வியாழன், அக்டோபர் 08, 2009

சில சில... பகிர்வுகள்: ஆ.வி

என்னங்க ஆ.வின்னா - ஆனந்த விகடன் தான். இந்த பதிவு ஆ.வியின் தீவிர ரசிகனுடையது. ஏனோ அவனது ரசிப்புதன்மைக்கு ஏற்றவாறு தற்போதெல்லாம் ஆ.வி இல்லை. அது ஏன் என்று தான் கீழே சொல்லி இருக்கிறேன். ******************************

சமீப காலமாவே விகடன்-நோட தரம் குறைந்து கொண்டே வருவது போல் உள்ளது. பட விமர்சனங்களும் அவ்வளவு சரி இல்லை. 'கந்தசாமி' படத்துக்கெல்லாம் எப்படி தான் 41 மார்க் கொடுத்தார்கள் என்று இன்னமும் எனக்கு புரியவில்லை. புத்தகம் முழுக்க வெறும் ஜோக்சை வாரி இறைத்தது போல் உள்ளது. 'விகடன்' தான் படிக்கிறேனா இல்லை ஏதாவது காமிக்ஸ் புத்தகம் படிக்கிறேனா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுகிறது. எங்கு நோக்கினும் ஒரே கார்ட்டூன் படங்கள் தான்.

******************************

சில வருடங்கள் முன்பெல்லாம் விகடனில் வரும் அத்தனை விஷயங்களும் நன்றாக இருக்கும். கல்லூரிக்கு போகும் போது அது தான் துணை. ஒரு விஷயம் விடாமல் படித்து விடுவேன் இப்போதெல்லாம் அதில் நான் தொடர்ந்து படிக்கும் ஒரே விஷயம் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதும் 'சிறிது வெளிச்சம்' மட்டும் தான். அதற்கடுத்து பார்த்தால் ஹாய் மதன். சத்குரு அவர்கள் தொடர்ந்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது போல உள்ளது. ஆனால் எங்க அப்பா இந்த முறை அவர் எழுதுவது நன்றாக இருக்கிறது என்று சொன்னார். ஆனால் எனக்கு தான் அதை படிக்கும் எண்ணமே வரமாட்டேன் என்கிறது. அவர் சொல்ல வேண்டியதை எல்லாம் 'அத்தனைக்கும் ஆசைப்படு' தொடரிலேயே சொல்லி விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது(நான் படித்த சிறந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று).

************************************

அதே போல் நட்சத்திர எழுத்தாளர்களின் கதைகள் என பிரசுரிக்கிறார்கள். நான் இரண்டு கதைகளை படித்தேன். இரண்டும் பளிச்சென இல்லாமல் மங்கி காணப்பட்டன(காசு கொடுக்க வில்லையா என்று தெரியவில்லை. நாம் அந்த பிரச்னைக்கும் போக வேண்டாம்). தரமாக ஏன் இல்லை என்பதே என் கேள்வி. இருக்கும் தமிழ் வார இதழ்களிலேயே அதிக விலையில் விற்பது விகடன் தான். அதே போல் தரமான வார இதழ் என்ற பெயர் பெற்று இருப்பதும் விகடன். இதன் மாற்ற போட்டி பத்திரிக்கைகளான குமுதம், குங்குமம் ஆகியவற்றை நான் படிப்பது இல்லை என்பதை விட படித்தவரையில் எனக்கு பிடிக்கவில்லை. கல்கி நல்ல புத்தகம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் படித்தது இல்லை. படிக்க வேண்டும்.

