திங்கள், ஆகஸ்ட் 31, 2009

நாலு கேள்வி மற்றும் ஒரு நற்செய்தி

கில்ஸ் அண்ணா என்னை இந்த தொடர் பதிவுக்கு கோர்த்துவிட்டு இருக்கார். ரொம்ப நன்றி அண்ணா :))

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு என்பது நாம் எப்படி ஒரு விஷயத்தை காண்கிறோம் என்பதில் இருக்கிறது என்பதே என் கருத்து.
தாய்க்கு தன் குழந்தை எப்போதும் அழகு.
இளைஞர்களுக்கு அப்போது வரும் ஹீரோயின்கள் மேக்கப்போடு இருந்தால் அழகு.
மேல் குறிப்பிட்ட இரண்டில் இருந்து எந்த அழகு நிரந்தமானது என்பது தெரியும்.
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் என்பதின் பொருள் அன்பு என்று நம்புகிறேன். அப்படி நம்புவதனால் காதல் மிக மிக அவசியமே :))
3. கடவுள் உண்டா?
ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்குவதாக நம்புகிறேன். அந்த சக்திக்கு பெயர் ‘கடவுள்’ எனில், அதை நான் நம்புகிறேன். கடவுள் உண்டு.
4. பணம் அவசியமா?
கண்டிப்பாக. எவ்வளவு என்பது அவரவர் மற்றும் நாட்டின் அப்போதைய பொருளாதர நிலையை பொருத்தது.
சரி.. நான் இந்த தொடர் பதிவ முடிச்சிட்டேன். எல்லாரும் பண்ணிட்டதுனா-ல யாரையும் கோத்துவிடல...
***********************************
அப்புறம் ஒரு முக்கிய மகிழ்ச்சியான செய்தி... நமது ரமேஷ் அண்ணாவின் மேன்ஷனில் உள்ள நீரின் தரம் உயர்ந்துவிட்டது. அவர்களுடைய போராட்டத்திற்கு வெற்றி. எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் :))
இந்த சந்தோஷ செய்தியோடு இப்போ கிளம்புறேன். அடுத்த பதிவுல சந்திக்கிறேன் :)

Leia Mais…

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

ஞாபக மறதி

வர வர இந்த ஞாபக மறதி ரொம்ப தான் அதிகமாகிடுச்சு.. சில முக்கியமான விஷயங்கள் கூட மறந்து போகின்றன. போன வாரம் ரெண்டு கல்யாணத்துக்கு போனேன். ஒண்ணு என் கல்லூரி நண்பருடையது, மற்றோன்று எனது நண்பனின் அண்ணனுடையது. கல்லூரி நண்பருடைய கல்யாணத்திற்கு போன போது அவருடைய துறையை சேர்ந்த நண்பர்களை சந்தித்தேன். பலப் பேருடைய பெயர் எனக்கு தெரியவில்லை, எல்லாம் மறந்துவிட்டது. மிக நெருக்கமாக பழகிய சிலரின் பெயர்கள் தான் ஞாபகத்தில் இருந்தது. நல்ல காலமாக நமது உறவுமுறை பெயர்களான மச்சி, மச்சான் கைக்கொடுத்தது. ரெண்டு வருடத்தின் மாற்றம் பலரிடம் தெரியவில்லை. அனைவரும் இன்னும் முன்பு போலவே கவலையில்லாமல் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து இந்த சனிக்கிழமை இன்னொரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். நல்ல காலமாக என்னுடைய பள்ளி நண்பர்கள் நிறைய பேர் வந்து என்னுடைய ஞாபக சக்தியை சோதிக்கவில்லை. சிறிது நேரம் நாம் வழக்கம் போல போடும் மொக்கைகளை போட்டுவிட்டு சாப்பிட சென்றோம். அங்கே இலையில் பல சுவையான இனிப்பு வகைகள் இருக்க நேராக சென்ற(பாய்ந்த!!) என்னை என் நண்பன் கைகழுவ அழைக்க போகும் போதே ஒருத்தன் அழைத்து ‘கனகராஜ்’ தானே என்றான். எங்கோ பார்த்தது போல இருந்தாலும் பெயர் கொஞ்சம் கூட மூளைக்குள் இருந்து எட்டிப் பார்க்க மறுத்துவிட்டது. பின்பு என் நண்பனிடம் கேட்டேன். அவன் தான், ‘டேய் அவன் தாண்டா கிரி’ என்று. பள்ளியில் அவன் எனது நல்ல நண்பன். பின்பு கேட்டால் அவனுக்கும் ஞாபகம் இல்லையாம்.. இன்னொரு நண்பனை தான் கேட்டானாம்...
கல்யாணம் முடிந்து வரும் போது தான் பெரிய காமெடி ஒன்றை எனது நண்பன் சொன்னான். அவன் ஒரு மஞ்சள் நிற சட்டையை அணிந்து நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான்.
கூட இருந்த நண்பன்: இந்த டிரெஸ்-ல நீ நல்லா இருக்கடா..
அண்ணனின் நண்பன்: இது நிஜமாவே நல்லா இருக்காடா... மொதல்ல ஒரு ஆரஞ்சு கலர் டி-சர்ட்டும், கார்கோவும் போட்டுட்டு கொஞ்சம் ஸ்டைல இருக்கட்டுமே-னு இருந்தேண்டா. வெளிய நின்னுட்டு இருந்தேன்.. எங்கப்பா வந்துட்டு என்னடா இன்னும் டிரெஸ் பண்ணி ரெடியாகலையா... சீக்கிரம் போடா-னு சொல்லிட்டாருடா...
நாங்கள் எல்லாரும்: ‘லொள்’
என்ன சிரிப்பு சத்தம் தான்.
சரி அடுத்த பதிவுல சந்திப்போம்... :)))))))))))

