ஞாயிறு, ஜூலை 19, 2009

தள்ளாடும் நாடு

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
’ என்பது மாறி
‘எங்கும் மது, எதிலும் மது
’ என்ற அருமையான ஒரு நிலைக்கு நமது தமிழகம் சென்று கொண்டிருக்கின்றது. குடிமக்கள் அனைவரும் ‘குடி’மக்கள் ஆகிவிடுவார்கள் போலிருக்கிறது. என்று தமிழக அரசு மக்களுக்கு அளிக்கும் மதுவை தன் கையில் எடுத்ததோ விற்பனைக்கு, அன்றிலிருந்து அதனுடைய கஜானா நன்றாகவே கட்டுகிறது. இதனை கடந்த வருடத்தின் ’தண்ணீர்’ விற்ற அளவுகள் தெளிவாக காட்டுகிறது. மொத்தம் 10,000 கோடி ரூபாய்க்கு மேல் விற்றிருக்கிறது. சென்ற வருடத்தை விட 20 சதவிகித வளர்ச்சி. இதை எப்படி நம்மை ஆள்பவர்கள் கொண்டாட போகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் சில ஆயிரங்கள் அல்லது லட்சங்களை ’தண்ணீரில் செலவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். எனக்கு தெரிந்து லாபத்தில் இயங்கும் ஒரே அரசு துறை இது ஒன்று தான். தனது மக்கள் கஷ்டபடாமல் இருக்க ’தண்ணீர்’ ஊற்றி தரும் ஒரு உன்னத பணியை நமது அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதை 2003-04-ல் TASMAC-ன் கீழ் கொண்டு வந்த போது ஆண்டு விற்பனை 3,000 கோடி சோச்சத்தில் இருந்து இப்போது 10,000 கோடி ரூபாயாக மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அரசு துறை நிறுவனங்களிலேயே அதிக நேரம் திறந்திருக்கும் ஒன்றே ஒன்று இந்த மதுபான கடைகள் தான். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. ஞாயிறு அறியாமல், விடுமுறை என்று ஏதுமில்லாமல் இயங்குகிறது. ஏனெனில் மக்கள் இயங்குவதற்கு முக்கிய பொருள் அல்லவா!!! ரேஷன் கடைகள் எல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்க மதுபான கடைகள் மட்டும் எங்கு நோக்கினும் நிறைந்து இருக்கின்றது. ஏன் மற்ற அரசு துறை நிறுவனங்கள் 5 மணியோடு மூடப்படும் போது மதுபான கடைகள் மட்டும் இரவு பத்து மணி வரை திறந்து இருக்க வேண்டும். ‘குடி’ மக்கள் கஷ்டப்பட கூடாதே என்பதற்காக மட்டுமல்ல; மற்ற நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், மக்கள் நல திட்டங்களை அமல்படுத்த மதுவினால் வரும் லாபத்தில் தான் முடிகிறது. இதுவரை முந்தைய அரசாங்கத்தின் ஒரு திட்டத்தை அடுத்த அரசாங்கங்கள் இந்த TASMAC-ஐ போல எடுத்து சென்றதே இல்லை எனலாம். ‘தொட்டில் குழந்தை’ இறந்தது, ’உழவர் சந்தை’ நசிந்தது, ’சமத்துவபுரங்கள்’ காற்றோடு கலந்தது, ’சத்துணவு’ கூட சிற்சில ஏற்ற இறக்கங்களை கண்டது. மது மட்டும் ஆறாய் ஓடியது சென்ற ஆட்சியில், வெள்ளமாய் பெருக்கெடுத்துவிட்டது இன்றைய நிலையில். ‘இப்படி தான் வாழ வேண்டும் என்று இல்லாமல், எப்படியும் வாழலாம்’ என்பதற்கு நமது அரசாங்கமே மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்போது தான் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் வரும் ஒரு வசனம் நினைவிற்கு வந்தது: ‘
குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு இருக்க காந்தி என்ன இந்திய தேசத்தின் பிதாவா இல்லை.....??????!!!!!

14 பேர் என்ன சொன்னாங்கனா:

sakthi சொன்னது…

அருமை கனகு

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க கனகு.

தாரணி பிரியா சொன்னது…

நல்லா சொல்லி இருக்கிங்க. ஆனா இதை யார் கேட்க போறா?. அரசாங்கத்துக்கு ஒரு ரெடிமேட் பதில் இருக்கே. நாங்க இதை நிறுத்தினா கள்ள சாராயம் அதிகரிக்குமுன்னு சொல்லுவாங்களே :(

kanagu சொன்னது…

@@ சக்தி அக்கா

நன்றி அக்கா :)

@ ஜமால் அண்ணா

நனி அண்ணா :)

@ தா.பி அக்கா

/*அரசாங்கத்துக்கு ஒரு ரெடிமேட் பதில் இருக்கே. நாங்க இதை நிறுத்தினா கள்ள சாராயம் அதிகரிக்குமுன்னு சொல்லுவாங்களே :(*/

இப்படி சொல்லி தான் ஏமாத்துறாங்க :(
நன்றி அக்கா :)

Karthik சொன்னது…

தாபி அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்!

ரொம்ப நல்ல பதிவுங்க. :)

KK சொன்னது…

good one... did u c this????
---> http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html


read fully

KK சொன்னது…

try to spread about the above link

விக்னேஷ்வரி சொன்னது…

ரொம்ப நல்லா சொன்னீங்க கனகு. ஆனா, நாம கத்திக்கிட்டே இருக்க வேண்டியது தான். காது குடுத்து கேக்க ஆளில்லை.

GAYATHRI சொன்னது…

nalla karuthu..:) naatil madhuvilaku nadandhaale matha ella kedudhalum poidum:)

தாரணி பிரியா சொன்னது…

விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html

ஆ! இதழ்கள் சொன்னது…

விருது அட ஏற்கனவெ ஒண்ணு கிடைச்சாச்சா/// இதோ என் விருது...

http://www.ananthblogs.co.cc/2009/07/blog-post_29.html

ஏத்துகோங்க...

kanagu சொன்னது…

@கார்த்திக்

/*ரொம்ப நல்ல பதிவுங்க. :)
*/

ரொம்ப நன்றிங்க :)

@KK

நன்றி.. :) அதை படித்து நண்பர்களையும் படிக்க சொல்லி இருக்கிறேன் :)

@விக்னேஷ்வரி

உண்மை தான்க.. எல்லாம் நாடகம் :(

@காயத்ரி

அதனால தான வர விட மாட்டேங்குறாங்க :(

@தா.பி அக்கா

மிகவும் நன்றி :)

@ஆனந்த் அண்ணா

மிக்க நன்றி அண்ணா :)

shri ramesh sadasivam சொன்னது…

"இப்படி தான் வாழ வேண்டும் என்று இல்லாமல், எப்படியும் வாழலாம்’ என்பதற்கு நமது அரசாங்கமே மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது."

நிதர்சனமான உண்மை!

kanagu சொன்னது…

@ ரமேஷ் அண்ணா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா :)