ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

திரும்பி வந்துட்டேன்

என்னாட இவ்ளோ நாளா பதிவே போடலியே ‘பிஸி’-ய இருந்தனோ அப்டினு நினச்சிங்க-னா நீங்க ரொம்ப நல்லவங்க... ஆனா நான் வெட்டியா தான் இருந்தேன். என்னவோ பதிவு போடுறதுக்கானா மூடே வரல... சரி போன 20 நாள்-ல சொல்லிகிற மாறி சில விஷயங்கள் நடந்துது... அத சொல்றேன்..

ஒரு 20 நாள் முன்னாடி கிருஷ்ணகிரிக்கு என் கல்லூரி நண்பனோட திருமணத்துக்கு நானும் இன்னொரு நண்பனும் போயிருந்தோம். காலை-ல தான் கல்யாணம் அப்டிங்குறதுனால ஆபீஸ்-ல இருந்து ராத்திரி 10 மணிக்கு தான் கோயம்பேடுக்கு கிளம்புனேன். அவன் வீடு குரோம்பேட்டை-ல இருக்கு. அதனால அங்க இருந்து போறதா பிளான் பண்ணோம். அங்க போக ஒரு 10:45 ஆயிடுச்சி. நான் சாப்பிடாததுனால அங்க பரோட்டா கடை எங்கயாவது போலாம்-னு பாத்தா சுத்தி எங்கயும் பெருசா இல்ல... அதனால அஞ்சப்பர்-ல அடியெடுத்து வச்சோம். சில, பல கோழிய உள்ள தள்ளிட்டு வெளிய வர கிட்டதிட்ட ஒரு 11:40-க்கு மேல ஆயிடுச்சு. நான் இதுவரைக்கும் அவ்ளோ லேட்டா கோயம்பேடுக்கு போனதில்ல அப்டிங்குறதுனால பஸ் இருக்குமா-னு ஒரு யோசனையாவே இருந்த்து. எப்டியும் வேலுருக்காவது இருக்கும்; அங்க இருந்து எப்டியும் போயிடுலாம்-னு நினச்சிகிட்டு போனோம்.
12 மணிக்கு கூட நம்ம சென்னை-ல நல்ல பேருந்து வசதி இருக்குங்க... பயணமும் நல்லா தான் இருக்கு. அந்த இரவு நேரத்துல ஜன்னலோரமா உட்கார்ந்துகிட்டு ஜில்லுனு காத்து வாங்கிட்டே கதயடுச்சிகிட்டு போறது. கோயம்பேடுக்கு ஒரு 12:15... 12:30 வாக்குல போய் சேந்தோம். எனக்கு இன்னோரு பயம் என்ன இருந்துதுனா அடுத்த நாள் ‘ஓண்ம்’ பண்டிகை. அதனால கூட்டமா இருக்குமோ-னு நினச்சேன்.நல்ல வேள பெங்களூரூ போற வண்டி இருந்துது, காலியாவும் இருந்துது. அத ஒரு 1 மணிக்கா எடுத்தாங்க. என் ப்ரண்ட் ஜன்னலோரத்துல உக்காந்துக்க நான் அவன் பக்கத்துல செட்டில் ஆயிட்டேன். பஸ்-ச ஒரு 1 மணிக்கு மேல எடுத்தாங்க. எனக்கு டைம்-அ வீணடிக்குறது கொஞ்சம் கூட புடிக்காது. அதனால பஸ் ஸ்டார்ட் பண்ணவுடனே தூங்க ஆரம்பிச்சிட்டேன். என் ப்ரண்டும் அப்டி தான். ஆனா அவனுக்கு விதி காத்து ரூபத்துல சிரிச்சுது. நல்ல ஜில்லு-னு காத்தடிச்சி அவனோட தூக்கத்துக்கு முற்றுபுள்ளி வைக்க பாத்துட்டே இருந்துருக்கு.... ஆனா அவன் விடாமா அத காமா ஆக்கிட்டே வந்துட்டான். அவன் எழுந்த போதேல்லாம் நான் அசராமா அசந்து தூங்கிட்டே இருந்துருக்கேன். பாத்து பாத்து.. ஒரு 6:15-க்கு மேல என்ன எழுப்பி இன்னும் 30-கி.