திங்கள், ஆகஸ்ட் 31, 2009

நாலு கேள்வி மற்றும் ஒரு நற்செய்தி

கில்ஸ் அண்ணா என்னை இந்த தொடர் பதிவுக்கு கோர்த்துவிட்டு இருக்கார். ரொம்ப நன்றி அண்ணா :))

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு என்பது நாம் எப்படி ஒரு விஷயத்தை காண்கிறோம் என்பதில் இருக்கிறது என்பதே என் கருத்து.
தாய்க்கு தன் குழந்தை எப்போதும் அழகு.
இளைஞர்களுக்கு அப்போது வரும் ஹீரோயின்கள் மேக்கப்போடு இருந்தால் அழகு.
மேல் குறிப்பிட்ட இரண்டில் இருந்து எந்த அழகு நிரந்தமானது என்பது தெரியும்.
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் என்பதின் பொருள் அன்பு என்று நம்புகிறேன். அப்படி நம்புவதனால் காதல் மிக மிக அவசியமே :))
3. கடவுள் உண்டா?
ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்குவதாக நம்புகிறேன். அந்த சக்திக்கு பெயர் ‘கடவுள்’ எனில், அதை நான் நம்புகிறேன். கடவுள் உண்டு.
4. பணம் அவசியமா?
கண்டிப்பாக. எவ்வளவு என்பது அவரவர் மற்றும் நாட்டின் அப்போதைய பொருளாதர நிலையை பொருத்தது.
சரி.. நான் இந்த தொடர் பதிவ முடிச்சிட்டேன். எல்லாரும் பண்ணிட்டதுனா-ல யாரையும் கோத்துவிடல...
***********************************
அப்புறம் ஒரு முக்கிய மகிழ்ச்சியான செய்தி... நமது ரமேஷ் அண்ணாவின் மேன்ஷனில் உள்ள நீரின் தரம் உயர்ந்துவிட்டது. அவர்களுடைய போராட்டத்திற்கு வெற்றி. எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் :))
இந்த சந்தோஷ செய்தியோடு இப்போ கிளம்புறேன். அடுத்த பதிவுல சந்திக்கிறேன் :)

8 பேர் என்ன சொன்னாங்கனா:

ஹேமா சொன்னது…

கனகு,இத்தனை கேள்விகளுக்கும் இவ்வளவு சுருக்கமாகப் பதில்சொன்ன முதல் ஆள் நீங்கள்தானோ !

என்றாலும் சுருக்கமாய் அழகாய் இருக்கு.

kanagu சொன்னது…

வாங்க ஹேமா :))) முதல் வருகைக்கு நன்றி :)

/*கனகு,இத்தனை கேள்விகளுக்கும் இவ்வளவு சுருக்கமாகப் பதில்சொன்ன முதல் ஆள் நீங்கள்தானோ !

என்றாலும் சுருக்கமாய் அழகாய் இருக்கு*/

நன்றி நன்றி... :))
அதுக்கு மேல சொன்னாலும், அதயே தான் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருப்பேன்.. அதான் சுருக்கமா முடிச்சிட்டேன் :))

நட்புடன் ஜமால் சொன்னது…

இதைவிட சுருக்-காக சொன்ன ஒரு ஆள் இருக்கு

இங்கே.

நட்புடன் ஜமால் சொன்னது…

அந்த நற்செய்தி பகிர்தலுக்கு நன்றிப்பா.

gils சொன்னது…

//மேல் குறிப்பிட்ட இரண்டில் இருந்து எந்த அழகு நிரந்தமானது என்பது தெரியு//

terilaye..velakavum :d
tamizh katturai rangeku anjer paniruka :) nallaruku

Karthik சொன்னது…

நச்! :)

நாங்களும் சுருக்கமா பின்னூட்டம் போடுவோம்ல!

G3 சொன்னது…

Short and sweeta solliteenga :)))))

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா,

/*இதைவிட சுருக்-காக சொன்ன ஒரு ஆள் இருக்கு*/

அத ஏற்கனவே படிச்சேன் அண்ணா :))

/*அந்த நற்செய்தி பகிர்தலுக்கு நன்றிப்பா*/

:))))))))))

**********************************

@கில்ஸ் அண்ணா,

/*terilaye..velakavum :d*/

அய்யயோ... ரொம்ப கஷ்டம் :))

/*tamizh katturai rangeku anjer paniruka :) nallaruku*/

ரொம்ப நன்றி அண்ணா :)

**********************************

@கார்த்திக்,

/*நச்! :)

நாங்களும் சுருக்கமா பின்னூட்டம் போடுவோம்ல*/

LOL :))
நன்றி கார்த்திக் :))

***********************************

@ஜி3 அக்கா,

/*Short and sweeta solliteenga :)))))*/

நன்றி அக்கா :))