ஞாயிறு, செப்டம்பர் 06, 2009

நினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்

மலையாள படமான ’கிளாஸ்மேட்ஸ்’ - இன் ரீமேக் இந்த படம். இந்த படத்தைப் பார்க்க போகும் முன் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான். தமிழில் வார்த்தைகளுக்கு ஏதேனும் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா??? என்பது தான் அது. பெயரே இல்லாத மாதிரி ‘நினைத்தாலே இனிக்கும்-னு பழைய பட டைட்டில வச்சி இருக்காங்க... சரி படத்துக்கும் பேருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா-னு பாத்தா ஒண்ணுமே இல்ல-னு தான் சொல்லணும்... ஏன்னா படத்துல வர முக்கிய கதாபாத்திரம் எல்லாமே சோக நினைவுகளோட தான் சுத்திட்டு இருக்கு. சரி அவுக கதைய விடுவோம்.. நமக்கு இனிக்குதா.. இல்லையா-னு பாப்போம்.

கதை என்னான்னா... வழக்காம ஆரம்பிக்குமே.. ஹீரோ தன்னுடைய நண்பர்கள பாக்க 8 வருஷம் கழிச்சு திரும்பி வர்றாரு.. வரும் போதே கல்லூரி காலங்கள நினச்சு பாக்குறாரு. பிருத்விராஜ், ஷக்தி(அதாங்க டைரக்டர் பி.வாசு பையன்), கார்த்திக்(அமெரிக்கா மாப்பிள்ளை), ப்ரியாமணி, ஒரு புதுமுக நடிகை(முக்கிய கதாபாத்திரம்), ’லொள்ளு சபா’ ஜீவா, இன்னும் கொஞ்சம் பேர் எல்லாம் ‘கிளாஸ்மேட்ஸ்’. இதுல பிருத்விராஜ் நண்பர்களுக்கும், கார்த்திக்கும் மோதல். ஷக்தி இந்த ரெண்டு பேருக்குமே பொதுவான நண்பனா இருக்குறாரு. இதுக்கு நடுவுல காலேஜ்-ல மாண்வர் தலைவர் வேணும், எலக்‌ஷன் நடத்தணும்-னு கேட்டு போராடுறாங்க. இதுல பிருத்விராஜ எதிர்த்து அவருடைய ப்ரியாமணி போட்டி போடுறாங்க. இதுல பல மனஸ்தாபங்கள். அப்புறம் எதிர்ப்பாராத ஒரு மரணம் நடக்க, படிப்ப பாதியிலேயே விட்டுட்டு பிருத்விராஜ் போறாரு. என்ன நடக்குது அவர் திரும்ப வரும் போது அப்டிங்குறது தான் கத.
பிருத்விராஜ் நல்லா பண்ணி இருக்காரு தன்னோட முந்தைய படங்கள போலவே. கொஞ்சம் கோவக்காரரா வர்றாரு. அடுத்து ப்ரியாமணிக்கு நடிக்க எல்லாம் பெரிய வாய்ப்பில்ல. சும்மா வந்துட்டு போற ரோல். ஷக்திக்கு பெரிய கேரக்டர் எல்லாம் இல்ல. சும்மா கவிதைய சொல்லி கொல்றாரு. அந்த புதுமுக பொண்ணு அழகாவும் இருக்கு, கொஞ்சம் நல்லாவும் நடிச்சிருக்கு. கார்த்தி, அமெரிக்க மாப்பிள்ளை, மாப்பிள்ளை தோழன் கதாபாத்திரத்துல இருந்து புரேமோஷன் ஆகி வில்லன் ஆகி இருக்கார் இந்த படத்துல.. நல்லா பண்ணி இருக்கார். இளவரசு, லொள்ளு சபா ஜீவா எல்லாம் நல்லா பண்ணி இருக்காங்க.
படத்துல நிஜ ஹீரோ காமெராமேன் பாலாசுப்ரமணியம் (பிதாமகன் படத்துக்கெல்லாம் பண்ணி இருக்கார்) தான். அற்புதமா பண்ணி இருக்கார். ஒவ்வொரு ப்ரேமுமே ஒரு அழகான போட்டோ மாறி இருக்கு. அதுவும் கடைசியா ஒரு பாட்டு வரும் பாருங்க ‘அழகாய் பூக்குதே’-னு சான்ஸே இல்ல. கலக்கி இருக்காரு. எடிட்டிங் ஒகே தான். படம் மொத்தம் 2 மணி 10 நிமிஷம் தான். இன்னும் கொஞ்சம் கூட ‘கட்’ பண்ணி இருக்கலாம்-னு சொல்ற அளவுக்கு காட்சிகள் இருக்கு.
இசை: விஜய் ஆண்டனி. டைட்டில் கார்ட பாத்ததுனால கண்டுபுடிச்சேன். ஒரே ஒரு பாட்டு தான் கேக்குற மாறி இருக்கு. ’வணாரஸ் பொட்டு வைத்து’-னு ஒரு பாட்டு. மத்தபடி பாட்டு, பின்னனி இசை ரெண்ட பத்தியும் அவர எனக்கு புடிக்கும் அப்டிங்கிறதால ஒண்ணும் சொல்லல.
இயக்கம்: குமரவேலன். இவர் கிட்ட ஒரு கேள்வி. ஒரு காலேஜ் கேம்பஸ் படத்த ஏன் ரீமேக் பண்ணனும்?? புதுசா எடுத்தா இன்னும் சூப்பரா இருக்கும். இதுல அவர் மலையாளத்துல இருந்து மாத்துறேன் -னு சொல்லிட்டு கேரள காலேஜ் மாறியும் இல்லாம, தமிழ்நாட்டு காலேஜ் மாறியும் இல்லாம மொக்க ஆயிடுச்சி. அதனாலயே நமக்கு அவங்களோட சந்தோஷமோ துக்கமோ பாதிக்கல. ஏதோ நடக்குது, நாமும் பாக்குறோம் அப்டிங்குற மாறி இருக்கு.
முதல் பாதி கொஞ்சமே கொஞ்சமா காலேஜ்கே உரிய கலகலப்புகள் இருக்கு. இரண்டாவது பாதி மறந்து போய் கூட சிரிக்க முடியாது. ஏன்னா அவ்ளோ சீரியஸ். என்ன தான் காலேஜ் கத-னாலும் இது எனக்கு நடந்துதே, நாங்க இப்டி பண்ணோமே, இப்டி இருந்துருந்தா நல்லா இருந்துருக்குமே நினைக்கிற மாதிரியான காட்சிகள்... சாரி.. ஒண்ணு கூட இல்ல. காதல் இருக்கு.. ஆனா ஒரு அழுத்தம் இல்ல. நட்பு நட்பு-னு சொல்றாங்க.. ஆனா அத புரிய வைக்குற மாறி ’நச்’-னு ஒரு காட்சி இல்ல. ரெண்டாவது பாதியில மட்டும் கொஞ்சம் பயமுறுத்துறாங்க. மொத்ததுல தெளிவா நம்மல பாதிக்குற மாறி இல்லாம, நச நச-னு சொதப்பலா இருக்கு.
நினைத்தாலே இனிக்கும்: நினைக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல... இனிப்பான நினைவுகள் அப்டினு எதுவும் இல்ல.

