ஞாயிறு, ஜனவரி 17, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

2 வருஷமா ப்ரோடக்‌ஷன் - ல இருந்து, ரசிகர்கள் மத்தியில பலத்த எதிர்ப்பார்ப்ப கிளப்பி இருந்த இந்த படம் ஒரு வழியா இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆயிடுச்சி. படத்தோட ட்ரெயிலர பாத்த பிறகு இந்த படத்த போயி பாக்க வேணாம்-னு தான் -னு நெனச்சென். ஆனா நான் மிகவும் எதிர்ப்பார்த்த ‘தமிழ்படம்’ வராததுனாலயும், செல்வராகவன் அப்டிங்குற ஒரு சிறந்த இயக்குநருக்காகவும் பாக்கலாம்-னு தோணுச்சு. கிளம்பிட்டேன்.

கதை:

கி.பி.1279-ல கதை தொடங்குது. கடைசி சோழ மன்னன் பண்டியர்களால் தோற்கடிக்கபட்டு தஞ்சையை விட்டு விரட்டப்படுகிறார்கள். அப்போது சோழ இளவரசர் , மற்ற அனைவரும் தப்பிக்கும் போது பாண்டியர்களின் குல தெய்வ சிலையையும் எடுத்து சென்றுவிடுகின்றனர். அவர்கள் எங்கே சென்றார்கள் பாண்டியர்கள் எவ்வளவு தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இப்போ தற்காலத்துல, பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த சிலைய தேடி கிளம்புறாங்க. ஆனா எல்லாருமே மர்மமான முறையில இறந்து போறாங்க. அதுல, ஆண்ட்ரியாவோட அப்பா பிரதாப் போத்தனும் ஒருத்தர். அடுத்து ஒரு டீமா அங்க இருக்குற மர்ம்மத்த கண்டுபிடிக்க கிளம்புறாங்க. அதுல ரீமா சென், போத்தனோட பொண்ணு ஆண்ட்ரியா, ஒரு இராணுவ படை அழகம் பெருமாள் தலைமையில் அப்புறம், கார்த்திக் மற்றும் அவர் நண்பர்கள் இவங்களுக்கு உதவி செய்ய இருக்காங்க.

இவங்க இப்படி போகும் போது ஏற்படும் தடைகள், பயணிக்கும் பாதைகள், சிலையை கண்டுபிடித்தார்களா, அதன்பின் இருக்கும் மர்மங்கள் தான் படத்தோட மீதி கதை.

நடிப்பு:

படத்துல ஹீரோ அப்டின்னு யாரும் கிடையாது. வலிமையான கதாபாத்திரம் அப்டி-னு பாத்த முதல்ல ரீமா சென் தான். தனக்கு கிடச்ச வாய்ப்ப சரியா பயன்படுத்திட்டு இருக்காங்க. நல்ல ஆக்ரோஷமான நடிப்பு. ஆனா அவங்க சுத்தமான தமிழுக்கு சரியா வாயசைச்சாலும், எனக்கு நெருடலாக இருந்தது. ஆனா இந்த அளவுக்கு கச்சிதமான உதட்டசைவுக்கே அவரையும், அவரிடம் வேலை வாங்கிய செல்வாவையும் பாராட்டலாம்.

அடுத்து கார்த்திக்கும், பார்த்திபனுக்கும் வலிமையான கதாப்பாத்திரங்கள். கார்த்திக்கிற்கு ஒரு சென்னை குப்பத்தில் வாழும் ஒரு இளைஞனின் வேடம். ஆங்காங்கே அவர் சொல்லும் ஒன் - லைனர்கள் அருமை. அவருக்கு அதிக சிரமம் இல்லை. பார்த்திபன் மன்னனாக வருகிறார். தன்னுடைய இயலாமையும், மக்கள் துன்பப்படும் போதும் சிறப்பாக செய்து இருக்கிறார். மற்றபடி அவருடைய நடிப்பு திறமைக்கு சவால்விடும் பாத்திரம் இல்லை.

ஆண்ட்ரியவிற்கு முதல் பாதியில் இருக்கும் முக்கியத்துவம், அடுத்த பாதியில் புஸ் ஆகிறது. மற்ற அனைவரும் வந்து போகிறார்கள். முக்கிய விஷயம் என்னவெனில் இவ்வள்வு துணை நடிகர்களை எந்த படத்திலும் சமீபத்தில் பார்த்ததில்லை.

தொழில்நுட்ப வல்லுனர்கள்:

படத்தில் பாதி இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உபயோகிக்கப்பட்டுள்ளது. உலக தரத்திற்கு இல்லா விட்டாலும், பார்த்து இரசிக்கும்படியாகவே இருந்தது. முதல் முறையாக தமிழில் பேண்டஸி படம் என்பதால் சிறிது தடுமாறி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு ராம்ஜி, சிறப்பாக செய்துள்ளார். படத்தின் முதல் பாதியில் பிரம்மாண்டத்தை கண்ணில் நிறுத்துகிறார். அதுவும் அவர்கள் கப்பலில் பயணப்பட்டு, பின்பு வியட்னாம் காடுகளிலும், பாலைவனத்திலும் பயணப்படும் இடங்களிலும் விளையாடி இருக்கிறார்.

