சனி, அக்டோபர் 10, 2009

கேலிகூத்தாகும் விருதுகள்

ஏற்கனவே பழசாகிவிட்ட இந்த மேட்டரை பத்தி அதர பழசு ஆகுறதுக்கு முன்னாடி எழுதலாம்-னு முடிவு பண்ணிட்டேன். தலைப்ப பாத்த உடனேயே யூகிச்சி இருப்பீங்க... தமிழக அரசின் சினிமா விருதுகள் 2007 & 2008 பத்தி தாங்க..

2007:

முதல்ல யார் யார் விருது வாங்குனாங்கனு பார்ப்போம்.
சிறந்த நடிகர் - ரஜினிகாந்த்(சிவாஜி)
சிறந்த நடிகை - ஜோதிகா(மொழி)
சிறந்த படம் -
முதலாவது - சிவாஜி
இரண்டாவது - மொழி
மூன்றாவது - பள்ளிகூடம்
சிறந்த இயக்குனர் - தங்கர் பச்சான்
சிறந்த குணச்சித்திர நடிகர் - M.S.பாஸ்கர் (மொழி)
சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா(ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)
சிறந்த குடும்பச்சித்திரம் - தூவானம்.

சிறப்பு பரிசு:

சிறந்த படம்: பெரியார்.
சிறந்த நடிகர் - சத்யராஜ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
சிறந்த நடிகை - பத்மபிரியா(மிருகம்)
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்

இந்த லிஸ்டில் பார்த்தோமேயானால் ஆரம்பமே கோணல், முற்றிலும் கோணல் என்கிற கதை தான்.

ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது.. அதுவும் சிவாஜி படத்தில் நடித்ததற்காக. நான் ரஜினியின் ரசிகன் தான். அவரது நடிப்பை அப்படத்தில் ரசித்தேன் மற்ற அவரது எல்லா படங்களை போலவே. ஆனால் விருது பெற தகுதியான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தவும் இல்லை. அந்த கதாப்பாத்திரத்தில் அவ்வளவு தான் செய்ய முடியும். சரி அப்படியென்றால் யாருக்கு வழங்கி இருக்கலாம்???

கற்றது தமிழ் படத்தில் நடித்த ஜீவா. நிச்சயமாக ஒரு மிக சிறந்த நடிப்பை வழங்கி இருந்தார் ஜீவா. நான் முதல் முறை பார்த்த போது மிரண்டுவிட்டேன்.

சரி... அடுத்து சிறந்த படத்திற்கு வரலாம்.

முதல் இடம்: சிவாஜி. இது எந்த வருடத்திலும் சிறந்த காமெடியாக இருக்கும். ஏனெனில் சிவாஜி அந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக வருவதற்கே முக்க வேண்டியிருக்கும். அவ்வளவு சிறந்த படங்கள் வந்தன(நான் பார்த்தவரையில் தமிழ் சினிமாவின் முக்கிய ஆண்டு என்றே கூறலாம்). சினமா மொழியிலும் சரி, வியாபாரத்திலும் சரி. அந்த படங்களை பார்ப்போம்.

மொழி, கற்றது தமிழ், கல்லூரி, பொல்லாதவன், உன்னாலே உன்னாலே, சென்னை - 600028, கீரிடம்... இதற்கெல்லாம் பிறகு தான் சிவாஜி. ஆனால் அந்த படத்தை முதல் இடத்தில் வைத்து அழகுப் பார்த்திருக்கிறார்கள் விருது கமிட்டியினர். அதற்கான காரணம் என்ன??

அடுத்து சிறந்த இயக்குனர் விருது... தங்கர் பச்சான். என்னைப் பொருத்தவரை அந்த விருதை பெற தகுதியுடையவர்கள்:

ராதா மோகன் - மொழி
வெங்கட் பிரபு - சென்னை - 600028. (புது முயற்சிக்காகவே கொடுக்கலாம்)
வெற்றிமாறன் - பொல்லாதவன்.
கல்லூரி - பாலாஜி சக்திவேல்.
இங்கும் சில அரசியல் வேலைகள் நடந்துள்ளன...

சிறந்த நடிகை - ஜோதிகா.. நல்ல தேர்வு...

சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் - சிறப்பாகவே செய்து இருந்தார். யுவனும் கற்றது தமிழில் சிறப்பாக செய்திருந்தார் என்பது என் எண்ணம்.

இதில் இந்த சிறப்பு பரிசு என்ற ஒரு கொசுறு வேலை எனக்கு சிரிப்பை தான் வரவழைக்கிறது. ஏற்கனவே மூன்று சிறந்த படங்களை தேர்ந்தெடுத்துவிட்டு அந்த மூன்றிலும் வராமல் போன ஒரு படத்திற்கு ஒரு விருது!!!!

நல்ல வேளை விருது கமிட்டியினர் கொஞ்சம் விழிப்போடு தான் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் 2007-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக 125 நாட்கள் ஓட்டப்பட்ட நமது வீர தளபதி ஜே.கே.ரீத்திஷ் அவர்கள் நடித்து வெளியான அதிரடி திரைப்படம் ‘நாயகன்’ படத்திற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. இல்லை வீரதளபதி அவர்கள் தலைவரின் மனம் குளிரும் படி நடந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.

2008:

சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம்)

சிறந்த நடிகை - சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த படம் -
முதலாவது - தசாவதாரம்
இரண்டாவது - அபியும் நானும்
மூன்றாவது - சந்தோஷ் சுப்ரமணியம்
சிறந்த இயக்குனர் - ராதா மோகன்(அபியும் நானும்)
சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ் (அபியும் நானும்)
சிறந்த குணசித்திர நடிகை - பூஜா(நான் கடவுள்)
சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)
சிறந்த குடும்ப திரைப்படம் - வல்லமை தாராயோ
சிறந்த வசனக்கர்த்தா - மு. கருணாநிதி(உளியின் ஓசை)

சிறப்பு பரிசு:

சிறந்த படம் - மெய்பொருள்
சிறந்த நடிகர் - சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை - திரிஷா ( அபியும் நானும்)
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ.

மீண்டும் ஆரம்ப கோணல் முற்றிலும் கோணல் கதை தான். சிறந்த நடிகர் விருது திரு.கமல்ஹாசனுக்கு. அவர் சிறந்த நடிகர் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இந்த படத்தில் நடிப்பை விட ஒப்பனை தான் அதிகம் இருந்தது. இவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு ஏன் காக்காய் பிடிக்க பார்க்கிறது என தெரியவில்லை(கலைஞர் டி.வி.யில் உ.போ.ஒ படத்திற்காக கமல் பேசு பேசு என தள்ளிக்கொண்டு இருக்கிறார். ரீமேக் படத்திற்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?? ஆனால் இது அவர் விரும்பியதாக இருக்காது என்பது மட்டும் திண்ணம்).

சரி அப்படியெனில் சிறந்த நடிகர் விருதை பெறுவதற்கு தகுதியானாவர்??

வாரணம் ஆயிரத்தில் சூர்யா அவ்வளாவு அருமையாக செய்து இருந்தாரே... அவருக்கு சிறப்பு பரிசு என்று குழந்தைக்கு பப்பர மிட்டாய் தருவது போல் தந்துள்ளனர்.

சிறந்த நடிகை விருது - சினேகாவிற்கு.. தகுதியானவர் தான்.

சிறந்த திரைப்படம் - மூன்றுமே அந்த விருதிற்கு லாயக்கற்றவை. அஞ்சாதே, சுப்ரமணியபுரம், பிரிவோம் சந்திப்போம், பூ, பொம்மலாட்டம் எல்லாம் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என தெரியவில்லை..

சிறந்த இயக்குநர் - ராதா மோகன் - சரியான தேர்வு இல்லை. சசிகுமாருக்கும்(சுப்ரமணியபுரம்), மிஷ்கினுக்கும்(அஞ்சாதே) சிரிப்பதா அழுவதா என்று தெரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ். விருது கமிட்டியினர் பொம்மலாட்டம் படத்தை பார்த்தார்களா என்று தெரியவில்லை. நானா படேகர் சும்மா கலக்கி இருந்தார். 2008-ல் அவருக்கு பின் தான் யாராக இருந்தாலும்.

