சனி, பிப்ரவரி 06, 2010

அசல் - விமர்சனம்

ஏற்கனவே போன பதிவுல சொன்ன மாதிரி 1 வருஷம் கழிச்சு வந்துருக்குற அஜீத்தின் படம். நான் எதிர்பார்த்ததெல்லாம் சுமாரா இருக்கும் அப்டி-னு தான். எப்படி இருந்துது-னு பார்ப்போம்.

படத்துக்கு ஒரு 15 நிமிஷம் லேட்டா போயிட்டேன். சோ, மீதி படத்தோட விமர்சனம் தான் இது.

ஜீவானந்தத்துக்கு 3 பசங்க. முதல் ரெண்டு(விக்கி & சாம்) பேரு முதல் மனைவிக்கு பிறந்தவங்க. ஒரு பையன்(ஷிவா) ரெண்டாவது மனைவிக்கு பிறந்தவர். அவருக்கு மூணாவது பையன் மேல பாசம் அதிகம். ஆனா மத்த ரெண்டு பேரும் அவர அவங்க சகோதரனா ஏத்துக்க மறுக்குறாங்க. இறக்கும் போது சொத்து மொத்ததையும் ஷிவா பேர்ல அவங்க அப்பா எழுதிடுறாரு. இதனால ஷிவா மேல கோபத்த வச்சிகிட்டு, சொத்து மேல பாசத்த வச்சிகிட்டு போராடுற சகோதரர்களின் பாச போராட்டம் தான் கதை. இதுக்கு நடுவுல காதல், டூயட், காமெடி-னு நிறைய பழைய மசாலா.

படம் முழுக்க அஜீத், அஜீத், அஜீத் தான். நடிக்கிறதுக்கு பெரிய வாய்ப்பெல்லாம் இல்ல. ஆனாலும் அவர் வர்ற ஒவ்வோரு காட்சியும் அசத்தல்.அதற்கு அவரோட கெட்டப்பும் ஒரு முக்கிய காரணம். செம ஸ்டைலிஷ். அதுவும் விக்கிய கடத்திட்டு போன ஷெட்டி கூட அவர் அறைக்குள்ள போடுற சண்டை காட்சி ஹீரோயிஸத்தின் உச்சம். அடுத்து அவங்கள அடிச்சு துவம்சம் தான் பண்ண போறாரு தெரிஞ்சும் அந்த கதவ தெறந்து நிக்கிறது-ல இருந்து காலி பண்ற வரைக்கும் நம்மல சீட்டுலயே கட்டி போட்டு ஆர்வமா பார்க்க வைக்குறத என்ன-னு சொல்றது. அவர் ஸ்கிரீன் -ல இருக்கும் போது மத்தவங்க எல்லாம் ஒரு பொருட்டாவே தெரிய மாட்டிங்குறாங்க. அப்படி ஒரு ஸ்கிரீன் ப்ரசென்ஸ். அவரோட மிக குறைந்த வசனங்கள் அவரோட கேரக்டர்க்கு பொருத்தமா இருக்கு. ஆனா டபுள் ஆக்‌ஷன் ஏன்-னு தெரியல. அந்த அப்பா கேரக்டர வேற யாராவது பண்ணி இருக்கலாம்.

மத்த கேரக்டர்கள்-ல யாரும் தனியா தெரியுற அளவுக்கு இல்ல. சமீரா ரெட்டியும், பாவனாவும் ஒரு மசாலா படத்துக்கான ஹீரோயின் கேரக்டர நிரப்புறாங்க. சமீரா கவர்ச்சி-னா, பாவனா சோ-க்யூட். பாவனாக்கு ஸ்கோப்-னா ரெண்டு பாட்டு. ரெண்டுலயுமே நல்ல டான்ஸ்.

யூகி சேது கூட்டணியின் காமெடி சில இடங்களில் கல-கல. மற்ற இடங்களில் நம்மை சிரிக்க வைக்கவில்லை என்றாலும் கடுப்படைய வைக்கவில்லை.

வில்லன்கள். அப்படியே ஒரு பெரிய படையே இருக்காங்க. ஆனா அந்த மும்பை வில்லன் தான் டாப். கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கல். மத்தவங்க எல்லாம் சும்மா டம்மி பீஸா, ஏதோ அஜீத் கிட்ட அடிவாங்க தான் படத்துல இருக்குற மாறி இருக்காங்க. அஜீத்தோட கேரக்டர்-ல அவ்ளோ மெனக்கெட்டவங்க கொஞ்சமாவது புத்திசாலி வில்லன்கள உருவாக்கி இருக்கலாம்.

