கு அளிக்கும் மதுவை தன் கையில் எடுத்ததோ விற்பனைக்கு, அன்றிலிருந்து அதனுடைய கஜானா நன்றாகவே கட்டுகிறது. இதனை கடந்த வருடத்தின் ’தண்ணீர்’ விற்ற அளவுகள் தெளிவாக காட்டுகிறது. மொத்தம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் விற்றிருக்கிறது. சென்ற வருடத்தை விட 20 சதவிகித வளர்ச்சி. இதை எப்படி நம்மை ஆள்பவர்கள் கொண்டாட போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் சில ஆயிரங்கள் அல்லது லட்சங்களை ’தண்ணீரில் செலவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். எனக்கு தெரிந்து லாபத்தில் இயங்கும் ஒரே அரசு துறை இது ஒன்று தான். தனது மக்கள் கஷ்டபடாமல் இருக்க ’தண்ணீர்’ ஊற்றி தரும் ஒரு உன்னத பணியை நமது அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதை 2003-04-ல் TASMAC-ன் கீழ் கொண்டு வந்த போது ஆண்டு விற்பனை 3,000 கோடி சோச்சத்தில் இருந்து இப்போது 10,000 கோடி ரூபாயாக மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அரசு துறை நிறுவனங்களிலேயே அதிக நேரம் திறந்திருக்கும் ஒன்றே ஒன்று இந்த மதுபான கடைகள் தான். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. ஞாயிறு அறியாமல், விடுமுறை என்று ஏதுமில்லாமல் இயங்குகிறது. ஏனெனில் மக்கள் இயங்குவதற்கு முக்கிய பொருள் அல்லவா!!! ரேஷன் கடைகள் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்க மதுபான கடைகள் மட்டும் எங்கு நோக்கினும் நிறைந்து இருக்கின்றது. ஏன் மற்ற அரசு துறை நிறுவனங்கள் 5 மணியோடு மூடப்படும் போது மதுபான கடைகள் மட்டும் இரவு பத்து மணி வரை திறந்து இருக்க வேண்டும். ‘குடி’ மக்கள் கஷ்டப்பட கூடாதே என்பதற்காக மட்டுமல்ல; மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், மக்கள் நல திட்டங்களை அமல்படுத்த மதுவினால் வரும் லாபத்தில் தான் முடிகிறது. இதுவரை முந்தைய அரசாங்கத்தின் ஒரு திட்டத்தை அடுத்த அரசாங்கங்கள் இந்த TASMAC-ஐ போல எடுத்து சென்றதே இல்லை எனலாம். ‘தொட்டில் குழந்தை’ இறந்தது, ’உழவர் சந்தை’ நசிந்தது, ’சமத்துவபுரங்கள்’ காற்றோடு கலந்தது, ’சத்துணவு’ கூட சிற்சில ஏற்ற இறக்கங்களை கண்டது. மது மட்டும் ஆறாய் ஓடியது சென்ற ஆட்சியில், வெள்ளமாய் பெருக்கெடுத்துவிட்டது இன்றைய நிலையில். ‘இப்படி தான் வாழ வேண்டும் என்று இல்லாமல், எப்படியும் வாழலாம்’ என்பதற்கு நமது அரசாங்கமே மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்போது தான் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் வரும் ஒரு வசனம் நினைவிற்கு வந்தது: ‘
குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு இருக்க காந்தி என்ன இந்திய தேசத்தின் பிதாவா இல்லை.....??????!!!!!