17 பேர் என்ன சொன்னாங்கனா:

G3 சொன்னது…

me the firstae :))

G3 சொன்னது…

//நினைக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல... இனிப்பான நினைவுகள் அப்டினு எதுவும் இல்ல. //

:))))))))))))))))

நிஜமா நல்லவன் சொன்னது…

கந்தசாமி அடில இருந்து நீங்க படம் படிக்கலை போல:)))

நிஜமா நல்லவன் சொன்னது…

/சரி படத்துக்கும் பேருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா-னு பாத்தா ஒண்ணுமே இல்ல-னு தான் சொல்லணும்... ஏன்னா படத்துல வர முக்கிய கதாபாத்திரம் எல்லாமே சோக நினைவுகளோட தான் சுத்திட்டு இருக்கு/

ஒருவேளை சோக நினைவுகளுக்கு முன்னாடி உள்ள நினைவுகளை நினைத்தாலே இனிக்கும்னு நினைச்சி அப்படி பேரு வச்சிருப்பாங்க போல:))

kanagu சொன்னது…

@G3 அக்கா,

/*me the firstae :))*/

:))))))))

/*//நினைக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல... இனிப்பான நினைவுகள் அப்டினு எதுவும் இல்ல. //

:))))))))))))))))*/

:)))))))))))

***********************************

@நிஜமா நல்லவன் அண்ணா,

/*கந்தசாமி அடில இருந்து நீங்க படம் படிக்கலை போல:)*/

பயந்தா முதல் வாரம் படம் பாக்க முடியுமா???? அதுலயும் நம்ம வீர பரம்பரை-ல.. ஹி ஹி ஹி.. :))))

நிஜமா நல்லவன் சொன்னது…

அந்த படத்தோட பேரை இனிமே நீங்க கேட்டாலும் கசக்கும்னு நினைக்கிறேன்...முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கிட்டு முட்டி மோதி பார்த்திட்டு இங்க வந்து முட்டிக்கவேண்டியது:)))

kanagu சொன்னது…

@நிஜமா நல்லவன் அண்ணா,

/*
ஒருவேளை சோக நினைவுகளுக்கு முன்னாடி உள்ள நினைவுகளை நினைத்தாலே இனிக்கும்னு நினைச்சி அப்படி பேரு வச்சிருப்பாங்க போல:)*/

இந்த ஆங்கிள்-ல நான் யோசிக்கவே இல்ல :)))

/*அந்த படத்தோட பேரை இனிமே நீங்க கேட்டாலும் கசக்கும்னு நினைக்கிறேன்...*/

அந்த படம் ஒரு ஒகே வானா படம் தான்...

