ஞாயிறு, செப்டம்பர் 27, 2009

திரும்பி வந்துட்டேன்

என்னாட இவ்ளோ நாளா பதிவே போடலியே ‘பிஸி’-ய இருந்தனோ அப்டினு நினச்சிங்க-னா நீங்க ரொம்ப நல்லவங்க... ஆனா நான் வெட்டியா தான் இருந்தேன். என்னவோ பதிவு போடுறதுக்கானா மூடே வரல... சரி போன 20 நாள்-ல சொல்லிகிற மாறி சில விஷயங்கள் நடந்துது... அத சொல்றேன்..

ஒரு 20 நாள் முன்னாடி கிருஷ்ணகிரிக்கு என் கல்லூரி நண்பனோட திருமணத்துக்கு நானும் இன்னொரு நண்பனும் போயிருந்தோம். காலை-ல தான் கல்யாணம் அப்டிங்குறதுனால ஆபீஸ்-ல இருந்து ராத்திரி 10 மணிக்கு தான் கோயம்பேடுக்கு கிளம்புனேன். அவன் வீடு குரோம்பேட்டை-ல இருக்கு. அதனால அங்க இருந்து போறதா பிளான் பண்ணோம். அங்க போக ஒரு 10:45 ஆயிடுச்சி. நான் சாப்பிடாததுனால அங்க பரோட்டா கடை எங்கயாவது போலாம்-னு பாத்தா சுத்தி எங்கயும் பெருசா இல்ல... அதனால அஞ்சப்பர்-ல அடியெடுத்து வச்சோம். சில, பல கோழிய உள்ள தள்ளிட்டு வெளிய வர கிட்டதிட்ட ஒரு 11:40-க்கு மேல ஆயிடுச்சு. நான் இதுவரைக்கும் அவ்ளோ லேட்டா கோயம்பேடுக்கு போனதில்ல அப்டிங்குறதுனால பஸ் இருக்குமா-னு ஒரு யோசனையாவே இருந்த்து. எப்டியும் வேலுருக்காவது இருக்கும்; அங்க இருந்து எப்டியும் போயிடுலாம்-னு நினச்சிகிட்டு போனோம்.
12 மணிக்கு கூட நம்ம சென்னை-ல நல்ல பேருந்து வசதி இருக்குங்க... பயணமும் நல்லா தான் இருக்கு. அந்த இரவு நேரத்துல ஜன்னலோரமா உட்கார்ந்துகிட்டு ஜில்லுனு காத்து வாங்கிட்டே கதயடுச்சிகிட்டு போறது. கோயம்பேடுக்கு ஒரு 12:15... 12:30 வாக்குல போய் சேந்தோம். எனக்கு இன்னோரு பயம் என்ன இருந்துதுனா அடுத்த நாள் ‘ஓண்ம்’ பண்டிகை. அதனால கூட்டமா இருக்குமோ-னு நினச்சேன்.நல்ல வேள பெங்களூரூ போற வண்டி இருந்துது, காலியாவும் இருந்துது. அத ஒரு 1 மணிக்கா எடுத்தாங்க. என் ப்ரண்ட் ஜன்னலோரத்துல உக்காந்துக்க நான் அவன் பக்கத்துல செட்டில் ஆயிட்டேன். பஸ்-ச ஒரு 1 மணிக்கு மேல எடுத்தாங்க. எனக்கு டைம்-அ வீணடிக்குறது கொஞ்சம் கூட புடிக்காது. அதனால பஸ் ஸ்டார்ட் பண்ணவுடனே தூங்க ஆரம்பிச்சிட்டேன். என் ப்ரண்டும் அப்டி தான். ஆனா அவனுக்கு விதி காத்து ரூபத்துல சிரிச்சுது. நல்ல ஜில்லு-னு காத்தடிச்சி அவனோட தூக்கத்துக்கு முற்றுபுள்ளி வைக்க பாத்துட்டே இருந்துருக்கு.... ஆனா அவன் விடாமா அத காமா ஆக்கிட்டே வந்துட்டான். அவன் எழுந்த போதேல்லாம் நான் அசராமா அசந்து தூங்கிட்டே இருந்துருக்கேன். பாத்து பாத்து.. ஒரு 6:15-க்கு மேல என்ன எழுப்பி இன்னும் 30-கி.