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா... அஜந்தா படத்திற்க்காக... படம் வந்ததா என்பதே எனக்கு சந்தேகம் தான். ஹாரிஸ் ஜெயராஜின்(வாரணம் ஆயிரம்) பெயர் விடுப்பட்டதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை.

சிறந்த வசனகர்த்தா: மு.கருணாநிதி. நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது படத்திற்கு வசனம் எழுதுவது. எழுதியதற்கு தனக்கு தானே விருது கொடுத்து கொள்வது, பாராட்டி கொள்வது...

நல்ல காலமாக திரு. கருணாநிதி வசனம் எழுதிய ஒரே காரணத்துக்காகவே ‘உளியின் ஒசை’க்கு அத்துணை விருதையும் எடுத்து கொடுத்துவிடவில்லை.

இதில் திரிஷா அப்படி என்ன நடித்துவிட்டார் என அவருக்கு சிறந்த நடிகை சிறப்பு பரிசாம். பூ படத்தில் பார்வதி அவ்வளவு சிறப்பாக நடித்து இருந்தார்.

இப்படி திறமைக்கு மரியாதை தராமல் அடுத்துவர் மனதை குளிரும் படி செய்வதற்கு விருதுகள் தேவையா???

இதைப் பற்றி இன்னும் விவரமாக அறிந்து கொள்ள உண்மைத் தமிழன் அண்ணாவின் இந்த பதிவை படிக்கவும்.

10 பேர் என்ன சொன்னாங்கனா:

ஹேமா சொன்னது…

//இப்படி திறமைக்கு மரியாதை தராமல் அடுத்துவர் மனதை குளிரும் படி செய்வதற்கு விருதுகள் தேவையா???//

சரியான ஆதங்கம்.நானும் நினைப்பதுண்டு.

G3 சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ;))

டெம்ப்ளேட் ஹெட்டர் சூப்பரு. சைட்பார் மட்டும் கொஞ்சம் பாருங்க. allignment problem irukku :)

kanagu சொன்னது…

@ஹேமா,

/*சரியான ஆதங்கம்.நானும் நினைப்பதுண்டு.*/

:((((

***********************************

@ஜி3 அக்கா,

/*அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ;))*/

:((((((((

/*டெம்ப்ளேட் ஹெட்டர் சூப்பரு. சைட்பார் மட்டும் கொஞ்சம் பாருங்க. allignment problem irukku :)*/

டெம்ப்ளேட்டயே தூக்கிட்டோம்ல... :)

எனக்கு இப்ப போட்டு இருக்குறது புடிச்சி இருக்கு,, :)

Destination Infinity சொன்னது…

Sirandha isai amaippalar Ilayaraja - sariyagathaan kodutthirukkanga ana padam than thavaru - Naan Kadavul padatthukku koduthhirukkanum - Ilayaraja Kalakki irrukkaru andha padathule...

Destination Infinity

G3 சொன்னது…

Simple and neat template :)) Supera irukku :D

kanagu சொன்னது…

/*Simple and neat template :)) Supera irukku :D*/

தாங்க்ஸ் அக்கா :)

Vijay சொன்னது…

அது ஏன் 2007 ஆண்டு படங்களுக்கு இப்போ விருது கொடுக்கறாங்க. சினிமா மூலம் கோடி கோடியா பணம் பண்ணியும் இந்த சினிமாகாரங்களுக்கு விருதுன்ற பெயர்’ல இன்னும் சில லட்சங்கள் கிடைப்பது கொடுமை :-)

அடுத்த வருடத்திலிருந்து வெறும் பிரமாணப் பத்திரம் தான் கொடுக்கணும் :-)

kanagu சொன்னது…

/*Sirandha isai amaippalar Ilayaraja - sariyagathaan kodutthirukkanga ana padam than thavaru - Naan Kadavul padatthukku koduthhirukkanum - Ilayaraja Kalakki irrukkaru andha padathule..*/

வாரணம் ஆயிரம் அத விட நல்லா இருந்துதே டிஐ... :) எனக்கு நான் கடவுள விட அது புடிச்சி இருந்துது...

படத்த சொல்லலை.. ;)

Karthick Krishna சொன்னது…

ungalai tagitten. en blog pakkam vandhu paarunga...

நட்புடன் ஜமால் சொன்னது…

எங்கப்பா அந்த பதிவு ...