Leia Mais…

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

கந்தசாமி - விமர்சனம்

எல்லாரும் படத்த கலாய்ச்சிட்டாங்க-னு தெரியும். இருந்தாலும் 80 ரூபாயை இழந்தவன் என்கிற உரிமையில் நான் இப்போது இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும். அது மட்டும் இல்லாமல் இவ்ளோ விமர்சனம் படிச்ச பிறகும் போய் மொக்க வாங்கிட்டு வர்றனும் நினைக்கிறவங்கள காப்பாத்த போறேன்(!!!!) சரி பிரம்மாண்டம்-னு சொல்றாங்க, சுசி கணேசன் வேற இயக்கம்.. அதனால இந்த படத்து மேல கொஞ்சம் நம்பிக்க வச்சி இருந்தேன். அவருடைய மற்ற படங்கள் சின்ன பட்ஜட்-னாலும் எல்லாம் நல்லா இருந்த்து. நம்பிக்கையோட டிக்கெட்டையும் ஒரு வாரம் முன்னாடியே முன்பதிவு செஞ்சிட்டேன். சரி பழம் புராணம் போதும்.. விமர்சனத்துக்கு வா-ன்னு எல்லாரும் சொல்றது கேக்குது. இதொ வந்துட்டேன்.

கதை.... இதை கடைசி வரைக்கும் தேடிவிட்டு படம் முடிந்த பிறகு இது தான் என்று தோன்றியது. திருப்போரூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு தேவையானதை வேண்டிக் கொண்டு அங்குள்ள மரத்தில் கட்டுகின்றனர். அதை விக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் பணக்காரர்களிடம் அதிகமாக வரி ஏய்ப்பு செய்த பணத்தில் இருந்து செய்கின்றனர். இந்த 20 வருட பழசான ‘ஜெண்டில்மென்’ கதையை சுப்பர் ஹீரா , 5 அல்லது 6 கெட்டப் விக்ரம் என நம்மை 3 மணி நேரம் மூச்சு திணற திணற திணறடிப்பது தான் ’கந்தசாமி’.
சுசிகணேசன் விக்ரம் கிட்டயும், கலைப்புலி.S.தாணு கிட்டயும் சொன்ன கதையையும், ஸ்கிரிப்டையும் தொலச்சிட்டார்ப் போல இருக்கு. அப்புறம் இருக்குற ஷங்கர் படத்த எல்லாம் ஒவர்நைட்-ல டி.வி.டி-ல பார்த்து பல சீன்கள பொறுக்குன மாறி இருக்கு. அப்புறம் இந்த சின்ன கதை-ல லாஜிக்க பத்தி எல்லாம் கேட்டா அடி சும்மா இடி மாறி விழும்.
படத்து-ல வர எல்லா சீனுமே செட்டிங் தான். சென்னை-ல தான் கத நடக்குது-னு காட்டுறதுக்காக ரெண்டாவது பாதி-ல ஒரு ரெண்டு சீன் - ல D.M.S-அ காட்டுறாங்க. வயக்காடா கூட ஒரு செட்டிங் போட்டது தான் ஓவர். நம்ம நாட்டு-ல வயல்வெளியெல்லாம் அழிஞ்சிட்டு வருது. ஒத்துக்கிறேன். ஆனா இதெல்லாம் டூ-மச். அப்புறம் நேரா சுவிஸ்க்கு போகமா, டிவிஸ்ட் வைக்கிறேன் பேர்வழி-னு சொல்லிக்கிட்டு மெக்ஸிக்கோக்கு போறாங்க. ஒண்ணும் பெருசா பண்ணல. ஒரு பாட்டு, ரெண்டு பைட்டு.. திரும்பி வந்துடுறாங்க. எல்லா புண்ணியமும் தாணு அவருக்கு தான்.
