செவ்வாய், ஜூலை 14, 2009

’பட’ டிஸ்கஷன் - எந்திரன்

’எந்திரன்’ பட ஷுட்டிங்:

(பிரம்மாண்டத்தை எப்படி காட்டலாம் என்று ஷங்கர் யோசித்து கொண்டிருக்கிறார்)
ஷங்கர்: போன படத்துல காட்டுன பிரம்மாண்டத்த எல்லாம் மிஞ்சுற மாறி பண்ணனும்... இதப் பார்த்த பிறகு காசு செலவழிக்கனும்-னு நினைக்கிற புரோடியூசர் எல்லாம் என்கிட்ட தான் நிக்கனும்..
அசிஸ்டண்ட்: பண்ணிடுவோம் சார்... போன படத்துல 60 கோடி.. இந்த வாட்டி 165 கோடி.. கலக்கிடுவோம்.....’சிவாஜி’ படத்துல கிங் காங் படத்த தான் காமிச்சோம்... இந்த வாட்டி கிங் காங்கையே ஓட விடுறோம்... ஐஸ்வர்யா ராயா கிங் காங் புடிச்சி வச்சிக்குது... அதுகிட்ட இருந்து அவங்கள நம்ம ரோபோட் ரஜினி காப்பாத்துறார்... ஆனா ஐஸ்வர்யா ராயிக்கு அது ‘ஒரிஜினல்’ ரஜினி-னு நினைச்சி காதலிக்கிறாங்க... அப்புறம் ஒரிஜினல் ரஜினி எப்டி அவங்கள தேடி கண்டுபுடிக்கிறார் காமிச்சி... ரோபோடோட கட்டுபாட்டுல இருக்குற ரோபோட்டுக்ளுக்கும், ரஜினி கண்ட்ரோல்-ல இருக்குற ரோபோட்டுக்களுக்கும் பெரிய போர் மாறி காமிக்கிறாம். எல்லாத்தையும் வெடிக்கவிட்டு.. கடைசியில ஐஸ்வர்யா ராய், ரோபோட் ரஜினியும், ஒரிஜினல் ரஜினியும் இருக்காங்க... இவங்க ரெண்டு பேருல யார தேரிந்தேடுக்குறது-னு தெரியாம ஐஸ்வர்யா தடுமாற.. செண்டிமெண்ட்ட நுழைக்கிறோம்.. எப்பூடி??
ஷங்கர்: ஐடியா நல்லா இருக்கு... ஆனா புதுசா இல்லையே... நம்ம மேட்டர் லஞ்சம், கறுப்பு பணம் எதுவுமே இல்லயே... இதெல்லாம் இல்லனா மக்களுக்கு என் படத்துக்கு வந்துருக்காங்க-னு மறந்துடுவாங்களே...
அசிஸ்டண்ட்: கொண்டுவறோம்... பழைய விஷயங்கள கொண்டு வர்றோம்... ஐஸ்வர்யா ராயோட அப்பா தான் P.M... அவர் கோடிக்கண்க்கில் கறுப்பு பணம் வச்சிருக்கார்.. அத பாதுக்காக்க பல நூறு ரோபோட் வச்சிருக்கார்... நம்மளோட செண்டிமெண்ட் சீனுக்கு அப்புறம்... ரோபோட் ரஜினி, ஒரிஜினல் ரஜினிக் கூட கைக்கோர்த்துகிட்டு அவங்கள எல்லாம் அழிக்க புறப்படுது... ஐஸ்வர்யாவும் அவங்க கூட ‘join' பண்றாங்க... திரும்ப எல்லா ரோபோட்டையும் அழிக்கிறோம்... இந்த போராட்டத்துல ரோபோட் ரஜினி செத்து போறார்.. மீண்டும் செண்டிமெண்ட்ட பொழியுறோம்...
ஷங்கர்: இத தான் எதிர்பார்த்தேன்... இப்படி தான் எதுவுமே இருக்க கூடாது,... அழிக்கிறோம்... எல்லத்தையும் அழிக்கிறோம்... சோ இப்ப எல்லாத்தையும் உருவாக்குறோம்... எங்க சாபு சிரில்?? கூப்பிடுங்க அவர..
**************************************************************************************************************************************
(சாபு சிரில் வருகிறார்... அசிஸ்டண்ட் அவரிடம் விளக்குகிறார்)
ஷங்கர்: எல்லாம் கேட்டிங்களா சிரில்.... இருக்குறதுலியே எது பண்ணா செலவு அதிகமா பிரம்மாண்டமா இருக்குமோ.. அந்த டிசைன கொடுங்க... பெரியா அளவுல பண்றோம்...
சாபு சிரில்: தரேன் ஷங்கர்.. ஆனா எப்படியும் ஒரு 50 கோடி ஆகும்-னு நினைக்கிறேன்.. பண்ணிடுவோமா...??
ஷங்கர்: பூபூபூ... இவ்ளோ தானா... சிரில்.. நான் சொன்னத கேட்டீங்களா இல்லையா... பெரிய அளவுல பண்றோம்.. 200 கோடி பட்ஜட்.. சும்மா ஜாமாய்க்கனும்... ரெக்கார்ட் புக்-ல நம்ம பேரு வரணும்.. பாட்டுக்கேல்லாம் செட் ரெடி பண்ணிட்டீங்களா??
சாபு சிரில்: எல்லாம் ரெடி,... 20 கோடி ஆச்சு சார்!!!!
ஷங்கர்: (சோகமாக) அவ்ளோ தானா... பரவால.. (சிரித்து கொண்டே) கிளைமாக்ஸ்-ல சேத்து செலவு பண்ணிடுவோம்..
(இதை எல்லாம் அங்கே வந்து கொண்டிருக்கும் கலாநிதி மாறன் கேட்க அங்கேயே மயங்கி கீழே விழுகிறார்)

8 பேர் என்ன சொன்னாங்கனா:

sakthi சொன்னது…

200 கோடி பட்ஜட்.. சும்மா ஜாமாய்க்கனும்... ரெக்கார்ட் புக்-ல நம்ம பேரு வரணும்.. பாட்டுக்கேல்லாம் செட் ரெடி பண்ணிட்டீங்களா??

போதுமா

sakthi சொன்னது…

இதை எல்லாம் அங்கே வந்து கொண்டிருக்கும் கலாநிதி மாறன் கேட்க அங்கேயே மயங்கி கீழே விழுகிறார்)

பின்னே மயக்கம் வராதா என்ன

இய‌ற்கை சொன்னது…

:-)))

G3 சொன்னது…

:))))))))))))))))

நட்புடன் ஜமால் சொன்னது…

இதப்படிச்சா எங்களுக்கே மசக்கம் வருது ராஸா

kanagu சொன்னது…

@ சக்தி அக்கா

/* போதுமா*/

இத சங்கர் கிட்டல கேக்கனும் :)

/*பின்னே மயக்கம் வராதா என்ன*/

பின்னே மயக்கம் வராதா என்ன

***********************************

@இயற்கை

:)))))))))))))))

***********************************

@G3 அக்கா

:))))))))))))))))

***********************************

@ஜமால் அண்ணா

/*இதப்படிச்சா எங்களுக்கே மசக்கம் வருது ராஸா*/

:)))))))))))))))))))

MayVee சொன்னது…

ஒரு ஹாலிவுட் டச் தெரியுது ராசா உங்க எழுத்துகளில் ......பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு


mind ல வச்சு கிறேன்

kanagu சொன்னது…

/*ஒரு ஹாலிவுட் டச் தெரியுது ராசா உங்க எழுத்துகளில் ......பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு*/

ரொம்ப நன்றிங்க மேவி :)

கலாய்க்கலியே......