****************************************

விகடனில் இப்போது பேப்பர்களில் காணப்படும் பளபளப்பு பிரசுரிக்கும் விஷயங்களில் இல்லை. தேவையில்லாத பேட்டிகள் மற்றும் 'பிரபலங்களின்' (வேற யாரு நடிக நடிகையர் தான்) இதுவரை சொல்லாதது போன்று உப்பு சப்பற்ற விஷயங்கள் தான் வருகின்றன. என்னவோ நாட்டில் விஷயமே இல்லாதது போல் 'நயந்தாரவிற்கும் பிரபுதேவாவிற்கும்' இருக்கும் உறவை பற்றி பக்கமாக பல இதழ்களில் போடுகிறார்கள். இதனால் படிக்கும் வாசகர்களுக்கு என்ன நன்மை என்று சுத்தமாக புரியவில்லை. அதையும் போட்டால் எனது மரமண்டைக்கு அது ஏன் முக்கியம் என்று எட்டும்.

*****************************************

இதற்கிடையிலும் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விஷயம் தலையங்கம் இன்னும் சிறப்பாகவே உள்ளது. அதே போல மதனின் கார்டூன்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. விகடனில் இரண்டு ஜோக்ஸ் வாய்விட்டு சிரிக்கும்படியாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியகவும் இருந்தது. இதோ அவை:

முதலாவது:

விகடனில் இப்போது விருது வழங்குவது என்று ஒரு பகுதி(நக்கலுக்கு தான், முக்கால்வாசி மொக்கையாக தான் இருக்கும்). அதில் திரு.பரிதி இளம்வழுதி அவர்களுக்கு 'பாராட்டு பழனிச்சாமி' விருது. எதற்கெனில், முன்பெல்லாம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். இப்பொழுதெல்லாம் டி.வி, காஸ் ஸ்டவ் கொடுத்த பிறகு 'ஏழைகளின் சிரிப்பில் கலைஞர்-ஐ காண்கிறேன்' என ஓவராக உணர்ச்சிவசபட்டதற்காக :)

இரண்டாவது:

வாராவாரம் அப்போதுள்ள அரசியல் பற்றும் சினிமா விஷயங்களை வைத்து மற்ற பிரபலங்கள் எப்படி யோசிப்பார்கள் என சித்திர படத்துடன் வெளிவரும்... அதில் ராகுல் காந்தியின் தமிழக விசிட்-ன் போது விஜய்யும் அவர் அப்பா S.A.C யும் ராகுலை சந்திப்பது போல காட்சி.. தங்கபாலுவும் உடன் இருக்கிறார்(இது காமெடிக்காக எழுதப்படுவது)

(ராகுலிடம் பணிவாக)

S.A.C: தமிழகத்தோட வருங்கால முதல்வர் வந்திருக்காருங்க...

(ஓரமாக விஜய் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல நிற்கிறார்)

ராகுல்: வழக்கு எதுவும் இவர் மேல இல்லாததுனால கட்சியில உறுப்பினரா சேத்துக்கலாம்...

(பின்னாலிருந்து)

தங்கபாலு: குருவி, வில்லு படங்கள் எல்லாம் நடிச்சி அக்யுஸ்ட லிஸ்ட்-ல இருக்குராப்ப்ல.....

13 பேர் என்ன சொன்னாங்கனா:

இராஜலெட்சுமி பக்கிரிசாமி சொன்னது…

விகடன் வாசகியான நானும் இதை ஆமோதிக்கிறேன். விகடன் பரவாயில்லைங்க. குமுதம், குங்குமம் படிச்சா இந்த மாதிரி இன்னும் நாலு post போடணும்.

ஹேமா சொன்னது…

கனகு வந்தாச்சா.
ஏன் இவ்வளவு எரிச்சலோட !

G3 சொன்னது…

நான் ஆனந்த விகடன் படிக்கறத நிறுத்தி பல வருஷம் ஆகுது :)

G3 சொன்னது…

//தங்கபாலு: குருவி, வில்லு படங்கள் எல்லாம் நடிச்சி அக்யுஸ்ட லிஸ்ட்-ல இருக்குராப்ப்ல.....//

ROTFL :)))

கிறுக்கல் கிறுக்கன் சொன்னது…

100% சதவீதம் உண்மை.ஆனா படிக்கிறதை நிறுத்த முடியல.

டம்பி மேவீ சொன்னது…

UNMAI THAAN ..... VARA VARA ENAKKU VIKATAN VANGAVE MANASU VARALA...