Leia Mais…

செவ்வாய், ஜூலை 14, 2009

’பட’ டிஸ்கஷன் - எந்திரன்

’எந்திரன்’ பட ஷுட்டிங்:

(பிரம்மாண்டத்தை எப்படி காட்டலாம் என்று ஷங்கர் யோசித்து கொண்டிருக்கிறார்)
ஷங்கர்: போன படத்துல காட்டுன பிரம்மாண்டத்த எல்லாம் மிஞ்சுற மாறி பண்ணனும்... இதப் பார்த்த பிறகு காசு செலவழிக்கனும்-னு நினைக்கிற புரோடியூசர் எல்லாம் என்கிட்ட தான் நிக்கனும்..
அசிஸ்டண்ட்: பண்ணிடுவோம் சார்... போன படத்துல 60 கோடி.. இந்த வாட்டி 165 கோடி.. கலக்கிடுவோம்.....’சிவாஜி’ படத்துல கிங் காங் படத்த தான் காமிச்சோம்... இந்த வாட்டி கிங் காங்கையே ஓட விடுறோம்... ஐஸ்வர்யா ராயா கிங் காங் புடிச்சி வச்சிக்குது... அதுகிட்ட இருந்து அவங்கள நம்ம ரோபோட் ரஜினி காப்பாத்துறார்... ஆனா ஐஸ்வர்யா ராயிக்கு அது ‘ஒரிஜினல்’ ரஜினி-னு நினைச்சி காதலிக்கிறாங்க... அப்புறம் ஒரிஜினல் ரஜினி எப்டி அவங்கள தேடி கண்டுபுடிக்கிறார் காமிச்சி... ரோபோடோட கட்டுபாட்டுல இருக்குற ரோபோட்டுக்ளுக்கும், ரஜினி கண்ட்ரோல்-ல இருக்குற ரோபோட்டுக்களுக்கும் பெரிய போர் மாறி காமிக்கிறாம். எல்லாத்தையும் வெடிக்கவிட்டு.. கடைசியில ஐஸ்வர்யா ராய், ரோபோட் ரஜினியும், ஒரிஜினல் ரஜினியும் இருக்காங்க... இவங்க ரெண்டு பேருல யார தேரிந்தேடுக்குறது-னு தெரியாம ஐஸ்வர்யா தடுமாற.. செண்டிமெண்ட்ட நுழைக்கிறோம்.. எப்பூடி??
ஷங்கர்: ஐடியா நல்லா இருக்கு... ஆனா புதுசா இல்லையே... நம்ம மேட்டர் லஞ்சம், கறுப்பு பணம் எதுவுமே இல்லயே... இதெல்லாம் இல்லனா மக்களுக்கு என் படத்துக்கு வந்துருக்காங்க-னு மறந்துடுவாங்களே...