கலை இயக்குனர் சந்தானம். சும்மா செட்டுகளை அனாயாசாமாக அடுக்கியுள்ளார். ஆனால் செட் என்று நம்புவதற்கு தான் கஷ்டமாக உள்ளது. அவ்வளவு தத்ரூபம். அதுவும் இரண்டாவது பாதியில் ஒரு முழு கற்கோட்டை போன்ற ஒரு செட்டை எழுப்பி பிரம்மிக்க வைத்துள்ளார். முன்பாதியிலும் அவருடைய உழைப்பு இருந்திருக்கும். ஆனால் எனக்கு தான் எது இயற்கை, எது செயற்கை என தெரியவில்லை.

இசை:

ஜி.வி.பிரகாஷ் குமார். எனக்கு பிடித்த பாடல்கள்: ‘ஒ ஈசா’, ‘உன் மேல ஆச தான்’, ‘நெல்லாடிய’. இதில் ஒ ஈசா அப்புறம் நெல்லாடிய பாடல்கள எப்படி படமாக்க போறாங்க-னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா கலக்கிட்டாங்க. அதுவும் ஓ ஈசா ஒரு ஆல்பம் சாங் மாதிரி இருந்துது. நெல்லாடிய பாடல் அருமையான சிட்சுவேஷன் பாட்டு. ரொம்ப நாள் கழிச்சு படத்துக்கு சம்பந்தமா ஒரு பாட்டு வந்துருக்கு. அப்புறம் இப்ப கேக்க கேக்க ‘celebration of life' புடிக்குது. அது படத்தில் வரும் இடமும் அருமை. ஆனா ‘உன் மேல ஆச தான்’ பாடல் வரும் இடமும், படமாக்கிய விதமும் சரியில்லை.

ஆனால் பின்னனி இசை சுமார் தான். படத்தின் காட்சிக்கும் இசைக்கும் சில இடங்களில் பொருந்தல.

இயக்கம்:

செல்வராகவன்.

தலைவா, இந்த மாதிரி ஒரு படத்த தமிழ்-ல பாத்ததே இல்ல. அதுக்கே ஒரு சல்யூட்.

பேண்டஸி படங்கள தமிழ்-ல எடுக்க ஒரு மன தைரியம் வேணும். மக்கள் ஏத்துக்குவாங்களா அப்டிங்குற ஒரு பயம் இருக்கு. ஆனா, செல்வா துணிஞ்சு களமிறங்கி ஆடியிருக்காரு. அதுவும் முதல் பாதி பறக்குது. இந்த ஏழு கடல், ஏழு மலை அப்டிங்குற கான்சப்ட்ட வச்சிகிட்டு கலக்கிட்டாரு. படத்துல இண்ட்ரவல் விடும் போது ஒரே கைதட்டல்.

இரண்டாவது பாதியில் படத்தின் வேகம் பாதியாக குறைகிறது. ஆனால் காட்சியமைப்பு பிரமிக்க வைக்கிறது. சோழ மன்னனான பார்த்திபனின் அறிமுகம் அருமை, அதே மாதிரி ரீமா சென்னுக்கும், பார்த்திபனுக்கும் நடக்கும் மோதல் காட்சிகள் அருமை. ஆனால் போர் காட்சிகள் என்னை அவ்வளவாக கவரவில்லை. அதே போல நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட கிளேடியேட்டர் படசாயல் காட்சி படத்தின் வேகத்துக்கு தடை. கடைசி 45 நிமிட படத்தை இன்னும் சிறப்பாக எடிட் செய்து இருக்கலாம் என்று தோன்றியது. திரைக்கதையையும் சிறிது கவனித்து இருக்கலாம்.

படத்தை பார்த்து முடிக்கும் போது ‘நன்கு தொடங்க பட்ட செயல் பாதியில் முடிந்தாற் போல’ அப்டிங்குற பழமொழி தான் ஞாபகம் வந்துது. படத்தை பற்றி சில குறைகள் சொன்னாலும் செல்வராகவனின் உழைப்பை நிச்சயம் குறை சொல்ல முடியாது. தமிழ் திரையுலகத்திற்கு அவர் வேறோரு பாதையை காட்டியுள்ளார். எப்படி பயணம் இருக்கும் என தெரியவில்லை.

படத்தின் தயாரிப்பாளரும் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர். 32 கோடிகள் செலவு செய்திருக்கிறார் ஒரு நல்ல படைப்புக்காக.

ஆயிரத்தில் ஒருவன் - புதியவன், மாறுப்பட்டவன், ஆதரிக்கப்பட வேண்டியவன், ஆனால் முழுமையானவன் அல்ல.

