ஞாயிறு, நவம்பர் 29, 2009

யோகி - விமர்சனம்

பருத்தி வீரனுக்கு பிறகான அமீரின் படம் என்பதால் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் சென்றேன். கிட்டதிட்ட ஒரு முழுமையான படமாக பருத்தி வீரன் அமைந்திருந்தது. அதில் மதுரை கிராமத்து மண்ணின் மைந்தர்களை பதிவு செய்த அவர் இந்த படத்தில் சென்னையிலுள்ள சேரிகளை கதைக்களமாக எடுத்து கொண்டுள்ளார். அதே போன்றதொரு ஒரு மிரட்டலை ஏற்படுத்தியுள்ளாரா??? பார்ப்போம்.

கதை:

கூலிக்கு கொலை செய்பவனாக யோகி. அவனுக்கு கீழ் மூன்று பேர். எதைப் பற்றியும் கவலைப்படாதவனாகவும் பணத்திற்க்காக எதையும் செய்பவனாக இருக்கின்றான். ஒரு நாள் இரவு ஒரு ஹோட்டலில் கொள்ளையடிக்க செல்கின்றனர். அங்கு கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது யோகி ஒரு காரில் ஏறி தப்பிக்கிறான். காரை விட்டு இறங்கும் சமயம் அந்த காரில் ஒரு குழந்தையை காண்கிறான். அதை தன்னுடன் எடுத்து செல்கிறான். தானே வள்ர்கவும் விரும்பி தன்னுடனே வைத்து கொள்கிறான்.

இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் எல்லை மீறி போவதால் அந்த ஏரியாவின் பெரிய தாதாவான திருநா-வை போலீஸ் அணுகுகிறது. மறுபுறம் குழந்தையை காணவில்லை என அதன் அம்மா பரிதவிக்க அவளது கணவனோ அதை எப்ப்டியாவது கொன்றுவிட திட்டமிடுகிறான். அதன் பிறகு, யோகி பிடிப்பட்டானா, குழந்தை தாயுடன் இணைந்ததா என்று கிளைமாக்ஸில் காட்டுகிறார்கள்.

நடிப்பு:

அமீர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். முகத்தை சீரியாஸாக வைத்து கொண்டு அவ்வப்போது அதே டோனிலியே அனைத்து வசனங்களையும் உச்சரிக்கும் ரெளடி வேடம். உடம்பையெல்லாம் முறுக்கேற்றி கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் சிறிது கத்துகிறார். அப்போது அவரையும் மீறி சசிக்குமார் தான் எனக்கு வெளிப்பட்டார். ஊர்ல எல்லாரும் அப்டி தான் போல. அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கேரக்டர் அந்த குழந்தை தான். அழகாக இருந்தது. சில போலீஸ்கள், பல ரெளடிகள் தங்களது பணிகளை செவ்வனே செய்கின்றனர்.

கதாநாயகி மதுமிதாவிற்கு கொஞ்சம் வித்தியாசமான வேடம். வழக்கம் போல நன்றாகவே செய்து இருக்கிறார். அமீரை பார்த்து பயப்படும் போதும் சரி, பின்பு புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்ளும் போதும் நல்ல வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் யோகியின் அப்பாவின் நடிப்பும் அபாரம். அவர் அவர் குடும்பத்தில் இருக்கிம் ஒவ்வொருவரையும் அடிக்கும் போதும் ஏதோ நம்மயே அடித்து வெளுப்பதை போல் உள்ளது. ஒரு வெறுப்பு ஏற்படுகிறது அவர் மேல். அதனால் அவர் பெற்றது வெற்றியே.

இசை:

யுவனின் இசையில் பாடல்களை கேட்டேன். ஆனால் பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. ‘சீர் மேவும் கூவத்திலே’ மட்டும் ஒகே-வான ஒரு நம்பர். பின்னனி இசை நன்றாக இருந்தது. ஆனால் தொடர்ந்து ஒரே இசை தான் பின்புலத்தில் ஒலித்து கொண்டிருந்தது. சண்டை காட்சிகளில் அதிரடியாக இருந்தது.

ஒளிப்பதிவு:

ஆர்.பி.குருதேவ். படத்தின் மிக பெரிய பலம். படத்திற்கான டோனை அற்புதமாக செட் செய்து சந்து, பொந்துகளில் பாய்ந்து ஒடுகிறது. இரவு காட்சிகளில் மிளிர்கிறது. சண்டைக் காட்சிகளில் நன்றாக சுழன்றுள்ளது.