சரி ஆக்டிங் டிபார்ட்மெண்ட்டுக்கு வருவோம். விக்ரம பத்தி சொல்ல வேணாம். ரொம்ப நல்லாவே இந்த அதர பழசான கதைக்கு கூட நடிச்சு கொடுத்து இருக்கார். அவருக்கு கெட்டப் எல்லாம் நல்லாவே பொருந்தி இருக்கு. ஆனா அதுல எல்லாம் ஒரு 5 நிமிஷம் கூட நல்லா நடிக்க முடியாத அள்வுக்கு அருமையான ஸ்கிரிப்ட். அடுத்து ஹீரோயினி ஸ்ரேயா. அம்மணி அழகா இருக்காங்க. ஆனா ஏதோ சபதம் எடுத்த மாதிரி ’எல்லாரும் பாருங்க’ அப்டிங்குற மாறியான டிரெஸ்-ல திரியிறாங்க. அப்புறம் பிரபு நல்லாவே பண்ணியிருக்கார். ஒண்ணும் கொற சொல்றதுக்கில்ல. வில்லனுங்க-னு ஒரு ரெண்டு பேர் இருக்காங்க. செம சொத்த. ஒருத்தர் ஆஷிஷ் வித்யார்த்தி. ஷோபா-லயே படுத்து கிடக்குறார். இன்னொருவர் முகேஷ் திவாரி. வீடே இல்லாத மாறி பஸ்-லயே சுத்துறார். படத்துக்கு சம்பந்தமே இல்லாம வடிவேலு. ஆனா சிரிக்க வைக்குறதுனால தப்பிக்கிறார். இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அவ்வளவு தான் சொல்ல முடியும் அவங்கள பத்தி.
ஒளிப்பதிவு - ஒ.கே ரகம். ஒரு ‘ரிச்னெஸ்’ இருக்கு. 'bad boys' படத்துல இருக்குமே அப்படி ஒரு டோன். ஆனா இந்த படத்துக்கு அது சூட் ஆகல. அப்புறம் இசை. தேவி ஸ்ரீ பிரசாத். ரொம்ப தான் சோதிக்கிறார் பின்னனி இசை-ல. பாட்டெல்லாம் கேக்க சுமார் ரகம். ‘Excuse me' பாடலும், ‘அலெக்ரா’, ‘மீனாகுமாரி’ பாடல்களும் சுமார் ரகம். பாட்ட பாத்தா ஏதோ ஆல்பம் சாங் மாறி இருக்கு. ஒண்ணும் படத்தோட ஒட்டல.
முக்கிய மேட்டரே இப்ப தான். எடிட்டிங். பண்ணாங்களா இல்லையா-னே தெரியல. தாணு சார் கிட்ட காசு இல்லையா, இல்ல படத்த சீக்கிரமா(!!!!!) வெளியிடனும்-னு ஏதாவது யோசிச்சாங்களா-னு தெரியல. கத்திரி வச்சதுக்கான அடையாளாமே தெரியல. அப்டியே பிரிண்ட் போட்டாச்சு-னு நினைக்கிறேன்.
டைரக்‌ஷன்... ஒரு முக்கியமான வாய்ப்பை சுசி கணேசன் சூப்பரா நழுவ விட்டுட்டாரு. ஷ்ங்கர் மாறி படம் எடுங்க.. தப்பில்ல. ஆனா அதே கதைய வச்சி எடுத்தா... அதான் தப்பு. இப்படி நான் எல்லாம் மொக்க போடுற அளவுக்கு ஆயிடுவீஙக.
எனக்கு தாணு சார பாத்தா தான் பாவமா இருக்கு. இந்த படத்துக்காக ரொம்ப செலவு பண்ணிட்டார். அவருடைய 25-வது வருஷத்துல இப்படி ஒரு படம் அமஞ்சி போச்சு. ஏதோ ரெண்டு கிராமத்த தத்து எடுத்தார் இந்த படத்துக்காக. இந்த படத்துல போட்ட காச அப்படி எதுக்காவது பயன்படுத்தி இருந்தார்-னா புண்ணியமாவது கட்டிட்டு இருந்துருப்பார். இப்ப படத்த எடுத்துட்டு கல்லா கட்டுமா பாத்துட்டு இருக்கார்.
இதுக்கு மேலயும் படம் படத்துக்கு நீங்க போன.. ஒத்துக்குறேன்.. நீங்க தைரியசாலி-னு நான் ஒத்துக்குறேன்.
நெக்ஸ்ட் பதிவுல மீட் பண்றேன் :)))))))))

