ஞாயிறு, பிப்ரவரி 14, 2010

நாணயம் & தமிழ்படம் - விமர்சனம்

ஏற்கனவே இந்த படத்துங்கள பத்தி உங்களுக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கும். ஆனாலும் என்னோட திருப்திக்காகவும், ஹிஸ்டரி-ல நான் இடம் பெறணும் அப்டிங்கிறதுக்காகவும் கொஞ்சம் சின்னதா இந்த படங்களின் விமர்சனங்கள்.

நாணயம்:

தமிழ் சினிமா வரலாற்று-ல ஒரு முதல் முதலா முழு நீள வங்கி கொள்ளை சம்பந்தமான படம். கதை ரொம்ப சிம்பிள் தான். பிரசன்னா எஸ்.பி.பி-யோட பேங்க்-ல வேலை செய்றார். அந்த பேங்க்-ல யாருமே திருட முடியாது அப்டிங்குற அளவுக்கு ஒரு டிசைன பண்றார். அப்படியே விளம்பரமும் செய்றாங்க. இந்த சமயத்துல பிரசன்னா-வோட காதலியின் முன்னாள் கணவர சிபிராஜோட கும்பல் கொன்னு பிரசன்னா கொன்ன மாதிரி செட்டப் பண்ணிடுறாங்க. இத வச்சிகிட்டு பேங்கை கொள்ளையடிக்க பிரசன்னா-வ ஒத்துக்க வைக்கிறாங்க. ஆனா அவங்க அத எதுக்காக பண்றாங்க, பேங்க கொள்ளையடிச்சாங்களா அப்டிங்கிறத சொல்ற படம்.

படத்தோட ஹீரோ பிரசன்னா. கேரக்டருக்கு நல்ல பொருத்தம். நல்லா நடிச்சுருக்காரு. சிபிராஜ் நடிப்புல ஜீனியர் சத்யராஜ் மாதிரி இருக்காரு. அதுவே ஒரு மைனஸ். அவருக்கு சத்யராஜ் டப்பிங் கொடுத்த மாதிரி இருந்துது. மத்த யாரும் மனசுல நிக்குற மாதிரி பண்ணல.

டெக்னிக்கலா படம் நல்லாயிருக்கு. ஒளிப்பதிவு அருமை. எடிட்டிங்-கும் நல்லா பண்ணி இருந்தாங்க. செட்டெல்லாம் ரொம்ப அருமை. அப்புறம் கொள்ளை அடிக்க உபயோகிக்கும் டெக்னிக்கெல்லாம் சூப்பர். ஒரு ஆங்கில படம் பாத்த ஃபீல். ஆனா பின் பாதியில வர ட்விஸ்ட் எல்லாம் கூட இங்கிலிஷ் பட பாணியிலயே இருக்கு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களோட இசை-ல இந்த படத்தோட ‘கண்கள் இரண்டால்’ வந்து ‘நான் போகிறேன் மேலே மேலே’. நல்ல மெலோடி.

முதல் பாதி நகர்வதே தெரியல. ஆனா இரண்டாவது பாதியில பாட்டு போட்டு செம கடியேத்திட்டாங்க. நல்லாவே இல்ல. முதல் பட இயக்குனர் சக்திக்கு இது நல்ல ஆரம்பம் தான்.

நாணயம் - தமிழ் சினிமாவுக்கு புதுசு.

_______________________________________________________

தமிழ் படம்:

ஏற்கனவே இந்த படத்தோட ட்ரைலர பாத்து இருப்பீங்க-னு நம்புறேன். இல்லைன்னா நல்லா சூப்பரா இருக்கு-னு கேள்வியாவதுபட்ருப்பீங்க. நான் இந்த ட்ரைலர மட்டுமே பாத்து ரொம்ப நாள் சிரிச்சுட்டு இருந்தேன் :) இதுவும் தமிழ் சினிமா முதல் முறை படம். நம்ம சினிமா-வ நாமளே கலாய்க்கிறது.

