திங்கள், ஆகஸ்ட் 24, 2009

கந்தசாமி - விமர்சனம்

எல்லாரும் படத்த கலாய்ச்சிட்டாங்க-னு தெரியும். இருந்தாலும் 80 ரூபாயை இழந்தவன் என்கிற உரிமையில் நான் இப்போது இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும். அது மட்டும் இல்லாமல் இவ்ளோ விமர்சனம் படிச்ச பிறகும் போய் மொக்க வாங்கிட்டு வர்றனும் நினைக்கிறவங்கள காப்பாத்த போறேன்(!!!!) சரி பிரம்மாண்டம்-னு சொல்றாங்க, சுசி கணேசன் வேற இயக்கம்.. அதனால இந்த படத்து மேல கொஞ்சம் நம்பிக்க வச்சி இருந்தேன். அவருடைய மற்ற படங்கள் சின்ன பட்ஜட்-னாலும் எல்லாம் நல்லா இருந்த்து. நம்பிக்கையோட டிக்கெட்டையும் ஒரு வாரம் முன்னாடியே முன்பதிவு செஞ்சிட்டேன். சரி பழம் புராணம் போதும்.. விமர்சனத்துக்கு வா-ன்னு எல்லாரும் சொல்றது கேக்குது. இதொ வந்துட்டேன்.

