ஞாயிறு, நவம்பர் 22, 2009

தீபாவளி கொண்டாட்டம்

நம்ம வானவில் கார்த்திக் சிறிது காலத்துக்கு முன் என்னை தீபாவளி சம்பந்தமான டேக்-கில் கோர்த்துவிட்டார். நான் என்னோட சோம்பேறிதனத்துனால கொஞ்சம் லேட்டா பண்றேன்...

கா.கியும், சாமியும் கோவிச்சிக்க வேணாம். நீங்க ரெண்டு பேர் கொடுத்த ‘டேக்’கையும் இந்த மாசத்துக்குள்ள முடிச்சிடறேன்.

உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

என்னங்க ’Tell me about yourself'-னு இண்டர்வியூ-ல கேக்குற மாறி இருக்கு. இப்படி கேட்டா 5 நிமிஷம் விடாம பேசுவேன். ஆனா எழுத தான் வர மாட்டேங்குது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை-ல இருக்கேன். சந்தோஷமாவும் இருக்கேன். ஏதாவது உருப்படியா பண்ணனும்-னு மட்டும் மைண்ட் சொல்லிட்டே இருக்கு. ஆனா என்ன பண்றது-னு தான் தெரியல. பார்ப்போம்.

தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி அப்டிங்குறதுனால இதுவரைக்கும் எல்லாமே சேப்டி தீபாவளியாவே அமைஞ்சு போச்சு. 2007-ம் ஆண்டு தீபாவளிய மறக்க முடியாதது அப்டி-னு சொல்லலாம். அந்த தீபாவளிக்கு தான் நான் எங்க வீட்ல இல்ல. பெங்களூர்-ல இருந்து நைட் 10 மணிக்கு தான் வந்தேன். ஊரே அடங்கி போய் இருந்துது. அப்பவும் சாப்பாட்ட மட்டும் ஒரு கட்டு கட்டுனேன்.

2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள்?

சென்னைலதான்..

த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

தீபாவளி அன்னிக்கு இரவு வானத்த பாத்துட்டே போய்ட்டு இருப்பேன். ஏன்னா அவ்ளோ கலர் கலரா வான வேடிக்கைகள் வந்துடுச்சி. அத பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். வெடிகள் இப்ப குறஞ்சு இருக்கு. அதுவும் மகிழ்ச்சி தர ஒரு விஷயம் தான்.

புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

அம்மா, அப்பா திட்ட போறாங்களே அப்டி-னு சொல்லிட்டு தீபாவளிக்கு முந்துன நாள் போய் ஒரு ஷர்ட் மட்டும் எடுத்துட்டு வந்தேன். ஸ்பென்சர்-ல ஏவியேட்டர் அப்டி-னு ஒரு கடை-ல. அங்க டிசைனும் நல்லா இருக்கு. விலையும் ஒ.கேவா இருக்கு.

உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :)

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)?

எஸ்.எம்.எஸ் தான் பல பேருக்கு. சிலருக்கு மட்டும் மின்னஞ்சல் மற்றும் செல்பேசியில் கால் செய்தேன்.

தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

டி.வி-ய எல்லாம் இப்ப பாக்குறது இல்ல. முன்னயெல்லாம் நிகழ்ச்சி நேரத்த குறிச்சு வச்சி ப்ளான் பண்ணி பாத்துட்டு இருந்தேன். படத்துக்கு போறதோட தீபாவளி கொண்டாட்டம் முடியுது. இந்த வருஷம் ஆதவன் பாத்தேன்.

இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

நான் எதுவும் நானாக சென்று செய்தது இல்லை. இந்த வருடமும், 2007-லும் நான் ஆபிஸிலிருந்து வெளியே வரும் போது சில குழந்தைகள் இல்லத்திலிருந்து கேட்டார்கள். நானும் 100 மற்றும் 50 ரூபாய் கொடுத்தேன். கேட்டவர்கள் இளைஞர்கள் தான். நான் ஏன் அப்படி இல்லை என எனக்கு தோன்றியது. ஆனா நெறைய செய்யணும்-னு மட்டும் அடிக்கடி தோணும். பண்ணனும்.

அந்த ரசீதை எங்கோ வைத்துவிட்டேன். அதனால் பெயர் தெரியவில்லை. சென்னையில் இருக்கும் ஒன்று தான். கண்டுபிடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

8 பேர் என்ன சொன்னாங்கனா:

ஜெட்லி சொன்னது…

//நான் ஏன் அப்படி இல்லை என எனக்கு தோன்றியது. //

என்ன ஜி, இதுக்கு இவ்ளோ பீலிங்க்ஸ்ஆ....

ஹேமா சொன்னது…

கனகு உங்களைப்போலவே உங்கள் பதில்களும் மிகமிக அமைதியாகவே இருக்கு.பதிவர்களின் மனநிலையை அறிய என்றே இப்படியான தொடர்களைத் தொடர்வார்களோ என்னமோ !

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்லா இருக்குங்க. ரொம்ப அமைதியான திருவிழா கொண்டாடுவீர்கள் போல. நான் ரொம்ப பயந்தவன் அப்பிடினா கேப், கம்பி மத்தாப்புதான. இல்லை அதுவும் பக்கத்தில் விட்டா வேடிக்கையா. ஹி ஹி. நன்றி கனகு.

ஆ! இதழ்கள் சொன்னது…

எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :)//

ஆகா அடுத்த தீபாவளி எப்பனு கணக்கு பண்ண வச்சுட்டீங்க.

:)

உங்கள் கொண்டாட்டம் நல்லா இருக்கு.

HaRy!! சொன்னது…

macheee sariyana eluthukal... tel me abt yurself.....nala idea kudutha...ll write a new post abt this :) ..naan intha two miss paniten! :(

shri ramesh sadasivam சொன்னது…

//எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :)//

இவ்வளவும் அவ்ளோ தானா? :)

குந்தவை சொன்னது…

//எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :)//

hrrr..............

kanagu சொன்னது…

@ஜெட்லி,

என்ன பாஸ் பண்றது???? :((((

************************************

@ஹேமா,

நன்றிங்க... :))))))))

************************************

@சுதாகர் அண்ணா,

/*நான் ரொம்ப பயந்தவன் அப்பிடினா கேப், கம்பி மத்தாப்புதான. இல்லை அதுவும் பக்கத்தில் விட்டா வேடிக்கையா. */

அந்த அளவுக்கு எல்லாம் பயம் இல்லண்ணா... :)) நன்றி...

***************************************

@ஆனந்த் அண்ணா,

ஹி ஹிஹி... நன்றி அண்ணா..

***************************************

@ஹாரி,

சீக்கிரம் எழுது மச்சி... மீ வெயிடிங்... :))

***************************************

@ரமேஷ் அண்ணா,

/*இவ்வளவும் அவ்ளோ தானா? :)*/

ஹி ஹி ஹி...

***************************************

@குந்தவை,

வருகைக்கு நன்றி..

/*hrrr............../

:)))))))))))))))