வெள்ளி, அக்டோபர் 02, 2009

படக்கலவை - I

போன மாசம் சில படங்களை பாத்தேன்... அதைப் பற்றிய பதிவு தான் இது.
காதல் கவிதை:
அந்த கல்யாணத்துக்கு போய்ட்டு வரும் போது பஸ்ஸில் ஒடிய படம். நான் இதுவரைப் பார்த்தது இல்லை. இனி பார்க்கும் எண்ணமும் இல்லை. அதனால் நமது வழ்க்கமான தூக்கத்தை போட ஆரம்பித்தேன். ஆனால் இந்த பாழாய் போன தூக்கம் சிறிது நேரம் கலைந்தது. விழித்து பார்த்தால் படம் கிட்டதிட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஆனால் காமெடி சீனை அங்கேயா கொண்டுப் போய் வைப்பார்கள். நாயகன் பிரஷாந்த்தும், நாயகி இஷா கோபிகரும் பார்க்குறாங்க ஆனா அவங்க தான் இவங்க-னு தெரியாம காதல் பண்றாங்க(வித்தியாசமான கதை!!!!!). இஷா கோபிகருக்கு அவங்க காதலிக்குறது பிரஷாந்த் தான் -னு தெரிஞ்சிடுது. உடனே பல சிக்னல்கள கொடுக்குறாங்க. ஆனா சிகப்பு சிக்னல் போட்ட மாதிரி பிரஷாந்த்தோட காதல் வண்டி ஸ்டார்ட் ஆகவே மாட்டேங்குது. இஷா காட்டுற க்ரீன் சிக்னல் எல்லாத்தையும் ரெட்டுன்னே நினச்சிகிறார். இதனால மனம் ஒடஞ்சி(??????) போற இஷா தற்கொலை பண்ணிகுறது-னு முடிவு பண்ணுறாங்க. இவங்க பேய் ஆயிட கூடாது-னு அவங்க வீட்டுல இருக்குற குட்டி பிசாசுங்க விளையாட்டு மூலமா தடுத்துடறாங்க(அட... தெரியாம தான். நம்புங்கப்பா). அப்புறம் தான் முக்கிய உச்சகட்ட காமெடியே...
இஷா கோபிகர் சின்ன பிசாசுங்களோட கண்ணாம்பூச்சிய அவங்களோட மொட்டை மாடியில விளையாடுறாங்க. இவங்க துணிய கண்ணுல கட்டிக்குறாங்க. பசங்க எல்லாம் கீழ போயிடுறாங்க. உடனே இஷா கிரிமினலா யோசிச்சி மொட்டை மாடியில இருக்குற கம்பி மேல நடக்க ஆரம்பிக்கறாங்க. பிரஷாந்த்துக்கு இப்ப தான் மேட்டரே தெரியுது. உடனே படுவேகமா கிளம்பி வர்றாரு. இஷாவும் விடமா கம்பி மேல வித்த காட்டுறவங்கள விட அபாரமா நடக்குறாங்க. வித்த காட்டுறவங்களாவது கைல கம்ப பாலன்ஸ் பண்ண வச்சி இருப்பாங்க. இவங்க சான்ஸே இல்ல. பிரஷாந்த் மேல வர அதுவரைக்கும் நல்லா நடந்துட்டு இருந்தவங்க கீழ விழுந்துடுறாங்க..(அய்யையோ!!!!). ஆனா ஹீரோபிரஷாந்த் அவங்கள் கீழ விழாம புடிச்சி காப்பாத்தி கவிதைய முடிக்கிறார்... ஸ்ஷபாபாபாபா.... எனக்கு பக்கத்துல பஸ்-ல உக்காந்து இருந்தவர் வாய்விட்டு சிரிச்சிட்டு இருந்தார்... இயக்குனர் வாழ்க!!!!
Race to witch mountain:
இந்த படம் ட்ரீட்-ல ஒசி-ல பாத்த படம். அதுவும் சத்யம்-ல. எனக்கு செம தூக்கம். போன கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன். ஆனா கூட வந்திருந்தவங்க எல்லாம் என்னாடா இவன் மட்டும் நிம்மதியா தூங்குறானே சொல்லிட்டு தூக்கத்த கொஞ்ச நேரத்துல காலி பண்ணிட்டாங்க. சரி அப்டினு முழிச்சி பாக்க ஆரம்பிச்சேன். வழக்கமான ஏலியன் கத. என்ன ஏலியனா ரெண்டு சின்ன பசங்க(வித்தியாசத்த காட்டுறாங்களாம்). எல்லாம் தெரிஞ்ச கத தாங்க... அவங்கள புடிச்சி ஆராய்ச்சி பண்ணனும்-னு ஒரு கூட்டம். அவங்கள காப்பாத்துற நம்ம ROCK. நல்லா தான் பண்ணி இருக்காரு. WWF ட்ரெயினிங்-னா சும்மாவா!!!!! நம்மளோட ஒரு தெய்வீக காதல், முரட்டு அண்ணன், பாசமிகு அம்மா, நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, தனி காமெடி ட்ராக் பார்முலா மாதிரி அங்க இந்த ஏலியன் கதப் போல... ஹீம்ம்ம்ம்ம்....