அசிஸ்டண்ட்: கொண்டுவறோம்... பழைய விஷயங்கள கொண்டு வர்றோம்... ஐஸ்வர்யா ராயோட அப்பா தான் P.M... அவர் கோடிக்கண்க்கில் கறுப்பு பணம் வச்சிருக்கார்.. அத பாதுக்காக்க பல நூறு ரோபோட் வச்சிருக்கார்... நம்மளோட செண்டிமெண்ட் சீனுக்கு அப்புறம்... ரோபோட் ரஜினி, ஒரிஜினல் ரஜினிக் கூட கைக்கோர்த்துகிட்டு அவங்கள எல்லாம் அழிக்க புறப்படுது... ஐஸ்வர்யாவும் அவங்க கூட ‘join' பண்றாங்க... திரும்ப எல்லா ரோபோட்டையும் அழிக்கிறோம்... இந்த போராட்டத்துல ரோபோட் ரஜினி செத்து போறார்.. மீண்டும் செண்டிமெண்ட்ட பொழியுறோம்...
ஷங்கர்: இத தான் எதிர்பார்த்தேன்... இப்படி தான் எதுவுமே இருக்க கூடாது,... அழிக்கிறோம்... எல்லத்தையும் அழிக்கிறோம்... சோ இப்ப எல்லாத்தையும் உருவாக்குறோம்... எங்க சாபு சிரில்?? கூப்பிடுங்க அவர..
**************************************************************************************************************************************
(சாபு சிரில் வருகிறார்... அசிஸ்டண்ட் அவரிடம் விளக்குகிறார்)
ஷங்கர்: எல்லாம் கேட்டிங்களா சிரில்.... இருக்குறதுலியே எது பண்ணா செலவு அதிகமா பிரம்மாண்டமா இருக்குமோ.. அந்த டிசைன கொடுங்க... பெரியா அளவுல பண்றோம்...
சாபு சிரில்: தரேன் ஷங்கர்.. ஆனா எப்படியும் ஒரு 50 கோடி ஆகும்-னு நினைக்கிறேன்.. பண்ணிடுவோமா...??
ஷங்கர்: பூபூபூ... இவ்ளோ தானா... சிரில்.. நான் சொன்னத கேட்டீங்களா இல்லையா... பெரிய அளவுல பண்றோம்.. 200 கோடி பட்ஜட்.. சும்மா ஜாமாய்க்கனும்... ரெக்கார்ட் புக்-ல நம்ம பேரு வரணும்.. பாட்டுக்கேல்லாம் செட் ரெடி பண்ணிட்டீங்களா??
சாபு சிரில்: எல்லாம் ரெடி,... 20 கோடி ஆச்சு சார்!!!!
ஷங்கர்: (சோகமாக) அவ்ளோ தானா... பரவால.. (சிரித்து கொண்டே) கிளைமாக்ஸ்-ல சேத்து செலவு பண்ணிடுவோம்..
(இதை எல்லாம் அங்கே வந்து கொண்டிருக்கும் கலாநிதி மாறன் கேட்க அங்கேயே மயங்கி கீழே விழுகிறார்)

