ஞாயிறு, அக்டோபர் 04, 2009

திரு திரு துறு துறு - விமர்சனம்

என்னோட அடுத்த பதிவா ’சில சில... பகிர்வுகள்’ தான் போடலாம்-னு இருந்தேன். ஆனா நேத்து திரு திரு முழிச்சிட்டு இருந்தப்போ துறு துறு-னு இந்த படத்துக்கு போய்ட்டு வந்துட்டேன். சரி படத்தை பத்தி சீக்கிரம் போட்டா நல்லா இருக்குமே இன்னிக்கே போட்டுடேன் விமர்சனத்தை.
************************************************************************************
ரொம்ப நாள் கழிச்சு ஒரு படம் பார்த்து யோசிக்காம பொலம்பாம வாய்விட்டு சிரிச்சிட்டு மட்டும் வந்து இருக்கேன். இதுக்கு முன்னாடி பொய் சொல்ல போறோம் படத்த பாத்த போது அந்த மாதிரி நடந்தது. அதிலயும் மெளலி நடிச்சிருந்தார். சரி வாங்க விமர்சனத்துக்கு போவோம்.
கதை:
மொத்தமே பத்து நாள் நடக்குற கதை தான். மெளலியின் விளம்பர கம்பெனியில் வேலை பார்க்கிறார் அஜ்மல். மெளலி அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அஜ்மலை மகன் போலவே நடத்துகிறார். அதே விளம்பர கம்பெனியில் வேலை செய்பவர் நாயகி ரூபா மஞ்சரி. நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கும் கம்பெனியை தூக்கி நிறுத்த ஒரு பெரிய கம்பெனியின் விளம்பர ஆர்டரை பிடிக்க வேண்டும் என்று முயல்கிறார் மெளலி. ஆனால் அஜ்மலின் பொறுப்பில்லாதனத்தால் தானே இந்த விளம்பரத்தின் முழு செலவையும் ஏற்பதாகவும் பிடித்து இருந்தால் மட்டும் காசு கொடுங்கள் போதும் என்று மெளலி அவர்களிடம் சொல்லிவிடுகிறார். இதற்காக வீட்டையும் அடமானம் வைக்கிறார்.
விளம்பரம் குழந்தை சம்பந்தமானது. ஆனால் சரியான சமயத்தில் குழந்தை கிடைக்காததால் அஜ்மல் தேடி அலைகிறார். ஒரு குழந்தையைப் பார்த்து பிடித்து போய் அவளின் அம்மாவை கேட்க அவள் குழந்தையை தர மறுக்கிறாள். இப்படி கேட்டு கொண்டிருக்கும் போதே தீடீரென விபத்து ஏற்பட்டு குழந்தையின் அம்மா மயக்கமாகிறாள். அவளை மருத்துவம்னையில் சேர்த்து விட்டு நிலைமையை சமாளிக்க குழந்தையை எடுத்து கொண்டு போய் காண்பிக்கிறான். கிளைண்ட்க்கு அது பிடித்து போக அடுத்த நாளே ஷீட்டிங் தொடங்கலாம் என்கிறார். சரி என்று குழந்தையை அவளின் அம்மாவிடம் கொடுக்க செல்லும் போது அவள் அங்கிருந்து காணாமல் போகிறாள். அதனால் இப்பொழுது அந்த குழந்தையை விளம்பர படத்தில் நடிக்க வைத்து கொண்டே பெற்றோரை தேடுவது என முடிவு செய்கிறார்கள். குழந்தையை தேட அஜ்மலின் நண்பனான போலீஸ் அதிகாரியும் உதவுகிறார். அஜ்மலுக்கு உதவியாக ரூபாவும் குழந்தைப் பார்த்து கொள்ள அஜ்மலின் வீட்டில் தங்குகிறார். அதன் பின் எப்படி அவர்கள் குழந்தையை சமாளித்து, விளம்பர படம் எடுத்து, பெற்றோரை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.