கதை.... இதை கடைசி வரைக்கும் தேடிவிட்டு படம் முடிந்த பிறகு இது தான் என்று தோன்றியது. திருப்போரூரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கு தேவையானதை வேண்டிக் கொண்டு அங்குள்ள மரத்தில் கட்டுகின்றனர். அதை விக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் பணக்காரர்களிடம் அதிகமாக வரி ஏய்ப்பு செய்த பணத்தில் இருந்து செய்கின்றனர். இந்த 20 வருட பழசான ‘ஜெண்டில்மென்’ கதையை சுப்பர் ஹீரா , 5 அல்லது 6 கெட்டப் விக்ரம் என நம்மை 3 மணி நேரம் மூச்சு திணற திணற திணறடிப்பது தான் ’கந்தசாமி’.
சுசிகணேசன் விக்ரம் கிட்டயும், கலைப்புலி.S.தாணு கிட்டயும் சொன்ன கதையையும், ஸ்கிரிப்டையும் தொலச்சிட்டார்ப் போல இருக்கு. அப்புறம் இருக்குற ஷங்கர் படத்த எல்லாம் ஒவர்நைட்-ல டி.வி.டி-ல பார்த்து பல சீன்கள பொறுக்குன மாறி இருக்கு. அப்புறம் இந்த சின்ன கதை-ல லாஜிக்க பத்தி எல்லாம் கேட்டா அடி சும்மா இடி மாறி விழும்.
படத்து-ல வர எல்லா சீனுமே செட்டிங் தான். சென்னை-ல தான் கத நடக்குது-னு காட்டுறதுக்காக ரெண்டாவது பாதி-ல ஒரு ரெண்டு சீன் - ல D.M.S-அ காட்டுறாங்க. வயக்காடா கூட ஒரு செட்டிங் போட்டது தான் ஓவர். நம்ம நாட்டு-ல வயல்வெளியெல்லாம் அழிஞ்சிட்டு வருது. ஒத்துக்கிறேன். ஆனா இதெல்லாம் டூ-மச். அப்புறம் நேரா சுவிஸ்க்கு போகமா, டிவிஸ்ட் வைக்கிறேன் பேர்வழி-னு சொல்லிக்கிட்டு மெக்ஸிக்கோக்கு போறாங்க. ஒண்ணும் பெருசா பண்ணல. ஒரு பாட்டு, ரெண்டு பைட்டு.. திரும்பி வந்துடுறாங்க. எல்லா புண்ணியமும் தாணு அவருக்கு தான்.
சரி ஆக்டிங் டிபார்ட்மெண்ட்டுக்கு வருவோம். விக்ரம பத்தி சொல்ல வேணாம். ரொம்ப நல்லாவே இந்த அதர பழசான கதைக்கு கூட நடிச்சு கொடுத்து இருக்கார். அவருக்கு கெட்டப் எல்லாம் நல்லாவே பொருந்தி இருக்கு. ஆனா அதுல எல்லாம் ஒரு 5 நிமிஷம் கூட நல்லா நடிக்க முடியாத அள்வுக்கு அருமையான ஸ்கிரிப்ட். அடுத்து ஹீரோயினி ஸ்ரேயா. அம்மணி அழகா இருக்காங்க. ஆனா ஏதோ சபதம் எடுத்த மாதிரி ’எல்லாரும் பாருங்க’ அப்டிங்குற மாறியான டிரெஸ்-ல திரியிறாங்க. அப்புறம் பிரபு நல்லாவே பண்ணியிருக்கார். ஒண்ணும் கொற சொல்றதுக்கில்ல. வில்லனுங்க-னு ஒரு ரெண்டு பேர் இருக்காங்க. செம சொத்த. ஒருத்தர் ஆஷிஷ் வித்யார்த்தி. ஷோபா-லயே படுத்து கிடக்குறார். இன்னொருவர் முகேஷ் திவாரி. வீடே இல்லாத மாறி பஸ்-லயே சுத்துறார். படத்துக்கு சம்பந்தமே இல்லாம வடிவேலு. ஆனா சிரிக்க வைக்குறதுனால தப்பிக்கிறார். இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அவ்வளவு தான் சொல்ல முடியும் அவங்கள பத்தி.
ஒளிப்பதிவு - ஒ.கே ரகம். ஒரு ‘ரிச்னெஸ்’ இருக்கு. 'bad boys' படத்துல இருக்குமே அப்படி ஒரு டோன். ஆனா இந்த படத்துக்கு அது சூட் ஆகல. அப்புறம் இசை. தேவி ஸ்ரீ பிரசாத். ரொம்ப தான் சோதிக்கிறார் பின்னனி இசை-ல. பாட்டெல்லாம் கேக்க சுமார் ரகம். ‘Excuse me' பாடலும், ‘அலெக்ரா’, ‘மீனாகுமாரி’ பாடல்களும் சுமார் ரகம். பாட்ட பாத்தா ஏதோ ஆல்பம் சாங் மாறி இருக்கு. ஒண்ணும் படத்தோட ஒட்டல.
முக்கிய மேட்டரே இப்ப தான். எடிட்டிங். பண்ணாங்களா இல்லையா-னே தெரியல. தாணு சார் கிட்ட காசு இல்லையா, இல்ல படத்த சீக்கிரமா(!!!!!) வெளியிடனும்-னு ஏதாவது யோசிச்சாங்களா-னு தெரியல. கத்திரி வச்சதுக்கான அடையாளாமே தெரியல. அப்டியே பிரிண்ட் போட்டாச்சு-னு நினைக்கிறேன்.
டைரக்‌ஷன்... ஒரு முக்கியமான வாய்ப்பை சுசி கணேசன் சூப்பரா நழுவ விட்டுட்டாரு. ஷ்ங்கர் மாறி படம் எடுங்க.. தப்பில்ல. ஆனா அதே கதைய வச்சி எடுத்தா... அதான் தப்பு. இப்படி நான் எல்லாம் மொக்க போடுற அளவுக்கு ஆயிடுவீஙக.
எனக்கு தாணு சார பாத்தா தான் பாவமா இருக்கு. இந்த படத்துக்காக ரொம்ப செலவு பண்ணிட்டார். அவருடைய 25-வது வருஷத்துல இப்படி ஒரு படம் அமஞ்சி போச்சு. ஏதோ ரெண்டு கிராமத்த தத்து எடுத்தார் இந்த படத்துக்காக. இந்த படத்துல போட்ட காச அப்படி எதுக்காவது பயன்படுத்தி இருந்தார்-னா புண்ணியமாவது கட்டிட்டு இருந்துருப்பார். இப்ப படத்த எடுத்துட்டு கல்லா கட்டுமா பாத்துட்டு இருக்கார்.
இதுக்கு மேலயும் படம் படத்துக்கு நீங்க போன.. ஒத்துக்குறேன்.. நீங்க தைரியசாலி-னு நான் ஒத்துக்குறேன்.
நெக்ஸ்ட் பதிவுல மீட் பண்றேன் :)))))))))

17 பேர் என்ன சொன்னாங்கனா:

நட்புடன் ஜமால் சொன்னது…

பட்டைய கிளப்பி இருக்கே போ

உன்னையும் சீண்டிப்புட்டாரே இந்த

நொந்ஜாமி ...

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா,

ரொம்ப நன்றி அண்ணா :)
அவர் யாரையும் விட மாட்டார் :)

G3 சொன்னது…

Romba terrora dhaan irukkum pola irukkae.. ellarum polambaradha paatha?? Appo paakama es aagidalaamngareengala???