Leia Mais…

சனி, ஜூலை 11, 2009

நாடோடிகள் - விமர்சனம்

(நாடோடிகள் படத்தைப் பார்த்துட்டு வரும் குப்புவும், அவ்வழியே வரும் சுப்புவும் பேசிக்கொண்டு செல்கின்றனர்) சுப்பு: என்னண்ணே.. ‘நாடோடிகள்’ படம் பாத்தீங்களா...??? குப்பு: இப்ப தான் பாத்துட்டு வந்தேன்... நெஞ்சில நிக்கிற மாறி பண்ணி இருக்காங்கலே... நட்பு, காதல், ஏமாற்றம்... எல்லாத்துக்கும் மேல இன்னிக்கு சமுதாயத்துல இருக்குற விவாகரத்த பத்தி சிறப்பா சொல்லிட்டார் சமுத்திரகனி.... பிரிச்சிட்டாருலே சுப்பு: ஆமாம்ணே... சசிகுமாரையும் சும்மா சொல்லக் கூடாது... நண்பனாவும் சரி.. காதலனாவும் சரி.. பாசமான குடும்பத்து பையனாவும் சரி... பொளந்து கட்டிட்டார்.. குப்பு: அவன் கூட இருக்குற நண்பர்களா நடிச்சவங்களும் நல்லா பண்ணி இருக்காங்கலே... அந்த பாண்டியா வர கல்லூரியில நடிச்ச பையன் காமெடியில் இருந்து கொந்தளிப்பது வரை நல்லா பண்ணி இருக்கான்.. அப்புறம் அந்த விஜய் பையனும் நல்லா பண்ணியிருக்கான்... சுப்பு: ஹீரோயினுங்களா பத்தி என்ன சொல்றீங்கண்ணே?? குப்பு: சசிகுமாருக்கு மாமா பொண்ணா வர பொண்ணு நல்லா வெள்ளந்தியான ஊர் பொண்ணா நடிச்சிருக்கு... ஆனா இனி எப்படி வாய்ப்பு கிடைக்கும்-னு தான் தெரியல... எல்லாமே இதே மாறி அர்த்தமுள்ள படமாவா வருது.. அதே மாறி சசிகுமார் தங்கச்சியா வர பொண்ணும் நல்லா நடிச்சிருக்கு... சுப்பு: அண்ணே... உங்களுக்கு தெரியுமா??? அந்த தங்கச்சியா நடிச்ச பொண்ணுக்கு காது கேட்காதாம்.. வாயும் பேச முடியாதாம்... நல்லா பண்ணியிருக்குண்ணே அந்த பொண்ணு.. குப்பு: அப்படியா.. படத்துல பாக்கும் போது அப்டி தெரியவே இல்லலே... சுப்பு: மத்தவங்களும் நல்லா பண்ணியிருக்காங்க... எல்லாருடைய அம்மா அப்பாவா வரவங்களும் நல்லா நடிச்சிருக்கங்க... நல்ல நடிகர் தேர்வு... குப்பு: இவ்ளோ சொல்லிட்டு காமெடியில கலக்குன ‘கஞ்சா’கருப்பையும், சின்னமணியா வர்றவரையும் விட்டுட்டியே?? சுப்பு: ஆமாம்ண்ணே... அதுவும் சின்னமணியா வர்றவர் கலக்கிட்டார்.. அதுவும் ஒரு இடத்துல வருமே ‘வாழ்விழந்த வாலிபர்களுக்கு வாழ்வளித்த வள்ளல்’-னு.. அத பாத்து யாருமே சிரிக்காம இருக்க முடியாது... குப்பு: கிளைமாக்ஸூம் ‘டாப்பு’ தான்.. அருமையா இருந்துது.. சுப்பு: ஆமாம்ண்ணே... அதுலயும் பின்னனி இசை படத்துக்கு விறுவிறுப்ப நல்லா சேத்து இருக்கு.. குப்பு: பின்னனியில வர அந்த பாட்டு.. ‘சம்போ சிவ சம்போ’ சும்மா தட தட-னு ஒடுது... அது நமக்கும் அப்படியே பத்திக்குது... சுப்பு: ஆமாம்ண்ணே... நான் அதை பாத்தேன்.. ஆனா படத்துல பல ‘லாஜிக்’ மீறல்கள் இருந்துதுண்ணா... அதுவும் அந்த மண்குவாரி கிட்ட ஒரு பாட்டு வருமே.. அதெல்லாம் இல்லாம இருந்த நல்லா இருந்து இருக்கும்... குப்பு: கண்டிப்பா... இருந்தாலும் இந்த படத்துல குறையா விட நிறை நம்மல நிறச்சிடுதுல... சுப்பு: ஹீம்ம்ம்ம்..... சன் டி.வி.-ல வர விமர்சன அக்கா மாறி சொல்லனும்னா... “தியேட்டருக்கு வரும் படங்கள் எல்லாம் தியேட்டரை விட்டு வேகமாக வெளியே ஒடும் நிலையில்... இந்த நாடோடிகள் தியேட்டரிலேயே பல நாட்கள் சிறப்பாக ஒடுவார்கள்குப்பு: நல்லா இருந்துதுலே... வீடு வந்துடுச்சி... சரி நான் வரட்டுமா?? சுப்பு: சரிண்ணே...

Leia Mais…

திங்கள், ஜூலை 06, 2009

மக்கள் குரல்

கனிமொழி: பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளுக்கு ‘ஓட்டு போட மாட்டேன் ‘ என்று கூறுங்கள்.