எடிட்டிங்:

ராம் சுதர்ஸன். இந்த படத்தையும் 150 நிமிடங்கள் தியட்டரில் உட்கார்ந்து பார்க்க முடிகிறதென்றால் இவர் தான் காரணம். கொடுத்த பிட்டு பிட்டு காட்சி காட்சிகளை கொண்டு இவரே படத்தை கொண்டு வந்திருப்பார் போல. முதல் பாதியில் கதை நகர மாட்டேன் என்கிற போது, இவரது எடிட்டிங் தான் படத்தை நகர்த்துகிறது.

கதை.தி.கதை,இயக்கம்:

சுப்ரமணிய சிவா & அமீர். என்ன தான் சிவா இயக்கி இருந்தாலும் எனக்கென்னமோ இது அமீரின் படமாக தான் தெரிந்தது. அமீர் தான் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இப்படி நான் கருதினாலும் கதை என்ற ஒன்று இல்லாமல் இருப்பது போன்று தான் தோன்றியது. படத்தை எவ்வளவோ விறுவிறுப்பாக நகர்த்த வாய்ப்பிருந்தும் படம் எங்கும் செல்லாமல் பாறையை போல அங்கேயே நிற்கிறது. இடைவேளையின் போது கதை எப்பாதையில் செல்கிறது என்று தெரியாமல் படம் பார்க்கும் அனைவரும் விழிக்கின்றனர். இடைவேளைக்கு பிறகாவது நகரும் எனப் பார்த்தால் பின்னாடி நகர்ந்து யோகியின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

வசனங்கள் ஆங்காங்கே பளிச். காட்சிகளும் ஆங்காங்கே பளிச். ஆனால் படம் டல்லடிப்பதால் அவையாவும் அடிபட்டு போகின்றது. கிளைமாக்ஸ் அமீர் தான் யோசித்தாரா என்பது எனக்கு புரியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது. படத்தை எடுப்பதற்கான எடுத்த சிரத்தையை திரைக்கதையிலும் காண்பித்திருந்தால் யோகி தப்பித்திருப்பான்.

யோகி - பொறுமையை சோதிப்பவன்.

டிஸ்கி: இந்த படத்தின் முன்பதிவு படுமோசமாக இருந்தது. என்னடா மக்கள் அமீர் போன்றதோரு கலைஞனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என தோன்றியது. ஆனால் படம் முற்றிலும் என்னை ஏமாற்றிவிட்டது.

Leia Mais…

ஞாயிறு, நவம்பர் 22, 2009

தீபாவளி கொண்டாட்டம்

நம்ம வானவில் கார்த்திக் சிறிது காலத்துக்கு முன் என்னை தீபாவளி சம்பந்தமான டேக்-கில் கோர்த்துவிட்டார். நான் என்னோட சோம்பேறிதனத்துனால கொஞ்சம் லேட்டா பண்றேன்...

கா.கியும், சாமியும் கோவிச்சிக்க வேணாம். நீங்க ரெண்டு பேர் கொடுத்த ‘டேக்’கையும் இந்த மாசத்துக்குள்ள முடிச்சிடறேன்.

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என்னங்க ’Tell me about yourself'-னு இண்டர்வியூ-ல கேக்குற மாறி இருக்கு. இப்படி கேட்டா 5 நிமிஷம் விடாம பேசுவேன். ஆனா எழுத தான் வர மாட்டேங்குது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை-ல இருக்கேன். சந்தோஷமாவும் இருக்கேன். ஏதாவது உருப்படியா பண்ணனும்-னு மட்டும் மைண்ட் சொல்லிட்டே இருக்கு. ஆனா என்ன பண்றது-னு தான் தெரியல. பார்ப்போம்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி அப்டிங்குறதுனால இதுவரைக்கும் எல்லாமே சேப்டி தீபாவளியாவே அமைஞ்சு போச்சு. 2007-ம் ஆண்டு தீபாவளிய மறக்க முடியாதது அப்டி-னு சொல்லலாம். அந்த தீபாவளிக்கு தான் நான் எங்க வீட்ல இல்ல. பெங்களூர்-ல இருந்து நைட் 10 மணிக்கு தான் வந்தேன். ஊரே அடங்கி போய் இருந்துது. அப்பவும் சாப்பாட்ட மட்டும் ஒரு கட்டு கட்டுனேன்.