[போஸ்டர கிளிக் பண்ணி கண்டிப்பா பாருங்க... இது ஒரு பெருங்காமெடி]

இந்த பத்தி-ல எப்பவுமே கதைய தான் எழுதுவேன். ஆனா இந்த படத்துல அதெல்லாம் இல்ல. கதையில்லாம கொஞ்ச நாளா சில படங்க எல்லாம் வருதே.. அத கலாய்க்கிறாங்களோ!!!! இருக்கும் இருக்கும்...

படத்தோட பெரிய பலம் அப்டி-னு பாத்தா.... டைரக்டர் அமுதன், ஹீரோ ‘மிர்ச்சி’ சிவா, மியூசிக் டைரக்டர் கண்ணன், அப்புறம் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. எனக்கு படத்த பாத்தவுடனே தோணுன விஷயம்... நல்ல வேள சந்தானத்த போடல அப்டிங்குறது தான். ஏன்னா, அவர் இருந்தா அதுவே ஒரு லொள்ளு சபா ஃபீல கொடுத்து இருக்கும். அப்புறம் அவருக்கு அண்டர் ப்ளே அவ்வளவா சூட்டாகாது.

சிவா, ஹீரோ கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம். எல்லா ஹீரோ மாதிரியும் செமயா இமிடேட் பண்றார். அதே மாதிரி பன்ச் அடிக்கும் போதெல்லாம் செம காமெடி போங்க. அவரோட ப்ரெண்ட்-அ வர மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை பண்ற லொள்ளுக்கு அளவே இல்ல. அவங்க ம்ச்சி, மச்சான் அப்டினு பேசும் போதே நமக்கு சிரிப்பா இருக்கு. ஹீரோயின் டெய்ஸியாம். நல்லா அழகா இருக்காங்க.

ஒளிப்பதவாளரா நீரவ் ஷா-வ போடும் போதே இந்த படத்துல அவங்களுக்கு இருக்குற சீரியஸ்னஸ பக்காவா காமிச்சுட்டாங்க. அவரும் அசராம அழகா படம் பிடிச்சு கொடுத்துருக்கார்.

மியூசிக் பத்தி சொல்லியே ஆகணும். எல்லா பாட்டும் அட்டகாசம். மெட்டும் சரி, பாடல் வரிகளும் சரி. அருமையோ அருமை. ‘பச்ச மஞ்ச’ பாட்டு சும்மா கலக்குது. அதே மாதிரி எனக்கு ரொம்ப புடிச்சது ‘ஒரு சூறாவளி கிளம்பியதே’. கலக்கல் வரிகள். மாஸ் ஹீரோக்கள் எல்லாம் நமக்கு இப்படி ஒரு பாட்டு சிக்கலயே-னு ஏங்க வச்சி இருக்கும்.

புது டைரக்டர் அமுதன் அதகளபடுத்திட்டார். தமிழ் சினிமா செண்டிமெண்ட்கள கலாய்க்கணும்-னு ஒரு சின்ன லைன வச்சிகிட்டு அருமையா ஒரு இரண்டரை மணி நேரம் நம்மள சிரிக்க வச்சி இருக்கார். அதுவும் பரத நாட்டியம் சீன் அப்பயெல்லாம் சிரிப்ப அடக்கவே முடியல. கலக்கலா எடுத்து இருக்காங்க. முடிஞ்ச வரைக்கும் எல்லா வழக்கங்களையும் கலாய்ச்சிட்டாங்க. இரண்டாவது பாதி முடியும் போது கொஞ்சம் போரடிக்குற மாதிரி இருந்துது. ரொம்ப சிரிச்சு, சிரிச்சு அப்டி ஆயிடுச்சு-னு நெனைக்கிறேன்.

தமிழ்படம் - சிரிக்க, இரசிக்க.

Leia Mais…

சனி, பிப்ரவரி 06, 2010

அசல் - விமர்சனம்

ஏற்கனவே போன பதிவுல சொன்ன மாதிரி 1 வருஷம் கழிச்சு வந்துருக்குற அஜீத்தின் படம். நான் எதிர்பார்த்ததெல்லாம் சுமாரா இருக்கும் அப்டி-னு தான். எப்படி இருந்துது-னு பார்ப்போம்.