நாங்க அத நிறைவேத்துற கட்சிக்கு தான் ஓட்டு போடலாம் இருக்கோம்.. எப்பூடி????
**************************************************************************************
கருணாநிதி: ”நான் யாரிடத்திலும் பொறாமைப்பட்டது இல்லை. முதன்முதலாக மு.க.ஸ்டாலினிடம் பொறாமைப்ப்டுகிறேன்.”
அடுத்து அழகிரியிடம் படுவீர்கள்.... கனிமொழியிடம் படுவீர்கள்... மன்னிக்கனும்... நான் நிறையா பேரவிட்டுட்டேன்... என்ன பண்ணுறது.... முடியல... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பாபாபா...
*************************************************************************************
கார்த்திக்: ”எங்கள் கட்சிக்கு 20 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது!”
சானல மாத்துங்கப்பா... ஒண்ணும் சரியா தெரியவும் மாட்டேங்குது... புரியவும் மாட்டேங்குது... டி.வி-ல எல்லா சானலுக்கும் கனக்‌ஷன் கொடுக்காதீங்க-னு சொன்னா கேக்க மாட்டீங்களே!!!!
**************************************************************************************
முலாயம்சிங்: ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாயாவதியின் சிலைகளைப் புல்டோசர் மூலம் உடனடியாக இடித்து தள்ளுவோம்!”
ஆமா அவங்க வைக்கட்டும்.. நீங்க இடிங்க... இப்படியே காஜானா-வ காலி பண்ணிடுங்க... போங்க போங்க சார்... உருப்படியா ஏதாவது யோசிங்க..
*************************************************************************************
கார்த்திக்: ”மக்கள் என்னை எப்போது ஏற்றுக் கொள்கிறார்களோ, அப்போது என்னை ஜெயிக்கவைக்கட்டும்!”
சானல இன்னும் கட் பண்ணலயா... டி.வி-ய ஆஃப் பண்ணுங்கப்பா...
*************************************************************************************
இந்த வாரத்தின் அல்டிமேட் காமெடி:
ஆனந்த விகடனில் வெளிவந்து இருந்தது..
நானே கேள்வி நானே பதில் பகுதியில்...
சமீபத்தில் ரசித்த காமெடி?
“தயாநிதி மாறன் ஜெயலலிதா மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்குச் சம்மன் அணுப்பியது கோர்ட். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த பதில் மனுவில் ஒரு வரி... ‘தமிழக மக்களின் நலனுக்காகவே என் முழு வாழ்க்கையையும் நான் அர்ப்பணித்து இருப்பதால், இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் என்னால் ஆஜாராக இயலாது!
இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவிக்கு காமெடி சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி!!!!

Leia Mais…

ஞாயிறு, ஜூலை 05, 2009

இதொ வந்துட்டேன் - 3

கிரி ஓடி வந்து பார்க்கும் போது ராஜாவிற்கு பெரிய அளவில் அடிபடவில்லை என்றாலும், மூச்சு நின்று போய் இருந்தது. அவனை அடித்த லாரியோ நிற்காமல் சென்றுவிட்டது. கிரிக்கு ‘திக்’கென்று இருந்தது. அவன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். ராஜாவின் வீட்டுக்கு போன் செய்வது தான் சரி என்று தோன்றியது. அவன் போன் செய்வதற்குள், ராஜாவின் ஆவி எமலோகத்தை அடைந்திருந்தது.