ஆனா இப்ப இதுல இருந்து வித்தியாசப்பட்டு ஒரு படம் வந்திருக்காம். District 9. கலக்கலா இருக்காம். நான் சத்யம்-ல பாக்குறதுக்காக வெயிட்டிங்க். ஆனா நம்ம ஊர்-ல ரீலிசாகுறதுக்கான அறிகுறியே தெரியல..
Iron man:
இது நான் அடுத்ததாக என்னோட பிசி-ல பாத்த படம். சும்மா சொல்ல கூடாது.. நல்லா எடுத்து இருக்காங்க. Shark industries-ஓட சி.இ.ஒ டோனி ஷார்க் ஒரு மிக சிறந்த மெக்கானிக். அவருக்கு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு பக்க பலமா இருக்குறது அவரது அப்பாவின் நண்பர் ஒபாடியா ஷா. அவரோட நிறுவனத்தின் பணி என்னன்னா போருக்கான ஆயுதங்கள தயாரிக்குறது. அவர் ஆப்கானிஸ்தானுக்கு தான்னோட ஜெரிக்கோ ஏவுகணையோட சக்திய பத்தி சொல்ல போறாரு. அங்க அத காமிச்சி முடிச்ச உடனே கிளம்பும் போது தீவிரவாதிங்க அவர தாக்கி கடத்திடுறாங்க. அவங்க அவர அதே மாதிரியே ஒரு ஏவுகணைய தயாரிக்கணும்-னு சொல்றாங்க. ஆனா அவர் அதுக்கு பதிலா இரும்பிலான ஒரு கவச உடைய தயாரிச்சு சண்ட போட்டு தப்பிச்சிடுறாரு. அதுக்கு அப்புறமா அவரோட கம்பெனியோட ஆயுதங்களால நெறய பேர் இறக்க நேரிடுறதுனால தன்னோட கம்பெனி ஆயுதங்கள் தயாரிக்க கூடாது-னு முடிவு பண்றாரு.
தன்னோட கம்பெனி தயாரிச்ச ஆயுதங்கள அழிக்கனும்-னு முடிவு பண்றாரு. அதுக்காக தன்னோட இரும்பு கவச உடைய மெருகேத்தி இன்னும் நவீனப்படுத்தி நேரா அவரே போய் அழிக்கிறாரு. இதுக்கு நடுவுல அவர யார் கடத்த சொன்னாங்க அப்டிங்குற உண்மை தெரிஞ்சி போகுது. அது யாரு... அப்புறம் அவருக்கும் வில்லனுக்கும் நடக்குற பைட்.
நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. அதை விட Special effects சூப்பர். அதுவும் அயர்ம் மேனும் சில விமானங்களும் சண்டை போடுற காட்சிகள் செம செம...
இந்த படத்த டைம் இருந்தா கண்டிப்பா பாருங்க.
இன்னிக்கு காந்தி ஜெயந்தி... எப்டியோ அவர மறந்துட்டாலும் அவரோட பிறந்த நாள மறக்காம விடுமுறை கொடுத்துடறாங்க... ஹீம்ம்ம்ம்ம்... இருந்தாலும் அனைவருக்கும் எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.
இன்னிக்கு தினமணி-ல இது சம்பந்தமா ஒரு கார்டூன் வந்துருந்துது. என்னோட பேவரிட் கார்ட்டூனிஸ்ட் மதி வரஞ்சிருந்தார். சரியா தான் இருந்துது.
டிஸ்கி-1: ஒரே பதிவுல எல்லா படத்தையும் போடணும்-னு தான் நினச்சேன். ஆனா பதிவு இப்பவே ரொம்ப பெரிசா போயிட்டதுனால வேற பதிவுல மத்த படத்த பத்தி பொடுறேன்.
டிஸ்கி-2: திரு.மதி அவர்களோட வேற சில சிறந்த கார்ட்டூன்கள பகிர்ந்துக்கலாம்-னு இருக்கேன்.
அடுத்த பதிவு: சில சில... பகிர்வுகள்

9 பேர் என்ன சொன்னாங்கனா:

ஆயில்யன் சொன்னது…

காந்தி ஜெயந்திக்கு தினமணியில வந்த கார்ட்டூன் அட்டகாசம் !

