ஞாயிறு, நவம்பர் 01, 2009

ஒரு ரூபாயில் விளையும் பயன்

தி.மு.க அரசு தன்னுடைய சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் தமிழகத்தை வெகு சீக்கிரமே சோதனையில் தான் கொண்டு சென்று விடும் போலிருக்கிறது. ஏற்கனவே நியாய விலை கடையில் கிடைக்கும் அரிசியின் தரத்தின் பெயரில் பல குற்றசாட்டுக்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அதை வாங்கி உண்பது தங்களுடைய வறுமையின் காரணமாகவே என்று நம்பியிருந்த நான், அந்த காரணத்தை குழி தோண்டி புதைக்கும் படி ஆகிவிட்டது.

சென்ற வாரம் எனது அலுவலக நண்பரோடு பேசி கொண்டிருந்த போது அவரது ஜவுளி கடை வைத்திருக்கும் அவரது நண்பரைப் பற்றி சொன்னார். அதாவது அவர் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அதற்கு ஒரு யோசனை சொல்லும் மாறு அவரின் நண்பரிடம் கேட்ட போது, உடனே மறுத்து இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்:

இப்பயெல்லாம் முன்ன மாதிரி இல்ல. வேலைக்கே ஆள் கிடைக்க மாட்டேங்குது. அப்படியே கிடச்சாலும் யாரும் ஒழுங்கா வேலை செய்யுறது இல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சன இல்ல. அதனால யாருக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அப்டிங்குற எண்ணமே இல்லாம போச்சு. ஏதாவது பண்ணனும்-னு நினச்சினா... நீ, அப்புறம் உன்னோட குடும்பத்த சேர்ந்தவங்க பாத்துக்க முடியுற மாறியான தொழில் மட்டும் பண்ணு

அப்டி-னு சொல்லி இருக்கார்.

இதுல நிறைய உண்மை இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். நாம உழைக்கிறதே சாப்பாடுக்காக தான். அது நமக்கு கிட்டதிட்ட இலவசமா கிடைக்கும் போது யார் போய் கஷ்டப்பட்டு உழைக்க போறாங்க.

நம்ம அரசு ஏதோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றோம்-னு பெருசா சொல்லிக்கிறாங்க. ஆனா அதுல இருக்குற பாதகங்களா பாக்காம விட்டுவிட்டு இருக்காங்க. இதோட உடனடி பாதிப்பு இப்போ தெரியலனாலும், இப்படியே போச்சுன்னா, இன்னும் சில ஆண்டுகள்-ல நிச்சயமா தொழில் துறை-ல பாதிப்பு இருக்கும்.

ஏற்கனவே விவசாயம் நம்ம நாட்டுல நசிஞ்சு போயிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த யாருமே இப்போ விவசாயம் பாக்கல. நிலத்த வச்சி இருந்தவங்களும் நிலத்த வித்துட்டு வேற வேலைய பாக்க போயிட்டாங்க. விவசாயம் பாக்குறது அப்டிங்குறதே ஒரு கேவலமான விஷயம் மாறி இப்போ ஆயிடுச்சி. ஆனா இத சரி பண்றதுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எந்த அரசாங்கமும் எடுக்கல. இப்டியே போச்சுனா, அரசுக்கு நியாய விலை கடைல கொடுக்கவே அரிசி இல்லாம போனாலும் போகலாம்.

இலவசங்கள் மக்கள வெறும் சோம்பேறிகளாக தான் ஆக்கும் என்ற எளிய உண்மையை எல்லாம் அறிந்த நமது முதல்வரும், அவரது கட்டியும் எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

6 பேர் என்ன சொன்னாங்கனா:

Rajalakshmi Pakkirisamy சொன்னது…

//இப்பயெல்லாம் முன்ன மாதிரி இல்ல. வேலைக்கே ஆள் கிடைக்க மாட்டேங்குது. அப்படியே கிடச்சாலும் யாரும் ஒழுங்கா வேலை செய்யுறது இல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சன இல்ல. அதனால யாருக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அப்டிங்குற எண்ணமே இல்லாம போச்சு. ஏதாவது பண்ணனும்-னு நினச்சினா... நீ, அப்புறம் உன்னோட குடும்பத்த சேர்ந்தவங்க பாத்துக்க முடியுற மாறியான தொழில் மட்டும் பண்ணு//

:) :) :)

shri ramesh sadasivam சொன்னது…

நீங்க சொல்வது நிஜம் தான். திருப்பூரை சேர்ந்த நண்பர் ஒருவரும் என்னிடம் வேலைக்கு ஆள் கிடைக்காதது பற்றி சொன்னார். அரசு இதற்கு ஆகும் இழப்பை உழைப்பவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் செலவு செய்யலாம்.