திரைக்கதை:
இம்மாதிரியான படங்களுக்கு கதையை விட திரைக்கதை தான் முக்கியம். அதை உணர்ந்து புது இயக்குநர் நந்தினி அவர்கள் சிறப்பாக செய்து இருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவை தெளிக்கப்பட்டு இருக்கிறது. லாஜிக் மீறல்கள் பல இருந்தாலும் அதயும் தாண்டி நம்மை யோசிக்க வைக்காமல் சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் காமெடி என்ற பெயரில் அபத்தங்களும் இருக்கின்றன.
நடிப்பு:
அஜ்மல் ஒரு கேர்-ப்ரீ சிட்டி பையன் கதைக்கு நன்றாகவே பொருந்துகிறார். ஆனால் அவருடைய எக்ஸ்பிரஷன் தான் ஒரே மாதிரி இருக்கின்றன. டைரக்டர் அப்டி சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை. ரூபா மஞ்சரி ப்ரஷ் ஆக பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார். முக்கியமாக நடிக்கிறார். நல்ல நடிப்பு.
மௌலி கலக்குகிறார். பெயரை அவர் மாற்றி மாற்றி சொல்லும் போதெல்லாம் ஒரே சிரிப்பு தான். அதே சில இடங்களில் குணசித்திர நடிப்பையும் வழங்கி உள்ளார். நிறைய படங்கள் நடிங்க சார். நாங்க கொஞ்சம் சிரிச்சிகுறோம். இவர்களை தவிர மற்றவர்களுக்கு சிறு வேடங்கள் தான் என்றாலும் அனைவரும் சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்.
இசை:
மணிஷர்மா. செம ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். பாடல் எதுவும் எடுபடவில்லை. கடைசியாக ஒரு மெலடி வருகிறது. சுமார் ரகம். பின்னனி இசை ஒகே.
எடிட்டர்:
எம்.எஸ்.சூர்யா. கத்திரியை கன கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே நினைக்கிறேன். இரண்டு பாதியுமே சரியா இருக்கு. நேரம் போவதே தெரியவிலை.
இயக்கம்:
நந்தினி அவர்கள். நல்ல ஒரு இயல்பான கதையை எடுத்து அதற்கு விறுவிறுப்பான ஒரு திரைக்கதையை அமைத்து இருக்கிறார். இவரின் திறமை கடைசி 30 நிமிடங்களில் நன்றாக வெளிப்படுகிறது. சாதாரணமாக ஒரு காமெடி படத்தில் வில்லன் கூட்டமே காமெடி பீஸாக இருக்கும்(உ: பம்மல்.கே.சம்பந்தம்). ஆனால் இங்கு இவர் கொஞ்சம் புத்திசாலிதனமாக யோசித்து காட்சிகளை அமைத்து இருக்கிறார். இன்னும் பல நல்ல படங்களை இவர் தருவார் என நம்புவோம்.
திரு திரு... துறு துறு: படத்துக்கு போங்க... சிரிச்சிட்டு வாங்க

