ஞாயிறு, ஜனவரி 24, 2010

2010-ல் நான் எதிர்ப்பார்ப்பவை

2010-ம் வந்தாச்சு... படங்க கூட பொங்கல்-ல இருந்து ஜோரா வர ஆரம்பிச்சுடுச்சு. இந்த வருஷத்துல நான் என்னன்ன படங்கள எதிர்பாக்குறேன்னு சும்மா ஒரு லிஸ்ட்.

ஆயிரத்தில் ஒருவன், போர்க்களம் எல்லாம் லிஸ்ட்-ல இருந்துது. ஆனா பொங்கலுக்கு ரிலீஸ் ஆயிடுச்சு. மத்த படங்கள பார்ப்போம்.

கோவா:

ஏற்கனவே சென்னை-600028 மற்றும் சரோஜா-வுல ஹிட்டடுச்ச கூட்டணியான வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் யுவன் கூட்டணி திரும்ப வர்றாங்க. சரோஜா-வுல சும்மா ஒரு சைடு ரோல் செஞ்ச ஜெய் இதுல ஒரு மெயின் கேரக்டர். சினேகா கிளாமரா நடிச்சு இருக்காங்களாம் :) :) அப்புறம் இன்னொரு ஹீரோயின் பியா. யாரு இந்த பியா-னு தலைய பிச்சுக்காதீங்க. பொய் சொல்ல போறோம், ஏகன் - ல நடிச்சவங்க.

பாட்டு கேட்டேன். ‘கோவா’ பாட்டு மட்டும் தான் எனக்கு புடிச்சிருக்கு. போக போக புடிக்கும்-னு நெனைக்கிறேன். படம் இந்த மாசமே ரிலீஸ்-னு போட்டுட்டாங்க. ஜனவரி 29 - ல ரிலீஸ் ஆகும்.. பார்ப்போம்.

தமிழ் படம்:

தமிழ் சினிமா வரலாற்றுல முதல் முறையா தமிழ் சினிமா சம்பிராதாயங்கள கலாய்த்து ஒரு படம். ட்ரையிலர் சும்மா அதுருது. மேல ஸ்டில்-ல பாத்தீங்கள்ல. சும்மா 80-களின் ராமராஜன திருப்பி கொண்டுவந்துட்டாங்கல. எனக்கு என்ன பயம்ன்னா இந்த போஸ்டர பாத்து தனக்கு மார்க்கேட் இருக்கு-னு ராமராஜன் நெனச்சு அடுத்த படத்துல நடிச்சுர போறாரோ-னு தான்.

பாட்டெல்லாம் சும்மா கலக்கல். அதுவும் ஒரு பாட்டு வெறும் ‘ஒமகசீயா’, ‘லாலாக்கு டோல் டப்பிம்மா’, ‘டைலாமோ’ அப்பிடி-னு வார்த்தைகள வச்சிகிட்டு மெலோடி. கேக்க நல்லாவும் இருக்கு, சிரிப்பாவும் இருக்கு. ‘ஒரு சுறாவளி’ பாட்டு எந்த மாஸ் ஹீரோவுக்கு அப்டின்னாலும் சூட் ஆகி இருக்கும். ஆனா இங்க என்ன காமெடி பண்ண போறாங்க-னு தெரியல. இந்த படமும் ஜனவரி 29 தான் ரீலிஸ்.

அசல்:

தல படத்த நானே எதிர்பார்க்கல-னா யார் எதிர்பார்ப்பாங்க. அதுவும் ஒரு வருஷமா படமே வராம இருந்ததுக்கு ஏதோ ஒரு படம் அவர் நடிச்சு வந்தா போதும், அப்டிங்குற அளவுக்கு ஆயிடுச்சு. யூகி சேது கதை, திரைக்கதை அப்டிங்குறதுனால எனக்கு கொஞ்சம் நம்பிக்கை.

பாட்டெல்லாம் சுமாரா தான் இருந்துது. ஆனா கேட்டு கேட்டு புடிச்சு போச்சு. அஜித்-சரண் காம்பினேஷன் - ல இது நாலாவது படம். இதுவரைக்கும் மொக்க வாங்காத கூட்டணி. இப்ப என்ன பண்றாங்கனு பாப்போம். படம் பிப்ரவரி 5-ம் தேதி ரீலிஸ்.

அங்காடி தெரு:

‘வெயில்’ படத்துக்கு பிறகு வசந்த பாலனோட அடுத்த படம். எப்ப ரீலிஸ் ஆகும்-னு தெரியாத ஸ்டேஜ்-ல இருக்கு. பாட்டேல்லாம் அருமையா இருக்கு. படத்த சீக்கிரம் ரீலிஸ் பண்ணா நல்லா இருக்கும்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்:

கிட்டதிட்ட முப்பது வருஷம் கழிச்சு ‘மன்னர்’ கால படமான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ வந்த போது ஹிட்டோ ஹிட். இப்போ அதே சிம்புதேவன் 30 வருஷம் கழிச்சு தமிழ்-ல ஒரு கெளபாய் படம் எடுக்க வருது. திரும்ப நம்மல சிரிப்பலைல மூழ்க வைப்பாரா-னு பார்ப்போம்.

பாட்டு எதையும் நான் கேக்கல. என்னவோ கேக்கணும்-னு தோணவே இல்ல. பொங்கலுக்கு வருதுனு சொன்னாங்க. ஆனா வரல. அடுத்த மாசம் வரும்-னு நினைக்கிறேன்.

