ஞாயிறு, ஜூலை 05, 2009

இதொ வந்துட்டேன் - 3

கிரி ஓடி வந்து பார்க்கும் போது ராஜாவிற்கு பெரிய அளவில் அடிபடவில்லை என்றாலும், மூச்சு நின்று போய் இருந்தது. அவனை அடித்த லாரியோ நிற்காமல் சென்றுவிட்டது. கிரிக்கு ‘திக்’கென்று இருந்தது. அவன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். ராஜாவின் வீட்டுக்கு போன் செய்வது தான் சரி என்று தோன்றியது. அவன் போன் செய்வதற்குள், ராஜாவின் ஆவி எமலோகத்தை அடைந்திருந்தது.

அங்கே அவன் வாசலிலேயே நிறுத்தபட்டான். எமலோகத்தை பார்ப்பதற்கே பிரம்மிப்பாக இருந்தது அவனுக்கு. தான் இறந்துவிட்டோம் என்று எண்ணும் போதே அவனுக்கு அழுகையாய் வந்தது. தேவலோகத்தை கூட அடைய முடியவில்லை என்று எண்ணிய போது இன்னும் அழுகை மூட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை. ஆவிகளுக்கு கண்ணீர் வராதோ எண்ணி கொண்டான். எப்படியோ அங்கு 3 மணி நேரத்தை காத்து கொண்டிருந்தே கழித்தான்.
“எமதர்மர் எப்போது வருவார்?” என்று அங்கிருந்த காவலாளியிடம் கேட்டான்.
“5 மணி நேரங்கள் ஆகும்” என அவனிடம் இருந்து வந்தது பதில்.
நேரம் அதிகம் இருக்கிறது என நினைத்து கொண்ட ராஜா, சீக்கிரமாக முதலில் அபிநயா வீட்டிற்கும் பின் தன் வீட்டிற்கு சென்று என்ன நடக்கிறது என காண புறப்பட்டான். அபிநயா எதை பற்றியும் அறியாமல் மொபைலை கையில் வைத்து கொண்டு தூங்கி கொண்டிருந்தாள்.
அவன் வீட்டின் முன் பல பேர் குழுமி இருந்தனர். அவன் அம்மா அழுது கொண்டிருந்தாள். அவனுடைய அப்பாவும் அண்ணனும் சோகமாக நின்று கொண்டிருந்தனர். ஆஸ்பத்திரி வேன் அங்கு வர அவனது உடல் இறக்கி வைக்கபட்டது. கூடவே கிரியும் இறங்கினான் சோகமாக. அப்போது ஒரு அம்மா(அவர்களது பக்கத்து வீடு) அங்கே “அந்த புள்ளைக்கு என்ன சாகுற வயசா... நல்ல புள்ள வேற” என்று சொல்ல... சட்டென்று அவனுக்கு பொறி தட்டியது. அவன் ‘அதிசய பிறவி’ படம் பார்த்ததும் அவனுக்கு நல்லதாய் போனது. நேராக எமலோகத்திற்கு சென்றான். ஆனால் அவை அவன் போவதற்கு முன்பே ஆரம்பித்துவிட்டு இருந்தது.
பயந்து போன ராஜா காவலனிடம், “5 மணி நேரங்கள் ஆகும்னு சொன்னியேயா??” என்றான் கடிந்து கொண்டே...
“மன்னிக்கனும்... 5 மணி துளிகள தான்... 5 மணி நேரம்னு தப்பா சொல்லிட்டேன்” என்று சொல்ல... ‘இவன் நமக்கு இருக்குற ஒண்ணு, ரெண்டு சான்ஸயும் கெடுத்துருவான் போல இருக்கே’ என்று எண்ணிக்கொண்டே அவையினுள் நுழைந்தான். அங்கே எமதர்மனை பார்த்த உடனேயே பயந்துவிட்டான். மொத்தம் இருந்த மூன்று படிகளில் மேல் படியில் அவரது சிம்மாசனம் அமைந்து இருந்து ஒரு எருமை தலை அப்படியும் இப்படியுமாக தலையை ஆட்டிக் கொண்டு பயமுறித்தி கொண்டிருந்தது. மூன்றாவது படியில் சித்திரகுப்தன் உட்கார்ந்து பிரம்மசுவடியை வைத்து கொண்டு அங்கே இறந்தவர்களின் எதிர்காலத்தை(????) தீர்மானித்து கொண்டிருந்தான்.
ராஜா-வைப் பார்த்த எமதர்மன், “எங்கே சென்று இருந்தாய் மானிடா??? இவ்வளவு தாமதமாக வந்து இருக்கிறாய்....” என்றார்.
“பூமி வரை சென்று இருந்தேன் எமதர்மன்” என்றான் ராஜா.
“எவ்வளவு திமிர் இருந்தால் என் பிரபுவை பெயரிட்டு அழைத்திருப்பாய்... தைரியமிருந்தால் மீண்டும் ஒரு முறை சொல் பார்க்கலாம்” என்று வெடித்தான் சித்திரகுப்தன்.
ராஜா தன் வாயை திறந்து ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “அவன் ஏதோ தெரியாமல் ஒரு முறை சொல்லிவிட்டான்... நீ அவனை இன்னும் பல முறை சொல்ல சொல்வாய் போல இருக்கிறதே.. இருந்தாலும் இதை அவன் பாவ கண்க்கில் எழுதிக்கொள். இவனை நாம் கடைசியாக தான் விசாரிக்க போகிறோம்” என எமன் கூறினார்.
செத்த பிறகு என்ன விசாரணை... நம்ம ஊர் ஜ்ட்ஜுங்கள விட பெரியா ஆளுங்களா இருப்பானுங்க போல இருக்கே’ என்று மனதில் நினைத்து கொண்டான் ராஜா.
அனைவருக்கும் விசாரணை நடந்து முடிந்தது.. பலருக்கும் பல தண்டனைகள் கிடைத்தன. கடைசியாக ராஜாவின் முறை வந்தது.