______________________________________________________________

சில மாற்று கருத்துக்கள்:

ஒரு படம் ஒருவருக்கு பிடித்து போவதும், பிடிக்காமல் போவதும் அவரவர் இரசனைக்கு உட்பட்ட ஒரு விஷயம். ஆனால் அதற்கு இருக்கும் காரணங்களும் முக்கியம். நான் இந்த படத்துக்கான சில எதிர் கருத்துகளை படித்தேன். குற்றசாட்டு என்று கூட சொல்லலாம். அவை நியாயமற்றவை என நான் கருதுகிறேன். அவை:

1. குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

படத்துக்கு A சர்டிபிகேட் கொடுத்தாகிவிட்டது. அதன் பிறகு படத்தை குடும்பத்தோடு பார்ப்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம். இயக்குனர் பேண்டஸி படம் என்று சொன்னாரே ஒழிய, குடும்பத்தோடு பார்க்க முடியும் என்று சொல்லவில்லை. அப்படி குடும்பத்தோடு பார்க்க வேண்டுமெனில் வெற்றிகரமாக ஓடும் சன் பிக்சர்ஸின் வேட்டைகாரனை சென்று பார்க்கலாமே???

2. அந்த குழந்தையோடு வரும் பெண் காட்சியை ஏதோ ஒரு ‘பிட்டு’ பட ரேஞ்சுக்கு பேசுவது.

அந்த காட்சி அங்கு வாழும் மக்களின் வறுமையையும், உணவு பற்றாகுறையையும் சொல்கிறது. அதை புரிந்து கொள்ளுங்கள்.

3. அதிகபட்ச வன்முறை.

போர் காட்சிகளை காட்டும் போது அன்பையா காட்ட முடியும்???? போருக்கு காரணமே பகை தான்.

4. மொழி புரியவில்லை.

தமிழில் எடுத்தாலும் புரியவில்லை என்று சொன்னால் என்னவென்று சொல்வது. இப்போது சப்-டைடில் போடுகிறார்களாம். சந்தோஷமா???

இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.. ஆனால் இங்குடன் என் புலம்பலை நிறுத்துகிறேன்.

பி.கு: கடைசி மூணு பொங்கலுக்குமே மொக்கை படங்களா(ஆழ்வார், பீமா, படிக்காதவன்) பாத்து நொந்து போயிருந்தேன். இந்த வாட்டி தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

10 பேர் என்ன சொன்னாங்கனா:

Rajalakshmi Pakkirisamy சொன்னது…

இன்னும் படம் பார்க்கல.. But ur review is good (impressive)

தாரணி பிரியா சொன்னது…

ஆஹா எனக்கு பிடிக்காதது எல்லாம் உங்களுக்கு பிடிச்சு இருக்குப்பா :) அதே போல எனக்கு பிடிச்சது உங்களுக்கு பிடிக்கலை :)

kanagu சொன்னது…

@இராஜலக்‌ஷ்மி,

ரொம்ப நன்றிங்க... :) :)

_________________________________

@தா.பி அக்கா,

படம் பாத்துட்டீங்களா அக்கா???
எது உங்களுக்கு புடிச்சு இருந்துது??? எது புடிக்கல.. அத சொல்லவே இல்லையே????

நட்புடன் ஜமால் சொன்னது…

சன் டீவில கூப்பிட்டாலும் கூப்பிடலாம் உன்னை

சி.வி-க்குதான் ... :)

Srivats சொன்னது…

Ennaga kaasu edhavadhu vangiteengala LOL ellai endha padam paathu rendu moonu nondhavanga sonaanga, adhukku opposite a ezudhi erukeengaley , hmm sari ulaga thollai katchigalil podum podhu pathukaren :)

p.s: boss padatha akku vera aani vera pirichuteenga boss, adutha operation enna ?

kanagu சொன்னது…

@ Jamal anna,

Nandri anna... neenga kalaikalaye???

_______________________________

@ Srivats,

vaanga.. vaanga..

apdi ellam kodutha kooda ipdi varathunga....

:D :D

operation la panna koodathunu than engineering eduthathe... athukaaga cut-off ellam kaekaatheenga... :D :D

Karthik சொன்னது…

ஹை எனக்கும் படம் புடிச்சிருந்தது. :)

HaRy!! சொன்னது…

mache inum padam parkala...but review yelam kalakal... indiaglitz join panitya? are yu in FB?

kanagu சொன்னது…

@ கார்த்திக்,

:) :)

______________________________

@ஹரி,

நன்றி மச்சி.. :) :) Indiaglitz-ah.. அதில என்ன இருக்கு??? FB-ல ரெக்வெஸ்ட் அணுப்பி இருக்கேன்... அக்சப்ட் பண்ணுங்க..

Nithya சொன்னது…

Nalla review. hmmmm mulusa othukka mudila.. aana first half pidicidhu. Thrilling ah irundhuchu.

Idhu vithayaasamaana muyarchigardhu ok. aana pudhusu illa pa.. fantasy padam neraya irundhurukku thamizh la.. yen allavudheen, pathinathil bootham, alibaaba pondra thirai padangalum fantacy thana, tamil thana!!!! inface adhukum munnadiye vitalachariyaar padangala indha 7 kadal 7 malai concept lan vandhurukkey...