சனி, ஜூலை 11, 2009

நாடோடிகள் - விமர்சனம்

(நாடோடிகள் படத்தைப் பார்த்துட்டு வரும் குப்புவும், அவ்வழியே வரும் சுப்புவும் பேசிக்கொண்டு செல்கின்றனர்) சுப்பு: என்னண்ணே.. ‘நாடோடிகள்’ படம் பாத்தீங்களா...??? குப்பு: இப்ப தான் பாத்துட்டு வந்தேன்... நெஞ்சில நிக்கிற மாறி பண்ணி இருக்காங்கலே... நட்பு, காதல், ஏமாற்றம்... எல்லாத்துக்கும் மேல இன்னிக்கு சமுதாயத்துல இருக்குற விவாகரத்த பத்தி சிறப்பா சொல்லிட்டார் சமுத்திரகனி.... பிரிச்சிட்டாருலே சுப்பு: ஆமாம்ணே... சசிகுமாரையும் சும்மா சொல்லக் கூடாது... நண்பனாவும் சரி.. காதலனாவும் சரி.. பாசமான குடும்பத்து பையனாவும் சரி... பொளந்து கட்டிட்டார்.. குப்பு: அவன் கூட இருக்குற நண்பர்களா நடிச்சவங்களும் நல்லா பண்ணி இருக்காங்கலே... அந்த பாண்டியா வர கல்லூரியில நடிச்ச பையன் காமெடியில் இருந்து கொந்தளிப்பது வரை நல்லா பண்ணி இருக்கான்.. அப்புறம் அந்த விஜய் பையனும் நல்லா பண்ணியிருக்கான்... சுப்பு: ஹீரோயினுங்களா பத்தி என்ன சொல்றீங்கண்ணே?? குப்பு: சசிகுமாருக்கு மாமா பொண்ணா வர பொண்ணு நல்லா வெள்ளந்தியான ஊர் பொண்ணா நடிச்சிருக்கு... ஆனா இனி எப்படி வாய்ப்பு கிடைக்கும்-னு தான் தெரியல... எல்லாமே இதே மாறி அர்த்தமுள்ள படமாவா வருது.. அதே மாறி சசிகுமார் தங்கச்சியா வர பொண்ணும் நல்லா நடிச்சிருக்கு... சுப்பு: அண்ணே... உங்களுக்கு தெரியுமா??? அந்த தங்கச்சியா நடிச்ச பொண்ணுக்கு காது கேட்காதாம்.. வாயும் பேச முடியாதாம்... நல்லா பண்ணியிருக்குண்ணே அந்த பொண்ணு.. குப்பு: அப்படியா.. படத்துல பாக்கும் போது அப்டி தெரியவே இல்லலே... சுப்பு: மத்தவங்களும் நல்லா பண்ணியிருக்காங்க... எல்லாருடைய அம்மா அப்பாவா வரவங்களும் நல்லா நடிச்சிருக்கங்க... நல்ல நடிகர் தேர்வு... குப்பு: இவ்ளோ சொல்லிட்டு காமெடியில கலக்குன ‘கஞ்சா’கருப்பையும், சின்னமணியா வர்றவரையும் விட்டுட்டியே?? சுப்பு: ஆமாம்ண்ணே... அதுவும் சின்னமணியா வர்றவர் கலக்கிட்டார்.. அதுவும் ஒரு இடத்துல வருமே ‘வாழ்விழந்த வாலிபர்களுக்கு வாழ்வளித்த வள்ளல்’-னு.. அத பாத்து யாருமே சிரிக்காம இருக்க முடியாது... குப்பு: கிளைமாக்ஸூம் ‘டாப்பு’ தான்.. அருமையா இருந்துது.. சுப்பு: ஆமாம்ண்ணே... அதுலயும் பின்னனி இசை படத்துக்கு விறுவிறுப்ப நல்லா சேத்து இருக்கு.. குப்பு: பின்னனியில வர அந்த பாட்டு.. ‘சம்போ சிவ சம்போ’ சும்மா தட தட-னு ஒடுது... அது நமக்கும் அப்படியே பத்திக்குது... சுப்பு: ஆமாம்ண்ணே... நான் அதை பாத்தேன்.. ஆனா படத்துல பல ‘லாஜிக்’ மீறல்கள் இருந்துதுண்ணா... அதுவும் அந்த மண்குவாரி கிட்ட ஒரு பாட்டு வருமே.. அதெல்லாம் இல்லாம இருந்த நல்லா இருந்து இருக்கும்... குப்பு: கண்டிப்பா... இருந்தாலும் இந்த படத்துல குறையா விட நிறை நம்மல நிறச்சிடுதுல... சுப்பு: ஹீம்ம்ம்ம்..... சன் டி.வி.-ல வர விமர்சன அக்கா மாறி சொல்லனும்னா... “தியேட்டருக்கு வரும் படங்கள் எல்லாம் தியேட்டரை விட்டு வேகமாக வெளியே ஒடும் நிலையில்... இந்த நாடோடிகள் தியேட்டரிலேயே பல நாட்கள் சிறப்பாக ஒடுவார்கள்குப்பு: நல்லா இருந்துதுலே... வீடு வந்துடுச்சி... சரி நான் வரட்டுமா?? சுப்பு: சரிண்ணே...

7 பேர் என்ன சொன்னாங்கனா:

G3 சொன்னது…

ஹை.. நான் தான் பர்ஸ்ட்டா ;-))))

G3 சொன்னது…

நானும் இந்த படத்த பாக்கனும்னு நினைச்சிட்டே இருக்கேன்.. கூடிய சீக்க்கிரம் பாக்கனும் :D

ஆடுங்கடா பாட்டு மட்டும் தான் டிவீல பாத்தேன்.. சும்மா சூப்பரா இருக்கு :)))))

kanagu சொன்னது…

/*ஹை.. நான் தான் பர்ஸ்ட்டா ;-)))*/

நீங்களே தான் அக்கா.. :)

/*நானும் இந்த படத்த பாக்கனும்னு நினைச்சிட்டே இருக்கேன்.. கூடிய சீக்க்கிரம் பாக்கனும் :D

ஆடுங்கடா பாட்டு மட்டும் தான் டிவீல பாத்தேன்.. சும்மா சூப்பரா இருக்கு :))))*/

சீக்கிரம் போய் பாருங்க.. ஹவுஸ்புல்-ல இருக்கும் போது பாத்தா இன்னும் சூப்பரா இருக்கும் :)

நட்புடன் ஜமால் சொன்னது…

அதிக மக்கள் விமர்சித்த படம் இது தான் போல ...

sakthi சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

அதிக மக்கள் விமர்சித்த படம் இது தான் போல

வேறு வழி இப்போதைக்கு இது கொஞ்சம் பெஸ்ட்

நல்ல விமர்சனம் கனகு

இய‌ற்கை சொன்னது…

me the 6 th:-)))

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா

/*அதிக மக்கள் விமர்சித்த படம் இது தான் போல ...
*/

கண்டிப்பா... எல்லாருக்கும் புடிச்சிருக்குல :)

@சக்தி அக்கா

/*நல்ல விமர்சனம் கனகு*/

நன்றிங்க :)

@இயற்கை

/*me the 6 th:-)))*/

வங்க இயற்கை.. தங்களுடய முதல் வருகைக்கு நன்றி :)