ஞாயிறு, நவம்பர் 29, 2009

யோகி - விமர்சனம்

பருத்தி வீரனுக்கு பிறகான அமீரின் படம் என்பதால் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் சென்றேன். கிட்டதிட்ட ஒரு முழுமையான படமாக பருத்தி வீரன் அமைந்திருந்தது. அதில் மதுரை கிராமத்து மண்ணின் மைந்தர்களை பதிவு செய்த அவர் இந்த படத்தில் சென்னையிலுள்ள சேரிகளை கதைக்களமாக எடுத்து கொண்டுள்ளார். அதே போன்றதொரு ஒரு மிரட்டலை ஏற்படுத்தியுள்ளாரா??? பார்ப்போம்.

கதை:

கூலிக்கு கொலை செய்பவனாக யோகி. அவனுக்கு கீழ் மூன்று பேர். எதைப் பற்றியும் கவலைப்படாதவனாகவும் பணத்திற்க்காக எதையும் செய்பவனாக இருக்கின்றான். ஒரு நாள் இரவு ஒரு ஹோட்டலில் கொள்ளையடிக்க செல்கின்றனர். அங்கு கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது யோகி ஒரு காரில் ஏறி தப்பிக்கிறான். காரை விட்டு இறங்கும் சமயம் அந்த காரில் ஒரு குழந்தையை காண்கிறான். அதை தன்னுடன் எடுத்து செல்கிறான். தானே வள்ர்கவும் விரும்பி தன்னுடனே வைத்து கொள்கிறான்.

இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் எல்லை மீறி போவதால் அந்த ஏரியாவின் பெரிய தாதாவான திருநா-வை போலீஸ் அணுகுகிறது. மறுபுறம் குழந்தையை காணவில்லை என அதன் அம்மா பரிதவிக்க அவளது கணவனோ அதை எப்ப்டியாவது கொன்றுவிட திட்டமிடுகிறான். அதன் பிறகு, யோகி பிடிப்பட்டானா, குழந்தை தாயுடன் இணைந்ததா என்று கிளைமாக்ஸில் காட்டுகிறார்கள்.

நடிப்பு:

அமீர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். முகத்தை சீரியாஸாக வைத்து கொண்டு அவ்வப்போது அதே டோனிலியே அனைத்து வசனங்களையும் உச்சரிக்கும் ரெளடி வேடம். உடம்பையெல்லாம் முறுக்கேற்றி கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் சிறிது கத்துகிறார். அப்போது அவரையும் மீறி சசிக்குமார் தான் எனக்கு வெளிப்பட்டார். ஊர்ல எல்லாரும் அப்டி தான் போல. அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கேரக்டர் அந்த குழந்தை தான். அழகாக இருந்தது. சில போலீஸ்கள், பல ரெளடிகள் தங்களது பணிகளை செவ்வனே செய்கின்றனர்.

கதாநாயகி மதுமிதாவிற்கு கொஞ்சம் வித்தியாசமான வேடம். வழக்கம் போல நன்றாகவே செய்து இருக்கிறார். அமீரை பார்த்து பயப்படும் போதும் சரி, பின்பு புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்ளும் போதும் நல்ல வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் யோகியின் அப்பாவின் நடிப்பும் அபாரம். அவர் அவர் குடும்பத்தில் இருக்கிம் ஒவ்வொருவரையும் அடிக்கும் போதும் ஏதோ நம்மயே அடித்து வெளுப்பதை போல் உள்ளது. ஒரு வெறுப்பு ஏற்படுகிறது அவர் மேல். அதனால் அவர் பெற்றது வெற்றியே.

இசை:

யுவனின் இசையில் பாடல்களை கேட்டேன். ஆனால் பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. ‘சீர் மேவும் கூவத்திலே’ மட்டும் ஒகே-வான ஒரு நம்பர். பின்னனி இசை நன்றாக இருந்தது. ஆனால் தொடர்ந்து ஒரே இசை தான் பின்புலத்தில் ஒலித்து கொண்டிருந்தது. சண்டை காட்சிகளில் அதிரடியாக இருந்தது.

