வியாழன், ஆகஸ்ட் 27, 2009

ஞாபக மறதி

வர வர இந்த ஞாபக மறதி ரொம்ப தான் அதிகமாகிடுச்சு.. சில முக்கியமான விஷயங்கள் கூட மறந்து போகின்றன. போன வாரம் ரெண்டு கல்யாணத்துக்கு போனேன். ஒண்ணு என் கல்லூரி நண்பருடையது, மற்றோன்று எனது நண்பனின் அண்ணனுடையது. கல்லூரி நண்பருடைய கல்யாணத்திற்கு போன போது அவருடைய துறையை சேர்ந்த நண்பர்களை சந்தித்தேன். பலப் பேருடைய பெயர் எனக்கு தெரியவில்லை, எல்லாம் மறந்துவிட்டது. மிக நெருக்கமாக பழகிய சிலரின் பெயர்கள் தான் ஞாபகத்தில் இருந்தது. நல்ல காலமாக நமது உறவுமுறை பெயர்களான மச்சி, மச்சான் கைக்கொடுத்தது. ரெண்டு வருடத்தின் மாற்றம் பலரிடம் தெரியவில்லை. அனைவரும் இன்னும் முன்பு போலவே கவலையில்லாமல் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து இந்த சனிக்கிழமை இன்னொரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். நல்ல காலமாக என்னுடைய பள்ளி நண்பர்கள் நிறைய பேர் வந்து என்னுடைய ஞாபக சக்தியை சோதிக்கவில்லை. சிறிது நேரம் நாம் வழக்கம் போல போடும் மொக்கைகளை போட்டுவிட்டு சாப்பிட சென்றோம். அங்கே இலையில் பல சுவையான இனிப்பு வகைகள் இருக்க நேராக சென்ற(பாய்ந்த!!) என்னை என் நண்பன் கைகழுவ அழைக்க போகும் போதே ஒருத்தன் அழைத்து ‘கனகராஜ்’ தானே என்றான். எங்கோ பார்த்தது போல இருந்தாலும் பெயர் கொஞ்சம் கூட மூளைக்குள் இருந்து எட்டிப் பார்க்க மறுத்துவிட்டது. பின்பு என் நண்பனிடம் கேட்டேன். அவன் தான், ‘டேய் அவன் தாண்டா கிரி’ என்று. பள்ளியில் அவன் எனது நல்ல நண்பன். பின்பு கேட்டால் அவனுக்கும் ஞாபகம் இல்லையாம்.. இன்னொரு நண்பனை தான் கேட்டானாம்...
கல்யாணம் முடிந்து வரும் போது தான் பெரிய காமெடி ஒன்றை எனது நண்பன் சொன்னான். அவன் ஒரு மஞ்சள் நிற சட்டையை அணிந்து நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான்.
கூட இருந்த நண்பன்: இந்த டிரெஸ்-ல நீ நல்லா இருக்கடா..
அண்ணனின் நண்பன்: இது நிஜமாவே நல்லா இருக்காடா... மொதல்ல ஒரு ஆரஞ்சு கலர் டி-சர்ட்டும், கார்கோவும் போட்டுட்டு கொஞ்சம் ஸ்டைல இருக்கட்டுமே-னு இருந்தேண்டா. வெளிய நின்னுட்டு இருந்தேன்.. எங்கப்பா வந்துட்டு என்னடா இன்னும் டிரெஸ் பண்ணி ரெடியாகலையா... சீக்கிரம் போடா-னு சொல்லிட்டாருடா...
நாங்கள் எல்லாரும்: ‘லொள்’
என்ன சிரிப்பு சத்தம் தான்.
சரி அடுத்த பதிவுல சந்திப்போம்... :)))))))))))

7 பேர் என்ன சொன்னாங்கனா:

G3 சொன்னது…

Me the firstae :)))

G3 சொன்னது…

//எங்கப்பா வந்துட்டு என்னடா இன்னும் டிரெஸ் பண்ணி ரெடியாகலையா... சீக்கிரம் போடா-னு சொல்லிட்டாருடா...//

ROTFL :))) Paavam dhaan avaru :)))

sakthi சொன்னது…

:)))

நட்புடன் ஜமால் சொன்னது…

ஹா ஹா ஹா

நல்லாயிருக்குப்பா

Karthik சொன்னது…

லொள்! :)))))

.:: மை ஃபிரண்ட் ::. சொன்னது…

:-)

kanagu சொன்னது…

@G3 அக்கா,

/*Me the firstae :)))*/

நீங்களே தான் :))

/*//எங்கப்பா வந்துட்டு என்னடா இன்னும் டிரெஸ் பண்ணி ரெடியாகலையா... சீக்கிரம் போடா-னு சொல்லிட்டாருடா...//

ROTFL :))) Paavam dhaan avaru :)))*/

:))))))))))

***********************************

@சக்தி அக்கா,

:))))))))))))

***********************************

@ஜமால் அண்ணா,

/*ஹா ஹா ஹா

நல்லாயிருக்குப்பா*/

நன்றி அண்ணா :))

***********************************

@கார்த்திக்,

/*லொள்! :))))*/

:))))

***********************************

@ .:: மை ஃபிரண்ட் ::.,

வாங்க வாங்க :))