வருத்தமான விசயமா இருந்தாலும் சூப்பரா சொல்லியிருந்தாரு மதி !

HaRy!! சொன்னது…

lage raho munnabhai padathai parthen, just after reading this post!:)

G3 சொன்னது…

Cartoon superu :)))

//திரு.மதி அவர்களோட வேற சில சிறந்த கார்ட்டூன்கள பகிர்ந்துக்கலாம்-னு இருக்கேன்.//

Kandippa podunga :)))

Ponnarasi Kothandaraman சொன்னது…

Looks like a nice space here! :)
Matra pathivugalayum padikka viraivil varugiren :D
Thanks for dropping by...

kanagu சொன்னது…

@ ஆயில்யன் அண்ணா,

வாங்க வாங்க..

/*வருத்தமான விசயமா இருந்தாலும் சூப்பரா சொல்லியிருந்தாரு மதி*/

அவர் எப்பவுமே அப்படி தான்..

************************************

@ஹேரி,

நான் இன்னும் அந்த படத்த பாக்கல நண்பா...

***********************************

@ஜி3 அக்கா,

போஸ்ட்ட படிச்சிங்களா இல்லையா..?? :)))

படங்கள பத்தி ஒண்ணுமே சொல்லலியே..

/*Kandippa podunga :)))*/

போடுகிறேன்..

***********************************

@பொன்னரசி,

வாங்க வாங்க...

/*Matra pathivugalayum padikka viraivil varugiren :D */

கண்டிப்பா வாங்க..

/*Thanks for dropping by...*/

உங்களுக்கும் எனது நன்றிகள்... :))

முரளிகண்ணன் சொன்னது…

காதல் கவிதையை கந்தல் ஆக்கிட்டீங்களே?

அருண்மொழிவர்மன் சொன்னது…

காதல் கவிதை பற்றிய உங்கள் பகிர்வு பார்த்தேன். இந்தப் படத்தில் வரும் சில வசனங்கள் நன்றாக இருக்கும். அது தவிர, அகத்தியனின் திரைப்படங்காளில் வரும் கதா பாத்திரங்கள், அவர்கலின் மன நிலை, குண இயல்புகள், அதற்கான காரணாங்கள் என்பன தெளிவாக கூறப்பட்டிருக்கும். அந்த அளாவில் எனக்கு இந்தப் படம் அதிகம் பிடித்தமாகவே இருந்தது.

இதில் பிரஷாந்தைப் பார்த்தால், அவரது வீட்டுச் சூழல், பெற்றோரின் உறவுமுறைகள் போன்றாவை அவர் குண இயல்புகளை எப்படி பாதித்தன என்றும், மணிவண்ணன், பிரஷாந்த் எப்படி அம்பிகாவில் இயல்பிற்கு காரணமானார்கள் என்றும் அழகாக சொல்லப்பட்டிருக்கும்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

///பஸ்-ல உக்காந்து இருந்தவர் வாய்விட்டு சிரிச்சிட்டு இருந்தார்... இயக்குனர் வாழ்க!!!!///

ஹா.. ஹா.. ஹா.. அது யாருன்னு நினைக்கறீங்க?

அகத்தியன்!

kanagu சொன்னது…

@ முரளிகண்ணன் அண்ணா,

வருகைக்கு நன்றி..

/*காதல் கவிதையை கந்தல் ஆக்கிட்டீங்களே?*/

அதன் கடைசி 30 நிமிடங்கள் அப்படி தான் அண்ணா இருந்தது... :(

************************************************
@அருண்மொழிவர்மன் அண்ணா,

வருகைக்கு நன்றி..

நான் அந்த படத்தை முழுக்க பார்க்கவில்லை.. அதே போல் கடைசி அரை மணி நேர
காட்சிகள் நகைப்புக்குரியதாகவே இருந்தன..

************************************************

@பாலா அண்ணா,

வருகைக்கு நன்றி அண்ணா...

/*ஹா.. ஹா.. ஹா.. அது யாருன்னு நினைக்கறீங்க?

அகத்தியன்!
*/

நல்ல இயக்குனர்.. எனக்கு இந்த விஷயம் தெரியாது..
ஆனால் 30 நிமிஷம் அப்டி தான் இருந்துச்சி.. :(