Leia Mais…

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2009

அணுப்புவீங்களா.. மாட்டீங்களா???

பொருளாதார சரிவு ஏற்பட்டாலும் ஏற்பட்டது, ஆபீஸில் இருந்து ’ஆன்சைட்’ என்றாலே கம்பெனியின் மேல்மட்ட அதிகாரிகள் அலறுகிறார்கள். சில நாட்களுக்கு முன் கடும் ஆணிகளுக்கு(!!!!!?????)(சும்மா லுலுவாய்க்கு) இடையில் இதை பற்றி விவாதித்து கொண்டிருந்தோம்.

இது இரண்டு வகையில் நடந்தது. ஒவ்வொன்றையும் சற்று கற்பனை கலந்து பார்ப்போம்.
மேனேஜர்: சரி, வர ஆண்டு-ல உங்களோட ஆஸ்பிரேன் என்னன-னு சொல்லூங்க??
நம்ம ஆள்: ஆன்சைட் அணுப்புனா தேவல..
மேனேஜர்: அதுக்கு நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க??
நம்ம ஆள்: விசா ப்ராசஸ் பண்ணனும்..
மேனேஜர்: விசா ப்ராசஸ் பண்ணனும்-னா ப்ராஜக்ட் அதுக்கு ஏத்த மாறி பாக்கணுமே...
நம்ம ஆள்: சரி பாருங்க..
மேனேஜர்: ஆனா ப்ராஜக்டே இல்லையேப்பா!!!!
நம்ம ஆள்: !?!?!?!?!?!?!?!?!
***********************************************************************************
இது கொஞ்சம் வித்தியாசமான, பரிதாபப்பட வேண்டிய ஒரு கேஸ்:
நம்ம ஆள்: சார், எப்ப என்ன ஆன்சைட்க்கு அணுப்புவீங்க??
மேனேஜர்: நம்ம ப்ராஜக்ட்-ல வாய்ப்பில்ல.... வேற ப்ராஜக்ட்-ல தான் கிடைக்கும்.
நம்ம ஆள்: சரி சார்.. நான் போக தயாரா இருக்கேன்..
மேனேஜர்: ஆனா நான் தயாரா இல்லையே... நீங்க நல்ல வேல செய்றீங்க.. சோ நீங்க இங்க இருந்து தான் ஆகணும்.
நம்ம ஆள் கடுப்பாகி அடுத்த 6 மாதங்களுக்கு பெரிதாக ஒரு ஆணியும் புடுங்கவில்லை..
ஒரு நாள்,
நம்ம ஆள்: சார் அந்த ஆன்சைட்??
மேனேஜர்: நீ இங்கயே ஒண்ணும் பெருசா ஒண்ணும் பண்ணல.. இதுல ஆன்சைட் போய் என்ன பண்ண போற..
நம்ம ஆள்: !?!?!?!?!?!?!?!?!
************************************************************************************
இன்றைய சரக்கு அவ்ளோ தான்.. அடுத்த பதிவுல சந்திப்போம் :))