மீ தான் இருக்கு... நீ பாத்துக்கோ... நான் கொஞ்சம் தூங்குறேனு போய் பின்னால படுத்துகிட்டான். பாத்தா ஒரு 20 நிமிஷத்துலயே மண்டபம் வந்துடுச்சி. நல்ல வேளையா ஒருத்தர் அங்கருந்து கொஞ்ச தூரத்துல எறங்குனார். நான் அவன எழுப்பி வேகமா ஒடிபோய் எறங்கிட்டோம்.
கல்யாணம் 9-10:30... மணியோ 6:30 தான் ஆச்சி. 8:30 வரக்குமாவது பொழுத போக்கனுமே.. அதனால காலங்காலமா நாம உபயோகபடுத்துற டெக்னிக்கான டீக்கடை-ய தேர்ந்தெடுத்தோம். போய் ஒரு காபி அப்புறம் சில பிஸ்கட்ட உள்ள தள்ளிட்டு.... மண்டபத்துக்கு எதிர்திசை-ல நடக்க ஆரம்பிச்சோம்.
நான்: “ஏண்டா... கிருஷ்ணகிரி எப்ப வரு-னு ரெண்டு பேருக்குமே தெரியாது... அப்புறம் எப்படி இன்னும் 30 நிமிஷம் ஆகும்-னு சொன்ன??”
அவன்: ஒரு தோராயமா தான் - டா... நமக்கு முன்னாடி இருந்தவனும் அங்க தான் எறங்கனும். அவன் டிக்கெட் வாங்கும் போது பாத்தேன்.
நான்: (??????????) அவன் என்கிட்ட கிருஷ்ணகிரி எப்ப வரும்-னு நீ தூங்க போனதுக்கு அப்புறமா கேட்டாண்டா...
ரெண்டு பேரும்: :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அப்டியே நடந்து நடந்து தமிழ்நாடு ஓட்டலுக்கு போய் சேர்ந்தோம். திரும்ப அவன் ஒரு டீ அடிக்க... நான் ஒரு மாற்றத்துக்காக ஐஸ்கீரிம் சாப்பிட்டேன்... அப்டியே பொழுத போக்கி ஒரு 9 மணிக்கா போய் சேந்தோம். கல்யாணத்த பாத்துட்டு சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிச்சிட்டு கிளம்புனோம். 12 மணிக்கா பஸ்-அ புடிச்சி ஒரு 6 மணிக்கு வந்து சேந்தோம்.
இவ்ளோ சொல்லிட்டு ஊர பத்தி ஒண்ணுமே சொல்லலியே... உண்மையிலியே ரொம்ப நல்லா இருந்துதுங்க. சுத்தமா, ‘ட்ராபிக்’ இல்லாம ஒரு மாறுதலா இருந்துது. அப்புறம் அங்கங்க மலையும் இருக்கு... பாக்க ரம்மியமா இருக்கு. பெங்களூருக்கு பக்கதுல இருக்குறதுனாலயா என்னன்னு தெரியல... காலைல நல்லா குளிர்ச்சியா இருந்துது. நான் காலைல 9 மணிக்கு முன்னாடி சூரியனுக்கு ‘குட்மார்னிங்’ சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. மதிய ஷிப்ட் போறதுனால முடியல. காலைல உலகம் நல்லா தாங்க இருக்கு...
சரி அவ்ளோ தான் அந்த பயணக்கதை... அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம்.
அடுத்த பதிவு: படக்கலவை.

