செவ்வாய், நவம்பர் 03, 2009

மக்கள் குரல் - நவம்பர் 3, 2009

திரு.கருணாநிதி: “ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு எனது பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

மக்கள்: ஜெயலலிதா எல்லாரும் தன் பெயரையே வைக்கணும்-னு நினைப்பாரு. நீங்க உங்க குடும்பத்துல இருக்குற யாரோட பெயராவது இருந்தா போதும்-னு பெருந்தன்மையா நினப்பீங்க. ரெண்டு பேரையுமே நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம் தலைவரே...

***************************************************************************

திரு.மன்மோகன் சிங்: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் , தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எளிதாக இலக்காகி விடுகிறது.”

மக்கள்: ஒண்ணும் புரியலையே!!!!! இவரே அவங்களுக்கு எடுத்து கொடுக்குறாப்புல இருக்கு...

****************************************************************************

திரு.தங்கபாலு: ”இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் ராஜபக்‌ஷேவிடமோ அல்லது அங்குள்ள எந்த தலைவர்களிடமோ எந்தப் பரிசுப் பொருட்களையும் பெறவில்லை!”

மக்கள்: இது வேறயா??? ஆனா ’இல்ல, இல்ல’ அப்டிங்குற போதெல்லாம் ’இருக்கு, இருக்கு’ அப்டின்னு காதுல விழுகுதே!!!’

*****************************************************************************

திரு.மு.க.ஸ்டாலின்: “வயதான காலத்தில் பெற்றோரிடம் பிள்ளைகள் அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்குப் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்!”

மக்கள்: நீங்க தான் அதுக்கு வாழும் உதாரணமா திகழ்றீங்களே!!!!

******************************************************************************

திரு.கருணாநிதி: “இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கிறது”

மக்கள்: தமிழ் மக்கள் எல்லாரும் செத்த பிறகு எங்க இருந்து சண்ட போடுறது. சண்டை நின்ற புண்ணியம் உங்களை சேருமைய்யா...

******************************************************************************

செல்வி.ஜெயலலிதா: “ஒபாமா எதையும் சாதிப்பதற்கு முன்பே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்டது”

மக்கள்: என்ன அ.தி.மு.க தொண்டர்கள் யாரும், ‘உலக அளவில் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த அம்மாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’ அப்டின்னு தீர்மானமும் நிறைவேற்றல, கோரிக்கையும் வைக்கல.. ஒரே மர்மமா இருக்கே!!!

20 பேர் என்ன சொன்னாங்கனா:

தாரணி பிரியா சொன்னது…

super kanagu

தாரணி பிரியா சொன்னது…

first matter naanum ithe polathan ninaichen :)

makkal kural adikadi olikkattum

Karthik சொன்னது…

கலக்குறீங்க கனகு.. கருணாநிதி, ஸ்டாலின் மேட்டர் எல்லாம் கலக்கல்ஸ்.. :)))

Karthik சொன்னது…

அப்புறம் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.. :)

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/11/blog-post.html

shri ramesh sadasivam சொன்னது…

:)

Sammy சொன்னது…

ஆஹா அரசியல் பார்வை அதிகம் உள்ளவரா நீங்கள்....சூப்பர்.

திரு.கருணாநிதி பக்கமா ? செல்வி.ஜெயலலிதா பக்கமா ? இது தான் புரியலை.

விக்னேஷ்வரி சொன்னது…

சூப்பர் அடிகள். ஆனாலும் இதுங்களுக்கு ஒன்னும் உரைக்காதுங்க.

பெயரில்லா சொன்னது…

Just wanted to read some posts in tamil and so I came here. Too gud, yaar. But can I write comments in tamil, too ?????

Why do u write so much abt politics ????? First time, I am reading so many blog pages abt politics. Anyway, the kavidhaigal were super.

Sammy சொன்னது…

உங்கள் அண்ணன்மார்கள், அக்காமார்கள் அழைத்திருக்கலாம், என்னுடைய அழைப்பையும் சேர்த்து வச்சுக்குங்க. தொடர் பதிவு அழைப்பு இங்கே.

http://maduraitrichy.blogspot.com/2009/11/blog-post_05.html

Swaram சொன்னது…

Hi Kanagu ;)

கிறுக்கல் கிறுக்கன் சொன்னது…

மக்கா , மக்கள் சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு

HaRy!! சொன்னது…

Karunanidi and stalin..inpormation...kalakitinga...

Karthik சொன்னது…

Karunanidhi avargal aduthu Obamakku paarathu vizha edukka porrarr.. :D

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

அடடா.. நீங்களும் நம்ம ஜாதிதானா..?

பார்த்து சூதானம்..! வூட்டுக்கு ஆட்டோ வந்திரப் போகுது..!

எப்படி என் ரிப்பீட்டு கமெண்ட்டு..?

ஹேமா சொன்னது…

கனகு கிண்டல்ஸ் சூப்பர்.

Nithya சொன்னது…

Pinniteenga.. super ah iruku..:)

ஜெட்லி சொன்னது…

செம நக்கல் கனகு

kanagu சொன்னது…

@தா.பி அக்கா,

நன்றி அக்கா... முயற்சிக்கிறேன் :)

******************************

@கார்த்திக்,

நன்றி.. நன்றி.. நன்றி...

தொடர் தானே பண்ணிடுவோம்...

******************************

@ரமேஷ் அண்ணா,

:)))))))))))))

******************************

@சாமி,

அரசியல் முக்கியமாச்சே தல...

/*திரு.கருணாநிதி பக்கமா ? செல்வி.ஜெயலலிதா பக்கமா ? இது தான் புரியலை./

எப்பவுமே காமராஜர் தாங்க.. :))

*******************************

@விக்னேஷ்வரி,

ஆமாங்க... இல்லைனா இந்நேரம் திருந்தி இருப்பாங்களே...

*******************************

@உமா,

முதல் வருகைக்கு நன்றி :))

எனக்கு அரசியல்ல கொஞ்சம் ஆர்வம் அதிகம்.. ஆர்வ கோளாறு-னு வச்சிக்கலாம் :)

*******************************

@சாமி,

கண்டிப்பா பண்ணிடுவோம்... :)

*******************************

@ Swaram,

thanks for visiting Swaram.. :) :)
hope someday you will read this blabberings :)

*******************************

@கி.கி அண்ணா,

நன்றி அண்ணா..

*******************************

@ஹாரி,

நன்றி நன்றி.. :)

*******************************

@கார்த்திக்,

ஹா ஹா ஹா.... எல்லாமே இந்திய - அமெரிக்கா நல்லிணிக்கத்துக்காக தான் இருக்கும்.. :)

*******************************

@உண்மை தமிழன் அண்ணா,

முதல் வருகைக்கு நன்றி அண்ணா,

/*அடடா.. நீங்களும் நம்ம ஜாதிதானா..?

பார்த்து சூதானம்..! வூட்டுக்கு ஆட்டோ வந்திரப் போகுது..!

எப்படி என் ரிப்பீட்டு கமெண்ட்டு..?*/

ஹா ஹா ஹா.. :) :)

*******************************

@ ஹேமா,

:) :) :)

*******************************

@ நித்யா & ஜெட்லி,

முதல் வருகைக்கும் இரசித்ததற்கும் நன்றி நன்றி நன்றி.. :) :)

முரளிகண்ணன் சொன்னது…

Nice kanagu

Keep it up

Swaram சொன்னது…

Yes Kanagu .. naa tamil romba nalla pesare :P