Leia Mais…

புதன், ஆகஸ்ட் 05, 2009

போதையில் புத்தி மாறுமா??

நம் நண்பர்கள் போதையில் தெளிவாக இருக்கும் போது உதிர்த்த முத்துக்கள் இவை:

சூரியும், கிரியும் உட்கார்ந்து தண்ணீர் அடித்து கொண்டிருக்கின்றனர்.
சூரி: (விரக்தியில்) மச்சி, அந்த இஞ்சினியரிங் காலேஜ்-ல ஒழுங்க இண்டேர்வியூ பண்ணாமயே L&T-ல ரெண்டு பேர எடுத்துட்டாங்கடா...
(மீண்டும் ஒரு ரவுண்ட் செல்கிறது... கிரி ஒன்றும் சொல்லவில்லை அதனால் சூரியே ஆரம்பிக்கிறான்.)
சூரி: Larson & Turbo da..
(கிரி டக்கென்று நிமிர்ந்து பார்க்கிறான்)
கிரி: அவனுங்க ரெண்டு பேரையும் உனக்கு எப்படி தெரியும்???
(சூரி அதிர்ச்சி அடைகிறான்.. கிரி விடாமல் அடுத்த வெடிகுண்டை போடுகிறான்)
கிரி: (ஆழ்ந்த யோசனையில்) சைனீஸ் பேரு மாறி இருக்கு, எப்பூடி??????
சூரி: !!!!!!!!!!!!!!!!!!!!!!!
************************************************************************************
இப்பொழுது டிங்-கும், மிங்-கும் இவர்களுடன் சேருகிறார்கள்..
டிங், மிங்கை பார்த்து கேட்கிறான்.
டிங்: மாப்பி, ‘Perhaps'-ன என்னடா அர்த்தம்??
(மிங் இப்போது தனது ஒரு கையால் தாடையை தடவி கொண்டு, மறு கையால் கிளாஸை ஏந்தி கொண்டு யோசிக்கிறார்)
(சில நிமிடங்களிக்கு பின்)
மிங்: ‘Perhaps' (மீண்டும் ஒரு யோசனை) ‘its an ordinary english word'
கிரி: (உற்சாகமாக) சொன்னான் - ல என்னோட மாப்ள சொன்னான் - ல... எப்பூடி???
மிங் எதை பற்றியும் கவலைப்படாமல் அடுத்த ரவுண்டுக்கு போக, சூரியும், டிங்-கும் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து கொள்கின்றனர்..
************************************************************************************
இப்பொழுது லிங் இவர்களுடன் சேர்கிறார்..
மிங்: ‘தம்’ singular-ah இல்ல plurala???
லிங்: ‘Them'-னா 'plural' தான்..
(ஒரு பெரிய விவாதமே நடக்கிறது... ‘தம்’ எதை சேர்ந்தது என்பதற்கு)
மிங்: சரி, இருங்க.. நம்ம கிரி இதுக்கு என்ன சொல்றான் - னு பார்ப்போம்.
(கிரிக்கு போன் செய்கிறார்கள்)
கிரி: (தெளிவாக வெடிகுண்டை போடுகிறார்) ‘தம்’-ன ‘plural-லு, 'தம்ஸ்’- ன singular :)))))))))))))))))))))
**********************************************************************************
சரி.. இப்போதை அவ்ளோ தான் மக்கா..... அடுத்த பதிவுல சந்திப்போம்... :)))