Leia Mais…

ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்

மலையாள படமான ’கிளாஸ்மேட்ஸ்’ - இன் ரீமேக் இந்த படம். இந்த படத்தைப் பார்க்க போகும் முன் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான். தமிழில் வார்த்தைகளுக்கு ஏதேனும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா??? என்பது தான் அது. பெயரே இல்லாத மாதிரி ‘நினைத்தாலே இனிக்கும்-னு பழைய பட டைட்டில வச்சி இருக்காங்க... சரி படத்துக்கும் பேருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா-னு பாத்தா ஒண்ணுமே இல்ல-னு தான் சொல்லணும்... ஏன்னா படத்துல வர முக்கிய கதாபாத்திரம் எல்லாமே சோக நினைவுகளோட தான் சுத்திட்டு இருக்கு. சரி அவுக கதைய விடுவோம்.. நமக்கு இனிக்குதா.. இல்லையா-னு பாப்போம்.

கதை என்னான்னா... வழக்காம ஆரம்பிக்குமே.. ஹீரோ தன்னுடைய நண்பர்கள பாக்க 8 வருஷம் கழிச்சு திரும்பி வர்றாரு.. வரும் போதே கல்லூரி காலங்கள நினச்சு பாக்குறாரு. பிருத்விராஜ், ஷக்தி(அதாங்க டைரக்டர் பி.வாசு பையன்), கார்த்திக்(அமெரிக்கா மாப்பிள்ளை), ப்ரியாமணி, ஒரு புதுமுக நடிகை(முக்கிய கதாபாத்திரம்), ’லொள்ளு சபா’ ஜீவா, இன்னும் கொஞ்சம் பேர் எல்லாம் ‘கிளாஸ்மேட்ஸ்’. இதுல பிருத்விராஜ் நண்பர்களுக்கும், கார்த்திக்கும் மோதல். ஷக்தி இந்த ரெண்டு பேருக்குமே பொதுவான நண்பனா இருக்குறாரு. இதுக்கு நடுவுல காலேஜ்-ல மாண்வர் தலைவர் வேணும், எலக்‌ஷன் நடத்தணும்-னு கேட்டு போராடுறாங்க. இதுல பிருத்விராஜ எதிர்த்து அவருடைய ப்ரியாமணி போட்டி போடுறாங்க. இதுல பல மனஸ்தாபங்கள். அப்புறம் எதிர்ப்பாராத ஒரு மரணம் நடக்க, படிப்ப பாதியிலேயே விட்டுட்டு பிருத்விராஜ் போறாரு. என்ன நடக்குது அவர் திரும்ப வரும் போது அப்டிங்குறது தான் கத.
பிருத்விராஜ் நல்லா பண்ணி இருக்காரு தன்னோட முந்தைய படங்கள போலவே. கொஞ்சம் கோவக்காரரா வர்றாரு. அடுத்து ப்ரியாமணிக்கு நடிக்க எல்லாம் பெரிய வாய்ப்பில்ல. சும்மா வந்துட்டு போற ரோல். ஷக்திக்கு பெரிய கேரக்டர் எல்லாம் இல்ல. சும்மா கவிதைய சொல்லி கொல்றாரு. அந்த புதுமுக பொண்ணு அழகாவும் இருக்கு, கொஞ்சம் நல்லாவும் நடிச்சிருக்கு. கார்த்தி, அமெரிக்க மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழன் கதாபாத்திரத்துல இருந்து புரேமோஷன் ஆகி வில்லன் ஆகி இருக்கார் இந்த படத்துல.. நல்லா பண்ணி இருக்கார். இளவரசு, லொள்ளு சபா ஜீவா எல்லாம் நல்லா பண்ணி இருக்காங்க.
படத்துல நிஜ ஹீரோ காமெராமேன் பாலாசுப்ரமணியம் (பிதாமகன் படத்துக்கெல்லாம் பண்ணி இருக்கார்) தான். அற்புதமா பண்ணி இருக்கார். ஒவ்வொரு ப்ரேமுமே ஒரு அழகான போட்டோ மாறி இருக்கு. அதுவும் கடைசியா ஒரு பாட்டு வரும் பாருங்க ‘அழகாய் பூக்குதே’-னு சான்ஸே இல்ல. கலக்கி இருக்காரு. எடிட்டிங் ஒகே தான். படம் மொத்தம் 2 மணி 10 நிமிஷம் தான். இன்னும் கொஞ்சம் கூட ‘கட்’ பண்ணி இருக்கலாம்-னு சொல்ற அளவுக்கு காட்சிகள் இருக்கு.
இசை: விஜய் ஆண்டனி. டைட்டில் கார்ட பாத்ததுனால கண்டுபுடிச்சேன். ஒரே ஒரு பாட்டு தான் கேக்குற மாறி இருக்கு. ’வணாரஸ் பொட்டு வைத்து’-னு ஒரு பாட்டு. மத்தபடி பாட்டு, பின்னனி இசை ரெண்ட பத்தியும் அவர எனக்கு புடிக்கும் அப்டிங்கிறதால ஒண்ணும் சொல்லல.
இயக்கம்: குமரவேலன். இவர் கிட்ட ஒரு கேள்வி. ஒரு காலேஜ் கேம்பஸ் படத்த ஏன் ரீமேக் பண்ணனும்?? புதுசா எடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும். இதுல அவர் மலையாளத்துல இருந்து மாத்துறேன் -னு சொல்லிட்டு கேரள காலேஜ் மாறியும் இல்லாம, தமிழ்நாட்டு காலேஜ் மாறியும் இல்லாம மொக்க ஆயிடுச்சி. அதனாலயே நமக்கு அவங்களோட சந்தோஷமோ துக்கமோ பாதிக்கல. ஏதோ நடக்குது, நாமும் பாக்குறோம் அப்டிங்குற மாறி இருக்கு.
முதல் பாதி கொஞ்சமே கொஞ்சமா காலேஜ்கே உரிய கலகலப்புகள் இருக்கு. இரண்டாவது பாதி மறந்து போய் கூட சிரிக்க முடியாது. ஏன்னா அவ்ளோ சீரியஸ். என்ன தான் காலேஜ் கத-னாலும் இது எனக்கு நடந்துதே, நாங்க இப்டி பண்ணோமே, இப்டி இருந்துருந்தா நல்லா இருந்துருக்குமே நினைக்கிற மாதிரியான காட்சிகள்... சாரி.. ஒண்ணு கூட இல்ல. காதல் இருக்கு.. ஆனா ஒரு அழுத்தம் இல்ல. நட்பு நட்பு-னு சொல்றாங்க.. ஆனா அத புரிய வைக்குற மாறி ’நச்’-னு ஒரு காட்சி இல்ல. ரெண்டாவது பாதியில மட்டும் கொஞ்சம் பயமுறுத்துறாங்க. மொத்ததுல தெளிவா நம்மல பாதிக்குற மாறி இல்லாம, நச நச-னு சொதப்பலா இருக்கு.
நினைத்தாலே இனிக்கும்: நினைக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல... இனிப்பான நினைவுகள் அப்டினு எதுவும் இல்ல.

Leia Mais…