அங்கே அவன் வாசலிலேயே நிறுத்தபட்டான். எமலோகத்தை பார்ப்பதற்கே பிரம்மிப்பாக இருந்தது அவனுக்கு. தான் இறந்துவிட்டோம் என்று எண்ணும் போதே அவனுக்கு அழுகையாய் வந்தது. தேவலோகத்தை கூட அடைய முடியவில்லை என்று எண்ணிய போது இன்னும் அழுகை மூட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. ஆவிகளுக்கு கண்ணீர் வராதோ எண்ணி கொண்டான். எப்படியோ அங்கு 3 மணி நேரத்தை காத்து கொண்டிருந்தே கழித்தான்.
“எமதர்மர் எப்போது வருவார்?” என்று அங்கிருந்த காவலாளியிடம் கேட்டான்.
“5 மணி நேரங்கள் ஆகும்” என அவனிடம் இருந்து வந்தது பதில்.
நேரம் அதிகம் இருக்கிறது என நினைத்து கொண்ட ராஜா, சீக்கிரமாக முதலில் அபிநயா வீட்டிற்கும் பின் தன் வீட்டிற்கு சென்று என்ன நடக்கிறது என காண புறப்பட்டான். அபிநயா எதை பற்றியும் அறியாமல் மொபைலை கையில் வைத்து கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.
அவன் வீட்டின் முன் பல பேர் குழுமி இருந்தனர். அவன் அம்மா அழுது கொண்டிருந்தாள். அவனுடைய அப்பாவும் அண்ணனும் சோகமாக நின்று கொண்டிருந்தனர். ஆஸ்பத்திரி வேன் அங்கு வர அவனது உடல் இறக்கி வைக்கபட்டது. கூடவே கிரியும் இறங்கினான் சோகமாக. அப்போது ஒரு அம்மா(அவர்களது பக்கத்து வீடு) அங்கே “அந்த புள்ளைக்கு என்ன சாகுற வயசா... நல்ல புள்ள வேற” என்று சொல்ல... சட்டென்று அவனுக்கு பொறி தட்டியது. அவன் ‘அதிசய பிறவி’ படம் பார்த்ததும் அவனுக்கு நல்லதாய் போனது. நேராக எமலோகத்திற்கு சென்றான். ஆனால் அவை அவன் போவதற்கு முன்பே ஆரம்பித்துவிட்டு இருந்தது.
பயந்து போன ராஜா காவலனிடம், “5 மணி நேரங்கள் ஆகும்னு சொன்னியேயா??” என்றான் கடிந்து கொண்டே...
“மன்னிக்கனும்... 5 மணி துளிகள தான்... 5 மணி நேரம்னு தப்பா சொல்லிட்டேன்” என்று சொல்ல... ‘இவன் நமக்கு இருக்குற ஒண்ணு, ரெண்டு சான்ஸயும் கெடுத்துருவான் போல இருக்கே’ என்று எண்ணிக்கொண்டே அவையினுள் நுழைந்தான். அங்கே எமதர்மனை பார்த்த உடனேயே பயந்துவிட்டான். மொத்தம் இருந்த மூன்று படிகளில் மேல் படியில் அவரது சிம்மாசனம் அமைந்து இருந்து ஒரு எருமை தலை அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டிக் கொண்டு பயமுறித்தி கொண்டிருந்தது. மூன்றாவது படியில் சித்திரகுப்தன் உட்கார்ந்து பிரம்மசுவடியை வைத்து கொண்டு அங்கே இறந்தவர்களின் எதிர்காலத்தை(????) தீர்மானித்து கொண்டிருந்தான்.
ராஜா-வைப் பார்த்த எமதர்மன், “எங்கே சென்று இருந்தாய் மானிடா??? இவ்வளவு தாமதமாக வந்து இருக்கிறாய்....” என்றார்.
“பூமி வரை சென்று இருந்தேன் எமதர்மன்” என்றான் ராஜா.
“எவ்வளவு திமிர் இருந்தால் என் பிரபுவை பெயரிட்டு அழைத்திருப்பாய்... தைரியமிருந்தால் மீண்டும் ஒரு முறை சொல் பார்க்கலாம்” என்று வெடித்தான் சித்திரகுப்தன்.
ராஜா தன் வாயை திறந்து ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “அவன் ஏதோ தெரியாமல் ஒரு முறை சொல்லிவிட்டான்... நீ அவனை இன்னும் பல முறை சொல்ல சொல்வாய் போல இருக்கிறதே.. இருந்தாலும் இதை அவன் பாவ கண்க்கில் எழுதிக்கொள். இவனை நாம் கடைசியாக தான் விசாரிக்க போகிறோம்” என எமன் கூறினார்.
செத்த பிறகு என்ன விசாரணை... நம்ம ஊர் ஜ்ட்ஜுங்கள விட பெரியா ஆளுங்களா இருப்பானுங்க போல இருக்கே’ என்று மனதில் நினைத்து கொண்டான் ராஜா.