Leia Mais…

சனி, ஆகஸ்ட் 01, 2009

விருதுகள்.. :) :)

என்னுடைய தமிழ் எழுத்திற்கு முதல் முறையாக விருது கிடைத்துள்ளது. தா.பி அக்கா ‘This blogger my best friend' விருது கொடுத்து இருக்காங்க.. அப்புறம் ஆனந்த் அண்ணா ‘interesting blog' விருது கொடுத்து இருக்காங்க :) எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. மற்றும் தா.பி அக்காவுக்கும், ஆனந்த் அண்ணாவுக்கும் எனது நன்றிகள் :) ************************************************************************** இந்த விருதை பலரும் ஏற்கனவே பெற்றுவிட்டாலும், நான் பின்வரும் நண்பர்களுக்கு எல்லாம் இந்த விருதை தர விரும்புகிறேன்.

ஜமால் அண்ணா: என்னுடைய இந்த வலைப்பதிவில் முதலில் பின்னுட்டம் இட்டவர் அண்ணா தான். அவருடைய கவிதைகள் எனக்கு பிடிக்கும்.. மிகவும் சீரியஸான பதிவர் :)
கார்த்திக்: வலைப்பதிவு நண்பர்களில் இவரிடம் தான் அதிகம் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன். இவருடைய பதிவுகள் பலவற்றை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறேன்.
விஜய் அண்ணா: எந்த விஷயத்தை கொடுத்தாலும் எப்படி தான் விறுவிறுப்பாவும் நகைச்சுவையாவும் எழுதுறார்-னு தெரியல.. இவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் :)
ரம்யா அக்கா: இவங்களை தொடர்பதிவு ஸ்பெஷலிஸ்ட்-னு சொல்லலாம்.. அந்த அளவுக்கு அடுத்த அடுத்த பதிவுல தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யம் குறையாமவும் எழுதுவாங்க.. :) அவங்களோட ‘ஜில்லென்ற ஒரு காதல்’ தொடர் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துது..
கார்த்திக் நாராயண்: பலவிதமான பதிவுகள சிறப்பா எழுதுறவர்.. இவருடைய நூடுல்ஸ் பதிவு என்னுடைய சமீபத்திய பேவரிட்.
G3 அக்கா: இவங்களோட Frozen thoughts பதிவுகள் எல்லாம் சூப்பரா இருக்கும். அப்புறம் அன்றாடம் அவங்க வாழ்க்கை-ல நடக்குறத ரொம்ப எளிமையா நகைச்சுவையோட சொல்லிடுவாங்க.. அப்புறம் இவங்க இருக்குற இன்னொரு பிடிச்ச விஷயம் என்னன்னா.. எங்க மத்தவங்க அவங்கள கலாய்ச்சிட போறாங்க-னு சொல்லிட்டு, அவங்கள அவங்களே கலாய்ச்சிக்குவாங்க :)
கில்ஸ் அண்ணா: pala vishayangal pathi sirappaa ezuthuvaar.. ippa ellam yen weekend movies pathi ezuthurathu illa-nu theriyala.. athu enaku pudicha section :)(Tanglish)
சக்தி அக்கா: இவங்களோட கவிதைகள்-ல ஒரு உண்மை இருக்கும். எதையுமே நேரே சொல்லி இருப்பாங்க.. அதுவும் அந்த ஈழ தமிழர் கவிதை சூப்பரா இருந்துது :)
********************************************************************************* எல்லாருக்கும் என்னோட நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் :) இப்போதைக்கு ரெஸ்ட்.. மீதியெல்லாம் நெக்ஸ்ட் பதிவுல :)

Leia Mais…