படத்துக்கு ஒரு 15 நிமிஷம் லேட்டா போயிட்டேன். சோ, மீதி படத்தோட விமர்சனம் தான் இது.

ஜீவானந்தத்துக்கு 3 பசங்க. முதல் ரெண்டு(விக்கி & சாம்) பேரு முதல் மனைவிக்கு பிறந்தவங்க. ஒரு பையன்(ஷிவா) ரெண்டாவது மனைவிக்கு பிறந்தவர். அவருக்கு மூணாவது பையன் மேல பாசம் அதிகம். ஆனா மத்த ரெண்டு பேரும் அவர அவங்க சகோதரனா ஏத்துக்க மறுக்குறாங்க. இறக்கும் போது சொத்து மொத்ததையும் ஷிவா பேர்ல அவங்க அப்பா எழுதிடுறாரு. இதனால ஷிவா மேல கோபத்த வச்சிகிட்டு, சொத்து மேல பாசத்த வச்சிகிட்டு போராடுற சகோதரர்களின் பாச போராட்டம் தான் கதை. இதுக்கு நடுவுல காதல், டூயட், காமெடி-னு நிறைய பழைய மசாலா.

படம் முழுக்க அஜீத், அஜீத், அஜீத் தான். நடிக்கிறதுக்கு பெரிய வாய்ப்பெல்லாம் இல்ல. ஆனாலும் அவர் வர்ற ஒவ்வோரு காட்சியும் அசத்தல்.அதற்கு அவரோட கெட்டப்பும் ஒரு முக்கிய காரணம். செம ஸ்டைலிஷ். அதுவும் விக்கிய கடத்திட்டு போன ஷெட்டி கூட அவர் அறைக்குள்ள போடுற சண்டை காட்சி ஹீரோயிஸத்தின் உச்சம். அடுத்து அவங்கள அடிச்சு துவம்சம் தான் பண்ண போறாரு தெரிஞ்சும் அந்த கதவ தெறந்து நிக்கிறது-ல இருந்து காலி பண்ற வரைக்கும் நம்மல சீட்டுலயே கட்டி போட்டு ஆர்வமா பார்க்க வைக்குறத என்ன-னு சொல்றது. அவர் ஸ்கிரீன் -ல இருக்கும் போது மத்தவங்க எல்லாம் ஒரு பொருட்டாவே தெரிய மாட்டிங்குறாங்க. அப்படி ஒரு ஸ்கிரீன் ப்ரசென்ஸ். அவரோட மிக குறைந்த வசனங்கள் அவரோட கேரக்டர்க்கு பொருத்தமா இருக்கு. ஆனா டபுள் ஆக்‌ஷன் ஏன்-னு தெரியல. அந்த அப்பா கேரக்டர வேற யாராவது பண்ணி இருக்கலாம்.

மத்த கேரக்டர்கள்-ல யாரும் தனியா தெரியுற அளவுக்கு இல்ல. சமீரா ரெட்டியும், பாவனாவும் ஒரு மசாலா படத்துக்கான ஹீரோயின் கேரக்டர நிரப்புறாங்க. சமீரா கவர்ச்சி-னா, பாவனா சோ-க்யூட். பாவனாக்கு ஸ்கோப்-னா ரெண்டு பாட்டு. ரெண்டுலயுமே நல்ல டான்ஸ்.

யூகி சேது கூட்டணியின் காமெடி சில இடங்களில் கல-கல. மற்ற இடங்களில் நம்மை சிரிக்க வைக்கவில்லை என்றாலும் கடுப்படைய வைக்கவில்லை.

வில்லன்கள். அப்படியே ஒரு பெரிய படையே இருக்காங்க. ஆனா அந்த மும்பை வில்லன் தான் டாப். கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல். மத்தவங்க எல்லாம் சும்மா டம்மி பீஸா, ஏதோ அஜீத் கிட்ட அடிவாங்க தான் படத்துல இருக்குற மாறி இருக்காங்க. அஜீத்தோட கேரக்டர்-ல அவ்ளோ மெனக்கெட்டவங்க கொஞ்சமாவது புத்திசாலி வில்லன்கள உருவாக்கி இருக்கலாம்.

