திங்கள், ஜூலை 06, 2009

மக்கள் குரல்

கனிமொழி: பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கட்சிகளுக்கு ‘ஓட்டு போட மாட்டேன் ‘ என்று கூறுங்கள்.

நாங்க அத நிறைவேத்துற கட்சிக்கு தான் ஓட்டு போடலாம் இருக்கோம்.. எப்பூடி????
**************************************************************************************
கருணாநிதி: ”நான் யாரிடத்திலும் பொறாமைப்பட்டது இல்லை. முதன்முதலாக மு.க.ஸ்டாலினிடம் பொறாமைப்ப்டுகிறேன்.”
அடுத்து அழகிரியிடம் படுவீர்கள்.... கனிமொழியிடம் படுவீர்கள்... மன்னிக்கனும்... நான் நிறையா பேரவிட்டுட்டேன்... என்ன பண்ணுறது.... முடியல... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பாபாபா...
*************************************************************************************
கார்த்திக்: ”எங்கள் கட்சிக்கு 20 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது!”
சானல மாத்துங்கப்பா... ஒண்ணும் சரியா தெரியவும் மாட்டேங்குது... புரியவும் மாட்டேங்குது... டி.வி-ல எல்லா சானலுக்கும் கனக்‌ஷன் கொடுக்காதீங்க-னு சொன்னா கேக்க மாட்டீங்களே!!!!
**************************************************************************************
முலாயம்சிங்: ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாயாவதியின் சிலைகளைப் புல்டோசர் மூலம் உடனடியாக இடித்து தள்ளுவோம்!”
ஆமா அவங்க வைக்கட்டும்.. நீங்க இடிங்க... இப்படியே காஜானா-வ காலி பண்ணிடுங்க... போங்க போங்க சார்... உருப்படியா ஏதாவது யோசிங்க..
*************************************************************************************
கார்த்திக்: ”மக்கள் என்னை எப்போது ஏற்றுக் கொள்கிறார்களோ, அப்போது என்னை ஜெயிக்கவைக்கட்டும்!”
சானல இன்னும் கட் பண்ணலயா... டி.வி-ய ஆஃப் பண்ணுங்கப்பா...
*************************************************************************************
இந்த வாரத்தின் அல்டிமேட் காமெடி:
ஆனந்த விகடனில் வெளிவந்து இருந்தது..
நானே கேள்வி நானே பதில் பகுதியில்...
சமீபத்தில் ரசித்த காமெடி?
“தயாநிதி மாறன் ஜெயலலிதா மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்குச் சம்மன் அணுப்பியது கோர்ட். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த பதில் மனுவில் ஒரு வரி... ‘தமிழக மக்களின் நலனுக்காகவே என் முழு வாழ்க்கையையும் நான் அர்ப்பணித்து இருப்பதால், இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் என்னால் ஆஜாராக இயலாது!
இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவிக்கு காமெடி சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி!!!!

4 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

சானல மாத்துங்கப்பா... ஒண்ணும் சரியா தெரியவும் மாட்டேங்குது... புரியவும் மாட்டேங்குது... டி.வி-ல எல்லா சானலுக்கும் கனக்‌ஷன் கொடுக்காதீங்க-னு சொன்னா கேக்க மாட்டீங்களே!!!!\\


தூள் ...

Sandhya சொன்னது…

Innum sirichchittu irukkaen, Kanagu. Ella jokesum superb.

Ammmmma jokethan top!

Karthik சொன்னது…

அவரை யாராவது பேர மாத்திக்க சொல்லுங்க ப்ளீஸ். :))

Prabhu சொன்னது…

@ஜமால் அண்ணா

/*சானல மாத்துங்கப்பா... ஒண்ணும் சரியா தெரியவும் மாட்டேங்குது... புரியவும் மாட்டேங்குது... டி.வி-ல எல்லா சானலுக்கும் கனக்‌ஷன் கொடுக்காதீங்க-னு சொன்னா கேக்க மாட்டீங்களே!!!!\\


தூள் ..*/

ரொம்ப நன்றி அண்ணா :)

@ சந்தியாஜி

/*Innum sirichchittu irukkaen, Kanagu. Ella jokesum superb.

Ammmmma jokethan top!*/

ரொம்ப நன்றிஜி... அம்மா எப்பவுமே அப்படி தான் :)

@கார்த்திக்

/*அவரை யாராவது பேர மாத்திக்க சொல்லுங்க ப்ளீஸ். :))*/

ஹ ஹ ஹ... :)