QUALITY KURAITHU

நட்புடன் ஜமால் சொன்னது…

சரியாகவே சொல்லியிருக்கீங்க ...

ரொம்ப காலம் ஆகுது நான் ஆ.வி படிப்பதை நிறுத்தி.

Karthik சொன்னது…

என் வீட்டிலும் இதான் சொல்றாங்க. :(

HaRy!! சொன்னது…

inum intha online la padichikitu than iruken :)!

பிரசன்னா சொன்னது…

நான் மூணு வருசத்துக்கு முன்னால ஆயுள் சந்தாதாரராக வேற ஆனேன்.. இப்போ வருத்தப்படறேன்..

நான் இப்போ விரும்பி படிக்கிறதுன்னு பாத்தா மதன் பதில்கள், சிறிது வெளிச்சம், பொக்கிஷம்ன்ற பேர்ல வர்ற பழைய பிரசுரிப்புகள்..

பேப்பர்ல இருக்க தரம் அவுங்க எழுத்துல இப்போ சுத்தமா இல்ல..

kanagu சொன்னது…

@இராஜலெட்சுமி,

/*விகடன் வாசகியான நானும் இதை ஆமோதிக்கிறேன். விகடன் பரவாயில்லைங்க.*/

:(((

/*குமுதம், குங்குமம் படிச்சா இந்த மாதிரி இன்னும் நாலு post போடணும்*/

கண்டிப்பா போட வேண்டி இருக்கும் போல இருக்கு....

**********************************

@ஹேமா,

/*கனகு வந்தாச்சா.
ஏன் இவ்வளவு எரிச்சலோட !*/

வந்தாச்சுங்க.. :)
என்ன பண்றது.. நம்மளோட விருப்பமான பத்திரிக்கை இப்படி இருக்கேனு பாக்கும் போது கஷ்டமா இருக்கு..

kanagu சொன்னது…

@ஜி3 அக்கா,

/*நான் ஆனந்த விகடன் படிக்கறத நிறுத்தி பல வருஷம் ஆகுது :)/

ஏன் அக்கா??

************************************

@கி.கி அண்ணா,

/*100% சதவீதம் உண்மை.ஆனா படிக்கிறதை நிறுத்த முடியல*/

எனக்கும் அதே தான் அண்ணா... :(

***********************************

@மேவி,

/*UNMAI THAAN ..... VARA VARA ENAKKU VIKATAN VANGAVE MANASU VARALA...*/

என்னால வாங்காம இருக்க முடியல.. :(

kanagu சொன்னது…

@ஜமால் அண்ணா,

/*சரியாகவே சொல்லியிருக்கீங்க ...*/

நன்றி அண்ணா...

************************************

@கார்த்திக்,

/*என் வீட்டிலும் இதான் சொல்றாங்க. :(*/

:((((((((((((((

***********************************

@ஹாரி,

/*inum intha online la padichikitu than iruken :)*/

நல்லா இருக்கானு சொல்லவே இல்லையே.. :)))

***********************************

@பிரசன்னா,

வாங்க பிரசன்னா.. :)

/*நான் மூணு வருசத்துக்கு முன்னால ஆயுள் சந்தாதாரராக வேற ஆனேன்.. இப்போ வருத்தப்படறேன்..*/

கவலைப்படாதீங்க.. தரத்த முன்னேத்துவாங்கனு நம்புவோம் :)

/*நான் இப்போ விரும்பி படிக்கிறதுன்னு பாத்தா மதன் பதில்கள், சிறிது வெளிச்சம், பொக்கிஷம்ன்ற பேர்ல வர்ற பழைய பிரசுரிப்புகள்..*/

எனக்கும் அதே தான்... ஆனால் பொக்கிஷம் கூட பக்கங்களை நிரப்பும் ஒரு வித்தையாக தான் நான் எண்ணுகிறேன்...

/*பேப்பர்ல இருக்க தரம் அவுங்க எழுத்துல இப்போ சுத்தமா இல்ல..*/

:(((((