“சித்திரகுப்தா.. இவனது வாழ்க்கை குறிப்பையும்... பாவ கணக்கையும் படி” என்று சித்திரகுப்தனுக்கு கட்டளையிட்டார் எமன்.
பரவாயில்ல.. நம்ம வாழ்க்கை குறிப்பு இங்கயாவது இருக்கே’ - என்றது அவனது மனதின் குரல்..
பிரம்மசுவடியை புரட்டிய சித்திரகுப்தன், ”பெயர் - பி.ராஜா..
பிறப்பு - 25- ஆங்கில மாதம் ஜீன் - ஆண்டு 1987
இறப்பு - 28 - ஆங்கில மாதம் மே - ஆண்டு 20........... “ என்று தடுமாறினான் சித்திரகுப்தன்.
“ஏன் சித்திரகுப்தா.. தடுமாறுகிறாய்... தைரியமாக படி” என்று சொன்னார் எமன்..
“சிறு பிழை நடந்துவிட்டது பிரபு... இவனது இறப்பு ஆண்டு 2049 என்று உள்ளது..” என்று பதறினான் சித்தரகுப்தன்.
”அடப்பாவிங்களா..” என்று வாய்விட்டு கதறிய ராஜா...
நம்ம கவர்ன்மெண்ட விட மோசமா இருப்பானுங்க போல இருக்கே...' என்று மனதில் எண்ணினான்.
பின்னர் “பக்கத்து வீட்டு அக்கா அப்பவே சொன்னாங்க... எனக்கு சாகுற வயசு இல்லனு... சரியா தான் இருக்கு” என்று கத்தி சொன்னான்.
கடுப்பாகி போன எமதர்மன், “உனது மூததையர்கள் வி.கே.ராமசாமி, செந்தில் போல நீயும் மடத்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய்” என்று சித்திரகுப்தனை திட்டினார்.
”இப்போது என்ன செய்வது பிரபு” என்று சித்திரகுப்தன் கேட்க.. “உன்னை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்..... “ என்று வெடித்தார் எமன்.
இவனுங்க என்ன சண்ட போட்டுட்டு இருக்கானுங்க... சீக்கிரம் என்னை கீழ அணுப்ப மாட்டாங்க போல இருக்கே’ என்று எண்ணிய ராஜா,
“உங்க பஞ்சயாத்தயெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க.. எனக்கு ஒரு பதில் சொல்லுங்க” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.
“பார் சித்திரகுப்தா... உன்னால் சிறு மானிடன் எல்லாம் என்னை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டான்... நல்ல வேளை வேறு யாரும் இல்லை... கடைசியாக இவனை விட்டோம்” என்று சொன்ன எமன்... ”உனது உடம்பிலேயே சேர்ந்து கொள்ளகிறாயா மானிடா” என்று ராஜா-வை பார்த்து கேட்க..
இவ்ளோ நேரத்துல ஒரு நல்ல விஷயம் இவனுங்க வாயில இருந்து வந்து இருக்கு
“கண்டிப்பாக... ஆனால் கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க... என்ன பிடிக்காதவங்க நிறைய பேர் வந்து இருக்காங்க... கூச்சபடாம என் உடம்ப கொண்டு போய் கொளுத்திவிட்டுருவானுங்க” என்று ராஜா சொல்ல, மூவரும் ராஜாவின் வீட்டுக்கு கிளம்பினர்.
ராஜாவின் உடம்பு அவன் வீட்டு முன்பு கிடத்தபட்டு இருந்தது. “மானிடா சென்று சேர்ந்து கொள்.. இன்னும் 5 மணி துளிகளில் நீ உயிர் பெறுவாய்” என்று எமன் சொல்ல.. ராஜா சென்று சேர்ந்தான்.
“பிரபு.. அவன்.....” என்று சித்திரகுப்தன் ஆரம்பிக்கும் போதே.. “அவனுக்கு எமலோக எபிசோட் ஞாபகம் இருக்காது... லாரியில் அடிப்பட்ட அதிர்ச்சி மட்டுமே அவன் நினைவில் இருக்கும்” சொல்லி கொண்டே எமலோகம் நோக்கி இருவரும் புறப்பட்டனர்.
”என்னடா ஆச்சு.. இப்படி பண்ணிட்ட... இண்டர்வியூ போய்ட்டு வருவேன்னு பார்த்தா இப்படி பண்ணிட்டியே” என்று ராஜாவின் அம்மா அழ...
“அதான் வந்துட்டேன்ல அம்மா...” என்று தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தான் ராஜா.
-முடிந்தது..

4 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஏன் ராஸா ஏன் ...

kanagu சொன்னது…

@ ஜமால் அண்ணா

/*ஏன் ராஸா ஏன் ...*/

திட்டாம விட்டீங்களே... அதுவரைக்க்ம் சந்தொஷம் :)

Sandhya சொன்னது…

firefox tamil transliterationl problem.

Avanudaiya appa 'yendaa kangaaraa thirumba vande'nnu kaeppar polirukku!

viruviruppaaga irunthathu,kathai, Kanagu.

kanagu சொன்னது…

சந்தியாஜி

/*firefox tamil transliterationl problem. */

:)

/*Avanudaiya appa 'yendaa kangaaraa thirumba vande'nnu kaeppar polirukku!*/

ஹா ஹா ஹா :)viruviruppaaga irunthathu,kathai, Kanagu.*/

ரொம்ப நன்றி ஜி :))