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

சென்னைலதான்..

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி அன்னிக்கு இரவு வானத்த பாத்துட்டே போய்ட்டு இருப்பேன். ஏன்னா அவ்ளோ கலர் கலரா வான வேடிக்கைகள் வந்துடுச்சி. அத பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். வெடிகள் இப்ப குறஞ்சு இருக்கு. அதுவும் மகிழ்ச்சி தர ஒரு விஷயம் தான்.

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

அம்மா, அப்பா திட்ட போறாங்களே அப்டி-னு சொல்லிட்டு தீபாவளிக்கு முந்துன நாள் போய் ஒரு ஷர்ட் மட்டும் எடுத்துட்டு வந்தேன். ஸ்பென்சர்-ல ஏவியேட்டர் அப்டி-னு ஒரு கடை-ல. அங்க டிசைனும் நல்லா இருக்கு. விலையும் ஒ.கேவா இருக்கு.

உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :)

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

எஸ்.எம்.எஸ் தான் பல பேருக்கு. சிலருக்கு மட்டும் மின்னஞ்சல் மற்றும் செல்பேசியில் கால் செய்தேன்.

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

டி.வி-ய எல்லாம் இப்ப பாக்குறது இல்ல. முன்னயெல்லாம் நிகழ்ச்சி நேரத்த குறிச்சு வச்சி ப்ளான் பண்ணி பாத்துட்டு இருந்தேன். படத்துக்கு போறதோட தீபாவளி கொண்டாட்டம் முடியுது. இந்த வருஷம் ஆதவன் பாத்தேன்.

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

நான் எதுவும் நானாக சென்று செய்தது இல்லை. இந்த வருடமும், 2007-லும் நான் ஆபிஸிலிருந்து வெளியே வரும் போது சில குழந்தைகள் இல்லத்திலிருந்து கேட்டார்கள். நானும் 100 மற்றும் 50 ரூபாய் கொடுத்தேன். கேட்டவர்கள் இளைஞர்கள் தான். நான் ஏன் அப்படி இல்லை என எனக்கு தோன்றியது. ஆனா நெறைய செய்யணும்-னு மட்டும் அடிக்கடி தோணும். பண்ணனும்.

அந்த ரசீதை எங்கோ வைத்துவிட்டேன். அதனால் பெயர் தெரியவில்லை. சென்னையில் இருக்கும் ஒன்று தான். கண்டுபிடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Leia Mais…

செவ்வாய், நவம்பர் 03, 2009

மக்கள் குரல் - நவம்பர் 3, 2009

திரு.கருணாநிதி: “ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு எனது பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

மக்கள்: ஜெயலலிதா எல்லாரும் தன் பெயரையே வைக்கணும்-னு நினைப்பாரு. நீங்க உங்க குடும்பத்துல இருக்குற யாரோட பெயராவது இருந்தா போதும்-னு பெருந்தன்மையா நினப்பீங்க. ரெண்டு பேரையுமே நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம் தலைவரே...

***************************************************************************

திரு.மன்மோகன் சிங்: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் , தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எளிதாக இலக்காகி விடுகிறது.”

மக்கள்: ஒண்ணும் புரியலையே!!!!! இவரே அவங்களுக்கு எடுத்து கொடுக்குறாப்புல இருக்கு...

****************************************************************************

திரு.தங்கபாலு: ”இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் ராஜபக்‌ஷேவிடமோ அல்லது அங்குள்ள எந்த தலைவர்களிடமோ எந்தப் பரிசுப் பொருட்களையும் பெறவில்லை!”

மக்கள்: இது வேறயா??? ஆனா ’இல்ல, இல்ல’ அப்டிங்குற போதெல்லாம் ’இருக்கு, இருக்கு’ அப்டின்னு காதுல விழுகுதே!!!’

*****************************************************************************

திரு.மு.க.ஸ்டாலின்: “வயதான காலத்தில் பெற்றோரிடம் பிள்ளைகள் அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்குப் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்!”

மக்கள்: நீங்க தான் அதுக்கு வாழும் உதாரணமா திகழ்றீங்களே!!!!