Sammy சொன்னது…

கலக்கல் பதிவு, நம்முடைய நாட்டில் ஏழை மக்கள் அதிகம் கனகு, அந்த மக்களை சம்பந்த பட்ட திட்டங்கள், தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வர வேண்டும்.

NREGA திட்டம் எனக்கு ஒரு நல்ல திட்டமாக தோன்றிகிறது, ஆந்திராவில் மிகவும் வெற்றிகரமாக நடைமுறை படுத்தியும் வருகிறார்கள்.

kanagu சொன்னது…

@ராஜலெட்சுமி,

:))))))))

************************************

@ரமேஷ் அண்ணா,

/*அரசு இதற்கு ஆகும் இழப்பை உழைப்பவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் செலவு செய்யலாம்*/

நிச்சயமாக அண்ணா.... 2 ரூபாய் இருந்த போதே யாரும் குறைப்பட்டுக்கவில்லை... அதற்கான மானிய தொகையை வேறு திட்டங்களுக்கு செலவிட்டு இருக்கலாம்...

**********************************

@சாமி,

/*கலக்கல் பதிவு, நம்முடைய நாட்டில் ஏழை மக்கள் அதிகம் கனகு, அந்த மக்களை சம்பந்த பட்ட திட்டங்கள், தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வர வேண்டும்.*/

நன்றி சாமி... நிச்சயம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்ப்பட வேண்டும்.. ஆனால் இந்த திட்டம் அப்படி செயல்ப்படுத்த பட்ட ஒன்றாக எனக்கு தெரியவில்லை...

/*NREGA திட்டம் எனக்கு ஒரு நல்ல திட்டமாக தோன்றிகிறது, ஆந்திராவில் மிகவும் வெற்றிகரமாக நடைமுறை படுத்தியும் வருகிறார்கள்.*/

அது ஒரு நல்ல திட்டம்.. ஆனால் அதிலும் பல குளறுபடிகள் தமிழகத்தில் நடப்பதாக ’தினமணி’-யில் படித்தேன். நான் தேடி உங்களுக்கு லிங்க் தருகிறேன்...

க.பாலாசி சொன்னது…

//இதுல நிறைய உண்மை இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். நாம உழைக்கிறதே சாப்பாடுக்காக தான். அது நமக்கு கிட்டதிட்ட இலவசமா கிடைக்கும் போது யார் போய் கஷ்டப்பட்டு உழைக்க போறாங்க//

அப்படி இல்ல. அந்த அரிசிய வாங்கிகிட்டு வந்து அதுக்கு உப்பு, மிளாகய் புளி, பருப்புன்னு வாங்கனுமே அதுக்காவது கடினமா உழைச்சே ஆகனும். நீங்க சொல்றமாதிரி ஒருசிலர் இருக்கலாம். மறுக்கவில்லை.

//இப்டியே போச்சுனா, அரசுக்கு நியாய விலை கடைல கொடுக்கவே அரிசி இல்லாம போனாலும் போகலாம்.//

இது நச்....

//எல்லாம் அறிந்த நமது முதல்வரும், அவரது கட்டியும் எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.//

அதெப்படி புரியும். ஓட்டு முக்கிமுங்கோ...ஓட்டு......

நல்ல இடுகை....

kanagu சொன்னது…

@ பாலாசி அண்ணா,

ஒத்துகுறேன் அண்ணா.. ஆனா முக்கியமானது அரிசி தானே???

/*அதெப்படி புரியும். ஓட்டு முக்கிமுங்கோ...ஓட்டு......*/

:) :) :)

நன்றி அண்ணா..