செவ்வாய், அக்டோபர் 20, 2009

ஆதவன் - விமர்சனம்

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். சூர்யா-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி. இருவருமே கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளில் வெற்றியை மட்டுமே சுவைத்து இருப்பதால் எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தியது. ட்ரெயிலரும் பாடல்களும் நன்றாக இருக்க, நாம் எதிர்பார்த்தது நல்ல படத்தை. கொடுத்து இருக்கிறார்களா என்று பார்ப்போம்.
கதை:

கூலிக்கு கொலை செய்பவராக சூர்யா. அவரின் குடும்பத்திற்கே அது தான் தொழில். குழந்தைகளை கொன்று அவர்களது உடல் உறுப்புகளை விற்கும் குழுவின் தலைவன், அந்த வழக்கை விசாரிக்க வரும் அதிகாரியை கொல்ல சொல்லி சூர்யாவின் குழுவிற்கு சொல்கிறார். அந்த அதிகாரியை கொல்வதற்காக அவரின் வீட்டிற்கே சென்று வேலை செய்ய வந்தது போல நடிக்கிறார். அடுத்து அவரது திடுக்கிடும்(!?!?!?!) பின்னனிகள் ப்ளாஷ்பேக்குகளாக விரிய படத்தை வழக்கம் போல சுபமாக முடிக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி பெரிய குடும்பம், வடிவேலு-சூர்யா கூட்டணி நகைச்சுவை என கொஞ்சம் வேகமாக நகருகிறது. அது எப்படி கொஞ்சம் வேகமாக நகரலாம் என்று ஆங்காங்கு வேகத்தடைகளாக பாடல்கள். இரண்டாவது பாதி முழுக்க நாம் பல படங்களில் பார்த்த செண்டிமெண்ட் காட்சிகள். என்ன அழுகைக்கு பதில் சிரிப்பு தான் வருகிறது. லாஜிக் அப்டிங்குறவங்களுக்கெல்லாம் ஒரே பதில் தான்... இது கே.எஸ்.ஆர் படம். அதுக்கு மேலயும் லாஜிக்க நீங்க தேடுனா... சாரி பாஸ் என்பது தான் பதில்.

ரமேஷ் கண்ணா இன்னும் கூட இந்த கதைய தேத்தி இருக்கலாம்..

நடிப்பு:

சூர்யா உண்மையான ஒரு ஹீரோவா இதுல நடிச்சு இருக்கார். அதாவது இந்த பல கட்டடங்கள்-ல இருந்து ஜம்ப் பண்றது. அப்பாவும் காதலியும் மாட்டிக்கும் போது குண்டடிய தான் வாங்கி காப்பாத்துறது மட்டும் இல்லாம வில்லனுக்கு அத அப்டியே திருப்பி கொடுக்குறது... அப்பப்பா... இவர் மட்டும் தான் இத செய்யாம இருந்தார். அவரையும் மாத்திட்டாங்க. அடேங்கப்பா என்றேல்லாம் சொல்ல வைக்கும் அளவுக்கு நடிக்க எதுவும் இல்லை. சும்மா வந்து போறார். அந்த 10 வயசு சூர்யா எல்லாம் பார்க்க ஆச்சர்யத்த விட சிரிப்பு தான் வருது. தேவையற்ற செலவு. நயந்தாரா.. பல படங்கள் கழித்து இந்த படத்தில் சிறிது ரசிக்கும்படி இருக்கிறார். சிறிது நடிக்கவும் செய்து இருக்கிறார்.