பிரபுவ பத்தி சொல்ல மறந்துட்டனே.... அவரும் படத்துல இருக்கார்.

_______________________________________________________________

டெக்னிக்கலா படம் செம சூப்பர். பிராசாந்த்தோட கேமரா படத்துக்கு எவ்ளோ ரிச்னஸ் கொடுக்க முடியுமோ அவ்ளோ கொடுத்துருக்கு. பிரான்ஸ், மலேசியா போன்ற இடங்கள நல்லாவே படம் புடிச்சு இருக்காரு. நிறைய இண்டோர் ஷாட்களும் நல்லா இருந்துது. அடுத்து படத்தோட கொஞ்சம் வேகமான ஒட்டத்துக்கு காரணம் எடிட்டர் ஆண்டனி. அருமையான கத்தரிக்கோல் உபயோகிப்பு.

சண்டை காட்சிகள்-ல ஒரே அனல் பறக்குது. அதுவும் முதல் பாதியில வந்த ரெண்டு காட்சியுமே அருமை. பாடல்களுக்கான நடன அமைப்பும் நல்லாவே இருந்துது. ‘டோட்டடொயிங்’ பாடல் பார்க்க மிக அருமை. ‘துஷ்யந்தா’ பாடலையும் இரசித்தேன்.

பரத்வாஜ் ஏன் இவ்ளோ சொதப்புறார்-னு தெரியல. பாட்டு எல்லாம் சுமார் ரகம் தான் . ஆனா கேட்டு கேட்டு எனக்கு புடிச்ச மாதிரி ஒரு பிரமை உண்டாயிடுச்சு. ஆனா பின்னனி இசைக்கு நான் என்ன பண்ண முடியும். ஜேம்ஸ் பாண்ட் மியூசிக்க உபயோகிக்கிறாரு. இல்லைனா ஏதாவதொரு இன்ஸ்ட்ருமெண்ட எடுத்து ஹைபிட்சு-ல அடிச்சு விடுறாரு.

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் - சரண், யூகிசேது. அஜீத். படத்தோட மேக்கிங்-ல இவ்ளோ கவனம் செலுத்துன இவங்க கொஞ்சம் கதை, திரைக்கதைல கவனம் செலுத்தி இருக்கலாம். படம் முழுக்க திரைக்கதைய நம்பி இல்லாம அஜீத்த நம்பியே ஒடுது. அதுவும் கடைசி 15 நிமிஷம் எல்லாம் மரண கடி. கொஞ்சம் ஹூமர் சென்ஸோட யோசிச்சோம்-னா நல்ல காமெடி.

வழக்கம் போல அஜீத்தோட உழைப்பெல்லாம் கதையில்லா ஒரு படத்துக்கு போயிருக்கு. மத்த படங்கள்-ல இருந்து இது எங்க வித்தியாசபடுது-னா இந்த படத்த மொக்க-னு சொல்லி ஒதுக்கி வைக்க முடியாது. ரசிக்க வைக்குற காட்சிகள் கொஞ்சம் இருக்கு.

படத்துல அஜீத் எந்த பஞ்ச் டயலாக்கும் இல்ல. ஆனா மத்தவங்க தான் அவரோட புராணத்த பாடிட்டே இருக்காங்க. தல ரசிகன் எனக்கு புடிச்சி இருந்துது. மத்தவங்களுக்கு எப்படி-னு தெரியல.

அசல் - அஜீத் ரசிகர்களுக்கான விருந்து, மற்றவர்கள் ஹீரோயிஸத்தை ரசிப்பீர்களானால் கண்டிப்பாக பார்க்கலாம்.

_______________________________________________________________

பி.கு: தமிழ் படத்தையும், நாணயத்தையும் பாத்தாச்சு. அதற்கான விமர்சனங்கள் அடுத்து வரும் பதிவில்.

12 பேர் என்ன சொன்னாங்கனா:

டம்பி மேவீ சொன்னது…

naan vera madiri la kelvipatten ????

நட்புடன் ஜமால் சொன்னது…

அசத்தல்

ஜெட்லி சொன்னது…

//பிரபுவ பத்தி சொல்ல மறந்துட்டனே.... அவரும் படத்துல இருக்கார்.

