திங்கள், அக்டோபர் 12, 2009

நோபல் பரிசுக்கு நேர்ந்த கதி

ஏற்கனவே தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட விருது பட்டியலை பார்த்து பொருமி கொண்டிருந்த நான் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு’ என்ற செய்தியைப் படித்தவுடன் வெறுத்தே போய்விட்டேன். இரண்டையும் ஒரு சேர ஒப்பீடு செய்வது மடத்தனம் தான் என்றாலும் இரண்டும் ஏமாற்றம் என்ற அளவில் ஒத்து போகின்றன. ஒபாமா அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கான காரணம்:

சர்வதேச அளவில் ராஜீய உறவுகளை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி, அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டதற்காக அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுகிறது

முதலில் அமெரிக்கா தன்னை உலக இரட்சகராக காட்டி கொள்வதை நிறுத்தி கொள்ளலாம். இன்றைய உலகில், அதாவது இரண்டாம் உலகப் போருக்கு பின், இருக்கும் பாதி பிரச்சனையில் ஊதுகுழலாக அமெரிக்காவே செயல்ப்பட்டுள்ளது. வலுத்தவன் உலகாள்வான் என்ற உன்னத கொள்கையை பின்பற்றி தங்களுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பலப் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து இரு நாடுகளுக்கு இடையில் பகைமூட்டி தனது நவீன ஆயுதங்களை விற்று தனது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றியது என்பது வரலாறு.

இன்று ஒபாமா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது முந்தைய அமெரிக்க அதிபர்கள் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் தானே தவிர அவராக செய்வதில்லை. அவருக்கு அந்த தார்மீக பொறுப்பும் உள்ளது.

அடுத்து சொல்லப்படும் காரணம், அணுஆயுத குறைப்பு நடவடிக்கை. இப்பொழுது உலகத்திலேயே அதிக அணுஆயுதங்கள் வைத்துள்ள பட்டியலில் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இருப்பது அமெரிக்கா தான். அடுத்தவர்களை சொல்லும் முன் அவர் தன் நாட்டின் ஆயுதங்களை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தார்?? ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் தீவிரவாதிவாதிகள் வந்து குண்டுமழை பொழிவார்களா?? மற்ற நாடுகள் தங்களை காத்து கொள்ள தேவை இல்லையா?? எதற்கென்றாலும் அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க வேண்டுமா??

இதில் நோபல் பரிசுக் குழு கூறியுள்ள இன்னொரு விஷயம் ‘உலகத்தில் அமைதி ஏற்படுத்துவதற்காக முயற்சி எடுத்து கொண்டிருக்கிறாராம்'

அப்படியெனில் ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் ஆரம்ப கோட்டில் இருக்கும் போதே அவன் முதலாவதாக வர முயற்ச்சிகிறான் என முதல் பரிசைக் கொடுத்துவிடுவீர்களா???

ஒபாமா பதிவியேற்று 10 மாதம் கூட முழுமையாக முடிவடையவில்லை. அதற்குள் என்ன அவசரத்தில் தந்தார்கள் எனத் தெரியவில்லை.. அவர் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவராக இருந்தால், உலகம் முழுக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பவராக இருந்தால் ஏன் இலங்கையில் படுக்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏன் ஒரு கண்டன அறிக்கை கூட வரவில்லை???

இந்த விருதால் ஏற்பட்டு இருக்கும் ஒரு நன்மை, இனி ஒபாமாவே ஏதாவது போரைப் பற்றி மறந்துப் போய் சிந்தித்தால் கூட இந்த நோபல் பரிசு அவருக்கு தடையாய் இருக்கும்.

தனது கிடைத்த விருதிற்கு ஏற்றவாறு ஒபாமா நடந்து கொள்வார் என நம்புவோமாக!!!!

டிஸ்கி 1: நல்லகாலமாக, நமக்கு வேதியியல், இலக்கியம்ப் பற்றி எல்லாம் அதிகமாக தெரியவில்லை. இல்லையெனில் அதையும் பார்த்து கோபப்பட வேண்டி இருக்குமோ என்னவோ??

டிஸ்கி 2: வேதியியலுக்காக நோபல் பரிசு வென்ற நமது நாட்டு விஞ்ஞானி டாக்டர். வெங்கட்ராமன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

10 பேர் என்ன சொன்னாங்கனா:

Karthik சொன்னது…

ரொம்பவும் ஓவரா போய்ட்டாங்க...

//தனது கிடைத்த விருதிற்கு ஏற்றவாறு ஒபாமா நடந்து கொள்வார் என நம்புவோமாக!!!!