நகைச்சுவைக்கு வடிவேலு. பல படங்களுக்கு பிறகு ‘வெடி’வேலுவாக மாறி நம்மை சிரிக்க வைக்கிறார். முதல் பாதி நகருவதே இவரால் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் சரோஜா தேவியும், ஆனந்த் பாபுவும். சரோஜா தேவி அவர்களின் அந்த கொஞ்சி பேசும் நடிப்பை தாங்க முடியல... கொல்றாங்க. ஆனந்த்பாபுவ அவர் தான் நடிச்சு இருக்கார்-னு கன்ஃபார்ம் பண்ண்வே கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. ரொம்ப தான் ஆள் நோடிஞ்சு போய் இருக்கார். ரமேஷ் கண்ணாக்கு ஒரு வேத்து வேடம். மியூசிக் பைத்தியம்-னு சொல்லிட்டு நம்மள பைத்தியம் ஆக்குறாரு. வில்லன்கள் எல்லாம் அவங்க வேலையான வாய் சவடல்கள நல்லாவே கொடுத்து இருக்காங்க.

இசை:

ஹாரிஸ் ஜெயராஜ் தன்னோட வழக்கமான பாணியில இசையமைச்சிருக்கார். ‘ஹசிலி பிசிலி’யும், ‘வாராயோ வாராயோ’ பாடலும் என் பேவரிட். அதுவும் ‘வாராயோ வாராயோ’ பாடல் வர இடமும் சரி, அதன் கான்சப்ட், அதை படமாக்கிய விதம்.. மிக அருமை. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் பின்னனி இசையில் மனிதருக்கு சல்ப்பேடுக்கவில்லை. ஒரே இரைச்சல் தான்.

ஒளிப்பதிவு:

ஆர்.ஏ.கணேஷ். நல்லா பண்ணியிருக்காரு. பாடல் காட்சிகள் பார்ப்பதற்கு குளுமை. ஆக்‌ஷன் காட்டிகளில் வேகமாக பயணிக்கிறார். ஆனால் வீட்டிற்குள் எடுத்த காட்சிகள் சிலவற்றில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.

எடிட்டிங்:

டான் மாக்ஸ். இந்த படம் ஏன் 3 மணி நேரம் ஒடுகிறது என்ற காரணம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. பல காட்சிகளை வெட்டி எறிந்து படம் பார்ப்பவர்களின் துன்பத்தை சிறிது குறைத்து இருக்கலாம். சொர்க்கத்துக்கு போக வேண்டிய நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாரு-னு தான் சொல்லணும்.

இயக்கம்:

கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் இருந்து நான் கலைப்படைப்பெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. மசாலா படம் சிறு புதுமைகளோடு... அவ்வளவே. மசாலா படத்தை மீண்டும் தந்து இருக்கும் இவர் அந்த சிறு புதுமையை மறந்துவிட்டார். இரண்டாவது பாதி முழுக்க பல படங்களின் கதை மற்றும் காட்சிகளின் நெடி.

ஆதவன் - சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார் கணக்கில் மற்றோரு படம்.

13 பேர் என்ன சொன்னாங்கனா:

Annam சொன்னது…

me the firstuu:)

Sammy சொன்னது…

நல்ல விமர்சினம் எழுதிருக்கீங்க, ஆனா எனக்கு இந்த படம் சுத்தமா பிடிக்கலை, வடிவேலு நிறைய இடத்தில் வரார்.

பேராண்மை பார்த்தாச்சு, இதை விட நல்ல படம்,

Karthick Krishna CS சொன்னது…

//இவரிடம் இருந்து நான் கலைப்படைப்பெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை//

ROYALTY KUDUNGA ;)

தாரணி பிரியா சொன்னது…

அது எப்படி கனகு மொக்கை படமா அமையுது உங்களுக்கு மட்டும். எனக்கு கிடைச்ச தகவல்கள் படி படம் சகிக்கலை. தயவு செஞ்சு போயிர வேண்டாமுன்னு சொன்னாங்க. வேட்டைக்காரன் கிட்ட இருந்தாவது தப்பிச்சுடுப்பா :)

GAYATHRI சொன்னது…

superb!!!adhum kadaisiya surya k.s.r kanakkil inoru padam!!!konnuteenga!!:):):)

கிறுக்கல் கிறுக்கன் சொன்னது…

இந்த படத்திற்காக வேறொரு படத்தை சன் குழுமம் நிறுத்தி வைத்ததாம், 2009 சூப்பர் காமெடி