//

அது ஒன்னும் இல்ல கனகு...
ஷூட்டிங் எப்படி போகுதுனு பார்க்க
வந்துருப்பாரு....அப்படியே சரண்
ஒரு ஓரமா நிக்க வச்சிருப்பார்னு
நினைக்கிறேன்.....

ஆ! இதழ்கள் சொன்னது…

சரண் படம் (with that music) எனக்கு பிடிக்காது. சுமாரான மசாலா படம் தான் எடுப்பார், நீங்க தல ரசிகர்ன்றனால ரசிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன்.

Porkodi (பொற்கொடி) சொன்னது…

enaku indha saran enikku nalla padam edutharu nu puriyave illa.. ana ellarum saran kitta irundhu inum expect pannom sodhapitar nu sollipanga (for every film)! ennavo ponga boss.. thala rasigar neenga enjoy panra madhri irundha adhu varai sandhosham :D

Karthik சொன்னது…

thala unga review ah eppadi miss pannen? nan next week end poren.. aalwar iye pathavanga.. ithukkellam asaruvoma? :)

kanagu சொன்னது…

@மேவி,

என்னன்னு கேள்விபட்டீங்க???

_____________________________________

@ஜமால் அண்ணா,

நன்றி அண்ணா.. :)

_______________________________________

@ஜெட்லி,

:) :) :)

_______________________________________

@ஆனந்த் அண்ணா,

எனக்கும் சரண் படம் புடிக்காது.. 'தல'க்காக பாத்தேன்...

______________________________________

@பொற்கொடி,

/*enaku indha saran enikku nalla padam edutharu nu puriyave illa.. ana ellarum saran kitta irundhu inum expect pannom sodhapitar nu sollipanga (for every film)! ennavo ponga boss..*/

ஹி ஹி ஹி.. :) :)

/*thala rasigar neenga enjoy panra madhri irundha adhu varai sandhosham*/

இந்த பெருந்தன்மை தான் எனக்கு புடிச்சது... :) :)

______________________________________

@கார்த்திக்,

வாங்க வாங்க.. பாத்துட்டு சொல்லுங்க.. :) :)

கண்டிப்பா ஆழ்வார் அளவுக்கெல்லாம் இல்ல.. :) :)

Srivats சொன்னது…

i havent seen the movie so no comments on that :)

//அது ஒன்னும் இல்ல கனகு...
ஷூட்டிங் எப்படி போகுதுனு பார்க்க
வந்துருப்பாரு....அப்படியே சரண்
ஒரு ஓரமா நிக்க வச்சிருப்பார்னு
நினைக்கிறேன்.....//

LOL!!

Naanayam parthen, rasithen, Thamiz padam - ellam pakkaradhu ellai generalla , haha

Karthick Krishna CS சொன்னது…

நீங்க அஜித் ரசிகர்னு எனக்கு இப்போதான் தெரியும்...
என் அண்ணன் ஒரு அஜித் வெறியன், ஆனா அவனுக்கு படம் சுத்தமா புடிக்கலை. படமா முழுக்க அஜித் நடிக்கரத விட, நல்லா நடக்கரார்னு கமென்ட் வேற. எதனால அப்டி??

henry J சொன்னது…

unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

HaRy!! சொன்னது…

macheee inum net la varla..so havnt seen it yet :) ... ana prasanth camera super nu nanum kelvi paten!....anyways review ku nandri

kanagu சொன்னது…

@ஸ்ரீவட்ஸ்,

/*Thamiz padam - ellam pakkaradhu ellai generalla , haha*/

கண்டிப்பா பாருங்க.. புடிக்கும்..

________________________________________

@கா.கி

/*என் அண்ணன் ஒரு அஜித் வெறியன், ஆனா அவனுக்கு படம் சுத்தமா புடிக்கலை. படமா முழுக்க அஜித் நடிக்கரத விட, நல்லா நடக்கரார்னு கமென்ட் வேற. எதனால அப்டி??*/

படத்துல அஜீத்துக்கு நடிக்க வாய்ப்பெல்லாம் இல்ல. சும்மா மாஸ் தான். இன்னும் பில்லா ஹேங்க் ஒவர்-ல இருக்குறதுனால வர்ற பிரச்சன இது. அடுத்த படத்துலயாவது மாறுதா-னு பாப்போம்..

_______________________________________

@ஹரி,

ஹீம்ம்ம்ம்.... விமர்சனத்த படிச்சதுக்கு நன்றி :) :)