அனைவருக்கும் விசாரணை நடந்து முடிந்தது.. பலருக்கும் பல தண்டனைகள் கிடைத்தன. கடைசியாக ராஜாவின் முறை வந்தது.
“சித்திரகுப்தா.. இவனது வாழ்க்கை குறிப்பையும்... பாவ கணக்கையும் படி” என்று சித்திரகுப்தனுக்கு கட்டளையிட்டார் எமன்.
பரவாயில்ல.. நம்ம வாழ்க்கை குறிப்பு இங்கயாவது இருக்கே’ - என்றது அவனது மனதின் குரல்..
பிரம்மசுவடியை புரட்டிய சித்திரகுப்தன், ”பெயர் - பி.ராஜா..
பிறப்பு - 25- ஆங்கில மாதம் ஜீன் - ஆண்டு 1987
இறப்பு - 28 - ஆங்கில மாதம் மே - ஆண்டு 20........... “ என்று தடுமாறினான் சித்திரகுப்தன்.
“ஏன் சித்திரகுப்தா.. தடுமாறுகிறாய்... தைரியமாக படி” என்று சொன்னார் எமன்..
“சிறு பிழை நடந்துவிட்டது பிரபு... இவனது இறப்பு ஆண்டு 2049 என்று உள்ளது..” என்று பதறினான் சித்தரகுப்தன்.
”அடப்பாவிங்களா..” என்று வாய்விட்டு கதறிய ராஜா...
நம்ம கவர்ன்மெண்ட விட மோசமா இருப்பானுங்க போல இருக்கே...' என்று மனதில் எண்ணினான்.
பின்னர் “பக்கத்து வீட்டு அக்கா அப்பவே சொன்னாங்க... எனக்கு சாகுற வயசு இல்லனு... சரியா தான் இருக்கு” என்று கத்தி சொன்னான்.
கடுப்பாகி போன எமதர்மன், “உனது மூததையர்கள் வி.கே.ராமசாமி, செந்தில் போல நீயும் மடத்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய்” என்று சித்திரகுப்தனை திட்டினார்.
”இப்போது என்ன செய்வது பிரபு” என்று சித்திரகுப்தன் கேட்க.. “உன்னை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்..... “ என்று வெடித்தார் எமன்.
இவனுங்க என்ன சண்ட போட்டுட்டு இருக்கானுங்க... சீக்கிரம் என்னை கீழ அணுப்ப மாட்டாங்க போல இருக்கே’ என்று எண்ணிய ராஜா,
“உங்க பஞ்சயாத்தயெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க.. எனக்கு ஒரு பதில் சொல்லுங்க” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.
“பார் சித்திரகுப்தா... உன்னால் சிறு மானிடன் எல்லாம் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டான்... நல்ல வேளை வேறு யாரும் இல்லை... கடைசியாக இவனை விட்டோம்” என்று சொன்ன எமன்... ”உனது உடம்பிலேயே சேர்ந்து கொள்ளகிறாயா மானிடா” என்று ராஜா-வை பார்த்து கேட்க..
இவ்ளோ நேரத்துல ஒரு நல்ல விஷயம் இவனுங்க வாயில இருந்து வந்து இருக்கு
“கண்டிப்பாக... ஆனால் கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க... என்ன பிடிக்காதவங்க நிறைய பேர் வந்து இருக்காங்க... கூச்சபடாம என் உடம்ப கொண்டு போய் கொளுத்திவிட்டுருவானுங்க” என்று ராஜா சொல்ல, மூவரும் ராஜாவின் வீட்டுக்கு கிளம்பினர்.
ராஜாவின் உடம்பு அவன் வீட்டு முன்பு கிடத்தபட்டு இருந்தது. “மானிடா சென்று சேர்ந்து கொள்.. இன்னும் 5 மணி துளிகளில் நீ உயிர் பெறுவாய்” என்று எமன் சொல்ல.. ராஜா சென்று சேர்ந்தான்.
“பிரபு.. அவன்.....” என்று சித்திரகுப்தன் ஆரம்பிக்கும் போதே.. “அவனுக்கு எமலோக எபிசோட் ஞாபகம் இருக்காது... லாரியில் அடிப்பட்ட அதிர்ச்சி மட்டுமே அவன் நினைவில் இருக்கும்” சொல்லி கொண்டே எமலோகம் நோக்கி இருவரும் புறப்பட்டனர்.
”என்னடா ஆச்சு.. இப்படி பண்ணிட்ட... இண்டர்வியூ போய்ட்டு வருவேன்னு பார்த்தா இப்படி பண்ணிட்டியே” என்று ராஜாவின் அம்மா அழ...
“அதான் வந்துட்டேன்ல அம்மா...” என்று தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தான் ராஜா.
-முடிந்தது..

Leia Mais…