ஒளிப்பதிவு:

ஆர்.பி.குருதேவ். படத்தின் மிக பெரிய பலம். படத்திற்கான டோனை அற்புதமாக செட் செய்து சந்து, பொந்துகளில் பாய்ந்து ஒடுகிறது. இரவு காட்சிகளில் மிளிர்கிறது. சண்டைக் காட்சிகளில் நன்றாக சுழன்றுள்ளது.

எடிட்டிங்:

ராம் சுதர்ஸன். இந்த படத்தையும் 150 நிமிடங்கள் தியட்டரில் உட்கார்ந்து பார்க்க முடிகிறதென்றால் இவர் தான் காரணம். கொடுத்த பிட்டு பிட்டு காட்சி காட்சிகளை கொண்டு இவரே படத்தை கொண்டு வந்திருப்பார் போல. முதல் பாதியில் கதை நகர மாட்டேன் என்கிற போது, இவரது எடிட்டிங் தான் படத்தை நகர்த்துகிறது.

கதை.தி.கதை,இயக்கம்:

சுப்ரமணிய சிவா & அமீர். என்ன தான் சிவா இயக்கி இருந்தாலும் எனக்கென்னமோ இது அமீரின் படமாக தான் தெரிந்தது. அமீர் தான் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இப்படி நான் கருதினாலும் கதை என்ற ஒன்று இல்லாமல் இருப்பது போன்று தான் தோன்றியது. படத்தை எவ்வளவோ விறுவிறுப்பாக நகர்த்த வாய்ப்பிருந்தும் படம் எங்கும் செல்லாமல் பாறையை போல அங்கேயே நிற்கிறது. இடைவேளையின் போது கதை எப்பாதையில் செல்கிறது என்று தெரியாமல் படம் பார்க்கும் அனைவரும் விழிக்கின்றனர். இடைவேளைக்கு பிறகாவது நகரும் எனப் பார்த்தால் பின்னாடி நகர்ந்து யோகியின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

வசனங்கள் ஆங்காங்கே பளிச். காட்சிகளும் ஆங்காங்கே பளிச். ஆனால் படம் டல்லடிப்பதால் அவையாவும் அடிபட்டு போகின்றது. கிளைமாக்ஸ் அமீர் தான் யோசித்தாரா என்பது எனக்கு புரியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது. படத்தை எடுப்பதற்கான எடுத்த சிரத்தையை திரைக்கதையிலும் காண்பித்திருந்தால் யோகி தப்பித்திருப்பான்.

யோகி - பொறுமையை சோதிப்பவன்.

டிஸ்கி: இந்த படத்தின் முன்பதிவு படுமோசமாக இருந்தது. என்னடா மக்கள் அமீர் போன்றதோரு கலைஞனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என தோன்றியது. ஆனால் படம் முற்றிலும் என்னை ஏமாற்றிவிட்டது.

7 பேர் என்ன சொன்னாங்கனா:

ஜெட்லி சொன்னது…

நல்ல அலசல் நண்பரே...

shri ramesh sadasivam சொன்னது…

அப்ப பாக்க வேணாங்க்றீங்க...! சரி விட்ருவோம்.

ஆ! இதழ்கள் சொன்னது…

கேள்விப்பட்டேன், படத்தைப் பற்றி. ஏமாற்றம் தான். :)

Vijay சொன்னது…

உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது :)

Karthik சொன்னது…

அமீர் என்பதால் எதிர்பார்த்திருந்தேன்.. சரி வேணாம். நல்ல விமர்சனம். :)

kanagu சொன்னது…

@ஜெட்லி,

நன்றி தலைவா...

***********************************

@ரமேஷ் அண்ணா,

அப்படியே ஆகட்டும்... :))))

***********************************

@ஆனந்த் அண்ணா,

:((((((((((

***********************************

@விஜய் அண்ணா,

என்ன அண்ணா பாத்தீங்களா???? புடிச்சிருந்துதா???

***********************************

@கார்த்திக்,

நானும் அத நம்பி தான் போனேன்.. ஹீம்ம்ம்ம்ம்ம்...

gils சொன்னது…

padam mokkiaya :( cha...pakalamnu irunthen