HaRy!! சொன்னது…

அருமையான விமர்சனம் மச்சா, படம் இனும் இங்க ரிலீஸ் ஆகல , அனா கொஞ்சம் ஓவர் பிட் போட்டு இருக்கு நு சொணங்க!!!! கலக்கல்

kanagu சொன்னது…

@அன்னம்,

/*me the firstuu:)*/

வாங்க மேடம் :) விமர்சனத்த பத்தி ஒண்ணும் சொல்லலியே... :)

*********************************

@சாமி,

/*நல்ல விமர்சினம் எழுதிருக்கீங்க, */

நன்றிங்க :)

/*பேராண்மை பார்த்தாச்சு, இதை விட நல்ல படம்,*/

நான் இனிமேல் தான் பாக்கணும்ங்க :)

*********************************

@கா.கி,

/*ROYALTY KUDUNGA ;)*/
கொடுத்துட்டா போச்சு :)

**********************************

@தா.பி அக்கா,

/*அது எப்படி கனகு மொக்கை படமா அமையுது உங்களுக்கு மட்டும். */

அது என்ன பண்றது அக்கா... உங்களையெல்லாம் துன்பத்துல இருந்து காப்பத்தணுமே-னு இப்படி பாக்க வேண்டி இருக்கு ;)

/*வேட்டைக்காரன் கிட்ட இருந்தாவது தப்பிச்சுடுப்பா :)*/

:)))))))))))

********************************

@காயத்ரி,

வாங்க காயத்ரி.. முதல் வரிகைக்கு நன்றி... :)

/*adhum kadaisiya surya k.s.r kanakkil inoru padam!!!konnuteenga!!:):):)*/

நன்றி நன்றி.. :)

**********************************

@கி.கி அண்ணா,

/*இந்த படத்திற்காக வேறொரு படத்தை சன் குழுமம் நிறுத்தி வைத்ததாம், */

அந்த படம் இன்னும் காமெடியா இருக்கும்னு நினைக்கிறேன் :)

*********************************

@ஹாரி,

/*அருமையான விமர்சனம் மச்சா, /

நன்றி மச்சி.. :) படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப ஒவர் :(

gils சொன்னது…

hmm..mothathula padam dvdla patha okngaraeel :) nanri nanri

shri ramesh sadasivam சொன்னது…

நடுநிலையான விமர்சனம்.

படம் பார்க்கவில்லை. பார்க்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

ஈரம் பார்த்தீர்களா? பாருங்கள். எனக்கு பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம். :)

Karthik சொன்னது…

பிச்சு மேய்ஞ்சிட்டீங்க.. :))))

An alien Earthling சொன்னது…

Nalla vimarsanam, Kanagu! Ithai padiththapiragu, Aadhavanai pozhuthuporkkukavathu paarkalam enru ninaikiraen!

kanagu சொன்னது…

@கில்ஸ் அண்ணா,

/*hmm..mothathula padam dvdla patha okngaraeel :) */

கண்டிப்பாக... :) :)

**********************************

@ரமேஷ் அண்ணா,

/*நடுநிலையான விமர்சனம்.*/

நன்றி அண்ணா.. :)

/*ஈரம் பார்த்தீர்களா? பாருங்கள். எனக்கு பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம். :)*/

பார்த்தேன் அண்ணா... எனக்கும் பிடித்து இருந்துது.. :) :)

**********************************

@கார்த்திக்,

/*பிச்சு மேய்ஞ்சிட்டீங்க.. :)))*/

நன்றி தலைவரே!!

***********************************

@ராஜ்,

/*Nalla vimarsanam, Kanagu! Ithai padiththapiragu, Aadhavanai pozhuthuporkkukavathu paarkalam enru ninaikiraen!*/

நன்றி நன்றி.. :)

பொழுதுபோக்குக்காக பார்க்கலாம்.. ஆனால் இதை விட பேராண்மை நன்றாக இருப்பதாக சொல்றாங்க... அத பார்க்கலாம்.