மீ தான் இருக்கு... நீ பாத்துக்கோ... நான் கொஞ்சம் தூங்குறேனு போய் பின்னால படுத்துகிட்டான். பாத்தா ஒரு 20 நிமிஷத்துலயே மண்டபம் வந்துடுச்சி. நல்ல வேளையா ஒருத்தர் அங்கருந்து கொஞ்ச தூரத்துல எறங்குனார். நான் அவன எழுப்பி வேகமா ஒடிபோய் எறங்கிட்டோம்.
கல்யாணம் 9-10:30... மணியோ 6:30 தான் ஆச்சி. 8:30 வரக்குமாவது பொழுத போக்கனுமே.. அதனால காலங்காலமா நாம உபயோகபடுத்துற டெக்னிக்கான டீக்கடை-ய தேர்ந்தெடுத்தோம். போய் ஒரு காபி அப்புறம் சில பிஸ்கட்ட உள்ள தள்ளிட்டு.... மண்டபத்துக்கு எதிர்திசை-ல நடக்க ஆரம்பிச்சோம்.
நான்: “ஏண்டா... கிருஷ்ணகிரி எப்ப வரு-னு ரெண்டு பேருக்குமே தெரியாது... அப்புறம் எப்படி இன்னும் 30 நிமிஷம் ஆகும்-னு சொன்ன??”
அவன்: ஒரு தோராயமா தான் - டா... நமக்கு முன்னாடி இருந்தவனும் அங்க தான் எறங்கனும். அவன் டிக்கெட் வாங்கும் போது பாத்தேன்.
நான்: (??????????) அவன் என்கிட்ட கிருஷ்ணகிரி எப்ப வரும்-னு நீ தூங்க போனதுக்கு அப்புறமா கேட்டாண்டா...
ரெண்டு பேரும்: :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
அப்டியே நடந்து நடந்து தமிழ்நாடு ஓட்டலுக்கு போய் சேர்ந்தோம். திரும்ப அவன் ஒரு டீ அடிக்க... நான் ஒரு மாற்றத்துக்காக ஐஸ்கீரிம் சாப்பிட்டேன்... அப்டியே பொழுத போக்கி ஒரு 9 மணிக்கா போய் சேந்தோம். கல்யாணத்த பாத்துட்டு சாப்பாட்டையும் ஒரு பிடி பிடிச்சிட்டு கிளம்புனோம். 12 மணிக்கா பஸ்-அ புடிச்சி ஒரு 6 மணிக்கு வந்து சேந்தோம்.
இவ்ளோ சொல்லிட்டு ஊர பத்தி ஒண்ணுமே சொல்லலியே... உண்மையிலியே ரொம்ப நல்லா இருந்துதுங்க. சுத்தமா, ‘ட்ராபிக்’ இல்லாம ஒரு மாறுதலா இருந்துது. அப்புறம் அங்கங்க மலையும் இருக்கு... பாக்க ரம்மியமா இருக்கு. பெங்களூருக்கு பக்கதுல இருக்குறதுனாலயா என்னன்னு தெரியல... காலைல நல்லா குளிர்ச்சியா இருந்துது. நான் காலைல 9 மணிக்கு முன்னாடி சூரியனுக்கு ‘குட்மார்னிங்’ சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. மதிய ஷிப்ட் போறதுனால முடியல. காலைல உலகம் நல்லா தாங்க இருக்கு...
சரி அவ்ளோ தான் அந்த பயணக்கதை... அடுத்த பதிவுல மீட் பண்ணுவோம்.
அடுத்த பதிவு: படக்கலவை.