ஆடுகளம்:

பொல்லாதவன் படத்தோட வெற்றி கூட்டணியான தனுஷ் - வெற்றிமாறன் திரும்ப இணைந்து இருக்காங்க. பொல்லாதவன் செம அட்டகாசமா இருந்துது. அதே மாதிரி இந்த படமும் இருக்கும்-னு நம்புறேன்.

செல்வா - விக்ரம் படம்:

படத்தோட டைட்டில் என்ன-னு தெரியல. செல்வாவோட அடுத்த படம் அப்டின்னும் போதே எதிர்பார்ப்பு எகுறுது.

அடுத்த ரெண்டு படமும் இந்தியாவின் பிரம்மாண்ட டைரக்டர்களோடது.

ராவணன்:

மனுஷன் அப்படி என்ன தான் எடுக்குறாரு-னு தெரியல. ஸ்டில்ஸ் கூட இன்னும் வெளிய வரல. என்ன தான் எனக்கு சமீபத்திய மணிரத்னம் படங்கள் திருப்தி தரல அப்டின்னாலும் அவரோட உழைப்புக்கே பார்க்க வேண்டி இருக்கு. ஏ.ஆர்.ரஹ்மான் இசை வேற.

படம் மே ரீலிஸ் அப்டினு சொல்றாங்க. வந்தா சரி.

எந்திரன்:

சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம், தமிழ்-ல பெரிய பட்ஜெட் அப்புறம் ஷங்கரோட கனவு படம்-னு பல எதிர்பார்ப்புகள தாங்கிட்டு இருக்கு. எல்லாரோட எதிர்பார்ப்பையும் நிறைவேத்துமா-னு தெரியல. இந்த படத்துக்கு ரஜினி இல்லாம வேற யாரையாவது ஹீரோவா போட்டு இருக்கலாம்-னு எனக்கு தோணுச்சு. ஏன்னா இது ரஜினி படமாவும் இல்லாம, ஷங்கர் படமாவும் இல்லாம போக நிறைய வாய்ப்பிருக்கு. எனக்கு இந்த படம் ஷங்கர் படமா இருக்கணும்-னு ஆசை.

படம் தீபாவளி ரீலிஸ்-னு சொல்றாங்க. அப்படி வந்தா இந்த ஒரு படம் மட்டும் தான் வரும்-னு நெனைக்கிறேன்.

9 பேர் என்ன சொன்னாங்கனா:

ஜெட்லி சொன்னது…

எனது எதிர்ப்பார்ப்பும் அதே

நட்புடன் ஜமால் சொன்னது…

எதிர்ப்பார்ப்பெல்லாம் நல்லாயிருக்கு

------------------

உங்ககிட்டேயிருந்து எதிர்ப்பார்ப்புகளும் இருக்கு - அங்குட்டும் கொஞ்சம் கவணம் வையுங்கோ

Sammy சொன்னது…

விண்ணை தாண்டி வருவாயா ??


கோவா பாடல்கள் அருமை....ஒரு பாட்டு இருமலுடன் ஆரம்பிக்கும், ரொம்ப பிடித்த பாடல் அது.

இய‌ற்கை சொன்னது…

நல்ல எதிர்பார்ப்புகள்

henry J சொன்னது…

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Srivats சொன்னது…

Goa and thamiz padam kandippa nalla erukkumnu nambaren, rest not sure, well except for mani ratnam movie, enthiran neenga sonna maari rajniyoda padamum ellama shankaroda padamum ellama pogumnu nenaikaren :P

Ur writing is witty , tight and natural ! :)

HaRy!! சொன்னது…

athey than..... ithu shankar movie mathiri irukum... thala style will be overcasted!.... ipo movies epadi iruku? inga release agala!

HaRy

kanagu சொன்னது…

@ ஜெட்லி,

:) :)

____________________________

@ஜமால் அண்ணா,

நன்றி அண்ணா...
கண்டிப்பா... அங்க வைக்கலனா இங்க எதுவும் பண்ண முடியாதே... :) :)

______________________________

@சாமி,

எனக்கு ரொமாண்டிக் படம்-னா அலர்ஜி... அதுவும் கவுதமோட லவ் ஸ்டோரினா.. ஆளா விடுங்க-னு ஒடுவேன்.. :) :)

கோவா பாடல்கள் என்னை ஈர்க்கவில்லை... படம் பார்த்தால் பிடிக்கும் என நினைக்கிறேன் :) :)

______________________________________

@இயற்கை,

நன்றி.. :) :)

_______________________________________

@ஸ்ரீவட்ஸ்,

/*Goa and thamiz padam kandippa nalla erukkumnu nambaren*/

ரெண்டு படத்தையும் பாத்தீங்களா??? தமிழ் படம் நல்லா இருந்துது...

/*enthiran neenga sonna maari rajniyoda padamum ellama shankaroda padamum ellama pogumnu nenaikaren */

அதே பயம் எனக்கும்.. :( :(

/*Ur writing is witty , tight and natural ! :)*/

நீங்க உண்மையா தான் சொல்றீங்களா??? நன்றி நன்றி... :) :)

_______________________________________

@ஹரி,

/*thala style will be overcasted!*/

என்ன மச்சி... ஷங்கரோட ட்ரீம் ப்ராஜக்ட்.. அதுக்காக ஸ்டைல கொஞ்சம் தியாகம் செய்யலாம்....

தமிழ் படம் - செம காமெடி...

அசல் - ஒ.கே.

கோவா - இன்னும் பாக்கலை...

Kumaran சொன்னது…

திரைப்படங்களை பற்றிய நல்ல பார்வை, நன்றி.