ஞாயிறு, டிசம்பர் 06, 2009

ரேனிகுண்டா - விமர்சனம்

கடைசியா நடந்த பதிவர் சந்திப்பின் போது கேபிள் அண்ணா இந்த படம் சூப்பரா வந்திருக்குனு சொன்னார். அதனால எல்லாரும் புதுமுகங்களா இருந்தாலும் கொஞ்சம் எதிர்ப்பார்ப்போட தான் போனேன்.

நடிப்பு:

ஹீரோ அப்டின்னுயெல்லாம் இந்த படத்துல யாரும் இல்ல. சக்தியா வர ஜானி அப்புறம் அவன் ஜெயில்ல சந்திக்கிற நாலு பேரு(டப்பா, பாண்டு, மைக்கேல், மாரி) எல்லாருமே கிட்டதிட்ட ஒரே அளவு தான். இதுல டப்பாவுக்கும் ஜானிக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு. பயன்படுத்திகிட்டு இருக்காங்க. ஜானி ஆரம்பத்துல அம்மா அப்பா கிட்ட இருக்கும் போது ஒரு மாதிரியான நடிப்பையும், காதல் காட்சியில கொஞ்சம் வித்தியாசமாவும், இறுதிகாட்சி-ல எல்லாத்துக்கும் சேர்த்து அனல் பறக்குற ஒரு நடிப்ப வழங்கி இருக்காரு.

ஆனா கைதட்டல அள்ளுறது டப்பா தான். இருக்குறதே 4 அடி அப்டின்னாலும் பேசுற பேச்செல்லாம் உலக தனக்கு கீழ தான் அப்டிங்குற மாதிரி பேசி சலம்புறாரு. ‘ஆல் டீம் ஒர்க்’ அப்டினு ஜெயில்-ல சேட்டு கிட்ட பெருமையா சொல்லும் போதும், ‘விடுறா சின்ன பையன் தானே’ அப்டினு ஜானிய பாத்து சொல்லும் போதும், காதல் வந்தவுடனே கூலிங் கிளாசும், காதுல கம்மலும் மாட்டிகிட்டு காதல் பார்வை பார்க்கும் போதும் கலக்குறாரு.

மத்தவங்கள்-ல பாண்டு ரசிக்க வைக்கிறாரு. அதுவும் ஜானிய அடிக்க ஒரு போலீஸ்காரர் போகும் போது ‘இதுக்கு மேல அவன ஒரு அடி அடிச்சாலும் உன் குடும்பத்தையே அழிச்சிருவேன்’ அப்டி-னு சொல்லும் போது வெடிக்கிறார். பல இடங்கள் மனசுல நிக்கிற மாதிரியான காட்சிகள். மத்த ரெண்டு பேருக்கும் சொல்லிக்குற மாதிரியான காட்சிகள் இல்லைனாலும் மனசுல நிக்கிறாங்க.

ஹீரோயினா வர்ற பொண்ணு ரொம்ப க்யூட்டா அழகா நடிச்சிருக்கு. அதே மாதிரி கண்ணாடி போட்டுட்டு வர்ற பொண்ணும். ஹீரோயினோட அக்கா மாமாவா வர்றவங்களும் நல்லா நடிச்சு இருக்காங்க.

ஒளிப்பதிவு & எடிட்டிங்:

படத்தோட இரு தூண்கள். படத்தின் தடாலடி வேகத்திற்கு ஏற்றவாறு சக்தி படம் பிடித்து கொடுத்தால் அதை அழகாக விறுவிறுப்பு குறையாமல் வெட்டி இருக்கிறார் ஆண்டணி. எந்த ஒரு காட்சியையுமே குறைசொல்ல முடியா வண்ணம் சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்த சிறிய சந்துகளில் சென்று அழகாக படம் பிடிப்பதாகட்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறப்பதாகட்டும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இசை:

எல்லா பாட்டையுமே முதல் வாட்டியா படத்துல தான் கேட்டேன். அதனால எதுவும் இப்போ நினைவுல இல்ல. பின்னனி இசை ஒ.கே. இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சு இருக்கலாம்-னு தோணுச்சு.

இயக்கம்:

பன்னீர்செல்வம். புதுமுக இயக்குநராம். சொன்னால் தான் தெரியுங்குற அளவுக்கு படம் முழுக்க பெர்பெக்‌ஷன். கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் அப்டிங்குற பழமொழிக்கு எடுத்துகாட்டா அடுக்கடுக்கா வந்துட்டு இருக்குற படங்கள்-ல இதுவும் ஒண்ணு-னு நெனச்சா, கூட்டத்துல இருந்து இந்த படத்த தனிச்சு காட்டுறது இந்த படத்தோட மேக்கிங். பிரிச்சு இருக்கார். படம் முழுக்க அவரோட உழைப்பு தெரியுது. புதுமுகங்கள் கிட்ட இருந்து நடிப்ப வாங்கி இருக்குறதுலயே அவரோட திறமை தெரியுது.

பல விஷயங்கள் நல்லா செஞ்ச அவர் ஸ்கிரிப்ட்லயும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் பல படங்கள் சென்ற பாதையிலேயே போகுது. இடங்கள் மட்டும் வேற. கிளைமாக்ஸையும் யூகிக்க முடிஞ்சிடுது. மத்தபடி டிஸ்டிங்க்‌ஷன் -ல தேறுவார்.

ரேனிகுண்டா - பழைய மசாலா, புது ருசி.

Leia Mais…