Karthik சொன்னது…

//எல்லாரும் படத்த கலாய்ச்சிட்டாங்க-னு தெரியும். இருந்தாலும் 80 ரூபாயை இழந்தவன் என்கிற உரிமையில் நான் இப்போது இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும்.

ஆரம்பமே அதகளமா இருக்கே!! :))

//காப்பாத்த போறேன்(!!!!)

படத்துக்கு உள்குத்தா? :)

//பாட்டெல்லாம் கேக்க சுமார் ரகம்.

எனக்கும் கந்தசாமி பாடல்கள் பிடிக்கல. எல்லாரும் நல்லா இருக்குன்றாங்க. நீங்கதான் எனக்கு பக்கத்துல வர்றீங்க. :)

Karthik சொன்னது…

nice review dude! :)

sakthi சொன்னது…

நேற்று படத்தை பார்த்திட்டு வந்து என் வீட்டில் என் கணவரும் இதே தான் புலம்பிக்கொண்டிருக்கிறார் கனகு
அவ்வளவு மோசமா கதை
பாவம் தயாரிப்பாளர்

Karthik Lollu சொன்னது…

yaam petra inbam peruga ivvaiyagam!!

Karthick Krishna CS சொன்னது…

naan dhairiyasali... vimarsanam padichittum padathukku ponen... :)

நிஜமா நல்லவன் சொன்னது…

அட நீங்களுமா????

நிஜமா நல்லவன் சொன்னது…

/எல்லாரும் படத்த கலாய்ச்சிட்டாங்க-னு தெரியும். /


மாத்தி யோசிங்க...இப்படி ஒரு படத்தை எடுத்து நம்மளை கலாய்ச்சிட்டாங்கன்னு:)))

நிஜமா நல்லவன் சொன்னது…

/இருந்தாலும் 80 ரூபாயை இழந்தவன் என்கிற உரிமையில் நான் இப்போது இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும்./

நீங்க 80 ரூபாயை இழந்ததுக்கு நாங்க எங்க டயத்தையும் இழக்கணுமா....என்ன கொடுமை கனகு இது?????

நிஜமா நல்லவன் சொன்னது…

/அது மட்டும் இல்லாமல் இவ்ளோ விமர்சனம் படிச்ச பிறகும் போய் மொக்க வாங்கிட்டு வர்றனும் நினைக்கிறவங்கள காப்பாத்த போறேன்/


உங்களையே காப்பாத்திக்க முடியலை....இதில மத்தவங்களை காப்பாத்த போறீங்களாக்கும்:)))

நிஜமா நல்லவன் சொன்னது…

/அவருடைய 25-வது வருஷத்துல இப்படி ஒரு படம் அமஞ்சி போச்சு./

உங்களுக்கு தாணு ஹிஸ்டரி சரியா தெரியலைன்னு நினைக்கிறேன்....இப்படி நிறைய ...நிறைய...இருக்கு:)))

விக்னேஷ்வரி சொன்னது…

முக்கிய மேட்டரே இப்ப தான். எடிட்டிங். பண்ணாங்களா இல்லையா-னே தெரியல. //

சரியா சொன்னீங்க கனகு.

நானும் முன்னூறு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து முப்பத்தஞ்சு கிலோ மீட்டர் தூரம் போய் பார்த்தேன். ரொம்ப நொந்து போயிட்டேன். :(

shri ramesh sadasivam சொன்னது…

கந்தசாமியை கந்தல்சாமியா துவைச்சுக் காயப்போட்டுடீங்க! தாணு கண்ல படாம கொஞ்ச நாள் ஒளிஞ்சு புடிச்சு விளையாடுங்க. மனுஷன் கொல வெறில இருப்பாரு...

:)

kanagu சொன்னது…

@G3 அக்கா,

/*Romba terrora dhaan irukkum pola irukkae.. ellarum polambaradha paatha?? Appo paakama es aagidalaamngareengala???*/

கண்டிப்பா... சென்று சேதாரமானால் கம்பெனி பொறுப்பேற்க்காது :)))

**********************************

@கார்த்திக்,

/*//எல்லாரும் படத்த கலாய்ச்சிட்டாங்க-னு தெரியும். இருந்தாலும் 80 ரூபாயை இழந்தவன் என்கிற உரிமையில் நான் இப்போது இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும்.