/*முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கிட்டு முட்டி மோதி பார்த்திட்டு இங்க வந்து முட்டிக்கவேண்டியது:))*/
*/

ஹி ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

ninaithaaly inikumm...pathi ninaithaal ini "gumm" nu kuthu vizhumnu solluria :) kathaiyae sollama ipdi interesta kelapara mathiri reviwe potrukiye :) kathaiyu soliruntha dvd kaasu michamagumla :)

~gils

Karthik சொன்னது…

சன்டிவி பேனர்னாலே மொக்கைனு ஆயிடும்போல?!

:)))

நட்புடன் ஜமால் சொன்னது…

விமர்சனமெல்லாம் தூள் கிளப்ப ஆரம்பிச்சாச்சி போல ...

ஹேமா சொன்னது…

கனகு,நல்ல படமா இல்லையா...!சொல்லவே இல்லையே.

HaRy!! சொன்னது…

agree ngo :) tamizhil ethanayo varthaikal iruku....first time here...will be seein yu often! tak care

HaRy

Porkodi (பொற்கொடி) சொன்னது…

ada kadavule unga blog fullave thamizh paduthi irukingale!! supera paduthringa :))) indha padathoda malayalam versione ennala thanga mudiala, adnala riske edukala! pona masam kandasamy pathene, varushathuku oru aapu podhadha? :)

Porkodi (பொற்கொடி) சொன்னது…

hahaha... naan "follow" click pannena.. follow nu sonna apram patha unga blog ennai pathu "moodu" nu solludhu! enna koduma idhu kanagu?

shri ramesh sadasivam சொன்னது…

படத்தின் தலைப்பிலிருந்தே இயக்குனரின் கற்பனை வறட்சி தெரிகிறது.

தாரணி பிரியா சொன்னது…

மலையாளத்துல நல்லா இருக்கும். தமிழில் கொலை பண்ணிட்டாங்களேமே. நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன். நன்றி கனகு. எல்லா படத்தையும் இதே போல சீக்கிரம் பார்த்து மொக்கை படங்க கிட்ட இருந்து எங்களை காப்பாத்துப்பா

kanagu சொன்னது…

@கில்ஸ் அண்ணா,

/*athaiyae sollama ipdi interesta kelapara mathiri reviwe potrukiye :) kathaiyu soliruntha dvd kaasu michamagumla :)*/

எனக்கு கதைய முழுக்க சொல்ற்தும் புடிக்காது... கேக்குறதும் புடிக்காது.. மொத்தமா தெரிஞ்சிட்டா படம் பாக்குற ஆர்வமே போயிடும்.. நான் வேணும்-னா உங்களுக்கு மெயில் அனுப்புறேன் கதய..

*****************************

/*கார்த்திக்,

/*சன்டிவி பேனர்னாலே மொக்கைனு ஆயிடும்போல?!

:)))*/

‘போல’ என்பதை எடுத்துவிடவும் :))

*****************************

@ஜமால் அண்ணா,

/*விமர்சனமெல்லாம் தூள் கிளப்ப ஆரம்பிச்சாச்சி போல ..*/

ஏதோ என்னால முடிஞ்சது... :))

*****************************

@ஹேமா,

படம் மிக சுமார்..

*****************************

/*ஹேரி,

வாங்க தல....

கண்டிப்பா மறுபடியும் வாங்க :))

*****************************

@பொற்கொடி,

வாங்க வாங்க...

/*ada kadavule unga blog fullave thamizh paduthi irukingale!! supera paduthringa :)))*/

நான் என்ன பண்ணேந்னு எனக்கே தெரியல.. எல்லாமே தமிழ்-ல இருக்குனு நீங்க சொல்லி தான் எனக்கே தெரியும் :))

/*indha padathoda malayalam versione ennala thanga mudiala, adnala riske edukala!*/

அது நல்லா இருக்கும்-னு சொன்னாங்களே... அவங்க கல்லுரி சூழ்நிலையெல்லாம் வேற.. அதனால உஙளுக்கு பிடிக்காம போய் இருக்கும்..

/*pona masam kandasamy pathene, varushathuku oru aapu podhadha? :)*/

நானும் பாத்தேனே அத... நீங்க வில்லு எல்லாம் பாக்கலியா???

/*hahaha... naan "follow" click pannena.. follow nu sonna apram patha unga blog ennai pathu "moodu" nu solludhu! enna koduma idhu kanagu?*/

அய்யயோ... என்னோட ‘ப்ளாக்’ சார்பா என்ன மன்னிச்சிடுங்க :)))

*******************************

@ரமேஷ் அண்ணா,

ஆமாம் அண்ணா...

*******************************

@தா.பி அக்கா,

/* நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்.*/

அடுத்து வேட்டைகாரன் வருது.... வீட்டுல இருக்குற குட்டீஸ் மூலமா அந்த படத்த பாத்து மொக்க வாங்க போறீங்க பாருங்க... :))))