******************************************************************************

திரு.கருணாநிதி: “இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கிறது”

மக்கள்: தமிழ் மக்கள் எல்லாரும் செத்த பிறகு எங்க இருந்து சண்ட போடுறது. சண்டை நின்ற புண்ணியம் உங்களை சேருமைய்யா...

******************************************************************************

செல்வி.ஜெயலலிதா: “ஒபாமா எதையும் சாதிப்பதற்கு முன்பே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்டது”

மக்கள்: என்ன அ.தி.மு.க தொண்டர்கள் யாரும், ‘உலக அளவில் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த அம்மாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’ அப்டின்னு தீர்மானமும் நிறைவேற்றல, கோரிக்கையும் வைக்கல.. ஒரே மர்மமா இருக்கே!!!

Leia Mais…

ஞாயிறு, நவம்பர் 01, 2009

ஒரு ரூபாயில் விளையும் பயன்

தி.மு.க அரசு தன்னுடைய சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் தமிழகத்தை வெகு சீக்கிரமே சோதனையில் தான் கொண்டு சென்று விடும் போலிருக்கிறது. ஏற்கனவே நியாய விலை கடையில் கிடைக்கும் அரிசியின் தரத்தின் பெயரில் பல குற்றசாட்டுக்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அதை வாங்கி உண்பது தங்களுடைய வறுமையின் காரணமாகவே என்று நம்பியிருந்த நான், அந்த காரணத்தை குழி தோண்டி புதைக்கும் படி ஆகிவிட்டது.

சென்ற வாரம் எனது அலுவலக நண்பரோடு பேசி கொண்டிருந்த போது அவரது ஜவுளி கடை வைத்திருக்கும் அவரது நண்பரைப் பற்றி சொன்னார். அதாவது அவர் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அதற்கு ஒரு யோசனை சொல்லும் மாறு அவரின் நண்பரிடம் கேட்ட போது, உடனே மறுத்து இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்:

இப்பயெல்லாம் முன்ன மாதிரி இல்ல. வேலைக்கே ஆள் கிடைக்க மாட்டேங்குது. அப்படியே கிடச்சாலும் யாரும் ஒழுங்கா வேலை செய்யுறது இல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சன இல்ல. அதனால யாருக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அப்டிங்குற எண்ணமே இல்லாம போச்சு. ஏதாவது பண்ணனும்-னு நினச்சினா... நீ, அப்புறம் உன்னோட குடும்பத்த சேர்ந்தவங்க பாத்துக்க முடியுற மாறியான தொழில் மட்டும் பண்ணு

அப்டி-னு சொல்லி இருக்கார்.

இதுல நிறைய உண்மை இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். நாம உழைக்கிறதே சாப்பாடுக்காக தான். அது நமக்கு கிட்டதிட்ட இலவசமா கிடைக்கும் போது யார் போய் கஷ்டப்பட்டு உழைக்க போறாங்க.

நம்ம அரசு ஏதோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றோம்-னு பெருசா சொல்லிக்கிறாங்க. ஆனா அதுல இருக்குற பாதகங்களா பாக்காம விட்டுவிட்டு இருக்காங்க. இதோட உடனடி பாதிப்பு இப்போ தெரியலனாலும், இப்படியே போச்சுன்னா, இன்னும் சில ஆண்டுகள்-ல நிச்சயமா தொழில் துறை-ல பாதிப்பு இருக்கும்.

ஏற்கனவே விவசாயம் நம்ம நாட்டுல நசிஞ்சு போயிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த யாருமே இப்போ விவசாயம் பாக்கல. நிலத்த வச்சி இருந்தவங்களும் நிலத்த வித்துட்டு வேற வேலைய பாக்க போயிட்டாங்க. விவசாயம் பாக்குறது அப்டிங்குறதே ஒரு கேவலமான விஷயம் மாறி இப்போ ஆயிடுச்சி. ஆனா இத சரி பண்றதுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எந்த அரசாங்கமும் எடுக்கல. இப்டியே போச்சுனா, அரசுக்கு நியாய விலை கடைல கொடுக்கவே அரிசி இல்லாம போனாலும் போகலாம்.

இலவசங்கள் மக்கள வெறும் சோம்பேறிகளாக தான் ஆக்கும் என்ற எளிய உண்மையை எல்லாம் அறிந்த நமது முதல்வரும், அவரது கட்டியும் எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

Leia Mais…