கடைசியில் பாஸிட்டிவா முடிச்சிருக்கீங்க.. நம்புவோம்.. :)

G3 சொன்னது…

Adada.. thambi ippo ellam adikkadi tension aagaraappola theriyudhae :P

Sammy சொன்னது…

இந்த விருதுக்காக nomination கடைசி நாள் பெப்ரவரி 1, 2009. ஒபாமா பதவி எடுத்து ஜனவரி 20, 2009. ஆகா மொத்தம் பத்து நாள் இவர் வேலை பார்த்து எவனோ ஒருவன் பரிந்துரைதிருகான் இவர் பெயரை.
அந்த பத்து நாள்ல ரெண்டு நாள் பதவி எடுகரதுகே போயிடுச்சு, ஏன்னா முதல் தடவை தப்பா பதவி எடுத்தார்.

ஹேமா சொன்னது…

//ஒபாமா பதிவியேற்று 10 மாதம் கூட முழுமையாக முடிவடையவில்லை. அதற்குள் என்ன அவசரத்தில் தந்தார்கள் எனத் தெரியவில்லை.. அவர் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறவராக இருந்தால், உலகம் முழுக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பவராக இருந்தால் ஏன் இலங்கையில் படுக்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏன் ஒரு கண்டன அறிக்கை கூட வரவில்லை???//

அடிச்சுக் கேளுங்க கனகு.சரியான சந்தேகம்.எனக்கும் இருக்கு.எங்க போய் யாருக்கிட்ட கேக்க முடியும் !

இராஜலெட்சுமி பக்கிரிசாமி சொன்னது…

:( :(

வினோத்கெளதம் சொன்னது…

என்ன பண்ணுறது ஓவரா தான் இருக்கு
நல்லா எழுதி இருக்கீங்க..

விக்னேஷ்வரி சொன்னது…

இரண்டையும் ஒரு சேர ஒப்பீடு செய்வது மடத்தனம் தான் என்றாலும் இரண்டும் ஏமாற்றம் என்ற அளவில் ஒத்து போகின்றன. //

சரியா சொன்னீங்க.

முதலில் அமெரிக்கா தன்னை உலக இரட்சகராக காட்டி கொள்வதை நிறுத்தி கொள்ளலாம். //

இது ரொம்ப சரி.

ரொம்ப வருத்தமா இருக்கு, நோபல் பரிசோட நிலைமைய நினச்சு.

kanagu சொன்னது…

@கார்த்திக்,

/*ரொம்பவும் ஓவரா போய்ட்டாங்க...*/

:(((

/*கடைசியில் பாஸிட்டிவா முடிச்சிருக்கீங்க..*/

நம்மால முடிஞ்சது.. :)

*********************************

@ஜி3 அக்கா,

என்ன பண்றது.. அப்டி தான எல்லாம் இருக்கு :((((

**********************************

@சமி,

வருக வருக...

/*கடைசி நாள் பெப்ரவரி 1, 2009. ஒபாமா பதவி எடுத்து ஜனவரி 20, 2009. ஆகா மொத்தம் பத்து நாள் இவர் வேலை பார்த்து எவனோ ஒருவன் பரிந்துரைதிருகான் இவர் பெயரை.
அந்த பத்து நாள்ல ரெண்டு நாள் பதவி எடுகரதுகே போயிடுச்சு, ஏன்னா முதல் தடவை தப்பா பதவி எடுத்தார்*/

நான் கூட அத படிச்சேன்.. ஆனா இந்த 10 மாசத்த கணக்குல எடுத்துக்குவாங்க-னு நெனச்சு சொல்லல..

**********************************

@ஹேமா,

/*அடிச்சுக் கேளுங்க கனகு.சரியான சந்தேகம்.எனக்கும் இருக்கு.எங்க போய் யாருக்கிட்ட கேக்க முடியும் */

யார் கிட்ட கேட்டாலும் பதில் வர மாட்டேங்குது :((

***********************************

@இராஜலெட்சுமி,

:((((((((((

***********************************

@வினோத்கெளதம்,

வாங்க வாங்க...

/*நல்லா எழுதி இருக்கீங்க.*/

நன்றிங்க..

**********************************

@விக்னேஷ்வரி,

/*ரொம்ப வருத்தமா இருக்கு, நோபல் பரிசோட நிலைமைய நினச்சு.*/

எனக்கும் அதே தாங்க.. :(

கிறுக்கல் கிறுக்கன் சொன்னது…

தமிழ் நாட்டின் ‘நமக்கு நாமே’ திட்டம் அமெரிக்காவரை சென்றிருக்கிறது அவ்வளவே..

kunthavai சொன்னது…

இப்படி பேச்சுக்கே விருது கொடுத்தார்கள் என்றால், நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு விருது கொடுத்திருக்கலாம்.