9 பேர் என்ன சொன்னாங்கனா:

G3 சொன்னது…

//எனக்கு டைம்-அ வீணடிக்குறது கொஞ்சம் கூட புடிக்காது. அதனால பஸ் ஸ்டார்ட் பண்ணவுடனே தூங்க ஆரம்பிச்சிட்டேன்.//

ROTFL :)))))))))))) Ippadi thaan irukkanum :D

G3 சொன்னது…

//நான் காலைல 9 மணிக்கு சூரியனுக்கு ‘குட்மார்னிங்’ சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. //

Avvvvvvv.. Namma oorla ellam 6 manikkae Good Morning soldraaruppa suriyan :P

Porkodi (பொற்கொடி) சொன்னது…

naan kooda edho 20 naal la kalyanam panni settle agitingalakum nu odi vandha pooh ivlo thaana? :O

////எனக்கு டைம்-அ வீணடிக்குறது கொஞ்சம் கூட புடிக்காது. அதனால பஸ் ஸ்டார்ட் பண்ணவுடனே தூங்க ஆரம்பிச்சிட்டேன்.//

ROTFL :)))))))))))) Ippadi thaan irukkanum :D
//

neenga thaan G3yoda valaiyulaga vaarisa aga poringa pola? nadathunga :P

பித்தன் சொன்னது…

// அவன் டிக்கெட் வாங்கும் போது பாத்தேன். //
அப்பக் கூட நீங்க ஓசி டிக்கொட்டா,
// சில, பல கோழிய உள்ள தள்ளிட்டு //
இம்ம் நீங்க உள்ள தள்ளுன அது கோழி, அதுக உங்களை தள்ளுனா என்ன பேரு?

Karthik சொன்னது…

boss, unga nermai enakku romba putichirukku...:))

shri ramesh sadasivam சொன்னது…

:)

நல்லா இருக்கு, நீங்க கதை சொல்ற விதம்

kanagu சொன்னது…

@ ஜி3 அக்கா,

/*ROTFL :)))))))))))) Ippadi thaan irukkanum :D*/

நாம எப்பவுமே அப்டி தான்...

/*Avvvvvvv.. Namma oorla ellam 6 manikkae Good Morning soldraaruppa suriyan :P*/

அவரு வர்ற நேரத்துக்கெல்லாம் என்னால எழுந்திருக்க முடியல...

**********************************

@பொற்கொடி,

/*naan kooda edho 20 naal la kalyanam panni settle agitingalakum nu odi vandha pooh ivlo thaana? :O */

அப்டி நான் என்ன தவறு செய்தேன்... இப்டி நினைக்கிறீங்க..

/*neenga thaan G3yoda valaiyulaga vaarisa aga poringa pola? nadathunga :P*/

ஓ!!! ஜி3 அக்காவும் அப்டி தானா... :))

**********************************

@பித்தன்,

/*அப்பக் கூட நீங்க ஓசி டிக்கொட்டா, */

என்ன பண்றது.. நிதி நிலைமை அப்படி..

/*இம்ம் நீங்க உள்ள தள்ளுன அது கோழி, அதுக உங்களை தள்ளுனா என்ன பேரு*/

அவங்க பாஷை-ல என்னவோ அது.. கொக்கோ-வா இல்ல ரக்கோவா-னு தெரியல.. :))

********************************

@கார்த்திக்,

/*boss, unga nermai enakku romba putichirukku...:))*/

:))))))))))))))

*********************************

@ரமேஷ் அண்ணா,

/*
நல்லா இருக்கு, நீங்க கதை சொல்ற விதம்*/

ரொம்ப நன்றி அண்ணா... :))

Destination Infinity சொன்னது…

Krishnagiri is a nice, calm place.. Andha madhiri siriya oorula settle aaganum nu yennakku romba naala aasai... Paarpom.

Destination Infinity

Nandini Sree சொன்னது…

உங்கள் பயண கட்டுரை மிகவும் அருமை..எழுத்தாளர்கள் சுபா எழுதும் “கொஞ்சம் புனிதம், கொஞ்சம் மனிதம்” உங்களை, உங்களுக்குள்ளேயே பயணப்பட வைக்கும்...http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3