ஆரம்பமே அதகளமா இருக்கே!! :))*/

நம்ம கிட்ட ஒப்பேனிங் நல்லா தான் இருக்கும் :))

/*//காப்பாத்த போறேன்(!!!!)

படத்துக்கு உள்குத்தா? :)*/

LOL :))

/*nice review dude! :)*/

நன்றி நன்றி :))

*********************************

@சக்தி அக்கா,

/*நேற்று படத்தை பார்த்திட்டு வந்து என் வீட்டில் என் கணவரும் இதே தான் புலம்பிக்கொண்டிருக்கிறார் கனகு*/

அப்ப நீங்க எஸ்கேப்பா????? சூப்பர் :))

**********************************

@கார்த்திக் லொள்ளு,

/*yaam petra inbam peruga ivvaiyagam!!*/

நல்ல கொள்கை தம்பி :))

***********************************

@கா.கி

/*naan dhairiyasali... vimarsanam padichittum padathukku ponen... :)*/

ஒத்துகுறேன்.. ஒத்துகுறேன் :))

***********************************

@ நிஜமா நல்லவன் அண்ணா,

/*மாத்தி யோசிங்க...இப்படி ஒரு படத்தை எடுத்து நம்மளை கலாய்ச்சிட்டாங்கன்னு:))*/

/*உங்களையே காப்பாத்திக்க முடியலை....இதில மத்தவங்களை காப்பாத்த போறீங்களாக்கும்:))*/

LOL :)))

/*உங்களுக்கு தாணு ஹிஸ்டரி சரியா தெரியலைன்னு நினைக்கிறேன்....இப்படி நிறைய ...நிறைய...இருக்கு:))*/

தெரியும்... ஆனா அவர் பினீக்ஸ் மாறி.. இன்னொரு மொக்க படம் கண்டிப்பா நல்லா செலவழிச்சு கொடுப்பார்.. :))

***********************************

@விக்னேஸ்வரி,

/*
நானும் முன்னூறு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து முப்பத்தஞ்சு கிலோ மீட்டர் தூரம் போய் பார்த்தேன். ரொம்ப நொந்து போயிட்டேன். */

கந்தசாமி ஆல்-ரவுண்ட் பெர்ப்பார்மன்ள் பண்ணி இருக்கார்.. ஒரு இடம் விடாம அடிச்சி இருக்கார்.. :)))

***********************************

@ரமேஷ் அண்ணா,

/*கந்தசாமியை கந்தல்சாமியா துவைச்சுக் காயப்போட்டுடீங்க! தாணு கண்ல படாம கொஞ்ச நாள் ஒளிஞ்சு புடிச்சு விளையாடுங்க. மனுஷன் கொல வெறில இருப்பாரு...*/

ஹா ஹா ஹா...

இத பார்த்த பிறகாவது இந்த மாறி மொக்க படம் எடுக்காமா இருந்தா சரி அண்ணா :))

பெயரில்லா சொன்னது…

SAMMA MOKKA SIR DHAYAVUSENJU POGADHINGA APADIYE TIME PASS PANNA POGANUM NU NINAICHINGANA THAILA BOTTLE YEDITHUTU PONGA. KANDHASAMY NONDHASAMY AGIDUCHU. VIKRAM KU IDHU PORADHA KALAM POLA ADA BEEMA KUDA ORU ALAVUKU PARAVAILLA SIR. SHRIYA HOLLYWOOD RANGE KU VANDHU MOKKA PODURANGA. NALLA VELA VADIVELU POTTADHALA KONJAMACHUM GOBIR SIRIPPUKKU VAIPPU IRUNDHUDHU NALLAVELA SANDHANAM ILLA GANJA KARUPPU NU YARAYAVUDHU POTTU IRUNDHA AVALAVU DHAN THALA KIRU KIRU NU SUTHI IRUKUM. PESAMA INDHA SCREPT SHANKAR KITTA KUDUTHU IRUNDHA THEVALAN. LAST TA ORU ADVAICE SUSI GANESHKU NAMAKU YEDHU VARUMO ADHA PANNA PODHUM VERA YEDHUVUM NANGA YEDHIR PAKALA. ATTENTION PLEASE DISTRIBUTERS ADHIGAMA ASAI PADURA DIREDCTORS ADHIGAMAA ACTING KUDUKIRA ACTORSUM MUNNERNADHA SARITHRAME ILLA ILLA ILLA.