பிரபுவ பத்தி சொல்ல மறந்துட்டனே.... அவரும் படத்துல இருக்கார்.

_______________________________________________________________

டெக்னிக்கலா படம் செம சூப்பர். பிராசாந்த்தோட கேமரா படத்துக்கு எவ்ளோ ரிச்னஸ் கொடுக்க முடியுமோ அவ்ளோ கொடுத்துருக்கு. பிரான்ஸ், மலேசியா போன்ற இடங்கள நல்லாவே படம் புடிச்சு இருக்காரு. நிறைய இண்டோர் ஷாட்களும் நல்லா இருந்துது. அடுத்து படத்தோட கொஞ்சம் வேகமான ஒட்டத்துக்கு காரணம் எடிட்டர் ஆண்டனி. அருமையான கத்தரிக்கோல் உபயோகிப்பு.

சண்டை காட்சிகள்-ல ஒரே அனல் பறக்குது. அதுவும் முதல் பாதியில வந்த ரெண்டு காட்சியுமே அருமை. பாடல்களுக்கான நடன அமைப்பும் நல்லாவே இருந்துது. ‘டோட்டடொயிங்’ பாடல் பார்க்க மிக அருமை. ‘துஷ்யந்தா’ பாடலையும் இரசித்தேன்.

பரத்வாஜ் ஏன் இவ்ளோ சொதப்புறார்-னு தெரியல. பாட்டு எல்லாம் சுமார் ரகம் தான் . ஆனா கேட்டு கேட்டு எனக்கு புடிச்ச மாதிரி ஒரு பிரமை உண்டாயிடுச்சு. ஆனா பின்னனி இசைக்கு நான் என்ன பண்ண முடியும். ஜேம்ஸ் பாண்ட் மியூசிக்க உபயோகிக்கிறாரு. இல்லைனா ஏதாவதொரு இன்ஸ்ட்ருமெண்ட எடுத்து ஹைபிட்சு-ல அடிச்சு விடுறாரு.

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் - சரண், யூகிசேது. அஜீத். படத்தோட மேக்கிங்-ல இவ்ளோ கவனம் செலுத்துன இவங்க கொஞ்சம் கதை, திரைக்கதைல கவனம் செலுத்தி இருக்கலாம். படம் முழுக்க திரைக்கதைய நம்பி இல்லாம அஜீத்த நம்பியே ஒடுது. அதுவும் கடைசி 15 நிமிஷம் எல்லாம் மரண கடி. கொஞ்சம் ஹூமர் சென்ஸோட யோசிச்சோம்-னா நல்ல காமெடி.

வழக்கம் போல அஜீத்தோட உழைப்பெல்லாம் கதையில்லா ஒரு படத்துக்கு போயிருக்கு. மத்த படங்கள்-ல இருந்து இது எங்க வித்தியாசபடுது-னா இந்த படத்த மொக்க-னு சொல்லி ஒதுக்கி வைக்க முடியாது. ரசிக்க வைக்குற காட்சிகள் கொஞ்சம் இருக்கு.

படத்துல அஜீத் எந்த பஞ்ச் டயலாக்கும் இல்ல. ஆனா மத்தவங்க தான் அவரோட புராணத்த பாடிட்டே இருக்காங்க. தல ரசிகன் எனக்கு புடிச்சி இருந்துது. மத்தவங்களுக்கு எப்படி-னு தெரியல.

அசல் - அஜீத் ரசிகர்களுக்கான விருந்து, மற்றவர்கள் ஹீரோயிஸத்தை ரசிப்பீர்களானால் கண்டிப்பாக பார்க்கலாம்.

_______________________________________________________________

பி.கு: தமிழ் படத்தையும், நாணயத்தையும் பாத்தாச்சு. அதற்கான விமர்சனங்கள் அடுத்து வரும் பதிவில்.

Leia Mais…