17 பேர் என்ன சொன்னாங்கனா:

G3 சொன்னது…

Avvvvvvvv.. En templatea sutttutaa !!!!

G3 சொன்னது…

Naan paakanumnu nenacha padam :))) Seekiramae paathudaren :D

Karthick Krishna CS சொன்னது…

படத்தைப் போலவே இருந்துச்சு உங்க விமர்சனமும்

பெயரில்லா சொன்னது…

good

kanagu சொன்னது…

@ஜி3 அக்கா,

/*Avvvvvvvv.. En templatea sutttutaa !!!!*/

அது தெரியாமல் நடந்த சிறு பிழை.. :))

/*Naan paakanumnu nenacha padam :))) Seekiramae paathudaren :D*/

கண்டிப்பா பாருங்க.. :)

**********************************

@கா.கி

/*படத்தைப் போலவே இருந்துச்சு உங்க விமர்சனமும்*/

நன்றி நன்றி :))

**********************************

@அனானி..

நன்றி... :)

நட்புடன் ஜமால் சொன்னது…

சரி பார்த்துடுவோம் ...

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல விமர்சனம்.

Karthik சொன்னது…

ஹலோ, என்ன விமர்சனம் மட்டும் போட்டுட்டு இருக்கீங்க??? :)))

நல்ல விமர்சனம்..:)

Sandhya சொன்னது…

Vikatanle 43 mark koduththirukkaanga. Athukkaagave, intha padaththai paarkkanumnu irunthen. Ippa neenga recomment panniyaachchu. Poganum, Kanagu, thanks!

ஹாலிவுட் பாலா சொன்னது…

==========
ஆஹா.. இம்புட்டு நாளா... பதிவு எழுதிட்டு..., கமெண்டை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் அடிக்கறீங்க? நான் உங்களுக்கு தமிழ்ல டைப் பண்ணத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.! :)

Saranya S சொன்னது…

Ungada vimarsanam vasicha, there is no need to watch the film. joking, lol. Nicey written.

சுசி சொன்னது…

கதை தவிர மத்த அத்தனை தலைப்பில இருக்கிறதும் படிச்சேன்... கதைய படிச்சா படம் பாக்கும்போது இன்ட்ரஸ்ட் குறைஞ்சிடும் :))) நல்லா எழுதி இருக்கீங்க...

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா,

வாங்க அண்ணா.. ரொம்ப நாள் ஆச்சு உங்கள பாத்து..

/*சரி பார்த்துடுவோம் ...*/

கண்டிப்பா பாருங்க.. :)

*****************************************

@முரளிகண்ணன் அண்ணா,

/*நல்ல விமர்சனம்.*/

நன்றி அண்ணா..

****************************************

@ கார்த்திக்,

/*ஹலோ, என்ன விமர்சனம் மட்டும் போட்டுட்டு இருக்கீங்க??? :)))*/

வேற மேட்டர் எதுவும் சிக்கல தலைவா... :)

/*நல்ல விமர்சனம்..:)*/

நன்றி..

**************************************

@சந்தியா,

/*Vikatanle 43 mark koduththirukkaanga. Athukkaagave, intha padaththai paarkkanumnu irunthen. Ippa neenga recomment panniyaachchu. Poganum, Kanagu, thanks!*/

கண்டிப்பா பாருங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்... :))

*******************************************

@பாலா அண்ணா,

/*ஆஹா.. இம்புட்டு நாளா... பதிவு எழுதிட்டு..., கமெண்டை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் அடிக்கறீங்க? நான் உங்களுக்கு தமிழ்ல டைப் பண்ணத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்.! :)*/

நான் கொஞ்சம் சோம்பேறி... NHM writer - ல யே எழுத பழகிட்டேன்... ஆபிஸ்ல அது இல்ல... அதனால கூகிள்-ல உபயோகப்படுத்த சோம்பேறித்தன பட்டுட்டு இங்கலிஷ்-லையே டைப் அடிச்சிட்டு இருந்தேன்.. :) இனிமேல் தமிழில் எனது கமெண்ட் இருக்கும்..

************************************************

@சுசி,

வாங்க வாங்க..

/*கதை தவிர மத்த அத்தனை தலைப்பில இருக்கிறதும் படிச்சேன்...*/

நானும் விமர்சனத்துல கதைய படிக்க மாட்டேன்.. :))

/*நல்லா எழுதி இருக்கீங்க...
*/

நன்றி...

***********************************************

@சரண்யா,

/*Ungada vimarsanam vasicha, there is no need to watch the film. joking, lol. */

இதுல பல உள்குத்து இருப்பதாக எனக்கு தெரியுது.. :))

/*Nicey written.*/

நன்றி.. :)

Ammu Madhu சொன்னது…

appo intha padam pakkalaamkreenga!!

HaRy!! சொன்னது…

padam nala iruku nu sonanga...ana unga review matume podhum :)!

kanagu சொன்னது…

@ அம்மு,

/*appo intha padam pakkalaamkreenga!!*/

கண்டிப்பாக.. நிச்சயமாக.. :)

*********************************

@ஹாரி,

/*padam nala iruku nu sonanga...ana unga review matume podhum :)!*/

என்ன இப்டி சொல்லிட்டீங்க.. கத மொத்ததையும் சொல்லிட்டேனோ!!!!

Destination Infinity சொன்னது…

The story is interesting, I will try to see the movie ASAP...

Destination Infinity